புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_m10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_m10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%
mohamed nizamudeen
முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_m10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_m10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10 
8 Posts - 2%
prajai
முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_m10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_m10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_m10முருகன், சாந்தன், பேரறிவாளன்? -  வசந்தன்.  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன், சாந்தன், பேரறிவாளன்? - வசந்தன்.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 10, 2011 8:58 pm

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டுள்ள முருகன்,சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின் கருணை மனு தொடர்பாக அறிவுரை ஒன்றை உள்துறை அமைச்சகத்திடம் கேட்க இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அனுப்பியிருப்பதாகவும்.அந்த மனு தொடர்பாக பாதகமாக முடிவுகள் எதையும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எடுக்கக் கூடாது என்பதுமான செய்திகள் கசிந்து கிடக்கும் நிலையில் மீண்டும் இந்தியாவில் தூக்குத் தண்டனை முறைகள் தேவையா?என்ற விவாதங்கள் மீண்டும் வேர் விடுகின்றன.ராஜீவ் கொலை வழக்கின் பின்னர் பலருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதுதான் தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான பொதுப் பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. அதற்கு முன்னரும் பின்னருமாக ஒரு சிலர் சில குற்றவளக்குகளில் தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலைக்கைதிகளுக்காக அல்ல நாகரீகமடைந்த சமூகத்தில் இம்மாதிரியான கற்கால தண்டனை முறைகளை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. தவிறவும் நவீன கால உலக வரலாற்றில் 120 நாடுகளுக்கு மேல் மரணதண்டனையை ஒழித்து விட்டன. அப்படி மரணதண்டனையை ஒழித்து விட்ட நாடுகள் கூட குற்றவாளிகளை பரபஸ்பரம் இன்னொரு நாட்டில் ஒப்படைக்கும் போது கூட தூக்கிலிடக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் கைதிகளை ஒப்படைக்கிறார்கள். என்னும் நிலையில், மரண தண்டனைக்கு எதிரான தீவிரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

அரிதினும் அரிது.
..............................

1980 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தீர்ப்புச் சொன்ன நீதிபதிகள் அரிதினும் அரிதான வழக்குகளிலேயே இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.அந்த தீர்ப்பு வ்ழங்கப்பட்ட 1980- லிருந்து 1990 வரையிலான பத்தாண்டுகளில் 40% வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.அரிதினும் அரிதான வழக்கு என்று ஒரு நீதிபதி எதை தீர்மானிக்கிறார். அவரது சமூக,கலாசாரா,மதம் சார் விழுமியங்கள்தான் அதை தீர்மானிக்கிரதா?அவர் பெண்கள் மீதான் வன்முறையையும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளையும் அரிதான வழக்குகள் என நினைக்கிறார் என்றால் 99% வழக்குகளில் தூக்குத் தண்டனையே விதிக்க முடியும். அரிதினும் அரிதான என்ற சொல்லே இப்போது தூக்குத் தண்டனை விஷயத்தில் நீதிபதிகளை ஆட்டிப்படைக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டிட தொழிலாளியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவரின் தூக்குத் தண்டனை உறுதி செய்துள்ளது. அவர் 2007-ல் ஒரு சிறுமியை பாலியல் வன்முறை செய்தார். தடுக்க வந்த சிறுவனை கழுத்தறுத்து திட்டமிட்டு கொன்றார் என்பது குற்றச்சாட்டு. இந்த மனு மீதான தீர்ப்பிலும் நீதிபதி அரிதினும் அரிதான வழக்குகளிலேயே தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்று தனது தீர்ப்பை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டியிருக்கிறார்.ஆக எண்பதுகளில் அரிதினும் அரிது என்று சொன்ன உச்ச நீதிமன்றத்தின் வாதம் இன்றுவரை எல்லா தூக்குத் தண்டனைகளுக்குமே முன்னுதாரணமாக மாறி விட்டது.

ஜனாதிபதியும், உள்துறை அமைச்சகமும்.
........................................................................

கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் ஒருவருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த பிறகு அவர் சட்ட ரீதியாக இனி போராட வாய்ப்பே இல்லை என்றான பின்னர். தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு குற்றவாளிக்கு இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள இறுதி வாய்ப்பு கருணை மனு. ஒரு குற்றவாளியின் கருணை மனுவை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. ஜனாதிபதி இதற்கு முன்னர் இம்மாதிரியான கருணை மனுக்களை ஏற்று அதை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறாரா?என்றால் ஆமாம் அரசியல் படுகொலைகள் அல்லாத தனி மனித உணர்வுகளால் உந்தப்பட்டு செய்யப்படுகின்ற கொலைகளுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்களை பரிசீலித்த ஜனாதிபதி அவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறார்.பிரதீபாபாட்டீல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் மனோகர் தனது சகோதரின் கொலையால் பாதிக்கப்பட்டு ஒரு குடும்பத்தைச் சார்ந்த சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொன்றார். பழிக்குப் பழியாக நடந்த இந்த கொலைவழக்கில் ஷியாம் மனோகரன் தூக்குத் தண்டனை பெற்றிருந்தார். 1997- ல் உச்ச நீதிமன்றமும் இவரது தண்டனையை உறுதி செய்தது. இவரது கருணை மனு உட்பட இதே மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார், நரேந்திர யாதவ் ஆகியோரும் 1999- ம் ஆண்டு தூக்குத் தண்டனை பெற்றனர். இவர்கள் அனைவருமே கருணை காட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தார். நாடெங்கிலும் இருந்து சுமார் 100 கணக்கானோர் கருணை காட்டுமாறு கோரியதில் எட்டு பேரின் தூக்குத் தண்டனையை ஜனாதிபதி ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். 2009ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஜனாதிபதி ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் என்பதும் நினைவுகூறத்தக்கது. கடந்த முப்பதாண்டுகளில் 77 பேர் கருணை மனுவை ஜனாதிபதிக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஒரு தூக்குத் தண்டனை கைதிக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையே கருணை மனு. அந்த மனு மீதான வாய்ப்புகள் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.அப்படியான ஒரு உயிர் வாழ்தலுக்கான வாய்ப்பை வேண்டி தமிழகத்திலிருந்தும் பத்திற்கும் மேற்பட்டோர் ஜனாதிபதியிடம் கருணை மனு போட்டிருக்கிறார்கள்.

ஜ்னாதிபதியின் அணுகுமுறை இப்படி இருக்க உள்துறை அமைச்சகமோ இதை எப்படி அணுகுகிறது என்ற அச்சமும் விமர்சனங்களும் விரவியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துறைக்காக அனுப்பப்பட்ட பல மனுக்கள் தண்டனை மீதான கரிசனம் இன்றி திரும்பி வந்த கதைகள் உண்டு. பஞ்சாப் பேராசிரியர் தேவேந்தர் பால்சிங் புல்லாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்தார்.ஜனாதிபதி நிராகரித்ததன் காரணம் மத்திய உள்துறை அமைச்சகம் இவர் மீதா கருணை மனு மீது கரிசனம் காட்ட மறுத்து திருப்பி அனுப்பியதாலேயே ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததார் என்பது செய்தி.கடந்த 16 ஆண்டுகளாக தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேராசியர் தேவேந்தர் பால்சிங் இன்று எந்த ஒரு வழியும் இன்றி தூக்கு மர நிழிலில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார். பேராசிரியர் தேவேந்தர் பால்சிங் ஒரு வேளை தூக்கிலிடப்பட்டால் அது இந்திய நீதித்துறைக்கு மிகப்பெரிய களங்கமாகி விடும் என்று மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் பேராசிரியரின் கைதும் அவரது வழக்கு விசாரணையும் பாரபட்சமான முறையில் நடந்ததான குற்றச்சாட்டுகளும் உண்டு. என்னும் நிலையில்தான் பால்சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. அந்த உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பிலேயே தமிழகத்தைச் சார்ந்த பலரின் கருணை மனுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் மூன்று ராஜிவ் கொலைக் கைதிகளும் அடக்கம்.

வேண்டாம் மரணதண்டனை
...................................................

மேற்கு வங்கத்தைச் சார்ந்த தனஞ்செய் சாட்டர்ஜி என்பவரை கொல்கத்தா சிறையில் தூக்கிலிடப்பட்ட பின்னர் இந்தியாவில் வேறு எவர் ஒருவரும் தூக்கிலிடப்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இல்லை. ராஜீவ் கொலை வழக்கில் மூவரும், ஜெயலலிதா கைதான போது தருமபுரி பேரிந்து எரிப்பு வழக்கில் மூன்று பேரும், தனிநபர் கொலை வழக்கில் சிலரும் என சுமார் பத்து பேருக்கும் மேல் தூக்கு மர நிழலில் நிற்கிறார்கள். இதில் உணர்ச்சிகரமான விஷயமாகக் கருதப்படுகிற ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிற்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தயார் கடந்த 20 ஆண்டுகளாக தன் மகனைக்காப்பாற்ற அலைந்து கொண்டிருக்கிறார். பேரறிவாளன் ராஜீவ் கொலையில் என்ன செய்தார். அவர் ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்தார். ஆனால் தான் வாங்கிக் கொடுத்த பேட்டரி ராஜீவைக் கொல்லத்தான் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது.கொலையாளிகள் 17 வயது சிறுவனை இங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தவிறவும் அந்த வழக்கில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட போது அவருக்கு வயது 17.ஒரு சிறுவர் இல்லத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டிய பேரரிவாளனை கொடூரமான விசாரணை மையங்களில் வருடக்கணக்காக அடைத்து வைத்து அவரிடம் இருந்து பெற்ற வாக்குமூலங்கள் அடிப்படையிலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.இன்று அவர் வேலூர் சிறையில் அடைபட்டிருக்கிறார். தன் வாழ்வில் எந்த விதமான சந்தோசங்களையும் காணாத பேரறிவாளன் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோருகிறார். நீதியின் முன்னாலும் ஊடகங்களின் முன்னாலும் அவர் கேட்ட கேள்விகளுக்கான பதில் இன்று வரை எவராலும் வழங்கப்படவில்லை.

இந்திய நீதித்துறையில் ஒலித்த மனித உரிமைக் குரலாக ஒலித்த வி.ஆர். கிருஷ்ணைய்யர் // உலகின் நூற்றுக் கணக்கான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. ராஜீவ் காந்தியைவிட வஞ்சகமான முறையில் மவுண்ட் பேட்டன் பிரபு கொல்லப்பட்டார். ஆனால், அவரைக் கொன்ற வருக்கு பிரிட்டன் மரண தண்டனை வழங்கவில்லை. கொலை என்பது ஒருவன் ஆத்திரத்தில் தன்னை இழக்கிற கணத்தில், அவன் அறவே வேறு மனிதனாகி விடுகிற சூழ்நிலையில் நடப்பது. அப்போது எந்தத் தண்டனையைப் பற்றியும் யோசித்துவிட்டு அந்தக் கொடுமையை அவன் செய்வதில்லை. மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் இளைஞர் களுக்கும் இது பொருந்தும். நான் மரண தண்டனைதான் வேண்டாம் என்று சொல்கிறேனே தவிர, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளே வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஏனென்றால் நானும் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சியை ஏற்று வாழும் குடிமகன்தான். மரண தண்ட னையோ, கண்ணுக்கு கண். பல்லுக்கு பல் என்ற பிற்போக் குத்தனம் கொண்டது. நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்று ஒரு தீர்ப்பில் எழுதி னேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன். காந்தியடிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் அப்சல் மட்டுமல்ல யாரையுமே தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார். // என்கிறார் வி.ஆர்.கிருஷ்ணைய்யார்.

ராஜீவ் கொலைக்காகவே அல்ல ஒரு மனிதன் அந்த நேரத்தில் எழும் உணர்வெழுச்சியால் ஒரு கொலையைச் செய்து விடுகிறான். அந்த உணர்வலைகளில் அடுத்த கணமே மாற்றங்கள் ஏற்படும்.தவிறம் அவன் செய்த தவறுக்கான தண்டனை அளித்து. ஒரு குற்றவாளியை மீண்டும் சமூகத்திற்கு பயன்படும் மனிதனாக மாற்ற வேண்டும் என்பதே தண்டனையின் நோக்கம். ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் ஒருவர் தினம் தோறும் ஒவ்வொரு இரவிலும் அவர் தூக்கிடப்படுகிறார்.அன்றாடம் அவர் மன ரீதியாக கொல்லப்படுகிறார்.தான் செய்த தவறுக்களுக்காக துடிக்கத் துடிக்க தூக்கிலடப்படும் ஒருவருக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை விதைப்பதுனூடாக மட்டுமே அவரை ஒரு திருந்திய மனிதனாக்க முடியும். அந்த உரிமை எல்லோருக்கும் வழங்கப்படுவதன் மூலம் பெருமளவு குற்றங்களையும் குறைக்க முடியும். தூக்குத் தண்டனை வேண்டாம் என்றால் விடுதலையா? என்று கேட்கிறார்கள் சிலர் ஒரு மரணத்திற்கு தண்டனையாக மரணம் எப்படி தண்டனையாக இருக்க முடியாதோ அப்படித்தான் சிறையும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன்? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன்.

முக்கிய குறிப்பு : குளோபல் தமிழ் நியூஸ் நெட்வொர்க்குக்காக பிரத்யேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மிகுந்த உழைப்பின் பின் எழுதப்படுகின்றன. இக்கட்டுரைகளை மறுபிரசுரம் செய்பவர்கள் ஆதாரமாகக் கட்டாயம் globaltamilnews.netஐ குறிப்பிட வேண்டும்.
அனுப்புக முகப்பு, கட்டுரைகள்
அபிப்பிராயங்கள்
(4) அபிப்பிராயங்கள்
05-08-2011, 05:14 - Posted by piranavan,
நான், அ.ஞா. பேரறிவாளன், ராஜிவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு, மரண தண்டனை சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு, மேதகு குடியரசுத் தலைவரின் மேலான பரிசீலனையில் இருப்பதால், உயிர் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14 1/2 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும், உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட - மாறாத தழும்புகளைச் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.

இந்நிலையில், என்னுடைய வழக்குத் தொடர்பாக இரு வேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்ட காரணத்தினால், இம்மடலை எழுதுகிறேன். முதலாவது காரணம், குடியரசுத் தலைவர் எமக்குக் கருணை காட்டும்படி அரசுக்குப் பரிந்துரைத்த செய்தி அறிந்த பிறகு கொண்ட நம்பிக்கையும், மகிழ்ச்சியும். இம்முறையீட்டு மடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியும், ‘பல்நோக்குக் கண்காணிப்புக் குழு'வின் அதிகாரியாகவும் அங்கம் வகித்து 2005 மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான ரகோத்தமன் - இக்கொலை தொடர்பாக, ‘குறுந்தகடு' ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.

10.8.2005 நாளிட்ட ‘குமுதம்' வார இதழின் பேட்டியின் இறுதியில் ரகோத்தமன் சொல்கிறார்: ‘‘கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை. அவை, சிறீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப் பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரியுமா?''

ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு, என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது. எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று தன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக, என்மீது பொய்யான பிரச்சாரத்தை - இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991 ஆம் ஆண்டு, நான் கைது செய்யப்பட்டபோது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.

மரண தண்டனையின் கொடுங்கரங்கள் எனது வாழ்வைச் சின்னாபின்னப் படுத்தியிருப்பினும், எனது குடும்பத்தார் வாழ்வைத் துன்பக் கடலில் ஆழ்த்தியிருப்பினும், மனிதநேயத்தின் அடிப்படையில் இம்மரண தண்டனையை மாற்றியமைக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. பிறகு நான் ஏன் தண்டனைக் குறைப்பைக் கோருகிறேன் எனில்,

‘‘...எனக்கு நன்றாகத் தெரியும் - தலைச்சேரியில் இளம் வழக்குரைஞராக விசாரணை வழக்குகளில் பணி செய்து கொண்டிருந்தபோது பார்த்துள்ளேன். குற்றமற்றவர்கள், நூற்றுக்கு நூறு நிரபராதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் ஒரு பாவம் அறியாதவர்கள். அவர்களுக்காக இப்போதும் என் இதயத்தில் குருதி வழிகிறது''

-என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர், 25.6.1998 அன்று திருவனந்தபுரத்தில் மரண தண்டனைக்கெதிரான மாநாட்டில் பேசியதற்கு - உதாரணமாக எனது வாழ்வு அமைந்து விட்டதே என்ற வேதனையோடு என் வழக்கை வைத்துள்ளேன்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட பிறகு நிரபராதி எனத் தெரியவந்த - உலகின் எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டு வருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பாண்டியம்மாள், நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்து விடவில்லை.

முடிவாக என் வழக்கின் சாரத்தைத் தருகிறேன் : 1. வழக்கு ‘தடா' சட்டப்படி நடந்தது 2. சாதாரண சட்டங்கள் வழங்கிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன 3. இறுதியில் இவ்வழக்கிற்கு ‘தடா' பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது 4. அதன் பின்னரும், ‘தடா' வாக்குமூலம் எனும் காவல் துறை அதிகாரி பதிவு செய்த ஆவணத்தின் அடிப்படையிலேயே தண்டனை 5. அந்த வாக்குமூலத்திலும்கூட, சதிச்செயல் எனக்குத் தெரியும் என்பதற்கோ சிவராசன், தனு, சுபா ஆகியோரில் எவரேனும் கூறினர் என்பதற்கோ எவ்வித ஆதாரம் இல்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக ‘தடா' எனும் கொடூரச் சட்டத்தால், நீதிமன்ற முறையீட்டு வாய்ப்பு ஒன்று (Hஇக்க் Cஒஉர்ட் ஆப்பெஅல்) பறிக்கப்பட்டது. மேலும் ஒரு சட்ட வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்குமானால், நான் விடுதலை பெற்றிருப்பேன். இந்நிலையில், அந்த முறையீட்டை உங்கள் முன் நான் வைக்கிறேன். நல்லதொரு தீர்ப்பு நல்குங்கள். குற்றமற்ற மனிதனைத் தூக்கிலிடும் கொடுமையிலிருந்து தடுத்தாட்கொள்ள முன்வாருங்கள்!

வழக்கின் புலனாய்வுத் துறையினரும், அவர்களின் செல்வாக்கால் செய்தி ஊடகங்களும், என் குறித்துப் பரப்பிய பொய்யான பரப்புரைகளைப் புறந்தள்ளி, உண்மைக்காக ஏங்கும் இம்மனிதனின் உயிர்ப் போராட்டத்திற்கு உதவுங்கள்.

05-08-2011, 05:19 - Posted by piranavan,
மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய்த் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது. மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும் தூக்குக் கயிறு சிதைத்துப் போடுகிறது.

மரணத்தின் நிழல் தரும் மன வலி மிகக் கொடுமையானது. வாழ்வதற்கான பற்றை வைத்துதான் மனித சமூகமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஒரு மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதை ‘குற்றமும் தண்டனையும்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். நாஸி வதை முகாமில் இருந்து தப்பி வந்த யூத இளைஞன் ஒருவரான எலீ வீஸல் என்பவர் தனது அனுபவங்களை எழுதியுள்ள இரவு என்ற சுயசரிதை நாவலும் (தமிழில் வெளிவந்துள்ளது. யூனிடெட் ரைட்டர்ஸ் வெளியீடு) வாழ்வின் மீது மனிதன் கொண்டுள்ள மாறாப் பற்றை விளக்குகிறது. சிறை வாழ்க்கை குறித்து தோழர்.தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களும் இத்தகையதுதான்.

உயிர் வாழும் வேட்கை தரும் உணர்வில் தான் மனித சமூகத்தின் இயக்கமே நடைபெறுகிறது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கான உரிமை எவருக்கும், எதற்கும் இல்லை என உலகச் சட்டங்கள் அனைத்தும் உரத்த குரலில் கூறுகின்றன. ஆனால் சட்டங்களை அமல்படுத்தும் நீதிமன்றங்களுக்கு மட்டும் தண்டனை என்ற பெயரில் ஒரு உயிரைக் கொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் எத்தகைய முரண்பாடு?

இறுக்கி கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் அமர்ந்து கொண்டு.. சட்டப் புத்தகங்களின் காற்புள்ளி, அரைப்புள்ளிக்கெல்லாம் அர்த்தம் தேடுவதுதான் நீதிமன்றத்தின் பணியா என்றால் இல்லை. மாறாக தனி மனித விழுமியங்கள் மேல் கவிழும் இருட்டினை துடைக்கும் வெளிச்சத் தெறிப்பாக சட்டங்களும், நீதிமன்றங்களும் மாறி இருந்திருக்க வேண்டும். இன்றளவும் சர்ச்சைகள் நீங்காத வழக்கொன்றின் முடிவு தவறொன்றும் செய்யாத ஒரு எளிய மனிதனின் மரணத்தில் தான் விளையும் என்பது வெட்கக்கேடானது. துயரமானது. பேரறிவாளன் தனது முறையீட்டு மடல்களில் முன் வைத்திருக்கும் எந்தக் கேள்விக்கும் எந்த அமைப்பிடமிருந்து பதிலில்லை. மூர்க்கமும், அவசரமும் நிரம்பிய நம் நாட்டு அதிகார கட்டமைப்புகளின் துயரமான விளைவாக மாறி நிற்கிறது பேரறிவாளனின் உயிர்.

அமெரிக்க விடுதலைப் போராட்டக் காலத்தில் அங்கு குடியேறிவர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுத்து விடுதலையை ஆதரித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் கவிஞர் தெல்வால் (THELWALL) சிறையிலடைக்கப்பட்டார். அப்போது அவர் தன் வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் “என் வழக்கினை நானே உரைக்காவிடில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்” என எழுதி இருந்தார். அதற்கு அவரது வழக்கறிஞர் எழுதிய பதிலில் “உங்களின் வழக்கினை நீங்களே உரைத்தாலும் தூக்குத் தண்டனை கிடைக்கும்” என கூறியிருந்தார் – இந்த உரையாடல்களில் இருந்து உருவான சொற்றொடர்தான் “நான் செய்தால் தூக்கிலிடப்படுவேன், செய்யாவிடில் தூக்கிலிடப்படுவேன் “(I’ll be hanged if I do and hanged if I don’t ). அதிகார வல்லாதிக்கத்தின் உச்சக் கட்ட அவல காட்சியின் வடிவம் இந்த சொற்றொடர்தான் அமெரிக்கப் பெரு நிலத்தின் வல்லாதிக்க அரசாட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாக, ஆவேசம் மிகுந்த முழக்கமாக அமெரிக்க வீதிகளில் எழுந்தது.

உயர்ந்த மதிற்சுவர்களுக்கு மத்தியில் நாள், கிழமை, மாத வருடம் பேதம் அறியாமல் சிறை அறைகளில் எப்போதும் தேங்கி இருக்கும் வற்றா இருட்டில்..துளித்துளியாய் கசிகிற வெளிச்சத் துளிகளை கண்களுக்குள் உள்வாங்கி.. வாழ்வின் ஏதோ ஒரு முனையில் திரும்பி விட மாட்டோமா… அதிசயம் நிகழ்ந்து விடாதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்கள் பனிக்க காத்திருப்பதன் வலியை பேரறிவாளன் எத்தனை நாள் சுமப்பார்?.. ஒரு ஆயுள் தண்டனைக்கும் அதிகமான நாட்களும் கடந்து.. இயல்பான வாழ்க்கையின் எவ்வித சுகங்களையும் அறியாமல், அடைப்பட்டுக் கிடக்கும் பேரறிவாளன் மீதுள்ள குற்றச்சாட்டு – ஒரு கொலைக் குற்றத்திற்கு உதவி செய்ததாக. ராஜீவ் காந்தியின் படுகொலையை ஒரு தனி நபர் படுகொலையாகத்தான் கருதப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே முடிவு செய்து விட்ட நிலையில்.. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சூழ்ந்து கிடக்கிற மரணத்தின் இருட்டில் தான் கழிக்க வேண்டும் என்ற தண்டனை ஒரு நொடியில் தொண்டையை இறுக்கி.. கண்களைப் பிதுக்கி உயிரைக் கக்குகிற மரண தண்டனையைக் காட்டிலும் கொடுமையானது.

தனது 19 ஆவது வயதில் சிறை புகுந்த பேரறிவாளனுக்கு இன்று 38 வயது ஆகிறது. தனிமைச் சிறையும், மரண வாசலின் முன்னே ஊசலாடும் தன்மையும் தந்த பரிசினால் கடுமையான உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற அவரது நூலின் தலைப்பில் உள்ள மடலில் பேரறிவாளன் நெஞ்சுருக்கும் சொற்களோடு தன் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல எடுத்து முன் வைக்கிறார். பக்கங்கள் புரள புரள உண்மைகளும், உண்மைகளைப் புறந்தள்ளி ஒரு குற்றமற்றவனை பலியிடும் தன்மைகளும் வெளிவந்து நம்மை கண்கலங்கச் செய்கின்றன. ஒரு எளிய மனிதன் வெகு சுலபமாக கொல்லப்படும் அவலம் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு நம்மை மிகுந்த அச்சத்தில் கிடத்துகிறது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புலனாய்வுத் துறையினரும், ஆளும் வர்க்கத்தினரும், உளவுத்துறையினரும், ஊடக தாக்குதல்களும் சூறையாடிய ஒரு அப்பாவி இளைஞனின் ரத்தக்கறை படிந்திருக்கிறது.

பேரறிவாளன் மீது அரசுத் தரப்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் முக்கிய மாபெரும் குற்றச்சாட்டு என்னவெனில் ராஜீவ் காந்தி கொலையாளி தனுவிற்கு பெல்ட் பாம் செய்ய மின்கலம் (பேட்டரி) அதாவது சாதாரண பெட்டிக் கடைகளில் கிடைக்கும் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்து குண்டு தயாரிக்க உதவியது.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்து ஒய்வுப்பெற்ற ரகோத்தமன் 10-08-2005 தேதியிட்ட குமுதம் வார இதழிலும்., 31-07-2005 தேதியிட்ட ஜீனியர் விகடன் இதழிலும் “தனு தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து கொடுத்தவர் யார் என்று இது நாள் வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை“ என மிக மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இது நாள் வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு காரணிக்காக பேரறிவாளன் தலையின் மேல் தூக்குக் கயிறு தொங்குகிறது என்பது எவ்வளவு மோசமான சமூகத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்பதற்கு உதாரணம். ஆள்பவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் நினைத்தால் அப்பாவியான ஒரு எளிய மனிதனை தன் அதிகார கரங்கள் கொண்டு கொன்று விட முடியும் என்கிற நிலையில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு 20-06-1991 ஆம் தேதியில் வெளிவந்த இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட “ராஜீவ் படுகொலை – சதி திட்டம்” தீட்டப்பட்டது எப்படி என்ற கட்டுரையில் பேரறிவாளன் வெடிகுண்டு நிபுணர் எனவும், ராஜீவைக் கொன்ற தனு கட்டியிருந்த வெடிகுண்டை செய்தவர் என்றும் சித்தரித்து எழுதப்பட்டிருந்தது. புலனாய்வு குழுவினரும், உளவுத் துறையினரும் திட்டம் போட்டு ஊடகங்களில் பரப்பி விட்ட பொய்யான கதைகளால் பேரறிவாளன் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக இன்று மரணக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார். பிறகு இதே இந்தியா டுடே இதழ் 1996 ஆண்டு “துப்பில் துவாரங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இது நாள் வரை வெடிகுண்டு குறித்து எந்த புலனாய்வும் செய்யவில்லை என கட்டுரை வெளியிட, அதை எதிர்த்து புலனாய்வுத் துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேறு கதை.

அரசு தரப்பு சாட்சிய ஆவணம். 392 என்ற 7-05-1991 ல் பெறப்பட்டதாக கம்பியில்லா தந்தியில் (சிவராசன் சென்னையிலிருந்து இலங்கையிலிருக்கும் பொட்டுஅம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பியதாக சொல்லப்படும் சங்கேதச் செய்தியை இடைமறித்து ஆராய்ந்து பார்த்து உருவாக்கிய ஆவணம்) கொலைச்சதி சிவராசன், தனு, சுபா ஆகிய மூவருக்கு மட்டும்தான் தெரியும் என பதிவாகி உள்ளது. இந்தக் கூற்றை வழக்கினை விசாரித்த நீதிபதிகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். எனவே கொலைச்சதி பற்றி பேரறிவாளனுக்கு எதுவும் தெரியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. “குற்றமனமில்லா செயல் குற்றமென ஆவதில்லை“ (actus non facit reum nisi mens sit rea- The intent and the act must both concur to constitute the crime –The act itself does not make a man guilty unless his intention were so –An act does not make one guilty unlees the mind is also guilty) என்ற சட்ட முதுமொழிகேற்ப பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டகோட்பாடுகளின் மீதும், இயற்கை நீதியின் மீதும் அரசியலும், அதிகாரமும் நிகழ்த்திய வன்முறையாக பேரறிவாளனின் வாதங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை (Pachan singh vs State of Punjab) பேரறிவாளன் வழக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டதில் இருந்து நியாயமும், நீதியும் மட்டுமே தண்டனையையும், விடுதலையையும் முடிவு செய்வன அல்ல என்பது முடிவாகி இருக்கிறது.

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் தூக்குத் தண்டனை என்பது தடா சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது ஆகும். தடா சட்டம் மிகக் கொடுமையான ஒன்று என்பதிலும், அது அரசியலைப்பு சட்டத்திற்கே முரணானது என்பதிலும் யாருக்கும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. இக்கருத்தினை அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி சவாண் தடாச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என பாரளுமன்றத்திலேயே ஒத்துக் கொண்டார். (19-08-1994 மாநிலங்களவையில்). போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் சாதாரண சட்டங்களின் படி நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. (A confession made to a police officer is irrelevant-sec 25 Indian Evidence Act 1872 ) ஆனால் தடா என்ற ஆட்தூக்கி சட்டத்தின் வாயிலாக (பிரிவு 15 தடா சட்டம்) போலீஸ் அதிகாரிகளிடம் பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தான் நிரபாரதி என்பதற்கு அனைத்து விதமான காரணங்களையும் தன் முறையீட்டு மடல்களில் பட்டியலிடுகிறார் பேரறிவாளன். ஆனால் ஒரு எளிய மனிதனின் நியாயங்களைக் கேட்பதற்கும், அவரது துன்பச் சூழல்களைப் போக்குவதற்கும், நெடிய சிறை தந்த காயங்களை ஆற்றுவதற்கும் ஆள்வோருக்கு விருப்பமில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவினை ஒட்டி தன்னை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கின்ற முறையீட்டு மடலில் பேரறிவாளனின் ஆழமான புரையோடிப் போன காயத்தின் வலி தெரிகிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தானும் தன் குடும்பமும் அனுபவித்து வரும் சொல்லவியலா துன்பத்தினை வடித்து இருக்கிறார் அறிவு. அந்த மடலில் தனக்கென கொள்கை பின்னணி இருந்ததே ஒழிய அரசியல் பின்னணி- செல்வாக்கு ஏதுமில்லை என குறிப்பிடுகிறார். உண்மைதான். பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தினைத் தாக்கி 3 பேரைக் கொன்று விட்டு வரும் நபர்களுக்கு கூட மிக எளிதாக விடுதலை கிடைத்து விடும் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் 19 வருடங்களாய் சிறையில் வாடும் எளிய நிரபாரதிக்கு நியாயம் கிடைத்து விடுமா என்ன.?

பேரறிவாளன் தனது முறையீட்டு மடலில் தன்னை மொழி, இனப் பற்றாளன் என்றும், தொப்புள் கொடி உறவான தமிழீழ மக்கள் படும் இன்னல்களைப் போக்க உலகத் தமிழர்கள் போல தன்னால் இயன்றதைச் செய்பவன் எனவும் அடையாளம் காட்டியுள்ளார். இவ்வாறு பிறந்து வாழ்ந்ததுதான் பேரறிவாளன் செய்த ஒற்றைக் குற்றம். உண்மையான மொழி, இனப்பற்றாளர்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் கொலைகாரன், கொள்ளைக்காரன் என பட்டங்கள் சூட்டி கொல்லப்படுவார்கள். இல்லையெனில் தீவிரவாதி என சிறைப்படுத்தப்படுவார்கள். அதுவும் இல்லையென்றால் அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கிற வல்லாதிக்க நாடாக வளர்ந்து வருகிற இந்தியத் திரு நாட்டின் இறையாண்மை - ஒரு எளிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து போராடி ஒரு இயக்குனராக உயர்ந்து.. காலத்தின் கோலமாய் இனம் அழிந்த சோகத்தில் இனி அழியாமல் இருக்க ஒரு அமைப்பினை கட்டி.. இளைஞர்களை சேகரித்து.. களமாடி வருகிற செந்தமிழன் சீமானின

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 10, 2011 9:01 pm

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 11, 2011 12:37 am

பகிர்விற்கு நன்றி கண்ணன் அண்ணா..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக