புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 7 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 7 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 7 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 7 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 7 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Apr 03, 2012 10:22 am

sinthiyarasu wrote:அருமை அருமை. தமிழின் அழகோ அழகு தான்.....................

உண்மை நண்பரே, தமிழ் என்றும் அழகு தான் ..
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Apr 16, 2012 6:56 pm

காதலனுக்கு காத்திருத்தல்

காதலின் சுகமும் வேதனையும் காத்திருக்கும் நேரம் தான். ஆணுக்கு சுகம், பெண்ணுக்கு எப்போது பார்த்து விட்டு செல்வோம் என்று நெஞ்சில் பதட்டத்தோடு காத்திருக்கும் காலம் வேதனை கலந்த சுகம். காதலிக்கும் காலத்தில் காத்திருப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. துணையின் குணம் அறிய உதவும் ஒரு அரிய கருவி இது. துணை பொறுப்பானவரா, பொறுமையானவரா என்பதை உணர்த்தும் தருணம் இந்த காத்திருக்கும் நேரம்.

சாதாரண நட்புடன் பழகும் ஆணை சந்திக்க பெண்கள் பயப்படுவதில்லை. ஆனால் காதலிக்கும் ஆணை சந்திக்க காத்திருக்கும் காலம் மிகவும் நீளமானது. ஐந்து நிமிட தாமதமும் கோவத்தை, வருத்தத்தையை வரவழைக்கிறது. மனதில் காதல் கணம் இருப்பதால் வரும் பயம் இது . இவ்வளவு இருந்தும் காதலனை காண கடைசி நிமிடம் வரை மனம் துடிக்கிறது. இன்னும் ஒரு சில நிமிடம், இன்னும் ஒரு சில நிமிடம் என்று பல நிமிடம் காத்திருக்க இந்த காதல் நமக்கு சக்தியை தருகிறது. பார்க்காமல் கடைசியாக கிளம்பும் தருவாயிலும் ஒருமுறை வரமாட்டானா (ளா ) என்று திரும்பி பார்க்க வைக்கும் ஈர்ப்பு இந்த காதலில் உள்ளது.

இன்றைக்கு கூட பெண்கள் காதலிக்கும் துணையை சந்திக்க சிரமப்பட்டு தான் வர வேண்டி இருக்கிறது. இப்படி உள்ள சூழ்நிலையில் அந்த காலத்தில் காதலித்த பெண்ணின் நிலைமை இன்னும் கொடுமை. இப்படி தவித்து இருக்கும் பெண்ணை சீண்டிப் பார்ப்பதில் ஆணுக்கு ஒரு சுகம். நமக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறாள் என்று பார்ப்போம் என்று இருக்கும் காதல் இறுமாப்பு. காதலைக் காண காலை வந்து மாலை வரை காத்து எங்கே தன் அண்ணான்மார்கள் வந்து விடுவார்களோ என்று அஞ்சும் தலைவிக்கு, மறைந்து இருக்கும் காதலனை கண்ட தோழி, அவன் காதில் விழ வேண்டும் என்று தலைவிக்கு உரக்க உரைத்த இனிய பாடல் இது .

பாடல் 20: இன்னும் வாரார் (எண் : 123)
திணை: குறிஞ்சி
பாடியவர் : ஐயூர் முடவனார்
கூற்று : தோழி தலைவிக்கு கூறிய பாடல்

இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை,
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,
இன்னும் வாரார்; வரூஉம்,
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே

பொருள் விளக்கம்

இருளைத் திணித்தது போல் இருக்கும் குளிர்ந்த பனி போர்த்திய நிழலை உண்டாக்கும் கரிய கிளைகளை உடைய புன்னை மர சோலையில், வெண்ணிலவை குவித்தது போல் இருக்கும் கடற்கரை மணல்துகள்கள். நிலவும் வந்து விட்டது. இன்னும் அவரை காணவில்லை. பல வகையான மீன் பிடிக்கச் சென்ற நம்முடைய அண்ணன்கள் வரும் வேளையும் வந்து விட்டது. இன்னும் காணவில்லையே தலைவி...கிளம்பும் நேரம் வந்துவிட்டது. செல்லலாம் வா....

காதல் வளரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 16, 2012 7:48 pm

அருமையான விளக்கம் சதாசிவம் தம்பி...நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்களின் பதிவைக் கண்டு. விரும்பினேன் மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Apr 17, 2012 4:32 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையான விளக்கம் சதாசிவம் தம்பி...நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்களின் பதிவைக் கண்டு. விரும்பினேன் மகிழ்ச்சி

நன்றி ஐயா,
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 22, 2012 3:33 pm

தலைவனின் தவிப்பு

காதலில் சில நேரங்களில் சின்ன பிரிவு ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் பிரிவில் தலைவனும் தலைவியும் தவித்து விடுகிறார்கள். காதல் பிரிவில் பெண்களுக்கு பசலை ஏற்படுகிறது என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது. திருக்குறளில் தூங்கும் போது தள்ளிப் படுத்த இடைவேளையிலும் பசலை படர்ந்ததாக தலைவி கூறுகிறாள் என்றாள் காதலில் நெருக்கமும், பிரிவு தரும் துன்பமும் நன்கு விளங்கும். இப்படி ஒரு நிலையில் தலைவியைப் பிரிந்த தலைவன் பாடும் பாடல் இது.

பாடல் 21: ஓர் ஏர் உழவன் (எண் : 131)
பாடியவர் : தெரியவில்லை, பாடல் வரிகளை வைத்து வைத்த பெயர் ஒரேருழவனார்
திணை : பாலை
கூற்று : தலைவியைப் பிரிந்த தலைவன் பாடும் பாடல்

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே

பொருள் விளக்கம்

அசைகின்ற பசுமையான மூங்கில் போன்ற திரண்ட தோள்கள், சண்டைப் போடும் கண்கள் கொண்ட காதலி வெகுதூரத்தில் இருக்கிறாள், பசுமையான அகன்ற வயல் இருந்தும், உழுவதற்கு ஒரே ஒரு ஏர் உள்ள உழவன் தவிக்கும் தவிப்பு போல், நான் மேற்கொண்ட கடமையை முடிக்க முடியாமல் தவிக்கிறேன். கடமையை முடித்து உன்னை காண இயலவில்லை, நீ அடைதற்கு அருகில் இல்லை.

காதல் வளரும்..

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 02, 2013 5:07 pm

உறங்காத இரவு

காதல் செய்யும் காலத்தில் தூக்கம் இழப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு சில நாள் மகிழ்ச்சியில் தூக்கம் வருவதில்லை. பல நாள்கள் பிரிவுத் துன்பத்தில் தூக்கம் இழக்க வேண்டிய சூழலும் உருவாகிறது. இப்படி தூக்கம் இல்லாமல் தவிக்கும் போது, இரவின் நீளம் மிகப்பெரியதாகத் தெரிகிறது. படிக்காதவன் பரீச்சை கேள்வித் தாளைப் பார்த்து, எப்போது தாளைக் கொடுத்து வெளியேறலாம் என்று காத்து இருக்கும் நேரம் போல, பேறு கால வலியில் எப்போது குழந்தை வெளியே வரும் என்று காத்து இருக்கும் ஒவ்வொரு மணித்துளிப் போல் நீளமானது. வள்ளுவனும் ஒரு நாள் பிரிந்து இருந்தது ஏழு நாள் பிரிந்து இருந்தது போல் இருப்பதாக கூறுகிறார். காதல் துன்பத்தில் தூங்கா இரவின் வேதனை அவ்வளவு கொடியது. அப்படி ஒரு வேதனையில் துடித்த தலைவி ஒரு நாளைக் கடத்துவது எவ்வளவு கடினம் என்று தோழியிடம் புலம்பும் அழகியப் பாடல் இது.

பாடல் 22: கடலினும் பெரிதே (387)
பாடியவர் பெயர் தெரியவில்லை, பாடலின் வரிகளை வைத்து அழைக்கும் பெயர் கங்குல் வெள்ளத்தார்
திணை : முல்லை
கூற்று : தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்று

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே

பொருள் விளக்கம்

பகல் முடிந்து , முல்லையும் மலர்ந்து, கொதிக்கும் சூட்டை சினத்துடன் தந்த சூரியனும் மறைந்து பகல் பொழுது கழிந்து மாலையும் வந்து விட்டது. இரவை எல்லையாக வைத்து இந்த மாலைப் பொழுதையும் கழித்து விடலாம் தோழி. ஆனால் இரவெனும் கங்குல் கடலினும் பெரிது, எதை எங்ஙனம் கடப்பது. என் செய்வேன் தோழி...

காதல் வளரும் ...

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jan 02, 2013 5:09 pm

சூப்பருங்க

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 22, 2013 7:31 am

நினைப்பதா மறப்பதா

காதல் செய்யும் ஆரம்ப காலத்தில் பெரும்பாலோருக்கு வரும் நிலை, ஒரு சில பெண்களுக்கு காதலிக்கும் காலங்களிலும் நீடிக்கும் நிலை காதலை தொடர்வதா, தூண்டிப்பதா என்ற குழப்பம் தான். காதற்பூத்த காலத்தில் காதலரை நினைக்க வேண்டாம் என்று மனம் கூறினாலும், நினைக்கத் தூண்டும் உணர்வுகள் நிரம்பிய இலையுதிற்காலம் காதலில் வீழ்ந்த ஒவ்வொருவரும் அனுபவித்த அவதி. இலையுதிற் காலத்தில் மரங்களில் இலைகள் இருப்பதில்லை. ஆனால் உயிர் அம்மரத்தின் வேர்களில் வாழ்கிறது. காலம் வந்தவுடன் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்குவது போல், காதல் பிறரறிய வெளிப்படுகிறது. பொதுவாக அடுத்தவர் தான் நம்மை ஏமாற்ற முயற்சி செய்வர், ஆனால் காதலில் மட்டும் தான் நம்மை நாமே ஏமாற்ற முயற்சி செய்கிறோம். இது காதலில்லை, நட்பு, இனக்கவர்ச்சி என்று நமக்கு நாமே வெளியில் சொல்லிக் கொண்டாலும், உள்ளுக்குள் துணையைத் தேடிச் சுவைக்கும் உணர்வு நிரம்பிய காலத்தை பெரும்பாலான காதலர்கள் கடந்து செல்கின்றனர். காதலென்று முடிவு செய்வதற்குப்  பெரும்பாலான பெண்கள் குறைந்த பட்சம் ஐ‌ஏ‌எஸ் முதல் நிலைத் தேர்வில் கேள்வி கேட்பது போல், அனைத்து கோணத்திலும் தங்களுக்குள் கேள்வி கேட்டு முடிவு செய்கின்றனர். ஆனால் காதல் எப்போது எங்கு எப்படி நுழைகிறது என்று நாம் யோசிக்கும் முன்னே நம்முள் நுழைந்துவிடுகிறது. இது மட்டுமா காதலென்று தெரிந்து தெளிந்தப் பிறகும் ஒரு சில பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்களை நினைத்து காதலனை நினைப்பதா, மறப்பதா என்ற தவிப்பும் ஏற்படுகிறது. ஊசலின் மணி போல் இரண்டு பக்கமும் மனம் ஆடுகிறது. இப்படி ஒரு தத்தளிக்கும் மனநிலையில் இருந்த தலைவி பாடும் அழகிய பாடல் இது.

பாடல் 23: அவர் இருந்த நெஞ்சு  (340)
பாடியவர் பெயர் அம்மூவனார்
திணை : நெய்தல்
கூற்று : தலைவனை நினைப்பதா மறப்பதா என்ற நிலையில் இருந்த தலைவியின் கூற்று

காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து
நாமவர்ப் புலம்பி னம்மோ டாகி
ஒருபாற் படுதல் செல்லா தாயிடை
அழுவ நின்ற வலர்வேய் கண்டல்
கழிபெயர் மருங்கி னொல்கி யோதம்
பெயர்தரப் பெயர்தந் தாங்கு
வருந்துந் தோழியவ ரிருந்தவென் னெஞ்சே

பொருள் விளக்கம்
தோழி காதல் அதிகமானால் என் மனம் காதலர்  மேல் படர்ந்து செல்கிறது; அவர் மேல் வருத்தம் அதிகமானால் எங்கும் செல்லாமல் அது  என்னுடன் இருக்கிறது, இருந்தாலும் கடற்கரை நீரலைகளில் இங்கும் அங்கும்  தத்தளிக்கும் தாழம்பூவைப் போல் அவரை நினைப்பதா மறப்பதா என்று அல்லாடுகிறது அவர் இருந்த என் நெஞ்சு. என் செய்வேன் தோழி.    

தொடரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 22, 2013 1:10 pm

கடலும் கடல் சார்ந்த இடமும்  இதோடு  காதலும் சொன்ன பாடல்  சூப்பருங்கசூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 24, 2013 10:20 am

பூவன் wrote:கடலும் கடல் சார்ந்த இடமும்  இதோடு  காதலும் சொன்ன பாடல்  சூப்பருங்கசூப்பருங்க

நன்றி பூவன்...காதல் உணர்வுகளை இடம் பொருளுக்குத் தகுந்து  பிரித்து பல்சுவையுடன் தருவதில் நாம் தமிழிலக்கியங்களுக்கு நிகர் வேறெதுவுமில்லை.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக