ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு

3 posters

Go down

சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு Empty சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு

Post by கே. பாலா Fri Jul 29, 2011 11:02 am

சென்னை: ""சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிட, அரசு எடுக்கும் நடவடிக்கையால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். அரசின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும்,'' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய, "அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி, உண்மை நிலை என்ன?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில், ச[மச்சீர் கல்விக் குழு தலைவர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் மறைய, அனைவரும் கல்வி பெற வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று சட்டம் பிறப்பித்து விட்டு, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அனுமதிப்பது ஏன்? அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். கல்வித் துறையில் அரசு, அரசியல்வாதிகள் குறுக்கீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்தத் துறை வீழ்ந்து விடும். இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடரவிடுவது நமக்கு நல்லதல்ல. ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.

மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது: ஒரு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி நடுநிலையாக எழுதுவது என்பது, சாதாரண விஷயமல்ல. இந்தப் புத்தகத்தை மிகவும் தைரியத்துடன், சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். முந்தைய அரசு, இன்றைய அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூறி, மாணவர்கள் பக்கம் நின்று இதை எழுதியுள்ளார்.
கல்வியில் அரசியல் போராட்டம் கலப்பது புதிதல்ல. ஆனால், எப்போதும் பார்க்காத, மோசமான, பொறுப்பற்ற அவலம் தமிழகத்தில் இன்று நிலவுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். பொதுப் பாடத்திற்குப் பதிலாக ஆறு, ஏழு ஆண்டிற்கு முந்தைய பாடத்திட்டத்தைக் கொண்டு வர, இந்த அரசு முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. இந்த பொதுப் பாடத் திட்டத்தில், ஏதாவது குறை இருந்தால், அதை களைந்து, வருகிற ஆண்டுகளில் சரிசெய்து கொள்ளலாம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையின் முழு விவரம், கல்வியாளர்களுக்குத் தான் தெரியும். தமிழே தெரியாத உறுப்பினர்களை, நிபுணர்களாக குழுவில் நியமித்து, அவர்களுடைய பரிந்துரைகளைக் கூட கோர்ட்டில் கொடுக்காமல், அறிக்கை ஒன்றை இந்த அரசு சமர்ப்பித்துள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் தரம் பற்றி கூறுவதற்கு, என்.சி.இ.ஆர்.டி.,க்கு தான் உரிமை உள்ளது. அவர்கள் கூட இந்த பொதுப்பாடத் திட்டத்தின் பல பகுதிகளைப் பாராட்டி இருக்கின்றனர். தனியார் பள்ளிகள், தரமான கல்வியைக் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரை ஏமாற்றி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
அவர்கள் தரம் என்று குறிப்பிடுவது, பாடச்சுமையை மட்டும் தான். பொதுப்பாடத் திட்டம், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும். பாடத் திட்டத்திலாவது சமத்துவம் வரட்டுமே என்ற நோக்கோடு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற இலக்கை அடைய, கட்டப்பட்ட முதல்படியான பொதுப்பாடத் திட்ட முறையைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட, அனைவருக்கும் கல்விச் சட்டம் பெயரளவில் தான் உள்ளது. அதை செயல்படுத்துவதில், இந்த அரசு ஆர்வம் காட்டலாம். அதை விடுத்து, பொதுப் பாடத்திட்ட முறையைக் கைவிட்டு, அரசு எடுக்கும் நடவடிக்கை, மாணவர்களுக்கு உதவாது. இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும். இவ்வாறு வசந்திதேவி பேசினார்.

விழாவில், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், "ஜி.ஏ., பப்ளிகேஷன்ஸ்' அசோகன் வரவேற்றுப் பேசினர். சமச்சீர் கல்விக் குழு உறுப்பினர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு Empty Re: சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு

Post by santhamurali Fri Jul 29, 2011 11:19 am

சமச்சீர் கல்வியில் பாத்தாவது வரை பயின்ற பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயில தகுந்த அடிப்படை கிடைக்குமா? ஏதேனும் ஒரு கல்வி கிடைத்தால் போதும் ! என்று இ றுகிக்கிறது பெற்றோர்களின் நிலை .
avatar
santhamurali
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011

Back to top Go down

சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு Empty Re: சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு

Post by கலைவேந்தன் Fri Jul 29, 2011 11:22 am

சமைத்தவர்களே தமது சமையலைப்பற்றிப் புகழாமல் வேறெவர் புகழ்வார்கள்..?

சமத்துவ உணவு என்னும் பெயரில் ஒரு கலவை சாதம் கலந்துவிட்டு அதை உண்டால் நோஞ்சான் குழந்தை மாரத்தானில் வெற்றி பெறும் என்பதைப்போல இருக்கிறது இவர்களின் வாதம்..

என் சி இ ஆர் டி யில் இருந்து எத்தனை பேரை இந்த சமையல் குழுவில் சேர்த்தார்கள் என்று கூற இயலுமா..?

இந்த கலவைச்சாத வல்லுனர்கள் அனைவருமே கருணாநிதி அடிவருடிகள் என்பதைத் தவிர வேறேதும் உண்மை இல்லை இங்கே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு Empty Re: சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி
» 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்
» கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum