Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் தண்டிப்பாரா?
+13
அருண்
சரவணன்
ayyamperumal
பூஜிதா
krishnaamma
தே.மு.தி.க
dsudhanandan
SK
கஜேந்தினி
ரேவதி
kitcha
பிளேடு பக்கிரி
balakarthik
17 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கடவுள் தண்டிப்பாரா?
First topic message reminder :
இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.
"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.
உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"
அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...
குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.
வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.
கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.
சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.
தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.
"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.
சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.
குரு சிரித்தபடியே சொன்னார்...
"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.
நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.
அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.
வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.
எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.
வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.
பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.
இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.
வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.
நன்றி :- முகிலன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கடவுள் தண்டிப்பாரா?
balakarthik wrote:அக்கா இதற்க்கு இப்பொழுது என்னால் நீண்ட விளக்கமளிக்கமுடியாது இருப்பினும் சுருக்கமாக ஒன்றை சொல்லிக்கொள்ளாசைபாடுகிறேன்
தண்டிப்பதும் துன்புறுத்துவதும் அரக்ககுணம்
மன்னிப்பதும் மறப்பதும் மனிதகுணம்
மன்னிப்பதும் ஆட்கொண்டு முக்தி அளிப்பதும் தெய்வகுணம்
தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.
நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன்
தவறு செத்தவனுக்கு மன்னிப்பு கண்டிப்பாக கிடைக்கும் பாலா, ஆனால் அவனால் கஷ்டப்பட்ட சக மனிதனுக்கு? என்ன கிடைக்கும்? அவனுக்கு யார் நியாயம் வழங்குவார்கள்? அதை ஏன் நினைக்கமாட்டேன் என்கிறீர்கள் ? தவறு செய்பவனுக்கு மன்னிப்பு வேண்டும் திருந்து வதற்க்கு என்று சொல்கிறேர்கள் நீங்கள் அவன் செய்த தவறால் பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் வேண்டும் என்கிறேன் நான் அவ்வளவுதான்.
ஆட்கொண்டு முக்தி என்று நீங்கள் சொல்வது தான் நான் சொல்லும் தண்டனை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடவுள் தண்டிப்பாரா?
அக்கா முக்தி என்பது மீண்டும் பிரவாவரம் அது தண்டனை அல்ல சித்தர்களும் ஞாணிகளும் முக்க்தியை தான் தேடினார்கள். மீண்டும் இந்தமண்ணில் பிறந்து வாழ்ந்து குடும்பம் உறவுகள் ஆசைகள் இவற்றில் உழன்று வாழ்க்கை கடலில் கரைசேரமுடியாத துன்பநிலைகளிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்பினார்கள்.
இன்னொன்றாயும் இங்கு நான் கூறவிரும்புகிறேன் இன்று நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் துன்பங்கள் யாவும் நாம் முற்பிறவி பயன்கலே ஆகும் அதற்க்கு நம்மையன்றி வேறொருவரும் காரணமில்லை. நாம் செய்யும் பாவங்கள் நம்மை பிந்தொடர்ந்து வருகின்றது.
இன்னொன்றாயும் இங்கு நான் கூறவிரும்புகிறேன் இன்று நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் துன்பங்கள் யாவும் நாம் முற்பிறவி பயன்கலே ஆகும் அதற்க்கு நம்மையன்றி வேறொருவரும் காரணமில்லை. நாம் செய்யும் பாவங்கள் நம்மை பிந்தொடர்ந்து வருகின்றது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கடவுள் தண்டிப்பாரா?
நீங்க சொல்வதெல்லாம் ஓகே பாலா, ஒருவன் தவறு செய்துவிட்டு, மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தண்டனை பெறாமல் தப்பித்து விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்ப அவனால் பாதிக்க பாதிக்கப்பட்டவன் , கதி என்ன? அதை சொல்லுங்கள். எனக்கு அது தான் வேண்டும்.
தப்பு செய்தவன், நல்லா தப்பும் செய்து விட்டு, மனம் திருந்தி தண்டனை பெறாமல் தப்பிக்கணும், அவனால் பாதிக்கப்பட்டவன், என் பூர்வ ஜன்ம பாவம் என்று மனம் தேற நுமா ?
ரொம்ப வர்த்த்கமாக இருக்கிறது பாலா, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்னப்போல் பல கஷ்டங்கள் அனுபவித்து விட்டு, என்றாவது ஒருநாள் அந்த பெருமாள் கண் திறப்பர் என்று இருந்தேன், உங்கள் பதிலால் ரொம்ப மனம் வருந்துகிறேன்
நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பலனும் இல்லை, பொறுமையாக நமக்கும் காலம் வரும் பகவான் கண் திறப்பான் , கெட்டது அழியும் நல்லதுக்கு வாழ்வுகிடைக்கும் என்று நம்பி வாழுவதர்க்கும் அர்த்தம் இல்ல என்று உங்கள் பதிலால் தெரியவருகிறது. தவறு செய்பவர்களுக்கு இவ்வளவு பேர் சப்போட் செய்கிறேர்கள், அவர்களுக்கு மன்னிப்பு வாங்கித்தரே ஆசைப்படுகிறேர்கள்.....அவர்களால் கஷ்டப்பட்டவர்களை பற்றி பேசவும் ஆள் இல்லை என்ன செய்வது நான் வாங்கி வந்த வரம்
நன்றி
தப்பு செய்தவன், நல்லா தப்பும் செய்து விட்டு, மனம் திருந்தி தண்டனை பெறாமல் தப்பிக்கணும், அவனால் பாதிக்கப்பட்டவன், என் பூர்வ ஜன்ம பாவம் என்று மனம் தேற நுமா ?
ரொம்ப வர்த்த்கமாக இருக்கிறது பாலா, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்னப்போல் பல கஷ்டங்கள் அனுபவித்து விட்டு, என்றாவது ஒருநாள் அந்த பெருமாள் கண் திறப்பர் என்று இருந்தேன், உங்கள் பதிலால் ரொம்ப மனம் வருந்துகிறேன்
நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பலனும் இல்லை, பொறுமையாக நமக்கும் காலம் வரும் பகவான் கண் திறப்பான் , கெட்டது அழியும் நல்லதுக்கு வாழ்வுகிடைக்கும் என்று நம்பி வாழுவதர்க்கும் அர்த்தம் இல்ல என்று உங்கள் பதிலால் தெரியவருகிறது. தவறு செய்பவர்களுக்கு இவ்வளவு பேர் சப்போட் செய்கிறேர்கள், அவர்களுக்கு மன்னிப்பு வாங்கித்தரே ஆசைப்படுகிறேர்கள்.....அவர்களால் கஷ்டப்பட்டவர்களை பற்றி பேசவும் ஆள் இல்லை என்ன செய்வது நான் வாங்கி வந்த வரம்
நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடவுள் தண்டிப்பாரா?
balakarthik wrote:
தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.
கண்டிப்பாக மனிதனுக்கு கடவுளிடம் "பயபக்தி" வேண்டும் பாலா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடவுள் தண்டிப்பாரா?
அக்கா இதற்க்கு என்ன பதிலளிப்பது என்று புரியவில்லை இருப்பினும் நான் கேட்ட ஒரு கதையை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்
ஒரு ஊரில் மிக சிறந்த பக்தனொருவன் இருந்தான் அவன் பக்தியின் எல்லை எப்படி என்றாள் ஐயோ இந்த கடவுள் தினமு கோவிலில் நின்றுகொண்டே இருக்கிறாரே அவருக்கு கால் வளிக்காதா அவருக்கு ஓய்வே இல்லயா என்று மிகவும் வருந்துவானாம் ஒருநாள் கோவிலில் கடவுளிடம் இதுபற்றி மிகவும் மருகி வேண்டினானாம் உடனே அவன்முன் தோன்றிய கடவுள் அவன் குறையை கேட்டார் பின்பு கடவுள் கூறினார் பக்த்தா நான் ஓய்வெடுத்தால் அப்புறம் யார் உலகத்தை பாதுகாப்பது என்று உடனே அந்த பக்க்தனும் ஆமாம் ஆமாம் இருந்தாலும் இன்று ஒருநாளாவது தாங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு பதிலாக நான் இன்று அணைத்தயும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினானாம் கடவுளும் அதற்க்கு ஒப்புக்கொண்டார் ஆனால் ஒரு நிபந்தநாயும் விதித்தார் அதாவது இன்று இங்கே என்ன நடந்தாலும் வாயை திறந்து எதுவும் பேசக்கூடாது எதுவும் செய்யக்கூடாதென்று அவனும் அதற்க்கு ஒப்புக்கொண்டான் கடவுளும் ஓய்வெடுக்க சென்றுவிட்டாராம்.
கொஞ்சநேரம் கழித்து அந்த கோவிலுக்கு வேறொரு பக்தன் வந்தான் அவன் மிகப்பெரிய செல்வந்தன் அவன் கடவுளின் உண்டியலில் மிகப்பெரிய காணிக்கை ஒன்றை போட்டுவிட்டு வேண்டிக்கொண்டு சென்றான் அப்பொழுது அவன் இடுப்பில் இருந்த ஒரு பெரிய பணமுடிப்பு தவறி கீழே விழுந்துவிட்டது இதை கவனிக்காமல் அவனும் சென்றுவிட்டான்.
இதை பார்த்துக்கொண்டிருந்த முதல் பக்தன் உடனே அவனுக்கு இதை சொல்ல நினைத்தானாம் ஆனால் கடவுள் விதித்த நிபந்தனை அவனுக்கு நினைவுக்கு வந்தவுடம் மிக வருத்தத்துடன் அமைதியாக இருந்துவிட்டான்.
கொஞ்சம் நேரம் கழித்து வேறொரு பக்க்தன் அந்த கோவிலுக்கு வந்தான் அவன் ஒரு பரம ஏழை அவன் கடவுளிடம் வேண்டிக்கொண்டான் கடவுளே நான் இதுவரை யாருக்கும் ஒருத்தீங்கும் செய்ததில்லை உன்னை ஒருநாளும் வணகாமல் இருந்ததில்லை இருந்தும் எனக்கு எதற்க்கு இவ்வளவு கஸ்ட்டங்களும் துன்பங்களும் கொடுக்கிறாய் என்று அப்பொழுது அவன் கண்ணில் இந்த பணமுடிப்பு தெரிந்தது உடனே அதை மிக மக்ழிசியுடன் எடுதுகொண்டு கடவுளுக்கு நன்றி கூறி சென்றுவிட்டான்.
இதாயும் இந்த முதல் பக்தன் பார்த்துக்கொண்டிருந்தான் இப்பொழுதும் அவன் அதை தடுக்கநினைத்தான் மீண்டும் அந்த நிபந்தனை அவனுக்கு நினைவுக்கு வந்தது அமைதியாகா இருந்துவிட்டான் இருப்பினும் அவனுக்கு கடவுளின்மீது கோபம் வந்தது என்ன இந்த கடவுள் இப்படி ஒரு நிபந்தனையை விதித்துவிட்டாரே பாவம் பணத்தை பறிகொடுத்தவர் என்ன கஷ்டம் அனுபவிக்கிறாரோ இவன் கொஞ்சம் கூட மனசாசி இல்லாமல் அந்த பணத்தை எடுத்துக்கொண்டானே நம்மால் ஒன்றுமே செய்யமுடியலயே எண்டு வருந்தினானாம்.
இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து அங்கே வேறொரு பக்தன் வந்தாநாம் அவன் ஒரு மீனவன் அவனும் ஏழை அவனும் கடவுளிடம் இன்று தனக்கு மீன்பிடிக்க சென்றைடத்தில் மிக அதிகமாக மீன்கள் கிடைதது உணட்க்கு என்மீதித்தான் எத்தனை கருணை கடவுளே மிக்க நன்றி நாலயும் நான் அங்கே மீன்பிடிக்க செல்கிறேன் இன்று போலவே நாளையும் அதிகமாக மீங்கிடைக்க நீதான் அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது இந்த பணத்தை பறிகொடுத்த செல்வந்தன் அங்கே காவலாளிகளுடன் வந்தான் வந்தவன் இந்த மீனவனை பார்த்து இவன்தான் இந்த கோவிலில் உள்ளான் ஆகவே இவன்தான் என் பணத்தை எடுத்திருப்பான் என்று காவலாளிகளிடம் முரயீட்டான் இந்த மீனவனும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதை அவர்கள் கேட்ட்கமறுத்துவிட்டார்கள்.
அப்பொழுது இந்த முதல் பக்தன் நிபந்தனைகளையும் மீறி அங்கே தோன்றி இதை செய்தது இந்த மீனவன் இல்லை இவனுக்கு முன் வந்த அந்த ஏழைத்தான் என்று உன்மயை கூறினான் வந்தவர்களும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு சென்றார்கள்.
மறுநாள் கடவுள் ஓய்விலிருந்து வந்தவுடன் நேற்று நடந்ததை மிகவும் பெருமாயாக அந்த முதல் பக்தன் சொன்னான் ஆனால் கடவுலோ அவனை மிகவும் கடிந்துகொண்டார் பின் அவனுக்கு விளக்கினார்
அந்த செல்வந்தன் ஒரு அயோக்கியன் பலபேருடய உழைப்பையே திருடிக்கொண்டு பணம் சம்பாதிப்பவன் அதனால் தான் அவன் பணத்தை இழக்க நேரிட்டது அதுபோல அந்த ஏழையோ மிகமிக நல்லவன் தான் பசிதிருந்தாலும் வரியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருந்தான் அதனால் தான் அவனுக்கு அந்த பணமூட்டை கிடைத்தது அதுபோலவே இத மீனவனும் மிக மிக நல்லவன் ஆனால் அவன் வீதி முடிந்துவிட்டது இன்று அவன் மீன்பிடிக்க சென்றைடத்தில் கடுமயான சூறாவளியில் சிக்கி உயிரிழப்பான் அதை தடுக்கவே நான் அவனை காவலாளிகளிடம் சிக்கவைக்க நினைத்தேன் அவனும் இன்று விடுதலையாகிருப்பான் உயிருடன் இருந்திருப்பான் இப்பொழுது அனைத்துமே உன் செயலால் கேட்டுவிட்டது என்று கூறினாராம்.
அக்கா நானும் இதைத்தான் கூறுகிறேன் நமக்கு நடக்கும் இன்பங்களும் துன்பங்களும் அனைத்துமே கடவுளின் சித்தம் அவனுக்கு தெரியும் யாருக்கு என்ன செய்யவேண்டும் என்று நடப்பவை அனைத்துமே அவனருளால் நடப்பவை இன்று நாம் அனுபவிக்கும் துன்பங்கள் கூட வேறெதோ பெரியதுன்பங்களிலிருந்து விடுபடவெயன்றி வேறெதர்க்கும் இல்லை என்பது என் கருத்து வேறென்ன சொல்வது
எல்லாம் அவன் செயல்
எல்லாம் நன்மைக்கே
அவனின்றி ஓரனுவும் அசையாது

அக்கா இந்த பதிவின்மூலம் உங்கள் மனதை புண்படுத்தீருந்தால் நான் உங்களிடம் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன் மன்னியுங்கள்
அதேசமயம் இன்று ஒரு நல்ல விவாதமாகவும் இது அமைந்தது என்பதயும் மறுப்பதர்க்கிள்ளை.
எல்லாம் அவன் செயல்
அதேசமயம் இன்று ஒரு நல்ல விவாதமாகவும் இது அமைந்தது என்பதயும் மறுப்பதர்க்கிள்ளை.
எல்லாம் அவன் செயல்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கடவுள் தண்டிப்பாரா?
அருமையாக கருத்து பதிவு/பகிர்வு நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கடவுள் தண்டிப்பாரா?
நல்ல இருக்கு நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கடவுள் தண்டிப்பாரா?
balakarthik wrote:அக்கா இந்த பதிவின்மூலம் உங்கள் மனதை புண்படுத்தீருந்தால் நான் உங்களிடம் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன் மன்னியுங்கள்
அதேசமயம் இன்று ஒரு நல்ல விவாதமாகவும் இது அமைந்தது என்பதயும் மறுப்பதர்க்கிள்ளை.
எல்லாம் அவன் செயல்
ஐயோ மன்னிப்பெல்லாம் எதற்க்கு பாலா? நீங்க சொன்னது போல் எல்லாம் அவன் செயல் தான். நீங்க சொன்ன கதை யும் அருமை ஆனால் நாம் தலைப்பு என்ன? "கடவுள் தண்டிப்பரா "? அதற்க்கு பதில் உங்கள் பதிலில் இல்லையே ?
ஒரு குழந்தை வந்து , "சாமி கண்ணை குத்துமா?" என்று கேட்டால் என்ன சொல்வோம்? ஆமாம், கண்ணா தப்பு பண்ணி னால் கண்ண குத்தும் என்று தானே சொல்வோம்? அல்லது, " நீ என்ன வெனாலும் பண்ணு, கடைசில வருத்தப்பட்டு ஒரு "சாரி" சொல்லிடு, அவர் கடவுள் அல்லவா, மன்னித்துவிடுவார், "dont worry" என்று சொல்வீர்களா? பதில் சொல்லுங்கோ.
( அந்த திரில 'சொப்பன சுந்தரிய யார் வெச்சுண்டு இருக்கா" நு அவர் கேட்டுக்கொண்டே இருப்பது போல் நானும் கார்த்தாலிருந்து பல வழிகளில் கேட்டுக்கொண்டே இருக்கேன், பதில் தான் கிடைக்கலை. பல விளக்கங்கள் வருகின்றன
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
» கடவுள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum