புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
87 Posts - 64%
heezulia
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
8 Posts - 1%
prajai
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
sram_1977
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆப்பிள் வரலாறு Poll_c10ஆப்பிள் வரலாறு Poll_m10ஆப்பிள் வரலாறு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் வரலாறு


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 2:48 pm

வகுப்பு : Magnoliopsida
வரிசை: Rosales
குடும்பம்: Rosaceae
துணைக்குடும்பம்: Maloideae
பேரினம்: Malus
இனம்: M. domestica


ஆப்பிள் ஒரு குளிர் பகுதிப் பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில ரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவோ காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.

மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.

ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர்மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது.

வரலாறு

தற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் ரகங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

அனேகமாக, ஆரஞ்சு வகை மரங்களுக்கு அடுத்ததாக ஆப்பிள் தான் பல்லாயிரம் ஆன்டுகளாக பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில் ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில்
ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.

ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது.


ரகங்கள்




பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 ரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் மரங்கள் பூக்க குளிர் அவசியம் என்பதால் பூமத்தியரேகைப் பகுதிகளில் இவை பூக்காது. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும்.

இன்றைய ஆப்பிள்கள் முந்தைய ஆப்பிள்களை விட கூடுதல் இனிப்பானவை. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெரும்பாலும் சுவையான, புளிப்புக் குறைவான ஆப்பிள்களும், சிறுபான்மையினரால் உவர்ப்பு வகை ஆப்பிள்களும் விரும்பப்படுகின்றன. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில், மிக இனிப்பான ஆப்பிள்கள் விரும்பப்படுகின்றன.

ஆப்பிள் சுவைமணம் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் 'ரெட் டெலிசியஸ்' என்ற ஆப்பிள் ரகத்தை வளர்த்து புகழடைந்தது. ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விட குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர்.

வளர்ப்பு

பெரும்பாலான பழ மரங்களைப் போல ஆப்பிள் மரங்களும் ஒட்டுப் போடுவதன் மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் கன்றுகள் தம் தாய் மரத்தைவிட முற்றிலும் மாறுபட்டிருக்கக்கூடும். பல புதிய ஆப்பிள் வகைகள் தானாக ஏற்படும் மாற்றங்களாலோ, செயற்கையான கலப்பு மூலமோ கன்று வடிவிலேயே தோன்றுகின்றன. ஓர் ஆப்பிள் இரகத்தின் பெயரில் சீட்லிங் (seedling), பிப்பின் (pippin), கெர்னெல் (kernel) போன்ற சொற்கள் இருப்பின் அது கன்று மூலம் உருவானது என அறியலாம். சில இரகங்கள் முளை மொட்டு மூலமும் உருவாகின்றன. இயற்கையாக ஏற்படும் மரபணு மாற்றம் மூலம் சில கிளை மொட்டுக்கள் விரும்பத்தகுந்த குணங்களை கொண்டிருக்கும். சில நேரங்களில், இவை தாய் மரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும்.

சில கலப்பினவியலாளர்கள் ஆப்பிள்களைக் கடின ஆப்பிள் வகைகளுடன் கலப்பு செய்து சற்றே கடினமான ஆப்பிள்களை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் எக்செல்சியர் ஆராய்ச்சி மையத்தில் பல கடின வகை ஆப்பிள் ரகான்கள் உருவாக்கப்பட்டு மின்னசோட்டா, விஸ்கான்சின் மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. ஹரால்சன், வெல்த்தி, ஹனி கோல்ட், ஹனிகிரிஸ்ப் ஆகியவை இங்கு உருவாக்கப்பட்டவை. ஹனிகிரிஸ்ப், மின்னசோட்டா மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதால் ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி விட்டு இவ்வகைக் கன்றுகளைப் பயிரிட்டது இன்று வரை கேட்டறியாததாகும்.


ஆப்பிள்த் தோட்டங்கள் இரண்டு அல்லது மூன்று வருடக்கன்றுகளை நடுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இக்கன்றுகள் இவற்றுக்கான நாற்றங்கால்களில் ஒட்டு மூலமோ கிளைமொட்டு மூலமோ உருவாக்கப்படுகின்றன. முதலில் விதை மூலமோ அல்லது திசு வளர்ப்பு மூலமோ ஓர் ஆப்பிள்க் கன்று உருவாக்கப்பட்டு ஒரு வருடம் வளர்க்கப்படுகிறது. பின்னர், இதன் மேற்பாகம் வெட்டப்பட்டு, வேறொரு கன்றின் மேற்பாகம் ஒட்டப்படுகிறது. சில நாட்களில் இரு பாகங்களும் இணைந்து மரக்கன்றாகின்றன.

இந்த அடிப்பாகக் கன்றுகள் மரத்தின் அளவை நிர்ணயம் செய்கின்றன. விவசாயிகள் பல்வேறு வகை அடிப்பாகக் கன்றுகளை விரும்பினாலும் வீட்டுத்தோட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் பெரும்பாலும் முழு அளவிளான மரத்தையோ, மத்திய குள்ள வகை மரங்களையோ தான் விரும்புகின்றனர். குள்ள வகை மரங்கள் பெரும்பாலும் காற்றினாலும், அதிகக் குளிராலும் சேதமடைகின்றன. எனவே இவை கழிகள் மூலம் தாங்கப்பட்டு, உயர் அடர்த்தித் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. இவ்வகைத் தோட்டங்கள் பயிரிட எளிதாகவும், அதிக விளைச்சல் தருவனவாகவும் இருக்கும். சில குள்ள இரகங்கள் மேல்பாகத்திற்கும், அடிப்பாகத்திற்கும் இடையே குள்ள வகை மரத்தை ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு ஒட்டுக்கள் தேவை.

மரக்கன்று நடப்பட்டு 3- 5 (மத்திய குள்ள இரகங்கள்) அல்லது 4 - 10 (சாதாரண இரகங்கள்) ஆண்டுகள் கழித்து அதிக அளவிலான பழங்கள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் சரியான முறையில் கிளைகளையும், கிளைமொட்டுக்களையும் கழித்து விடுதல் மிக அவசியமாகும். அப்போது தான், பழங்களைத் தாங்கக்கூடிய உறுதியான கிளைகள் உருவாகும்.


குளிர்ப் பகுதிகளில் பலவிதமான மண்களிலும் ஆப்பிள் வளரவல்லது. வேகமாக வீசும் காற்றிலிருந்து பாதுகாப்பும், வசந்த காலத்தின் போது உறைபனி இல்லாத இடமாகவும் இருத்தலும் அவசியம். மேலும் நல்ல வடிகால் வசதி தேவைப்படுவதால், நிலத்தை நன்கு உழுது வேர்கள் நீர் நிறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மகரந்தச் சேர்க்கை



ஆப்பிள் மரங்கள் சுயமலட்டுத்தன்மை உள்ளவை, எனவே அவை செயற்கையாக கலப்பினம் செய்யப்பட வேண்டும். மகரந்தச் சேர்க்கை மேம்பாடு ஆப்பிள் வளர்ப்பில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. கன்றுகளை நடும்போதே, மகரந்தக் கொடை மரங்களையும் நடுதல் அவசியம். இவ்வகை மரங்கள் உகந்த மகரந்தத்தை அதிக அளவில் கொடுக்கும். ஆப்பிள் பழத்தோட்டங்களில், பொருத்தமான மகரந்தக் கொடை மரவகைகளை மாற்று வரிசைகளிலோ ஆங்காங்கோ நடுவதுண்டு. சிலர், மகரந்தக் கொடை மரக்கிளைகளை சில பழம் தரும் மரங்களில் ஒட்டுப்போடுவதும் உண்டு. மேலும் சில தோட்டங்களில், முக்கியமாக வீட்டுத்தோட்டங்களில், மகரந்தக் கொடை ஆப்பிள் பூங்கொத்துகளையோ, கிளைகளையோ கொண்டு வந்து தற்காலிகமாக வைப்பதும் உண்டு. தரமான ஆப்பிள் கன்று விற்கும் தோட்டங்களில் மகரந்தப்பொருத்தம் உடைய ஆப்பிள் வகைகளின் விவரத்தைப் பெறமுடியும்.

ஆப்பிள் தோட்ட விவசாயிகள், பூக்கும் பருவத்தில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளைத் தோட்டத்தில் விடுகின்றனர். தேன்கூடுகள் சாதாரனமாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. தேன்கூடுகளை அவற்றை வாடகைக்கு விடும் தேன் வளர்ப்போரிடம் இருந்து பெறலாம். பழத்தோட்டக் குயவன் ஈக்களும் (Orchard mason bees) பயன்படுத்தப்படுகின்றன. இவை தேனீக்களைப் போலக் கொட்டா. எனவே வீட்டுத்தோட்டங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வேறு சில வகை ஈக்களும் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

சிறிய, வடிவற்ற, குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் விளைந்தால், அது உரிய மகரந்தச்சேர்க்கை நடக்கவில்லை என்பதன் அறிகுறியாகும். நல்ல மகரந்தச் சேர்க்கையால் விளைந்த ஆப்பிள், ஏழு முதல் பத்து விதைகளைக் கொண்டிருக்கும். மூன்றுக்கும் குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் முற்றாமல் உதிர்ந்துவிடும். இதற்கு, மகரந்தக் கொடை மரங்களோ மகரந்தச் சேர்க்கைப் பூச்சிகளோ உரிய அளவில் இல்லாததும் பூக்கும் பருவத்தில் உகந்த பருவநிலை இல்லாதிருத்தலும் காரணமாகும். பொதுவாக, பல ஈக்கள் வந்து அமர்வதன் மூலமே ஒரு பூவுக்கு தேவையான அளவு மகரந்தம் கிடைக்கும்.

பருவநிலையைப் பொருத்தவரை, பூத்த பின் ஏற்படும் உறைபனி பூவைச் சிதைத்து விடும். உறைபனி அதிக அளவில் இல்லையெனில், அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன் நீர் தெளிப்பதன் மூலம், பூக்களை ஒரளவு காப்பாற்றலாம். பூவின் சூல் கருகி இருப்பதே உறைபனி சேதத்தின் அடையாளமாகும்.

பெரிய நீர்நிலைகளின் அருகே தோட்டம் அமைப்பதன் மூலம் வசந்த கால வெப்பம் சிறிது குறைக்கப்படுவதால், பூப்பது சற்று தள்ளிப்போடப்படுகிறது. இது வசந்தகால உறைபனியிலிருந்து பூக்களைக் காப்பாற்றலாம். அமெரிக்காவில், மிச்சிகன் ஏரியின் கிழக்குகரை, ஓன்டோரியோ ஏரியின் தெற்குக்கரை மற்றும் பல சிறிய ஏரிகளைச் சுற்றிலும் அதிக அளவில் ஆப்பிள் வளர்க்கப்பட இதுவே காரணமாகும். வீட்டில் மரம் வளர்ப்போர் வசந்தகால வெயில் படாத இடங்களில் தோட்டம் அமைப்பதன் மூலம், பூப்பதைத் தள்ளிப்போடலாம். பூமியின் வடகோளத்தில் வடக்குப் பார்த்த சரிவுகளிலும், தென்கோளத்தில் தெற்குப்பார்த்த சரிவுகளிலும் ஆப்பிள் நடுவது பூப்பதை தள்ளிப்போட உதவுவதால் உறைபனியிலிருந்து காக்க உதவும்.

ஆப்பிள் மரங்கள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன. ஒரு விளைச்சலின் போது சரியான அளவு கிளைகளையோ பழங்களையோ கழித்துவிடாவிட்டால், அடுத்த விளைபருவத்தில் பூப்பது குறைந்து விடும். சரியான அளவில் கழித்து விடுதல், ஒவ்வொரு பருவமும், சீரான விளைச்சல் பெற உதவும்.

ஆப்பிள் மரங்கள் பலவிதமான பூஞ்சை அல்லது கோலுரு நுண்ணுயிர்களால் (bacteria) விளையும் நோய்களாலும், அழிக்கும் பூச்சிகளாலும் பாதிக்கப்படுகின்றன. எல்லாப் பழத்தோட்டங்களிலும், பூச்சி மருந்துகள் மூலம் இவை கட்டுப்படுத்தப் படுகின்றன. ஒருங்கிணைந்த அழிவுப்பூச்சி மேம்பாடு தற்போது கடைபிடிக்கப்படுகின்றது. இதன்படி, பூச்சிமருந்துகளின் பயன்பாடு குறைக்கபட்டு, இயற்கையான எதிரிகள் மூலம் அழிக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பூக்கும் பருவத்தில் ஒருபோதும் பூச்சி மருந்துகள் அடிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று விடும். அதுபோல, இவ்வகை ஈக்களை ஈர்க்கும் செடிகளையும் தோட்டத்தில் வளர விடக்கூடாது. இவ்வகைச் செடிகளில் தங்கிவிடும் பூச்சிமருந்து, மகரந்தச்சேர்க்கை ஈக்களைக் கொன்றுவிடும்.

நோய்களில் மிக முக்கியமானது 'தீ வாடல்' எனும் கோலுருக்கிருமி நோயாகும். பூஞ்சை நோய்களில் முக்கியமானவை ஜிம்னோஸ்போராஞ்சியம் துரு (Gymnosporangium rust), காய்ந்த தோல் (Apple Scab) மற்றும் கரும்புள்ளி (Black spot). பூச்சிகளில் அதிக சேதம் விளைவிப்பது ப்ளம் குர்குலியொ (plum curculio) ஆகும். மற்ற பூச்சிகளில் முக்கியமானவை: பைமடோபஸ் பெஹ்ரன்ஸி (Phymatopus behresii), ஆப்பிள் புழு (Apple maggot), காட்லிங் அந்து (Codling moth), பேரரசு அந்து (Emperor moth), நவம்பர் அந்து (November moth), குளிர்கால அந்து (Winter moth), பச்சை அந்து, ப்ரிம்ஸ்டோன் அந்து (Priumstone moth), போப்லர் கழுகு-அந்து (Poplar hawk-moth), காக்ஸ்கோம்ப் ப்ராமினன்ட் அந்து, மஞ்சள் வால் அந்து (Yellow tail moth), ஷார்ட்-க்லோக்ட் அந்து (Short-cloaked moth). ஆஸ்திரேலியாவில் சில வெளிநாட்டு ஆப்பிள் மரங்களை ஹெபியாலிட் அந்தின் (Hepialid moth) புழுக்கள் தாக்குகின்றன. இவை மரத்தினுள் துளையிடுகின்றன.

ஆப்பிள் பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவிப்பது மிகக் கடினம். இருப்பினும் சில தோட்டங்களில் நோய்-எதிர்ப்பு ஆற்றல் கொண்ட இரகங்களைப் பயன்படுத்திக் கூடுதல் வருவாய் ஈட்டி உள்ளனர். இயற்கை விவசாய முறையில் அண்மைய எடுத்துக்காட்டு, பீங்கான் போன்ற கயோலின் களியை (kaolin clay) மெல்லிதாய் படரும் படி ஆப்பிள் பழங்களின் மேல் தெளிப்பது. இது, பூச்சித்தாக்குதல்களிலிருந்தும், வெயிலால் உண்டாகும் அழுகலிலிருந்தும் பழங்களைப் பாதுகாக்கிறது.

முற்றிய மரங்களில் ஆண்டுக்கு சுமார் 100 - 200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும். கிளைகளினூடே எளிதில் நுழையக்கூடிய முக்காலேணிகள் மூலம் ஆப்பிள் பழங்கள் பறிக்கப்படுகின்றன. கிளைகள் கழிக்கப்படாத சிலவகை மரங்கள் நிறையக் காய்த்தாலும் அறுவடை செய்வது மிகக் கடினம். குள்ள வகை மரங்கள் சுமார் 50 - 100 கிலோகிராம் காய்க்கும்.

பலன்கள்

தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி நெடுங்காலமாக ஆப்பிள்கள் உடல்நலத்திற்கு மிக நல்லதாகக் கருதப்பட்டன. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.

ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையை பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த ரெட் டெலிசியஸ் வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்

ஆப்பிள்கள்களைக் கொண்டு ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிள் - ஆதாம், ஏவாள்

ஆப்பிள்கள் பல மத வழக்கங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சில கலாச்சாரங்களில் ஆப்பிள் சாகாவரம், காதல் அல்லது புணர்ச்சியின் சின்னமாக இருந்துள்ளது. பண்டைய கிரேக்க வீரன் ஹெர்குலெஸ், தனது பன்னிரண்டு வேலைகளில் (Twelve labours) ஒன்றாக ஹெஸ்பெரிடஸின் தங்க ஆப்பிள்களைக் கண்டு பிடிக்கவேண்டியிருந்தது. இன்னொரு கிரேக்க பிரபலமான பாரிஸ், "காலிஸ்டி" - அழகானவளுக்கு - என்ற சொற்கள் பொறித்த தங்க ஆப்பிளை, மிக அழகான பெண் கடவுளுக்குத் தந்ததும், அதனால் மறைமுகமாக ட்ரோஜன் போர் நடந்ததும் வரலாறு. கிரேக்க வரலாற்றுக் கதையில், ஓர் ஓட்டப்பந்தயத்தின் போது அடலான்டாவின் கவனத்தைத் திசை திருப்ப ஹிப்போமெனெஸ் மூன்று தங்க ஆப்பிள்களை வீசியது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பண்டைய கிரேக்கக் கலாச்சாரத்தில் ஒருவரின் படுக்கையில் ஆப்பிளை வீசுவது அவரை உடலுறவுக்கு அழைப்பதைக் குறிக்கும். கிரேக்க வரலாற்றில், ஆப்பிள் பற்றிய மற்றொரு குறிப்பு, ப்லேயீடீஸ் (Pleadis) பற்றியது.

நோர்ஸ் (ஸ்கான்டிநேவிய) கலாச்சார நம்பிக்கையின் படி 'இடுன்' என்பவர் கடவுள்களை இளமையாகவே வைத்திருந்த 'சாகாவர ஆப்பிள்களை'ப் பாதுகாத்து வந்தார். கிரேக்க வரலாற்றாசிரியர் டாசிடஸ் (Tacitus) நோர்ஸ் பற்றிய தனது ருனிக் டிவினிஷன் (runic division) குறிப்பில் 'பழ மரம்' எனக் குறிப்பிட்டது ஆப்பிள் அல்லது ரோவன் மரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கெல்டிய சமயநம்பிக்கையில் கொன்லே என்பவர் ஒரு வருடம் உண்ணக்கூடிய ஆப்பிளைப் பெற்றதாகவும் அது அவரை தேவலோகத்தை விழையச் செய்ததாகவும் குறிப்பு உள்ளது. கிறிஸ்துவ நூலான 'படைப்பில்' (Genesis), ஆப்பிள் என்று குறிப்பிடப்படாவிட்டாலும் கூட 'தடை செய்த பழம்' ('forbidden fruit'), ஆப்பிள் தான் என ஐரோப்பியக் கிரிஸ்துவர்கள் நம்புகின்றனர். ஏவாள், ஆதாமுடன் உண்ட அந்தப்பழம் ஆப்பிள் தான் என்பது ஈடன் தோட்டம் பற்றிய பண்டைய சித்திரங்களில் காணப்படுகிறது. இத்தொன்மையான ஓவியங்களில் காணப்பட்ட ஆப்பிள் பழக் குறியீடு தற்போதும் கிறிஸ்துவ சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களின் தொண்டைக்குழி, அந்தத் தடைசெய்த பழம் ஆதாமின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் உருவான மனித உறுப்பு என்ற நம்பிக்கையால் ஆதாமின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.

ஆப்பிளை கிறிஸ்துவ சமயக் குறியீடாக ஏற்றுக்கொள்ள மற்றுமொரு காரணம், இலத்தீன மொழியில் 'ஆப்பிள்' மற்றும் 'சைத்தான்' ஆகியவற்றைக் குறிக்கும் சொல் ஒன்றே (அந்தச் சொல் 'மலும்'). இச்சொல் பொதுவாகப் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாமின் கையில் இருக்கும் ஆப்பிள் பாவத்தைக் குறிக்கும். அதே சமயம் இயேசு ஆப்பிளை வைத்திருக்குமாறு சித்தரிக்கபடும்போது அவர் உயிர் படைக்கும் இரண்டாம் ஆதாமாகக் கருதப்படுகிறார். இவ்வாறாக பழைய வேதாகமத்தில், ஆப்பிள் மனிதனின் வீழ்ச்சியையும், புதிய வேதாகமத்தில் மனிதனின் எழுச்சியையும் குறிக்கிறது. இதுவே, மடோனா (மேரி மாதா) மற்றும் குழந்தை இயேசுவின் சித்திரங்களில் காணப்படுகிறது.

பண்டைய கஸகஸ்தான் நாட்டில் 'ஆப்பிள்களின் தந்தை' எனப்பொருள் படும் அல்மாட்டி நகரத்தின் பெயர்க் காரணம், அவ்விடத்தில் இயற்கையாகக் காணப்பட்ட ஆப்பிள் காடுகளேயாகும். அமெரிக்காவின், அர்கன்சாஸ் மற்றும் மிச்சிகன் மாநிலங்களின் அரசாங்க பூ, ஆப்பிள் பூ ஆகும். ரஷ்ய நாட்டின் யப்லோகோ கட்சியின் பெயரின் பொருள் ஆப்பிள் ஆகும். அக்கட்சியின் சின்னம் ஆப்பிளையே குறிக்கிறது.

சுவிஸ் நாட்டின் பழங்கதைக் கூற்றுப்படி 'வில்லியம் டெல்' என்ற வில்வித்தைக்காரர் தன் மகனின் தலையில் இருந்த ஆப்பிளைத் தன் அம்பால் துளைத்து ஒரு கொடுங்கோலனிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்றினான்.

ஐரிஷ் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி ஆப்பிள் தோலை ஒரு நாடா போல உரித்து பெண்ணொருத்தியின் தோளுக்குப் பின்னால் எறிந்தால் அது அவளது வருங்காலக் கணவனின் முதலெழுத்தின் வடிவில் விழும் என நம்பப்படுகிறது. டென்மார்க் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி மனைத்துரோகம் புரிந்தவரின் அருகே வைக்கப்படும் ஆப்பிள் வாடிவிடும்.

அமெரிக்காவின் சில இடங்களில் ஒளித்து வைக்கப்படும் ஆப்பிள்களைக் கண்டுபிடிப்பது ஒரு ஹாலோவீன் பண்டிகைக் கொண்டாட்டமாகும். மேலும், ஆப்பிள்கள் ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் தோலில் தேய்த்தால் மச்சம் அழியும் என்றும் நம்பப்படுகிறது.

அமெரிக்கா, டென்மார்க், சுவீடன் நாடுகளில் ஆசிரியர்களுக்கு நெடுங்காலமாக வழங்கப்படும் பரிசு ஆப்பிளாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக