ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!!

3 posters

Go down

இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Empty இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!!

Post by ரபீக் Wed Aug 03, 2011 7:44 pm

இலங்கைக்கு நாம் உதவியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அங்கு சீனா கால் பதித்து விடும் என்று பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கூறியுள்ளார். இலங்கையின் கொடூர முகத்தைப் பார்த்த பின்னாவது அந்த நாட்டுக்கு உதவுவதை நிறுத்துமாறு கோரி பிரதமரிடம் வைகோ நேரில் மனு கொடுத்துப் பேசியபோது இப்படிப் பதிலளித்துள்ளார் பிரதமர்.

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த கொடூரக் கொலைகள், கற்பழிப்புகள், சித்திரவதைகள் உள்ளிட்டவற்றை உலக நாடுகள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் அந்த நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கோரியபோது, அதுகுறித்து நேரடியாக பதிலளிக்காமல், சீனா வந்து விடுமே என்ற கவலையை பிரதமர் வெளியிட்டது தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மதிமுக எம்.பி. கணேச மூர்த்தியுடன் வைகோ நேற்று டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்தார். அப்போது தமிழகம் கேரளா இடையிலான முல்லைப் பெரியாறு பிரச்சினை, இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காதது உள்ளிட்டவை குறித்து மனு ஒன்றைக் கொடுத்தார் வைகோ.

கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வைகோ கூறுகையில்,

இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். கடந்த காலங்களில் பல முறை தாழ்மையுடன் இந்திய அரசு இலங்கைக்கு எந்த உதவியையும் அளிக்க கூடாது என்று தெரிவித்தபோதும் அதைக் கேட்காமல் தொடர்ந்து இந்திய அரசு இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து வந்துள்ளது. இலங்கையில் நடைபெற்றுள்ள இனப் படுகொலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம் ஆகும் என ஏற்கெனவே பலமுறை கடிதங்கள் மூலமாக தெரிவித்திருந்தேன்.

இனிமேலாவது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்துப் பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும் என அவரிடம் கோரினேன்.தெரிவித்தேன்.

எனது வாதத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார் பிரதமர். பின்னர் அவர் பதிலளிக்கையில், இந்தியா இலங்கைக்கு உதவ முன் வராவிட்டால், சீனா உதவி புரியத் தயாராக இருக்கிறது. எனவேதான் சீனா இலங்கைக்குள் நுழையாதவாறு பார்த்துக் கொள்ளும் வகையில் இந்திய அரசு நடந்து கொண்டுள்ளது என்றார்.

அப்போது நான் குறுக்கிட்டு ஏற்கனவே இலங்கைக் கடற்படையினருடன் சீன வீரர்களும் ஊடுறுவி விட்டனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதலின்போது அவர்களும் இருந்துள்ளனர்.

இலங்கை எப்போதுமே நமக்கு நட்பாக இருக்காது. அது சீனாவுடனும், பாகிஸ்தானுடனும்தான் ஆதரவாக இருக்கும், நட்பாக இருக்கும். எனவே ஒருபோதும் இலங்கையை இந்தியா நம்பக் கூடாது, உதவக் கூடாது என்றேன்.

தமிழகத்தின் தென்கோடியில்தான் இந்தியாவின் அணு உலைகள் உள்ளன. சீனாவுடன் நட்பாக இருக்கும் இலங்கைக்கு உதவினால், அது தமிழகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் அது இந்தியா முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும் என்று விளக்கினேன்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை

கேரள மக்களுக்குத் தேவையான பால், காய்கறிகள் அன்றாடம் தமிழகத்தில் இருந்து அனுப்பபடுகின்றன. இரு மாநில மக்களும் சகோதர - சகோதரிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு அவசரப்பட்டு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டாம்.

கேரள அரசு புதிய அணை கட்டத் திட்டமிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில், புதிய அணையில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழகத்துக்குக் கொடுக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். இரண்டு மாநிலங்களுக்கும் இது நல்லது அல்ல. மேலும், இது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராகவே போகும். எனவே முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றேன்.

அதற்குப் பிரதமர் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறுகிறார்களே என்றார். அதற்கு நான், முல்லைப் பெரியாறு அணை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு பலமாக இருக்கும் என்றும், அந்த அணை பலமாக இல்லை என்று யாராவது கூறினால் இந்தியாவின் மற்ற எந்த அணையும் பலமாக இருக்க முடியாது என்று விளக்கினேன் என்றார் வைகோ.

வைகோ மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும். இரண்டு பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்துச் செய்து உள்ளீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தையும் சந்தித்த வைகோ

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வைகோ பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து ம.தி.மு.க., தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, நேற்று (ஆக.2) மாலை 4 மணியளவில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை , டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் உள்ள அமைச்சரக அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, இருபது ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டு கிடக்கும் பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, அ.கணேசமூர்த்தி எம்.பி.,யும் உடன் இருந்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Empty Re: இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!!

Post by positivekarthick Wed Aug 03, 2011 9:27 pm

வெள்ளைகாரணை வெளியே போன்னு சொன்ன காங்கிரஸ் இன்று வெள்ளை காரியிடம் அடிமையாக இருப்பது காலத்தின் கோலம். என்ன கொடுமை சார் இது


இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Pஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Oஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Sஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Iஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Tஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Iஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Vஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Eஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Emptyஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Kஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Aஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Rஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Tஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Hஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Iஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Cஇலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Empty Re: இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!!

Post by அருண் Thu Aug 04, 2011 1:13 am

இந்தியா அப்பா சீனா வுக்கு பயந்து தான் ஆட்சி நடந்து கிட்டு இருக்கு..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!! Empty Re: இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அப்படி பேசிய வைகோவிடம்.. திடீரென சென்று பாசத்துடன் விசாரித்த பிரதமர் மோடி.. மலைத்துப்போன எம்பிக்கள்
» போர்க்குற்றம் குறித்த ஐ.நா. அறிக்கை-இலங்கைக்கு சீனா ஆதரவு
»  இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு
» இந்திய கடலில் ஆதிக்கம் செலுத்த இலங்கைக்கு கரிசனம் காட்டுகிறது சீனா:அமெரிக்க செனட்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum