ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?

+17
சங்கர்.ப
ஈகரைச்செல்வி
சரவணன்
Preethika Chandrakumar
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
sino
ஸ்ரீஜா
அதி
ranhasan
சதாசிவம்
அருண்
பிஜிராமன்
கார்த்திக்
உமா
ayyamperumal
21 posters

Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Fri Jun 26, 2015 10:45 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sat Jun 27, 2015 7:41 am

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

நூல்: மணிமேகலை

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்

சூழல்: பாத்திரம் பெற்ற காதை : வற்றாமல் உணவை அள்ளித் தருகிற அமுதசுரபி என்கிற பாத்திரத்தை மணிமேகலை பெறுகின்ற அத்தியாயம் இது. அப்போது அவளிடம் தீவதிலகை என்ற பெண் சொன்ன வார்த்தைகள் இவை


மணிமேகலையே,
பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.
அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.
ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sat Jun 27, 2015 2:32 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக
========================
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sun Jun 28, 2015 9:52 am

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட சிலம்பில் இளங்கோ கூறுவதைப் பார்ப்போம்.
இறைவன் நமக்கு நாக்கைக் கொடுத்ததே நாராயணன் புகழ் பாடத்தான் என்று இளங்கோ அடிகள் பாடுகிறார்.

மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sun Jun 28, 2015 2:54 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
--------------------------------------------------------------

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram Sun Jun 28, 2015 5:53 pm

[You must be registered and logged in to see this image.]


மத பூசல்கள் அதிகமாக இருந்த காலகட்டத்தில்
சிவபக்தரான மருள் நீக்கி, என்பவர் சமண மதத்தில் சேர்ந்தார்.
தன் பெயரை தேவசேனன் எனவும் மாற்றிக் கொண்டார்
-
அவரை வளர்த்தவரான சிவபக்தை திலகவதியார்
ஈசனிடம் முறையிட, அவரது அருளால் அவர் மீண்டும்
சிவபக்தரானார்.
-
அதனைப் பொறுக்காத பல்லவ மன்னன் அவருக்கு பல
இன்னல்களைக் கொடுத்தான்...
-
அப்போது அவர் பாடிய பாடல் இதுவாகும்...
-

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

-
மருள் நீக்கியார்தான் பின்னர் திருநாவுக்கரசர்
மற்றும் அப்பர் என அழைக்கப்பட்டவர் ஆவார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sun Jun 28, 2015 8:01 pm

சரியான விடையளித்த அய்யாசாமி அவர்களுக்கு நன்றி .


நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.



எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Mon Jun 29, 2015 12:24 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக .
-----------------------------------------
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Tue Jun 30, 2015 12:42 pm

மிகவும் பழைய காலமல்ல, இது நடந்து 150 ஆண்டுகள் கூட ஆகவில்லை

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறிய மாணவன், பத்து வயது கூட நிறம்பவில்லை. அது எப்படியோ தெரியவில்லை, பிறவியிலேயே அவருக்கு ஞாணம் மிகுதியாக இருந்தது

ஆசிரியர் ஆத்திச்சூடி சொல்லிக்கொடுக்கிறார் "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்", இந்த மாணவன் மட்டும் சொல்ல வில்லை. கோபம் வந்து விட்டது ஆசிரியருக்கு.

"ஏண்டா வாயை திறக்க மாட்டேங்குர"

"வேண்டாம், வேண்டாம் என்று சொல்லபிடிக்கவில்லை அய்யா, வேண்டும் வேண்டும் என இதை மாற்றிப்பாடலாம் அல்லவா"

ஆசிரியர் திகைத்தார், அவரின் திகைப்பு அடங்கும் முன்னரே, இந்த சின்னஞ்சிறு பிள்ளை பாடுகிறான்


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

"இனி நீதான் எனக்கு ஆசிரியர் அய்யா"... நாக்கு தழுதழுக்கிரது ஆசிரியருக்கு

அவர் வேறு யாரும் அல்ல

சுத்த சன்மார்க நெறியை பரப்பிய திருவருட்பிரகாச வள்ளளார்தான். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" எனக்கூறிய கருணாமூர்த்தி அவர்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Fri Jul 03, 2015 10:03 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டி பொருள் விளக்குக .
-------------------------------------------

போட்டாளே வேலையற்றுப் போய்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum