புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
107 Posts - 49%
heezulia
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
7 Posts - 3%
prajai
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
sanji
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
234 Posts - 52%
heezulia
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_m10காசா: அறங்கள் மடிந்த இடம்    -அ.முத்துக்கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசா: அறங்கள் மடிந்த இடம் -அ.முத்துக்கிருஷ்ணன்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Wed Aug 10, 2011 9:09 pm

உலக நாடுகளின் தலைவர்கள் பல பெரும் நகரங்களில் கூடுவதும், மாநாடுகள் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது. இவர்களின் சந்திப்புகள் அர்த்தம் பொதிந்தவை தானா, இவர்கள் அப்படி எதைப் பற்றிப் பேசிவிட்டு குரூப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்த குரூப் போட்டோவை இவர்கள் தங்களின் வீடுகளில் மாட்டிக் கொள்வார்களா, இல்லை வேறு எங்குதான் இதை வைப்பார்கள் என்பது அடுத்த கேள்வி. சந்தித்தவர்களே மீண்டும் மீண்டும் சந்திப்பது, கை கொடுப்பது சலிப்பாக இருக்காதா? உலக நிகழ்வுகளின் போக்குகளையும் அது சார்ந்து இவர்களின் பிரதிபலிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும் குழப்பமே மிஞ்சுகிறது.

ஈராக்-ஆப்கான் மீது போரும் வியாபாரப் படையெடுப்பும் ஒன்றை விஞ்சி ஒன்று எனப் பின்தொடர்கிறது. இலங்கையில் நடந்த-நடக்கும் இனப் படுகொலைகள், அதனைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களின் படையெடுப்பு, கொசோவோ, காங்கோ, சோமாலியா என நீளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியல் குருதியில் நனைந்து கிடக்கிறது. பெரும் போர்க் குற்றங்களுக்குத் தகுதி படைத்த செயல்களைச் செய்யும் அரசுகளுடன் கூச்சமின்றி வியாபார நிறுவனங்கள் ஊடலில் ஈடுபடுவது விழாக்களாகக் கொண்டாடப்படுவது சகஜமாகிவரும் வேளையில் பல கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது. உலகில் இதுபோல் எல்லா சர்வதேச விதி முறைகளை மீறும் நாடுகளை, இனப் படுகொலைகளைத் திட்டமிட்டுப் புரியும் நாடுகளை, பகைமையை வளர்க்கும் நாடுகளை, தானே செய்த உடன்படிக்கைகளை மீறும் நாடுகளைக் கண்டிக்க இந்த உலக நாடுகளின் தலைவர்கள் எங்காவது கூடியிருக்கிறார்களா? அரசுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இவைகளைச் சீர் செய்வது கடமை அல்லவா? பிரதமர்களும், ஜனாதிபதிகளும் சாமானிய ஜனங்களின் அவலங்களைத் துடைக்க முயலாமல், முதலீட்டாளர்களுக்குத் தக்க சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டும் தான் இவர்களின் கடமையா?

சமீபத்தில் உலகமே ஒரு நிகழ்வுக்கு மௌனம் காத்தது. பாதிக்கப்பட்ட சமூகம் ஒன்றுக்கு உதவிகளைத் திரட்டிச் சென்றவர்களுக்கு நிகழ்ந்த பரிதாப நிலையை மீண்டும் நம்மைப் பல தளங்களில் யோசிக்க வைக்கிறது. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுடன் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பை நோக்கிப் பயணித்த கப்பல்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு நாடு தொடர்ந்து சந்திக்கும் இன்னல்களைப் பார்த்தாலே அது மிக விரிவாகத் தன் பிரச்சினையை முன்வைக்கிறது. 1948ல் நடந்த போரில் பாலஸ்தீனத்தின் ஜனத்தொகையில் பாதிப் பேர் இஸ்ரேலால் விரட்டியடிக்கப்பட்டனர். "அவர்களை நாங்கள் விரட்டவில்லை. அவர்களாகவே தான் சென்றார்கள்" என்றது இஸ்ரேல் அரசு. ஆனால் இன்று வரை அதில் ஒருவரைக் கூட அந்த நாட்டில் மீண்டும் உள்நுழைய இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. 1967ல் ஜோர்டானிடம் இருந்து மேற்குக் கரையையும், எகிப்திடமிருந்து காசா மற்றும் சினியா தீபகற்பத்தையும், சிரியாவிடமிருந்து கோலன் மலைப்பகுதியையும் கபளிகரம் செய்தது இஸ்ரேல். எல்லாம் நடந்து ஒரு வழியாக 1993ல் வாசிங்டனில் வைத்து நடந்த ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இஸ்ரேல். 1999க்குள் பாலஸ்தீனத்தில் ஒரு சுதந்திர அரசை நிறுவிட எல்லா வகையிலும் உதவுவதாக இஸ்ரேல் அளித்த வாக்குறுதி அம்மக்களுக்குப் பெரும் நிம்மதியாய் இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டன, மேலும் புதிய நெருக்கடிகளையே அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

2000ஆம் ஆண்டு காசா பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரே விமான நிலையமும் இஸ்ரேல் படைகளால் அழிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு காசாவில் செயல்பட்டு வந்த ஒரே மின் நிலையத்தின் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு பொழிந்தன. அது முதல் இன்று வரை அந்தப் பகுதியே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அங்கு கடத்தி வரப்படும் மின்சார ஜெனரேட்டர்களும் அதிகம் பாவிக்கும் பட்சத்தில் வெடித்து அதுவே பெரும் சேதங்களை விளைவிக்கிறது. இஸ்ரேலின் இரும்புத்திரை பாலஸ்தீன மக்களின் வாழ்வையே கையறுநிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. 2008 டிசம்பர்- 2009 ஜனவரியில் நடந்த 22 நாள் தாக்குதல்கள் காசாவை ஒரு மனித சமூகம் வாழ லாயக்கற்ற இடமாக மாற்றிவிட்டது.

காசாவின் ஜனத்தொகை 15 லட்சம், இதில் 90% பேர் முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் 8 முகாம்களை ஐ.நா. ஒருங்கிணைத்து சர்வதேச உதவியுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள்தான் கவனித்து வருகின்றன. இஸ்ரேலின் கட்டுப்பாடுகளைக் கடந்து அங்கு எந்த பொருளும் நுழைய இயலாது. சில அரபு நாடுகள் அளிக்கும் உதவிப் பொருட்கள் கூட முழுமையாக அங்கு சென்றடைவதில்லை. இந்த 15 லட்சத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்களே. மருத்துவம், கல்வி என ஏதுமின்றி குழந்தைகள் சந்திக்கும் அவலம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நிலைமை இப்படி இருக்க, கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முகாம்களையும், அங்கு இயங்கும் திறந்தவெளி மருத்துவமனைகளையும் இஸ்ரேல் விமானங்கள் குறிபார்த்துக் குண்டு வீசுவது வாடிக்கையாக உள்ளது. அந்தத் தேசத்தின் மீது இஸ்ரேல் பொருளாதாரத் தடையை மட்டும் விதிக்கவில்லை. மாறாக, அவர்களின் கடல், வானம், சாலை என சகலத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்தப் பின்புலங்களில்தான் 36 நாடுகளைச் சேர்ந்த 700 பிரதிநிதிகள் 8 கப்பல்களில் காசா நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சர்வதேச நாடுகளில் திரட்டப்பட்ட 10,000 டன் மனிதாபிமான உதவிகளுடன் காசா மக்களுக்கு இந்த நிவாரணப் பொருட்களை வழங்குவது இவர்களின் நோக்கம். இந்தக் கப்பல்களின் அணிவகுப்பை Freedom Flotilla என அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள். இந்தக் கப்பல்களை உலகின் மனசாட்சியாகவே காசா மக்கள் கருதினார்கள், எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்தக் கப்பல்களில் 36 நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மதப் பிரதிநிதிகள், செயல்பாட்டாளர்கள் பயணித்தனர். இவர்கள் தவிர மொராக்கோ, ஜெர்மனி, இஸ்ரேல், குவைத், எகிப்து, யேமன், அல்ஜீரியா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த Freedom Flotillaவில் பயணித்தனர். அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, பஹ்ரின், பெல்ஜியம், போஸ்னியா, கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜோர்டான், கொசோவோ, குவைத், லெபனான், மலேசியா, மொராக்கோ, நியூசிலாந்து, நார்வே, ஓமன், பாகிஸ்தான், போலந்து, செர்பியா, தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், சிரியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாட்டவர்களுடன் பலரும் அந்த Freedom Flotillaவில் உடன் தங்கள் சகோதரத்துவக் கடமையை நிறைவேற்றச் சென்றனர்.

இந்தக் கப்பல்கள் உலகின் பல பகுதிகளிலிருந்து கிளம்பி மே 28, 2010 அன்று எகிப்து அருகில் சங்கமித்து, மே 30 அன்று காசா நோக்கிச் செல்லத் தொடங்கின. மே 30 அன்று இரவே கப்பல்களுக்கு இஸ்ரேல் கப்பல் படையின் மிரட்டல்கள் வரத் தொடங்கின. 4 போர் கப்பல்கள், 3 ஹெலிகாப்டர்கள், 2 நீர்முழ்கிக் கப்பல்கள், 30 சோடியாக் படகுகள் மற்றும் ஏராளமான கே9 ரக நாய்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. மே 31 அதிகாலை 4.30 மணிக்குத் தாக்குதல் தொடங்கியது. அனைத்துக் கப்பல்களும் சுற்றி வளைக்கப்பட்டன. முதலில் அந்தக் கப்பல்களின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. கப்பல்களில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகள், வயர்லெஸ் கருவிகள் என அனைத்தும் செயல் இழந்தது. திடீரென எந்த எச்சரிகைகளும் இல்லாமல் இஸ்ரேல் படைகள் ஆயுதமற்ற சமாதானப் போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிலர் குண்டடிபட்டு இறந்தனர், பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. பலரும் தங்களுக்குக் கிடைத்த நாற்காலிகள், பாட்டில்களை வைத்து தங்களைத் தற்காத்துக் கொண்டனர். இவர்கள் எறிந்த நாற்காலிகளில் சிலவற்றால் இஸ்ரேல் படையினருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சமாதானக் குழுவின் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அனைத்து சமாதானப் போராளிகளையும் கப்பலின் லாஞ்ச்சில் அமருமாறு சமாதானக் குழுவின் தலைவர் புலெந்துயில் தீன் அணி திரட்டினார். மாவி மர்மரா கப்பலில்தான் பெரும்பகுதியானவர்கள் இருந்தனர்.

கப்பலில் அரபிக் மற்றும் ஆங்கில மொழியில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. அப்பொழுது அங்கு சமாதானக்குழுவுடன் வந்த இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாமிம் ஜாபி ஹீப்ரு மொழியில் இஸ்ரேல் படையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றார். தங்களால் சிகிச்சையளிக்கப்பட்ட இஸ்ரேல் வீரர்களை ஒப்படைப்பதாகவும் இனி யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி சிகிச்சையளித்த மருத்துவருடன் இருவர் இணைந்து அடிபட்ட இஸ்ரேல் படையினரை ஒப்படைத்தனர். அவர்களைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்தில் வந்தவர்களை எல்லாம் கொன்றது இஸ்ரேல் படை. பின்னர் அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்கள். அனைவரையும் விலங்கிட்டார்கள். முட்டியிட்ட நிலையில் 8 மணி நேரம் காத்திருக்க வைத்தார்கள். தண்­ர் குடிக்கவோ, இயற்கையின் அழைப்புகளுக்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அனைவரின் கட்டைவிரல் ரேகைகள், புகைப்படங்கள், வீடியோ படங்கள் என அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. காலை 9 மணிக்கு மெல்ல கப்பல்கள் இஸ்ரேலின் அஸ்தோத் துறைமுகம் நோக்கிச் செலுத்தப்பட்டன. கப்பல்கள் மாலை 4 மணிக்கு அத்துறைமுகத்தை வந்தடைந்தன. அனைவரும் கப்பலிலிருந்து இறக்கப்பட்டனர். அங்கு துறைமுகமே பெரும் வெற்றிவிழா மனநிலையில் இருந்தது. அனைவரையும் தகாத வார்த்தைகளால் வரவேற்றனர். 19 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதற்குள் வெளிவந்திருந்தது. ஆனால் எண்ணிக்கை மிகவும் அதிகம் என பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவரையும் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து மேலும் தீவிர விசாரணை மற்றும் தேடுதலுக்கு உட்படுத்தினார்கள். உள்ளாடைகளைக் கூட கழற்றிச் சோதித்தார்கள் என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த 700 பிரதிநிதிகளும் சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து தாக்கப்பட்டு பின்னர் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, இஸ்ரேல் துறைமுகத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அனைவரிடமும், அனுமதியின்றி நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக எழுதி வாங்கினார்கள். பின்பு நீண்ட பயணத்திற்குப் பின் ஒரு சிறைச் சாலையில் அடைத்தார்கள். அங்கு காவலர்கள் எவரையும் உறங்கவிடவில்லை. அடுத்த நாள் மெல்ல பல நாட்டுத் தூதரக அதிகாரிகள் வந்து அவரவர் நாட்டவரை அழைத்துச் சென்றனர். இதற்குள் அனைவரின் தனிப்பட்ட தஸ்தாவேஜுகள், கடவுச்சீட்டுகள், புகைப்படக் கருவிகள், மடிகணினிகள் என அனைத்தும் சேகரித்து சேதப்படுத்தப்பட்டன. துருக்கி நாட்டவர்களுக்குத் தனி கவனிப்பு கிடைத்தது, அவர்களை அடையாளம் பார்த்து தாக்கினார்கள் காவலர்கள். அவர்களில் சிலரை இதுவரை காணவில்லை.

சர்வதேசக் கடல் பகுதியில் இருக்கும் கப்பலைத் தாக்கும் உரிமையை இஸ்ரேலுக்கு யார் அளித்தது? ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவிகளை இஸ்ரேல் படையினர் தாக்கியது சரியா? இஸ்ரேலைத் தண்டிக்கும் பொறுப்பை எந்த அமைப்பு ஏற்கும்? இஸ்ரேலின் பாதையை உலகின் அநேக நாடுகள் ஏற்க முனைந்தால், இந்த உலகம் எப்படி உருமாறும்? அமைதி காக்கும் ஒபாமாவின் நோபல் பரிசைப் பறிமுதல் செய்யப் பரிந்துரைக்கலாமா?

அமெரிக்காதான் தன் செல்லப் பிள்ளையாக இஸ்ரேலை இத்தனை காலம் வளர்த்து வருகிறது. இஸ்ரேலும் கூட அமெரிக்கப் பாணியில்தான் இயங்கி வருகிறது. அமெரிக்கா வேற்று நிலப்பரப்பில் இறங்கி அங்கிருந்த பூர்வகுடிகளை இனப்படுகொலை செய்து, அதனைத் தனது நாடாக்கிக் கொண்டது. அதனைத்தான் இஸ்ரேலும் செய்ய முயல்கிறது. அமெரிக்காவுக்கோ மேற்கில் ஒரு படைத்தளம் தேவை என அது தன் சாதுர்யத்தை தொடங்கி இன்று பல தளங்களை ஏற்படுத்தி விட்டது. இஸ்ரேலுக்கோ தனது எந்த அண்டை நாட்டுடனும் உறவுகளே கிடையாது, வர்த்தகப் பரிமாற்றம் கிடையாது. இதுவே அந்த நாட்டின் மனப்பான்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. இஸ்ரேலில் வேறு பெரும் தொழிற்சாலைகள் கூட கிடையாது. அமெரிக்காவில் உள்ள வலதுசாரி யூதக் கூட்டமைப்புகள் தரும் நன்கொடைகளில் ஒரு நாடே வாழ்கிறது என்றால் அதன் அளவை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் நீங்கள் இந்த இஸ்ரேல் சார் குழுக்களுக்கு நன்கொடை அளித்தால் உங்களுக்கு வருமான வரி விலக்கு கட்டாயம் உண்டு. இதற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு இருந்த போதிலும் யூத வாக்குகளுக்குப் பயந்தே யாரும் இதில் கைவைப்பதில்லை. யூதர்கள் தங்களின் அடையாள வெறியை மட்டுப்படுத்த இப்படியான ஒரு அறம் அற்ற தேசத்தை உருவாக்கி அழகு பார்க்கிறார்கள். நோம் சாம்ஸ்கி கூறுவது போல் இன்று பூமி அதிகம் வெறுக்கப்படும் தேசமாக இஸ்ரேல் திகழ்கிறது.

பாலஸ்தீனர்கள் தங்களை ஒரு தோற்கடிக்கப்பட்ட சமூகமாகத் தங்கள் கனவில் கூட உணர வேண்டும் என்பதே இஸ்ரேலின் முழக்கமாக உள்ளது. இனி இஸ்ரேலின் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு ராணுவத்தினர்தான் பாடம் எடுப்பார்கள். நாட்டின் குழந்தைகளுக்கு எதைக் கற்றுத்தர வேண்டும் என்பதை ராணுவம்தான் முடிவு செய்யும் என சமீபகாலமாக அறிவிப்புகள் வந்துள்ளன. பாடத் திட்டங்கள் யூதமயமாக்கப்பட வேண்டும் என்பது இங்குள்ள இம் தீர்துசு என்கிற வலதுசாரி குழுவின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நம்மை ஆளும் அரசுகள் அமெரிக்காவின் நெருங்கிய சேவகர்களாக உருமாறத் துடிக்கும் துடிப்பை நம்மால் வெளிப்படையாகவே காண முடிகிறது. அமெரிக்காவுக்கு நம் மீது நற்பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இஸ்ரேலுடன் நம் அரசு அளவலாவுவதும், உறவாடுவதும் இந்தியா பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கைக்கே அவமரியாதையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தியா-இஸ்ரேல் கூட்டு ராணுவப் பயிற்சி முதல், அபினவ் பாரத் போன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு இருக்கும் இஸ்ரேல் தொடர்புகள் வரை எல்லாம் பெரும் முட்டுச் சந்தில் தேசம் சிக்கித் தவிப்பதை அரசியலாக சித்தரிக்கிறது.

இந்நிலையில் அடுத்த கப்பல் லிபியாவிலிருந்து கிளம்பி காசா நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. காசா-பாலஸ்தீன் என்கிற சொற்கள் நம் ஊடகங்களில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து புழங்கி வந்தாலும் அது மனங்களில் தக்க விளைவுகளை ஏற்படுத்த தவறி உள்ளதாகவே படுகிறது. கடைசியாக ஒரு கேள்வி: ஏதோ ஒரு நாட்டின், ஏதோ ஒரு வியாபாரக் கப்பலை சோமாலிய தேச பக்தர்கள் (சோமாலிய கடற்கொள்ளையர்கள் என ஊடகங்களால் சித்தரிப்பவர்களே) வழிமறித்தால் உடன் எங்கள் படைகள் தயார் நிலையில் உள்ளன என சமீபமாக கர்ஜித்த இந்தியப் படைத் தளபதிகளுக்கு இந்த 6 கப்பல்கள் தாக்கப்பட்டதைப் பற்றிய செய்திகள் தெரியாதா? இல்லை, மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் கப்பல்கள் என்றால் ராங் நம்பரா...

குறிப்பு:
இமெயிலில் வந்தவை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக