ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி)

4 posters

Go down

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) Empty விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி)

Post by ரேவதி Fri Jul 29, 2011 10:14 am

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) P16b

உள்ளங்கை மடக்கி விரல்களில் முகம்வைத்து, 'நிலா வந்தாச்சு... நிலா வந்தாச்சு!’ என்றபடியே வந்து அமர்கிறாள் சாரா அர்ஜுன். தெய்வத் திருமகளாக மும்பையில் இருந்து முகம் காட்டியிருக்கும் 'நிலா’!

கண்கள், உதடு, உடல்மொழி... அனைத்திலும் குறும்பு கொப்பளிக்கிறது. அவள் உயரத்தில் பாதிக்கு வளர்ந்திருக்கிறது கூந்தல். முழுதாக ஒரு நிமிடம் அவளை ஒரு இடத்தில் அமரவைப்பது அம்மா சானியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ''பையா பையா... ('இந்தியில் அண்ணா’) கேட் அண்ட் மவுஸ் விளையாடுவோமா? நான்தான் மவுஸ்... என்னை நீங்க கேட்ச் பண்றீங்களா?''- அம்மா பக்கம்பார்த்துக் கொண்டே ரகசியமாகக் கேட்கிறாள் சாரா! (முடியாது என்று சொல்லவே முடியவில்லை. சில நிமிட 'ஓடிப் பிடிச்சு’ விளையாட்டுக்குப் பிறகுதான் பேட்டி துவங்கியது!)

''ஐ யம் சாரா அர்ஜுன். ஐ யம் சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு. மும்பை லே ஃபெஸ் ஸ்கூல்ல ஃப்ர்ஸ்ட் கிளாஸ் படிக்கிறேன். எங்க ஃபேமிலியில், நான், அப்பா அர்ஜுன், தம்பி சுஹான் மூணு பேரும் ஆக்டர்ஸ். அம்மா சானியா, ஒரு டான்ஸர். ஸோ... நாங்க ஒரு ஆர்ட்டிஸ்ட் ஃபேமிலி. 'தெய்வத் திருமகள்’ ஃபிலிம்ல குட்டிப் பாப்பா நிலாவா நடிச்சிருக்குமே ஒரு பாப்பா... அது என் தம்பி சுஹான். நான் ரெண்டு வயசுல இருந்தே, அமீர் கான், ராணி முகர்ஜிகூட எல்லாம் விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அடுத்து, ஷாரூக் அங்கிளோட நடிக்கப்போறேன். ஏற்கெனவே, விஜய் அண்ணா டைரக்ட் பண்ண விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். 'தெய்வத் திருமகள்’ பிலிம் நல்லா இருந்துச்சா?''

''சூப்பர்ப்! எப்படி இப்படிலாம் நடிச்ச... க்ளைமாக்ஸ்ல அழவெச்சுட்ட தெரியுமா?''
விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) P16a

''ஹைய்யோ... நீங்களும் அழுதீங்களா? நானும் தான். அப்பா அழுதுட்டே நடிக்கிறதைப் பார்க்க வும் நானும் அழுதுட்டேன். படத்துல யாராவது அப்பாவை அடிக்கிறப்போலாம் நானும் அழுதுரு வேன். அந்த ஸீன்லாம் பார்க்கவே மாட்டேன். அப்பா ரொம்ப சூப்பரா நடிச்சிருந்தார்ல! ஐ லவ் அப்பா!''

''அப்பாவா... யாரு? விக்ரம் அங்கிளைச் சொல்றியா?''

''ஏய் அடி.... விக்ரம் அங்கிள் இல்லை... அப்பா! அவரை நான் அப்பான்னுதான் சொல்வேன். இன்னொண்ணு தெரியுமா... என் டாடி அர்ஜுனும் நல்லா நடிப்பாரு. ராம்கோபால் வர்மா அங்கிளோட 'கம்பெனி’, 'டி’, 'கயாம்’ படங்களில் நடிச்சிருக்கார். அவரு டாடி... விக்ரம் அப்பா. விக்ரம் அப்பா என்னை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கிட்டாரு தெரியுமா? எனக்கு மேக்கப் போடுவார், ஸ்நாக்ஸ் ஊட்டுவார், ஷூ லேஸ் கட்டுவார், நிறையக் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்வார். வெரிகுட் அப்பா... ஐ லவ் ஹிம் ஸோ மச்!''

''ஓ... விஜய் அண்ணா, விக்ரம் அப்பா... யாரை ரொம்பப் பிடிக்கும் சாராவுக்கு?''

(மூக்கின் மீது குட்டி விரல் தட்டி யோசிக்கிறாள்) ''ரெண்டு பேருமே பிடிக்குமே... ஏன் இப்படிலாம் கேக்குறீங்க?''

''சும்மா... யாருக்கு நம்பர்-1 ப்ளேஸ் கொடுப்ப?''

''ம்ம்ம்... விக்ரம் அப்பாவுக்கு நம்பர்-1. விஜய் அண்ணாவுக்கு... ம்ம்ம்ம்... விஜய் அண்ணாவுக்கும் நம்பர் 1. சூப்பர்ல!''
விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) P16
''நீ ரொம்ப உஷார் சாரா... அப்போ நம்பர்-2 ப்ளேஸ் யாருக்குக் கொடுப்ப... அனுஷ்காவா, அமலா பாலா?''

''ரெண்டு பேருக்கும் கிடையாது... மார்ட்டினா தீதி!''

''அவங்க யாரு?''

''விஜய் அண்ணா அசிஸ்டென்ட். ரொம்ப லவ்லி தீதி. எனக்கு ஸீன்லாம் சொல்லித் தந்து ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கிட்டாங்க!''

''சூப்பர்... படத்துல எந்த ஸீன் நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட நீ?''

''எந்த ஸீனுமே இல்லையே... நானும் என் தம்பி சுஹானும் 'ஒன் டேக் ஓ.கே.’ ஆர்ட்டிஸ்ட் தெரியுமா. க்ளைமாக்ஸ் ஸீன் லாம் ஒரே ஷாட்ல ஓ.கே. பண்ணிட்டேன். பட்... வெரைட்டிக்காக வேற வேற மாதிரி ஷூட் பண்ணாங்க!

எனக்கு நடிக்க ரொம்பப் பிடிக்கும். டூ டேஸ் மேல ஸ்கூல் லீவ் இருந்தா, போர் அடிக்கும். ஆனா, ஸ்கூல்லயும் நான் குட் கேர்ள். எப்பவும் 'டிஸ்டிங்ஷன்’தான் வாங்குவேன். பையா பையா... இப்போ ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா? ஒன்லி டூ மினிட்ஸ்... ஓ.கே!''

(டூ மினிட்ஸ் 'ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டுக்குப் பிறகு...)

''தமிழ் கத்துக்கிட்டீங்களா... தமிழ்ல என்னலாம் தெரியும் சாராவுக்கு?''

''வணக்கம்... உக்காருங்க... காக்கா ஏம்ப்பா கறுப்பா இருக்கு? யானை ஏன் குண்டா இருக்கு? அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா? ஷூட்டிங் ஆரம்பிக்கிற ரெண்டு மாசம் முன்னாடியே தமிழ் கத்துக்கிட்டேன். படத்தோட எல்லா டயலாக்கும்பேசுவேன். ஆனா, மீனிங் தெரியாது. ஆங்... ஆங்... ஒண்ணு மறந்துட்டேனே... 'டீ... காபேய்... டீ காபேய்... டீ... டீ... டீ... காபேய்’ இதுவும் தெரியும் எனக்கு.சந்தானம் அங்கிள் நடிச்ச அந்த ஸீன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆ... டீ... காபேய்... டீ... காபேய்!''

(எழுந்து காபிக் கோப்பை தட்டுகளை ஏந்தி இருப்பதுபோலக் கைகளை வைத்துக்கொண்டு ரயில்வே ஜங்ஷன் நடை நடந்து காட்டுகிறாள்!)

''கமான் சாரா... உக்காரு கொஞ்ச நேரம்... இன்னும் டூ மினிட்ஸ்தான். அனுஷ்கா ஆன்ட்டி என்ன சொன்னாங்க?''

''ஓ வாவ்... என்னா ஒரு பியூட்டி தெரியுமா அவங்க! நான் அடிக்கடி அவங்க கன்னத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிட்டே இருப்பேன். செம சாஃப்ட்டா இருக்கும் அவங்க ஸ்கின்.அவங்களை மாதிரி எனக்கும் ஸ்கின்இருக் கணும்னா, ஆய்லி ஃபுட்ஸ் சாப்பிடக் கூடாதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. ஆனா, நான் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டு இருப் பேன். திட்டித் திட்டி அப்புறம் அவங்களே எனக்கு டயட்டீஷியன் ஆகிட்டாங்க. நானும் அனுஷ்கா தீதி மாதிரி அழகா வரணும். அப்புறம் நான் அவங்களை மாதிரியே உயரமா வரணும்!''

(சட்டென்று சோபாவில் இருந்து துள்ளிக் குதித்து குதிகால்களை உயர்த்தி அனுஷ்கா போல நடந்து, நடித்துக் காட்டுகிறாள்!)

''இவ்வளவு சேட்டைக்காரியா இருக்கே... உன்னை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அதட்ட மாட்டாங்களா?''

''ம்ஹும்... நான்தான் எல்லாரையும் நைஸ் பண்ணிருவேனே! மும்பை ஸ்கூல்ல எனக்கு சப்னா, புஷ்பா, சோனியான்னு மூணு மிஸ் இருக்காங்க. அவங்களை நான் விக்ரம் அப்பா, விஜய் அண்ணா, கேமரா மேன் நீரவ் ஷா அங்கிளுக்கு இன்ட்ரோ பண்ணிக் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன். அதனால, நான் என்ன சேட்டை பண்ணாலும் திட்ட மாட்டாங்க. ஆனா, அந்த தியாகராஜன்தான் என்னைப் பயமுறுத்திட்டே இருப்பார். அவர்தான் நிஜமாவே பெரிய டைனோசர். இல்லை இல்லை, பெரிய அனகோண்டா!''

''யார் தியாகராஜன்..?''

''படத்துல அப்பாவுக்கு ஃப்ரெண்டா ரொம்ப ஹைட்டா ஒரு அங்கிள் நடிச்சி இருப்பாரே... அவர்தான். ரொம்பப் பய முறுத்திட்டே இருப்பாரு. பேட் பாய்!''

''சாராவுக்கு வேற என்ன பிடிக்கும்?''

''சாக்லேட் பிடிக்காது, ஐஸ்க்ரீம் பிடிக்கும். கேம்ஸ் பிடிக்கும், டி.வி. பிடிக்காது. அமீர் கான் பிடிக்கும். சல்மான் கான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அப்புறம், இப்போலாம் நிலா பிடிக்குது. மும்பையில இருந்து ஃப்ளைட்ல வந்தப்போ நிலாவும் என் கூடவே வந்தது. நான் அதுகூட பேசிட்டே வந்தேன். வீட்ல எனக்குச் செல்லப் பேரு முன்னி. அப்டின்னா, ரொம்பக் குட்டின்னு அர்த்தம். நிலாவும் என்னை அப்படித்தான் கூப்பிட்டது. ஐ லவ் நிலா. ஓ.கே... போதும் பையா... போலீஸ் தீவ்ஸ் விளையாடலாமா... நான்தான் தீஃப். நீங்களும் சுஹானும் போலீஸ். என்னை கேட்ச் பண்ணுங்க பார்ப்போம்!''

கால் முளைத்து தத்தித் தாவி ஓடுகிறது நிலா!

கி.கார்த்திகேயன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) Empty Re: விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி)

Post by ரஞ்சித் Fri Jul 29, 2011 10:23 am

ச்சோஓஓ ச்சுவிட்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) Empty Re: விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி)

Post by dsudhanandan Fri Jul 29, 2011 10:26 am

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) 0d28e0b9de1945959de12d7

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) 22f6ddad02e7449ab2d8fd5s

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) 86e48afa39e84350ae01654

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) 07c99b5067f44f30ad022e4

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) C5daf6429f7f4077a15b874

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) 2f6266d9cf9e4642afedcba

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) 618986216bb3486db3bd32e

பேட்டி அருமை... பேட்டிக்காக விகடனுக்கு நன்றி சொல்லிடுங்கோ... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) Empty Re: விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி)

Post by சுரேஷ்குமார் Fri Jul 29, 2011 11:07 am

எல்லார் இதயத்திலும் இணையத்திலும் வளம் வரும் இந்த சின்ன குட்டி தேவதை எந்நாளும் பொன்னாலாக வாழ்க வளமுடன் :suspect:


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி) Empty Re: விக்ரம் அப்பா நம்பர் 1 (சாரா பேட்டி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum