புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
25 Posts - 3%
prajai
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நோன்பின் நோக்கம் Poll_c10நோன்பின் நோக்கம் Poll_m10நோன்பின் நோக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்பின் நோக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தாளையன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Postதாளையன் Thu Aug 04, 2011 12:04 pm

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா? நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது. நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
மக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057
பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.
நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1893, 1903

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.
முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.

ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.
எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நூலாசிரியர். பி.ஜைனுல்ஆபிதீன் உலவி அவர்கள்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 04, 2011 12:13 pm

சரி தான் நாய் பட்டினி கிடந்தது போல தான் இவர்கள் நோன்பும்
நல்ல சமயத்தில் நல்ல விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 04, 2011 1:09 pm

நிறைய விசயங்கள் (எல்லா மதத்திலும்) தவறாகவே எண்ணப்படுகிறது, கடைப்பிடிக்கப் படுகிறது.

இஸ்லாம் படி, தர்கா வழிபாடு செய்யக் கூடாது,இறந்தவர்களைக் கும்பிடக் கூடாது.
தர்கா வழிபடும்(இறந்தவர்களை கும்பிடும்) அந்த முறையே.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நோன்பின் நோக்கம் Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 04, 2011 1:18 pm

இஸ்லாம் படி, தர்கா வழிபாடு செய்யக் கூடாது,இறந்தவர்களைக் கும்பிடக் கூடாது.
தர்கா வழிபடும்(இறந்தவர்களை கும்பிடும்) அந்த முறையே.

இது ஆண்டவனுக்கு இணை வைக்கும் செயல் . இப்படி செய்வதால் அவர்கள் தான் பாவம் செய்தவர்களாக ஆகிறார்கள் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 1:19 pm

ஜாஹீதாபானு wrote:சரி தான் நாய் பட்டினி கிடந்தது போல தான் இவர்கள் நோன்பும்
நல்ல சமயத்தில் நல்ல விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க

அதிர்ச்சி ஒன்னும் புரியல
இறை நமக்களித்த கடமைகள் அனைத்துமே.தூய எண்ணங்களுடனும் அதற்க்கான பரிசுத்த நோக்கத்துடனும் நாம் பேணுவதில்லை,

இது வேண்டுமெண்றே நாம் செய்வதில்லை. கொஞ்சம் அலட்சியம் தான். அலட்சியம் களைந்து உண்மையாக இறையச்சத்துடன் பேண வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும்.

இறை கட்டளைக்குப் பயந்து தான் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பட்டினி கிடந்து நோன்பு வைப்பது. அது இஹ்லாசான நிய்யத்துடனும் பேணுதலுடனும் இருந்தால் நோன்புக்கு முழு வெற்றி தான், ஆனால் நாமும் மனிதர் தானே நோன்பில் உலகாதாய விஷயங்களை பேசிக்கொண்டு கழிக்கிறோம். நம் நிய்யத்து உண்மையானால் அதன் பிறகு அதற்கான கூலி இறைவன் கையில் தான் உள்ளது.

அது நீங்கள் சொல்லுவது போல ஹராமாக்கப்பட்ட ஒரு பிராணியின் பட்டினியைப் போல அல்ல...

சகோதரியின் மார்க்க விஷயங்களில் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி தரக்கூடியது...எல்லாம் வல்ல இறைவன் இந்த நோன்பில் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து பிறருக்கும் மனம் மகிழும்படியாக நம் அணுகுமுறையை அமைத்து தருவானாக ஆமீன்.

ரமலான் முபாரக் பானு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நோன்பின் நோக்கம் Aநோன்பின் நோக்கம் Bநோன்பின் நோக்கம் Dநோன்பின் நோக்கம் Uநோன்பின் நோக்கம் Lநோன்பின் நோக்கம் Lநோன்பின் நோக்கம் Aநோன்பின் நோக்கம் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 04, 2011 1:24 pm

நானும் அப்படி சொல்லவில்லை எனக்கு தெரிந்த ஒருவர் இந்த நேரத்திலும் தொழுக மாட்டார் . அவர் நோன்பிருந்து என்ன பயன் காலையில் தூங்கினால் மாலையில் தான் எழுந்து கொள்கிறார். இதற்க்கு பெயர் நோன்பா சொல்லுங்க. அதனால் தான் அப்படி சொன்னேன் தவறிருந்தால் மன்னிக்கவும் அண்ணா சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 1:36 pm

ஜாஹீதாபானு wrote:நானும் அப்படி சொல்லவில்லை எனக்கு தெரிந்த ஒருவர் இந்த நேரத்திலும் தொழுக மாட்டார் . அவர் நோன்பிருந்து என்ன பயன் காலையில் தூங்கினால் மாலையில் தான் எழுந்து கொள்கிறார். இதற்க்கு பெயர் நோன்பா சொல்லுங்க. அதனால் தான் அப்படி சொன்னேன் தவறிருந்தால் மன்னிக்கவும் அண்ணா சோகம்

ஐயோ அதெல்லாம் ஒன்றுமில்லை உங்களை காயப்படுத்தியிருப்பின் என்னை மன்னித்து விடுங்கள். பொதுவாக மார்க்க விஷயங்களில் கடுமையான வார்த்தைகளை கடைபிடிக்க வேண்டாமே என்று தான்..
சந்தோஷமாக இருங்கள் தங்கையே...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நோன்பின் நோக்கம் Aநோன்பின் நோக்கம் Bநோன்பின் நோக்கம் Dநோன்பின் நோக்கம் Uநோன்பின் நோக்கம் Lநோன்பின் நோக்கம் Lநோன்பின் நோக்கம் Aநோன்பின் நோக்கம் H
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 1:43 pm

பகிர்விர்க்கு நன்றி கிட்சா சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நோன்பின் நோக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 04, 2011 1:48 pm

நான் கடுமையாக சொல்லவில்லை அண்ணா. எதார்த்தமாக தான் சொன்னேன் . எங்கள் ஊரில் நோன்பிருந்தும் இப்படி கவனக்குறைவாக இருப்பவர்களை அப்படி தான் சொல்லுவார்கள் .அதைத்தான் நானும் சொல்லிவிட்டேன். நான் யாரையும் குறை சொல்லமாட்டேன் .
நாம் சரியாக நடந்தால் தானே மற்றவர்களை குறை சொல்லும் தகுதி வரும். நாமும் குறையுள்ளவர்கள் தானே.
என்னிடம் ஏன் மன்னிப்பு கேக்குரிங்க .தவறை சொன்னால் திருத்தி கொள்வேன் இந்த தங்கை . நானும் வருத்தப்படவில்லை அண்ணா. சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 04, 2011 1:54 pm

பாட்டி த்தூவ செய்யும் போது இந்த ஈகரை குடும்பத்திற்கும் சேர்த்து பண்ணுங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நோன்பின் நோக்கம் Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக