ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.ஐ.டி. காலனி பணமும், சிக்கிய ஜாபர் சேட்டும்!

Go down

சி.ஐ.டி. காலனி பணமும், சிக்கிய ஜாபர் சேட்டும்!  Empty சி.ஐ.டி. காலனி பணமும், சிக்கிய ஜாபர் சேட்டும்!

Post by கண்ணன்3536 Fri Jul 29, 2011 9:30 am


Viruvirupu, Thursday 28 July 2011, 14:28 GMT
சென்னை, இந்தியா: தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஜாபர்சேட்தான், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கப்போகும் அடுத்தது பட்சி என்றே சி.பி.ஐ. வட்டாரங்களில் கூறப்படுகின்றது. காரணம், வெளிநாடு சென்றிருந்த சி.பி.ஐ. டீம் ஒன்று, ஜாபர் சேட்டுக்கு எதிரான பல ஆதாரங்களை வாரிக்கொண்டு வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரங்கள் எதையும் இவர் செய்யவில்லை. அவையெல்லாம் டில்லியில் நடந்தவை. அதில் வந்த எக்கச்சக்கமான பணத்தை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்த விவகாரத்தில்தான், ஜாபர்சேட் காட்சிக்குள் வருகின்றார்.

முதலீடு விஷயத்தில் இவரது பல தொடர்புகள் பற்றிய விபரங்கள் இப்போது சி.பி.ஐ.யின் கைகளில்!

ஜாபர்சேட்டின் சென்னை அண்ணாநகர் வீடு நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) ரெயிடு செய்யப்பட்ட பின்னணிக்கும், சி.பி.ஐ.க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சி.பி.ஐ. ஆராய்ந்துவரும் விஷயத்தில் உள்ள பணத்துடன் ஒப்பிட்டால், இந்த ரெயிடு விவகாரம் வெறும் சுண்டங்காய் சமாச்சாரம்.

வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று, அதை தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து வீடு கட்டி விற்பனை செய்த விவகாரம்தான், செவ்வாய் கிழமை நடைபெற்ற ரெயிடுக்குக் காரணம். ஜாபர் மீது சி.பி.ஐ. பாய்வதற்குமுன், முந்திக்கொண்டு அவரது அண்ணாநகர் வீட்டுக்குள் புகுந்திருக்கிறது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை.

நாங்கள், மத்திய அரசின் பெரிய விஷயத்தைப் பார்க்கலாம்.

ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான பின்னர்தான், இந்த விவகாரம் தொடங்குகிறது. அதன்பின் தி.மு.க.வின் சென்னை பவர் சென்டருக்குக்கு வந்து சேர்ந்த பணத்தை ஹான்டில் பண்ணத் தொடங்கினார் சேட். இதற்குப் பிறகு, இந்த சேட்டின் கைகளுடாக கோடிகள் இங்கும் அங்குமாக மாறின.

இந்தக் கோடிகள் எப்படி வந்தன? அதைத் தெரிந்துகொள்ள சற்று பின்நோக்கிச் செல்லலாம்.

ஆ.ராசா மத்திய அமைச்சராக்கப்பட்டதே, ஒரு புதுவித டீல் ஒப்பந்தத்தில்தான்! அதற்குமுன், தி.மு.க. சார்பில் மத்திய கேபினெட் அமைச்சர்களாக டில்லி சென்ற ஜாம்பவான்கள் எல்லோருமே, வேறு டீல்களில்தான் அனுப்பப்பட்டவர்கள்.

பழைய டீல் எப்படியென்றால், தி.மு.க.வின் மத்திய அமைச்சர்கள் சம்பாதிப்பது, அவர்களது பாக்கெட்டுக்கே செல்லலாம். தேர்தல் காலங்களில், கட்சிக்கென்று ஒரு பங்கு வெட்டி விடுவார்கள். அவ்வளவுதான்.

அவர்களால் டில்லியிலிருந்து,சி.ஐ.டி. காலனிக்கு ஸ்வீட் பாக்கெட்டைத் தவிர வேறு எதுவும் வருவதில்லை.

இப்படியான நிலையில், சி.ஐ.டி. காலனி போர்க்கொடி தூக்கியது. கோபாலபுரத்துக்கு இருப்பதுபோல தங்களுக்கும் டில்லியில் பிரதிநிதித்துவம் தேவை என்பதே சாராம்சம். கனிமொழிக்கு அமைச்சர் பதவிதான் முதலில் கேட்கப்பட்டது.

அப்போது, தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அழகிரிக்கு மத்திய அமைச்சராகும் (வேண்டாத) ஆசை வந்திருந்தது. தி.மு.க.வுக்கு காங்கிரஸ் வழங்க முன்வந்ததோ மூன்று கேபினெட் அமைச்சுகள்தான். இதில் மூன்றாவது நபராக கனிமொழியை அனுப்பினால், பார்க்க நன்றாக இருக்காது.

இந்த சூழ்நிலையில் சி.ஐ.டி. காலனிக்கு, “நீங்கள் கை காட்டும் ஆளை டில்லிக்கு அனுப்பி வைக்கலாம். அந்த ஆள் கொண்டு வருவதை நீங்களே வைத்துக் கொள்ளலாம்” என்று தி.மு.க.வின் மத்திய அமைச்சு அலாட்மென்டில் 33 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த புதிய டீலுக்கு ஏற்றால்போல கைக்கு அடக்கமாக இருந்த ஆள்தான் ஆ.ராசா.

அவருடனான ஒப்பந்தம், “அங்கே (டில்லியில்) அள்ளுவதை, இங்கே (சி.ஐ.டி. காலனியில்) கொட்டவேண்டும்”

இதில் ராசாவுக்கு ஆட்சேபனை ஏதும் இருக்கவில்லை. காரணம், இந்த டீல் இல்லாவிட்டால் டில்லியில் அவர் பூச்சியம். ஏதாவது சில்லரை பர்மிட், சப் கன்ட்ராக்ட் தரகு, தேசிய பட்டியல் அட்மிஷன் என்றுதான் சிறுகச்சிறுக சம்பாதிக்க முடியும்.

இதுதான், டி.ஆர்.பாலு போன்ற சீனியர்களையும் ஓவர்டேக் செய்து ராசா டில்லிக்கு அனுப்பப்பட்ட காரணம்.

ராசா அமைச்சரானபின், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட பணம், இவர்கள் யாரும் அதற்குமுன் ஊகித்துக்கூட இராத அளவுக்கு அதிகமானது. பழைய டீலின்படி இந்தப் பணம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, அதை எங்கே மறைப்பது என்ற பெரிய பிரச்சினை தோன்றியது.

இந்தக் காலகட்டத்தில், சி.ஐ.டி. காலனியுடன் நெருக்கமானவர்தான் ஜாபர்சேட்.

இவ்வளவு பெரிய தொகையை தமது வாழ்நாளில் லம்ப்-சம்மாக கண்டிராத சி.ஐ.டி. காலனிக்கு, முதலீடு என்றாலே, தமிழகத்திலோ வெளி மாநிலங்களிலோ எஸ்டேட் அல்லது வீட்டு மனைகள் வாங்கிப் போடுவது என்பதற்குமேல் தெரிந்திராத காலகட்டம் அது.

அதற்குமேல் வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை இவர்கள். ஸ்பெக்ட்ரம் மூலமாக இவர்களுக்கு வந்த எக்கச்சக்க பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்று ஐடியா கொடுத்த ஆளே, ஜாபர் சேட்தான்!

அந்தப் பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதற்கு, ஜாபர் உதவி புரிந்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் பணத்தை முதலீடு செய்வதில் ஜாபரின் உதவி இரண்டு விதமாகவும் கிடைத்திருக்கின்றது. ஒன்று, உள்நாட்டு முதலீடு. இது பெரும்பாலும் நிலங்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள் என்ற வகையில் உள்ளன. இரண்டாவது வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள்.

இதிலுள்ள முதலாவது வகையில் முதலீடு செய்யப்படும்போதே கருப்பு, வெள்ளையாக்கப்பட்டுள்ளது. ஜாபருக்கான பங்கு வழங்கப்பட்டதும் அந்த வழியில்தான். இதில் ஒருபகுதிதான் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் மாட்டியுள்ளது.

அதாவது, ஜாபருக்கு கொடுக்கப்பட்ட (அல்லது ஜாபர் எடுத்துக்கொண்ட) பணத்தின் ஒரு பகுதி, வெளிப்படையாக முதலீடு செய்ததில் சிக்கியுள்ளது. அதில்தான் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் பெயரும் சிக்கியது.

இந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் என்பவருடன் சேர்ந்து ‘டிம்பர்ட்டன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகளைக் கண்டுபிடித்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. அடுத்து, திருவான்மியூரில் கட்டப்பட்ட சில வீடுகளும், சென்னை டி.நகரில் சில அடுக்குமாடி கட்டடங்களும் அகப்பட்டுள்ளன. வேறு சில வீடுகள், நிலங்கள் ஆகியவையும் விசாரணைகளில் அகப்படலாம்.

இவையெல்லாம் வெறும் உப்புமா சமாச்சாரங்கள்.

மெயின் முதலீடுகள் இருப்பது வெளிநாடுகளில். அந்த முதலீடுகள் பற்றி அறிவதற்கு தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அக்ஸஸ் கிடையாது. சி.பி.ஐ.கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவற்றைக் கிளற முடியும். இந்தியாவின் வெளியக உளவுப்பிரிவு றோ (RA&W) நினைத்தால்தான் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

ஆனால், இதெல்லாம் அவர்களுடைய வேலை கிடையாது!

தவிர றோவுக்கும் சி.பி.ஐ.க்கும் இடையே ஈகோ பிராப்ளம் பயங்கரமாக உண்டு. இவர்கள் கேட்டு அவர்கள் செய்து கொடுக்க மாட்டார்கள். அவர்களைக் கேட்பது தமக்கு கௌரவக் குறைச்சல் என்று இவர்கள் நினைப்பார்கள்.

மொத்தத்தில், இந்தப் பணத்தின் ஒரு பகுதியை சி.பி.ஐ. வெளிநாடுகளில் கண்டுபிடித்திருக்கின்றது! அதுவே போதும், ஜாபர்சேட்டை ஸ்பெக்ட்ரம் கேஸில் சிக்க வைப்பதற்கு.

விறுவிறுப்பு.காம் பல தரப்புகளில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில், போடப்பட்ட ஸ்கெட்ச் இதுதான். இதுதான் இவர்களது அஸ்திவாரம். இதற்குமேல் எழுந்த கட்டடமே, ஸ்பெக்ட்ரம் பணத்தின் வெளிநாட்டு முதலீடுகள்.

முதலீடுகளின் ஒருபகுதி, மிடில் ஈஸ்ட் பேங்க்கள் மூலம் நடந்துள்ளன. சில மிடில் ஈஸ்ட் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் ஏஜென்சிகள் சம்மந்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஒரு மெகா சைஸ் தியேட்டர், இன்டோர் ஸ்டேடியம், மலேசியாவில் ஷாப்பிங் மால்,லோ-காஸ்ட் ஏர்லைன்ஸ் ஒன்றில் முதலீடு, மியன்மாரில் தேக்கு மரம் வளர்ப்பு பண்ணை என, மிடில் ஈஸ்டிலிருந்து, தென்கிழக்கு ஆசியாவரை இந்த சாம்ராஜ்யம் படர்ந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் பணத்தில் ஜாபருக்கு கிடைத்த பங்குத் தொகை ரூ. 200 கோடிக்கு மேல் இல்லை என்றே தெரிய வருகிறது. சி.ஐ.டி. காலனிக்கு வெளிநாடுகளில் முதலீடு செய்யும் பாதையைக் காட்டிவிட்ட சேட், ஆச்சரியகரமாக தன்னுடைய பங்கில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு உள்ளேயே முடக்கியிருக்கிறார்.

முட்டாள்தனமாக ஏன் அப்படிச் செய்தார்? அவரைத்தான் கேட்க வேண்டும்.

ஆனால் ஒன்று. ஜாபர் சேட் தனது பங்கை முழுமையாக வெளிநாட்டில் முதலீடு செய்திருந்தால், ஆட்சி மாற்றத்துடன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சிம்பிளாக இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கலாம். தி.மு.க. தோற்காது என்று நிஜமாகவே இந்த மனுசன் நம்பியிருக்கிறார் போலிருக்கிறது!

-சென்னை, டில்லி மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்ற குறிப்புகளுடன், ரிஷி.

நன்றி viruviruppu
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum