ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில்

Go down

கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில் Empty கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில்

Post by சிவா Thu Sep 17, 2009 10:14 pm

தெய்வத்திரு. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டானவர், நம் வாரியார் சுவாமிகள்.

25.08.1906ல் மண்ணில் அவதரித்து 07.11.1993 ல் விண்ணில் கலந்தவர். அவரது சமாதித் திருக்கோயில் வேலூர் மாவட்டம் காங்கேய நல்லூர் என்னும் ஊரில் எழுப்பப்பட்டுள்ளது. காங்கேய நல்லூர்தான் வாரியார் சுவாமிகளின் அவதாரத் தலம்.

வேலூரிலிருந்து தென்கிழக்காக 5 கிலோ மீட்டர் தொலைவிலும் காட்பாடியிலிருந்து வடகிழக்காக 4 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூர் பாலாற்றங்கரை அருகிலுள்ளது.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் சமாதி துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது போல் திருமுருக வாரியார் சுவாமிகளின் சமாதி பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது.


சற்றேறத்தாழ 70 ஆண்டுக்காலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றும், இந்தியாவின் பிற மாநிலங்கள், இலங்கை, அமெரிக்கா, இலண்டன், பாரீஸ், மலேசியா உள்ளிட்ட அயல்நாடுகளுக்கும் கடல் கடந்து சென்று சமயத்தை ஒழுக்கத்தை உபதேசித்த சுவாமிகளைச் சிலா ரூபத்தில் ஓரிடத்தில் உட்கார வைத்துள்ளனர்.

வாரியார் சுவாமிகள்பால் வடியாத பக்திகொண்ட சென்னை ஓட்டல் சரவணபவன் அதிபர் கயிலைமணி P.ராஜகோபால் அண்ணாச்சி அவர்களும், அவர்தம் ஊழியர்களும் வாத்சல்ய விசுவாசத்துடன் வடித்துக் கொடுத்த இத் திருக்கோயில் பக்தர்களுக்கு யாத்திரைத் தலமாக விளங்கி வருகிறது.

அமைப்பு: காங்கேயநல்லூர் முருகன் திருக்கோயிலுக்கு எதிரில் உள்ளது. சுவாமிகள் திருக்கோயில் மண்டபத்தின் முகப்புக் கோபுரத்தில்(அந்நாளில் சுவாமிகள் எழுப்பியது) தமது தாய் தந்தையரின் மார்பளவுச் சிலைகளை சமைத்திருப்பது, பெற்றோர்பால் அவர் கொண்டிருந்த பக்தியை மேலும் பெருக்கிக் காட்டுகிறது. அந்தக் கோபுர வாயில் வழியாக நுழைந்ததும் எதிரில் தெரிவது, சுவாமிகள் எழுப்பிய சரவணப் பொய்கை, இடப்பக்கமாக முகத்தைத் திருப்பினால் தெரிவது வாரியார் சுவாமிகள் கையில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் இருக்கும் ஒரு மண்டபம்.(இது சுவாமிகளின் முத்து விழாவில் எழுப்பப்பட்டதாகும்). வலப்பக்கமாக முகத்தைத் திருப்பினால் குழந்தை அறுமுகன் எழுந்தருளியிருக்கும் ஒரு மண்டபம்.

59'x46' நீள அகலங்கொண்ட அந்த மண்டபத்தைத் கடந்துபடியேறி கருவறைக்குள் நுழைகிறோம். கருவறைக் கோயில்22'x7' வீதம் ஆறுபட்டைகள் கொண்ட அமைப்பில் உள்ளது. அறுமுகனை உணர்த்தும் அறுகோணம் போலும்.


சுவாமிகளின் சமாதியை 6'x3' என்ற நீள அகலத்தில் அமைந்த சலவைக்கல் அடையாளம் காட்டுகிறது. எந்நேரமும் மலரில் சிவலிங்க அலங்காரத்துடன் விளங்குகிறது. சிரசுப் பகுதியில் வடக்கு நோக்கிய வண்ணம் அணையா விளக்கொன்று ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.

சமாதியை ஒட்டிச் சுவாமிகளின் திருவுருவப் படிமம் பீடத்துடன் 68 3/4 அங்குலமாகவும் சிலைமட்டும் 35 அங்குல மாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமிகள் ஆஜானுபாகுவாக அமர்ந்த கோலத்தில், ஆசீர்வாதம் செய்கின்ற பாவனையில், புன்னகை சிந்தும் பூமுகத்துடன் எழுந்தருளி இருக்கின்றார். பார்த்த கண்கள் அப்புறம் இப்புறம் அகல மறுக்கின்றன.

திருக்கோயில் வளாகம் 139 அடி நீளமும் 102 அடி அகலமும் கொண்டிருக்கிறது .

ஏறத்தாழ 36 அடி உயரங் கொண்ட விமானம் 5 அடி அளவுள்ள தங்கக் கலசம், வலம் வர ­தூய நடைபாதை சுற்றிலும் பசும் புல் தரைகள், அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள் இவை அனைத்தும் காண்பவர் கண்களைக் கட்டிப் போடுகின்றன.

திருக்கோயிலுக்குப் பின்புறம் சகல வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகை சேவார்த்திகள் தங்குவதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ளது.

திருக்கோயிலின் தென் பகுதியில் பிரம்மாண்டமான "அறுபடை வீடு முருகன் கலையரங்கம்" அமைக்கப் பட்டுள்ளது.


வழிபாடு: தினமும் காலை 7.30 மணிக்கும் பகல் 11.30 மணிக்கும் இரவு 7.00 மணிக்கும் என்று முப்போதும் வழிபாடு எப்போதும் தப்பாத வண்ணம் நடந்து வருகிறது.

மாதாந்திர விழாக்கள்: சஷ்டி îதாறும் அபிஷேக ஆராதனை, கிருத்திகையில் அபிஷேக ஆராதனையுடன் சுவாமி திருவீதியுலா மேற்கொள்ளல். பவுர்ணமி îதாறும் வேள்வி நடத்தி அபிஷேகம், பின்னர் 1000 பேருக்கு அன்னதானம், 1000 குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப் படுகிறது. காலக்கிரமத்தில் இந்த எண்ணிக்கை கூடும்.

தஞ்சை என்றால் பெரிய கோயில், மதுரை என்றால் மீனாட்சி கோயில் நினைவுக்கு வருவது போல், வேலூர் என்றால் வாரியார் சுவாமி திருக்கோயில் நினைவுக்கு வரும் வண்ணம் இதன் பெருமை தினத்துக்குத் தினம் கூடி வருகிறது.

வந்து வணங்கி மனப்பாரம் குறைந்தவர் பலர். மானசீகமாக-நம்பிக்கையாக-வழிபட்ட பலருக்கு மகப்பேறு வாய்த்திருக்கிறது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்குத் திருமணம் விரைந்து கூடியிருக்கிறது.


கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில் Empty Re: கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில்

Post by சிவா Thu Sep 17, 2009 10:19 pm

கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில் Templetopfullviewகிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில் Auditorium


கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum