புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சி பலன்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 03, 2008 11:50 pm

First topic message reminder :

குருபெயர்ச்சி பலன்( டிசம்பர் , 2008 முதல் டிசம்பர் , 2009 வரை

( குரு பகவான் 2008 டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் )

1. மேஷம்

2. ரிஷபம்

3. மிதுனம்

4. கடகம்

5. சிம்மம்

6. கன்னி

7. துலாம்

8. விருச்சிகம்

9. தனுசு

10. மகரம்

11. கும்பம்

12. மீனம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:40 am

பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் குறைபாடு வராத நன்னிலை பெறுவர். அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டும் மனநிலை உருவாகும். இதை தவிர்ப்பது நல்லது. குடும்பப்பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். வீட்டுச் செலவுக்கு திண்டாட்டமாக இருக்கும். பிறந்த வீட்டு சீர் பெறுவதில் பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். நகைகள் காணாமல் போகலாம். கவனம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சுமாரான வளர்ச்சி பெறுவார்கள்.


மாணவர்கள்: இன்ஜினியரிங், வாகனம், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், மார்க்கெட்டிங், மாடலிங், சினிமா தொழில்நுட்பம், புவியியல், தொல்பொருள் ஆய்வு, வேதசாஸ்திரம், இசை, நடனம், ஆசிரியர் பயிற்சி, நிதி நிர்வாகம், ஆடிட்டிங் உட்பட பல்வேறு துறையில் பயிற்சி பெறும் மாணவர்களின் படிப்பு பின்தங்கலாம். மிகுந்த கவனத்துடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலை ஏற்படும். ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம்.


அரசியல்வாதிகள்: தேவையற்ற பேச்சால் ஆதரவாளர்களின் அன்பைப் இழக்கக்கூடும். கவனம். அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். புத்திரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அரசியல் எதிரிகளால் சிரமங்கள் பலவற்றை சந்திக்க நேரிடும். அலைச்சல் அதிகமாக இருக்கும்.


விவசாயிகள்: மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் பணச்செலவு அதிகரிக்கும். நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்கள் வரலாம். பொறுமையுடன் செயல்படுங்கள்.


நீங்கள் செய்ய வேண்டியது: திருப்பதி அருகிலுள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதால் வாழ்வில் சகல வளமும் ஏற்படும். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்.


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்


விநாயகனே வேட்கை தணிவிப்பான்


விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்


தண்மையினாற் கண்ணிற்பணிமின் கனிந்து


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:41 am

(40/100) + குழந்தைகளால் பெருமை, - நற்பெயருக்கு களங்கம்


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3


துவங்கும் செயலை மனப்பூர்வமுடன் நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் 5, 7, 9 பார்வைகள் முறையே ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகிறது. குரு அமர்ந்த இடத்தை விடவும் குருவின் பார்வை பெறுகிற இடங்கள்தான் உங்களுக்கு ஓரளவு பலனை வழங்க உள்ளது.


இன்னும் ஒரு விசேஷம். பொதுவாக, குரு பகவான் தனது வக்ர காலத்தில் தான் அமர்ந்த ராசிக்கு முந்தைய ராசிக்குத் தான் செல்வார். இம்முறை, அதிசாரம் என்ற முறையில் முன்னோக்கி உங்கள் ராசியில் வந்து அமரப் போகிறார். அதாவது மகரத்தில் அமர்ந்த குரு, மே முதல் மூன்றரை மாதங்கள் உங்கள் ராசியில் இருப்பார். இந்த நிலையும் உங்களுக்கு கூடுதல் சிரமங்களை ஏற்படுத்தும்.


சிந்தனைகள் மனதை சஞ்சலப்படுத்தும். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனையை பெற்று செயல்பட்டால் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம். பேச்சில் கடுமை கூடும். பணத்துக்கு தட்டுப்பாடாக இருக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புண்டு. கவனம். இளைய சகோதரர்களிடம் பாசம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் மகிழ்ச்சி தரும் அனுகூல பலன் குருவருளால் உருவாகும். வீடு கட்டும் கடன் எளிதாக கிடைக்கும். தாயின் அன்பும் ஆசியும் பலமாக பெறுவீர்கள். பயணங்கள் இனிமை தருவதாக அமையும். புத்திரர்களால் சிறப்பு ஏற்படும். அதே நேரம் அவர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடக்கும்.


பூர்வசொத்தில் வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், உங்கள் கண்காணிப்பு அவசியம். சொத்து சம்பந்தமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. உடல்நலம் சுமாராகத்தான் இருக்கும். சாப்பாடு, மருந்து விஷயத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரத்தில் அனுகூல தீர்வு கிடைக்கும். குடியிருக்கும் வீடு மாற்றம் ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு இருந்தாலும் விட்டுக்கொடுத்து சென்றால் சரியாகி விடும். நண்பர்களுடனும் உரசல் ஏற்படும்.


மே முதல் ஜூலைக்குள் சிறுவிபத்துகளுக்கு ஆளாக நேரிடும். வீண் அலைச்சல் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனம் வேண்டும். சுபநிகழ்வுகள் விஷயத்தில் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.


தொழிலதிபர்கள்:
ஆஸ்பத்திரி, கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், லாட்ஜ் நடத்துவோர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், இரும்பு, காகிதம், குளிர்பானம், உணவு பண்டங்கள், மின்சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களுக்கு பொருட்களின் தரம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு விற்பனை சரிய வழியுண்டு. பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கூடுதல் செலவு ஏற்படும். மற்ற தொழிலதிபர்களுக்கும் ஏறத்தாழ இதே நிலையே. தொழிலை தக்க வைக்க சற்று போராட்டமாகத்தான் இருக்கும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, பழம், உணவு பண்டங்கள், மளிகை, விவசாய இடுபொருட்கள், பர்னிச்சர், வீட்டு உபயோக சாதனங்கள், காய்கறி, ஸ்டேஷனரி, பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வாசனை திரவியங்கள், மருந்து, பீங்கான், ரெடிமேட் ஆடை, தோல், ரப்பர் பொருட்கள், இறைச்சி, மீன் வியாபாரிகள் மந்தநிலை காண்பர். மற்றவர்களின் நிலையும் ஏறத்தாழ இதே தான். மனச்சோர்வும் வியாபார நிறுவனம் களையிழக்கும் தன்மையும் உருவாக வாய்ப்புண்டு. பணியாளர்கள் மீது உங்கள் பார்வை இருக்கட்டும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படும். குழப்பமான சிந்தனையினால் பணியில் குளறுபடி ஏற்படும். நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாவதுடன் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படுவீர்கள். இயந்திரங்களை கையாளுபவர்கள், மின்சாரம், போக்குவரத்து சார்ந்த பணியிலுள்ளவர்கள் கண்ணும் கருத்துமாக தமது பணியை மேற்கொள்ள வேண்டும். கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்படலாம். கவனம். உடைமைகளுக்கு இழப்பு ஏற்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:42 am

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பணயில் உற்சாகம் குறையும். சக பணியாளர்களின் குறுக்கீடு அதிகமாக இருக்கும். நிர்வாகத்தின் வழிகாட்டலை சரிவர நிறைவேற்றுவதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாமல் தவிர்க்கலாம். குடும்ப பெண்களக்கு ஆடம்பர செலவாலும், கணவரின் சம்மதமின்றி வாங்கும் கடனாலும் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட கிரகநிலை உள்ளது. கவனம் தேவை. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் இருப்பதைப் பாதுகாத்தாலே போதும்.


மாணவர்கள்: மருத்துவம், ரசாயனம், பவுதிகம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கேட்டரிங், தகவல் தொழில்நுட்பம், பிரின்டிங் டெக்னாலஜி, லேப் டெக்னீஷியன் பயிற்சி மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க குருவின் நல்லருள் பலமாக உள்ளது. உங்கள் ராசிக்கு நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தை குருபகவான் தனது ஐந்தாம் பார்வையால் பலமாக பார்க்கிறார். இதனால் படிப்பில் சிறந்த சாதனை புரிவீர்கள். ஏரோநாட்டிக்கல், இன்ஜினியரிங், சட்டம், மரைன், கம்ப்யூட்டர், ஆடிட்டிங், விவசாயம் ஆகிய துறை சார்ந்த மாணவர்களும் படிப்பில் சிறந்து தனி முத்திரை பதிப்பர். படிப்புக் கான பணச்செலவு திட்டமிட்டதை விட கூடுதலாகும்.


அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் குறுக்கீடு வந்து விலகும். ஆதரவாளர்களால் அதிக செலவு ஏற்படும். தேவையற்ற வாக்குறுதிகளால் வழக்கு, விவகாரம் என அலைய வேண்டிய நிலைமை இருக்கும். எதிரிகளை விட உடனிருந்து இடையூறு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் அதிக செலவு ஏற்படும். மகசூலும் எதிர்பார்ப் பைவிட குறைந்த அளவில் கிடைக்கும். கால்நடைகளால் ஓரளவு லாபமுண்டு.


நீங்கள் செய்ய வேண்டியது: கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபட கெடுபலன்கள் வெகுவாகக் குறையும். கீழ்க்கண்ட பாடலை தினமும் 11 முறை பாராயணம் செய்யவும்.


பயிரவி பஞ்சமி பாசாங்குசை


பஞ்சபாணி வஞ்சர்


உயிரவி உண்ணும் உயர்சண்டி


காளி ஒளிரும் கலா


வயிரவி மண்டலி மாலினி


சூலி வராகி என்றே


செயிரவி நான்மறை சேர்திரு


நாமங்கள் செப்புவரே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:43 am

(80/100) + குடும்ப ஒற்றுமை, - வேண்டாத ஆசை


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து. 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி


கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறத்துடிக்கும் மீனராசி அன்பர்களே!



உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். உங்களுக்கு நிறைவான ஆதாய பலன்களை தரும்வகையில் இந்த குரு பெயர்ச்சி அமைந்துள்ளது. குருபகவான் தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் முறையே ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கிறார். வெகுகாலம் திட்டமிட்ட எண்ணங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் தழைத்திடும்.


இளையசகோதரர்கள் உங்களிடம் அதிக மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்வர். புத்திரர்கள் படிப்பில் முன்னேற்றமும் பெற்றோருக்கு பெருமையும் தேடித்தருவர். இருக்கும் சொத்துக்களில் வளர்ச்சியும் புதிய சொத்துக்களை வாங்குவதுமான நற்பலன் உண்டு. குலதெய்வ அருள் நல்லபடியாக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும். கடனை பெருமளவில் சரிசெய்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபநிகழ்வுகள் தடையின்றி நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மூத்த சகோதரர்கள் உங்களைக் கண்டித்து வழி நடத்துவர். வெளியூர் பயணத்தால் குறைந்த பலனும் கூடுதல் செலவும் ஏற்படும்.


மே, ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கண்ட பலன்களின் அளவு சற்று குறையக்கூடும். சில முயற்சிகளை எடுத்து அதற்காக பலமுறை பயணம் செய்து பணஇழப்பு நேரிடும். உங்கள் ராசிநாதன் நீச்ச கதியில் செல்வதால் உங்கள் பணத்தை சில போலி நிறுவனங்களிடம் முதலீடு செய்து அவற்றை இழக்க நேரிடும். அளவுக்கு மீறிய ஆசையால் பங்குச்சந்தை புரோக்கர்கள் மூலமாகவும் தரமற்ற கம்பெனிகளில் முதலீடு செய்து இழக்க நேரிடலாம். ஒரு சிலர் உங்களை சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுத்தி லாபம் பெற அழைப்பர். இதனால் பல சிரமங்களை நீங்கள் சந்திக்க வேண்டி வரும். இந்த மூன்று மாதங்களும் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பணியிடங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கூட சில பிரச்னைகள் வரலாம்.


தொழிலதிபர்கள்: கல்விநிறுவனம், நிதிநிறுவனம், ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச்சந்தை சார்ந்த தொழிலில் உள்ளவர்களும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், விளையாட்டு சாதனங்கள், சமையல் எண்ணெய், உணவு பண்டங்கள், கட்டுமானப் பொருட்கள் சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் அதிக உற்பத்தியும் புதிய ஒப்பந்தமும் கிடைத்து தொழிலில் வளர்ச்சி பெறுவர். லாபம் நன்றாக இருக்கும். பிற தொழில் சார்ந்தவர்கள் இவர்களை விட கூடுதல் லாபமடைவர்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் உற்சாகம் ஏற்படும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். நிர்வாகத்தின் அன்பை பெறுவீர்கள். சம்பள உயர்வு மட்டுமின்றி எதிர்பாராத சில சலுகைகளும் வந்து மனதை மகிழ்விக்கும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, பர்னிச்சர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக், கட்டுமானப் பொருட்கள், உணவு பண்டங்கள், பேக்கரி, ஸ்டேஷனரி, மீன், இறைச்சி, குளிர்பானம், உடற்பயிற்சி கருவிகள், விளையாட்டு சாதனங்கள், பீங்கான் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் பெறுவர். புதிய கிளை துவங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். எந்தவகை வியாபார பிரிவினருக்கும் இது வளம் தருகிற காலம்தான். புதிதாக வியாபாரம் துவங்கியவர்களுக்கு சக தொழில் சார்ந்த நண்பர்கள் வியாபார நுணுக்கங்களை சொல்லித்தந்து உதவிகரமாக இருப்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:45 am

பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் பணியிடங்களில் அனுகூல நிலை அமைந்து பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விண்ணப்பித்த கடன், விரும்பிய இடமாற்றம் போன்ற அனுகூல பலன்கள் கிடைத்து மகிழ்வர். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பையும் பாசத்தையும் பரிபூரணமாக பெறுவர். பணவசதி சீராக இருக்கும். புத்திரப் பேறு விரும்புபவர்களுக்கு குருவருளால் அனுகூல பலன் உண்டு. உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் உரிய கவுரவம் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் தொழில் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவர். அதிக வாடிக்கையாளர் கிடைத்து தொழில் வளர்ச்சி சிறக்கும். லாப விகிதமும், ஆதாய பணவரவும் பெறுவீர்கள்.


மாணவர்கள்: ஆசிரியர் பயிற்சி, கம்ப்யூட்டர், எம்.சி.ஏ., பிசினஸ் மேனேஜ்மென்ட், இசை, நடனம், மாடலிங், சட்டம், இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், மருத்துவம், நிதி நிர்வாகம், ஆடிட்டிங், ஏரோநாட்டிக்கல், மரைன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., விவசாயம், இலக்கியம், ஜர்னலிசம் படிக்கும் மாணவர்கள் கவனத்துடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவர். படிப்பைத் தவிர பொழுதுபோக்கு விஷயங்களுக்கு பணத்தைச் செலவிடும் மனநிலை உண்டாகும். கவனம். படிப்பை நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: ஆர்வத்துடன் உங்கள் பணியை செயல்படுத்துவீர்கள். உங்கள் மீது நல்லெண்ணம் கொண்டவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சமூகத்திலும் அரசியலிலும் புதிய பதவி பொறுப்புகள் வரப்பெறுவீர்கள். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அனுகூல கிரகநிலை இருக்கிறது. எதிரிகளுக்கும் உதவுகின்ற நிலையை குருபகவான் ஏற்படுத்தி தந்து, அவர்கள் மூலமும் பலனடைவீர்கள். உங்களின் அரசியல் பணி சிறக்க புத்திரர்களும் தங்களது பங்களிப்பை மனமுவந்து வழங்குவர்.


விவசாயிகள்: ஆர்வத்துடன் வேலை செய்து பயிர் வளர்ப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். மகசூல் அதிகரித்து தாராள பணவரவு கிடைக்கும். சிலருக்கு முன்மாதிரியான விவசாய பணிபுரிபவர் என்கிற நற்பெயரும் ஏற்படும். கால்நடை வளர்ப்பினாலும் வரவு அதிகரிக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் ஏற்படலாம்.


நீங்கள் செய்ய வேண்டியது: கும்பகோணத்திலுள்ள ராமசுவாமி (ராமர்)கோயிலுக்கு சென்று ராம சகோதரர்களை வழிபட்டு வந்தால் நற்பலன்கள் மேலும் பெருகும். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே


தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே


ஜென்மமும் மரணமும் இன்றித்தீருமே


இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக