புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
61 Posts - 80%
heezulia
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
397 Posts - 79%
heezulia
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெஸ்டம்பர்  Poll_c10பெஸ்டம்பர்  Poll_m10பெஸ்டம்பர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெஸ்டம்பர்


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Jul 31, 2011 6:02 pm

என்னுடன் இயந்திரவியல் படித்த நண்பர்களால் மறக்க முடியாத நாள்..
அந்த நாள் பெற்ற சிறப்பினை அறியும் முன்னர், சில தகவல்களை அறிவோம்!!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of
Technology - NIT, Trichy) அதன் கல்விக்கு மட்டுமன்றி கலை
நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது.
அந்த கல்லூரி நடத்தும் கலை நிகழ்ச்சி தான் பெஸ்டம்பர் (Festember) - செப்டெம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வார இறுதியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி.

இந்திய அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடும் நிகழ்ச்சி என்பதால், அரங்கமே களைகட்டும்.. பெஸ்டம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்கவாவது கல்லூரி இளவட்டம் குவிவது வழக்கம்!


இப்படி பலராலும் எதிர்பார்க்கப்படும் பெஸ்டம்பர் செப்டம்பர்
8 ஆம் தேதி (2005) துவங்குவதாக தகவல் பலகையில் ஒரு அழைப்பிதழ் தொங்கியது!
பார்த்த உடனே அனைவருக்கு மனதிலும் நிகழ்ச்சியைக் காண ஆசை!
வெறும் 150 கி.மீ தூரம் எங்களைப் பார்க்க விடாமல் இருக்க செய்து விடுமா?


8 ஆம் தேதி துவக்க விழா.. அன்று பெரிதாக கலை நிகழ்ச்சிகள் ஏதும் இருக்காது! மறுநாள் மாலை தான் களைக்கட்டும்!

ஆனால், 9 ஆம் தேது வெள்ளிக்கிழமை ஆயிற்றே?
எல்லாரும் சேர்ந்து கிளாஸை மாஸ் கட் செய்யலாம்!!
என்ன!! HOD கூப்பிட்டு திட்டுவார்.. இதுக்கெல்லாம் அசரும் ஆட்களா நாங்கள்!!
பெஸ்டம்பர்  50416_109855352370632_391_n






ஆனால், ஷிவ் கெரா அவர்கள் கூறியது எங்கள் அனைவரின் ஞாபகத்திற்கு வந்தது:
" வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்."

அன்று அதிகாரப்பூர்வமாக (??!!) கிளாஸ் கட் செய்வது (!!) என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!!! ஆனால் எப்படி?
ஒரே வழி.. ஒரு தொழிலகப் பயணம் (industrial Visit- IV) மேற்கொள்வது!!

திருச்சி தானே.. இருக்கவே இருக்கு பாரத மிகுமின் நிறுவனம் (BHEL)!!
எங்கள் வகுப்பின் மூலமாகவே முகவர்கள் உண்டு.. (அதாங்க.. அங்கு வேலை செய்பவர்களின் வாரிசுகள்!)
ஒரு வழியாக அங்கு ஒரு நாள் சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கியாயிற்று!

சரி.. அடுத்து எங்களுடன் வருவதற்கு ஒரு விரிவுரையாளர்..
எங்கள் திட்டம் மறைமுகமாகத் தெரிந்தாலும், எங்கள் உதவி பேராசிரியர் ஒப்புக் கொண்டார்!! (அவர் எங்க ஆளாச்சே...)

ஆனால், இரு நாட்களுக்கு முன் தான் அந்த இடி விழுந்தது!!
எங்கள் உதவி பேராசிரியர் 'மனைவிக்கு உடல் நிலை சரியில்லை.. எனவே, வர இயலாது' என்று சொல்லி அனுப்பினார்..

இது என்ன புது சோதனை?? யாராவது ஒரு ஆள் வேண்டுமே!!

ஒவ்வொரு விரிவுரையாளரையாய்ப் போய் பார்த்து வரும் படி அழைத்தோம்.. ஆனால்,
எங்களைப் பற்றி ஒரு மிக நல்ல (??!!) பெயர் இருந்ததால் யாரும் வர
விரும்பவில்லை!!

எங்களுக்கு வேண்டியதெல்லாம் 'சரி' என்கிற ஒரே ஒரு வார்த்தை.. ஓஹோ என்ற வாழ்க்கை!

இறுதியில், விரிவுரையாளர் கட்டதுரையைப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்க்க சென்றோம்...

கட்டதுரை துப்பறியும் நிபுணர் ஆகியிருக்க வேண்டிய ஆள்.. எப்படியோ தப்பி, எங்களிடம் மாட்டிக் கொண்டார்!!
எங்கள் திட்டத்தை (யாரும் அதைப் பற்றி மூச்சு விடாமலேயே!!) எப்படியோ கண்டுபிடித்து விட்டார்!!!

"இங்கப் பாருங்கப்பா.. நான் உங்க கூட வர ரெடி!! ஆனா, மூன்று கண்டிசன்.."

"சொல்லுங்க... சார்" (என்ன கொடுமை சாமி!)

"முதலாவது, பஸ்ல யாரும் சத்தம் போட
கூடாது!! டான்ஸ், பாட்டு எல்லாம் கட்.. அப்படி எதாவது பண்ணீங்க.. பஸ்ஸ
அப்படியே காலேஜ் பக்கம் திருப்பிடுவேன்
"

"சரி.. சார்" (உருப்பட்டாப்ல தான்!!)

"ரெண்டாவது, யாரும் IV அப்ப எடக்கு மடக்கா கேள்வி கேட்க கூடாது! என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டுட்டு விட்றணும்"

"ஓகே சார்"

"அப்புறம் , எல்லாரும் போன பஸ்லயே திரும்ப வந்திடணும்!!! ஊரு அது இதுன்னு யாரும் அங்கயே தங்க கூடாது!"

இதைக் கேட்ட அனைவரும் சற்று அதிர்ந்து தான் போனோம்!!
'அடப்பாவி!! அதுக்குத் தானே போறோம்! அதுக்கு இங்கயே இருந்திடலாமே!!'

"என்னப்பா... சத்ததையே காணோம்? இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா நான் வரேன்.. என்ன டீலா நோ டீலா?"

வேறு வழியில்லை.. யாராவது வேண்டும்..

"ஓகே சார்" என்று அரைமனதாக அனைவரிடம் இருந்தும் பதில் வந்தது!

ஏதோ தைரியத்தில் ஓகே சொல்லி விட்டோம்!! என்ன செய்வது?

மீண்டும் ஷிவ் கெரா கை கொடுத்தார்:
" வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்."

"மச்சான்.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.. நம்ம கூட விளையாடுறதே வேலையாப் போச்சு!"

"சரி.. கட்டம் கட்டிருவோம்!! ஏற்கனவே தீர்க்க வேண்டிய பழைய பாக்கி ஒண்ணு இருக்குல!! இப்ப முடித்துடுவோம்!"

**********************************
வெள்ளி விடிந்தது..
திருச்சி செல்லும் பேருந்து எங்கள் கல்லூரி வளாகத்துக்குள் வந்தது!!

பெஸ்டம்பர்  Images?q=tbn:ANd9GcSzYznvvW8csWMkn2ukMrMwCEXIgtspt-7RxY_rVZgnlmH2sBKY


ஒரு சின்ன சத்தம் கூட போடாமல், அமைதியாக நாங்கள் பஸ்ஸில் ஏறுவதை எங்கள் கல்லூரியே வேடிக்கை பார்த்தது!

******************************

மதியம்

அனைவரும் அமைதியாக தொழிலகத்தைச் சுற்றிப் பார்த்தோம்..

"இத்தனை ஒழுக்கமா எந்த காலேஜ் பசங்களும் வந்ததில்ல.. ஆனாலும், நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார்!"

கட்டதுரையைப் பார்க்க வேண்டுமே.. அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்..
பின்னே, "மோசமானவங்களேயே முக்கியமானவங்க"
என்று பெயர் எடுத்திருந்த எங்கள் வகுப்பை 'எடுப்பார் கைப்பிள்ளை' போல
நடத்துவது என்பது அவ்வளவு சுலபமா!!


பாவம்.. இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போவது அவருக்குத் தெரியாது!!

***********************************
அன்று மாலை...
IV முடிந்து எல்லாரும் BHEL வளாகத்திற்கு வந்தோம்..


கட்டதுரை மட்டும் எதையோ தேடிக் கொண்டிருந்தார்...

"தம்பிகளா.. இந்த பஸ்காரன் எங்க போனான்? அவனையும் காணோம்! பஸ்ஸையும் காணோம்!!"

"எந்த பஸ் சார்?"

"நம்ம வந்த பஸ் தான்"

"அது ####### கம்பெனி பஸ் சார்.. அவங்க டிப்போல இருக்கும்! இல்லனா சவாரி போய் இருக்கும்"

"என்னப்பா காமெடி பண்றீங்க? அப்ப நாம எப்படி போறது?"

"பஸ்ல தான்!"

"அட என்னப்பா.. அதான் எப்ப?"

"ஞாயிற்றுக் கிழமை"

"என்னது?"

"ஆமா சார்... திருச்சி வர மட்டும் தான் புக் பண்ணினோம்.. போறதுக்கு நாளைக்குத் தான் போய் புக் பண்ணணும்.. உங்களுக்குத் தெரியாதா?"

கட்டதுரையின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல்.. இவ்வளவு கரி அவர் முகத்தில் பூசப்பட்டதே கிடையாது.. இனி பூசவும் முடியாது!!!


அப்புறம், ஒரு பஸ்சில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தது தனி கதை!

திங்கள் கிழமை நாங்கள் எண்ணியவாறே விடிந்தது...
சரமாரியான திட்டுக்களுடன்!!!
(ஷிப்ட் போட்டு திட்டினாங்க என்றால் பார்த்துக்கோங்களேன்!!)

ஆனால், அதற்கு எல்லாம் கவலைப்பட முடியுமா?


திட்டு வாங்குவதற்கு பயப்பட்டு இருந்தால், அவ்வளவு சிறப்பாக இரு நாட்கள் பொழுது போய் இருக்குமா?

வள்ளுவர் சும்மாவா சொன்னார்:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.


பி. கு: நாங்கள் இப்படி பார்த்த பெஸ்டம்பர் 2005 அந்த ஆண்டிற்கான சிறந்த
கலை நிகழ்ச்சிக்கான பரிசை தமிழக அரசிடம் பெற்றது ஒரு கூடுதல் தகவல்!



பெஸ்டம்பர்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 9:11 pm

அட ஆனாலும் உங்க கட்டதுரை சாரை இப்படி கரி பூசி இருந்திருக்க வேணாம்.... அட அது சரி...தமிழக அரசு கிட்ட பரிசு வாங்கினீங்களா... என் அன்பு வாழ்த்துகள் அருண்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெஸ்டம்பர்  47
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Jul 31, 2011 10:05 pm

மஞ்சுபாஷிணி wrote:அட ஆனாலும் உங்க கட்டதுரை சாரை இப்படி கரி பூசி இருந்திருக்க வேணாம்.... அட அது சரி...தமிழக அரசு கிட்ட பரிசு வாங்கினீங்களா... என் அன்பு வாழ்த்துகள் அருண்...

நான் எங்க வாங்கினேன்.. விழா நடத்துனர் தானே வாங்கினார்!



பெஸ்டம்பர்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக