புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 46%
heezulia
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்ஜான் சிந்தனைகள்


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:50 pm






ரம்ஜான் சிந்தனைகள் Ramzan-309

புகழைத்தேடி அலையாதீர்: நல்ல பிள்ளை, உன்னைப் போல், உன் வகுப்பில் யாருமே கிடையாது. நீ ரொம்ப வேகமாக எழுதுவாயாமே! எங்கே! ஹோம் ஒர்க்கை சீக்கிரம் எழுதி முடி, பார்க்கலாம்,'' என்று ஒரு குழந்தையை புகழ்ந்து பேசினால் போதும். குழந்தை கடகடவென எழுதி முடித்து விடும். குழந்தைகளுக்கே இப்படி என்றால், பெரியவர்களை கேட்கவா வேண்டும்? தங்களைப் பற்றி தாங்களே பெருமையடித்துக் கொள்வதில் சிலருக்கு அலாதி பிரியம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அப்படிப்பட்டவர் அல்ல. அவர்கள் இறைவனின் தூதர் என மக்களால் மதிக்கப்பட்டாலும், தன்னைப் புகழ்வதற்கு, யாரையும் அவர் அனுமதித்தது கிடையாது. தற்புகழ்ச்சி கூடாது என்பதை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஒருமுறை அவர்கள் எடுத்துரைத்தார்கள். முஆதுப்னு அப்ரா என்பவரின் மகள் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க அவர்கள் வந்தார்கள். மணப்பெண்ணுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். திருமண நிகழ்ச்சிக்கு வந்த அண்ணலாரைப் பார்த்து மகிழ்ச்சிஅடைந்த குழந்தைகள், இஸ்லாமைக் காக்கும் போரான பத்ரு போர்க்களத்தில் இறந்து போன வீரர்களைப் பற்றிய இரங்கல் பாடல்களைப் படித்தார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்கள் முடிந்ததும், ""நாளை நடக்கப்போவதை அறிந்த திருநபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்,'' என்று பொருள் படும் வகையிலான ஒரு பாடலை ஆரம்பித்தனர். உடனே நாயகம்(ஸல்) அவர்கள், அந்தக் குழந்தைகளிடம், ""குழந்தைகளே! இந்தப் பாடல் வேண்டாம். நீங்கள் முதலில் பாடிய பத்ரு ஷஹீதுகள் பற்றிய பாடல்களையே பாடுங்கள்,'' என்றார். புகழுக்கு மயங்காத நாயகம்(ஸல்) அவர்களின் இந்த அரிய பண்பு நம்மிடமும் இருக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

அவரவர் தகுதிக்கேற்ப வாழலாம்: சிலரிடம் ஏராளமான பணமிருக்கும். ஆனால், அதை அனுபவிக்க மனமிருக்காது. அது மட்டுமல்ல! இவர்கள் மற்றவர்களிடம் தங்களுக்கு பணமில்லை என்பது போல் பாசாங்கு செய்ய அழுக்கடைந்த சட்டைகளோடு திரிவார்கள். தாடியை ஒழுங்கு செய்ய மாட்டார்கள். பரம ஏழை போல் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், தங்களுக்கு இறைவன் அருளியதைக் கொண்டு எப்படி வாழ வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை. ஒருமுறை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன்னால் வந்த ஒருவரின் உடைகள் தரமற்றதாகவும், சாதாரணமாகவும் இருந்தன. அண்ணலார் அவர்கள் அவரிடம், ""உங்களிடம் நிறைய பணம் இருக்கிறதல்லவா?'' என்றார்கள். அவர், "ஆம்' என பதிலளிக்க, ""என்னென்ன வகையான சொத்து உங்களிடம் இருக்கிறது,'' என்றார்கள். வந்தவர், ""அண்ணலே! என்னிடம் ஒட்டகங்கள், குதிரைகள், ஆடுகள், அடிமைகள் என ஏராளமான சொத்துக்கள் உள்ளன,'' எனக் குறிப்பிட்டார். நாயகம்(ஸல்) அவர்கள் அவரிடம், ""இறைவன் உங்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் கொடுத்திருக்கிறான் என்றால், அவனது அருளின் அடையாளம் உங்கள் உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும்,'' என்றார்கள் சூசகமாக. அதாவது, ஆண்டவன் செல்வத்தை வாரி வழங்கியிருந்தும், அதைப் பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதில் லாபம் ஏதுமில்லை என்பது அவர்களது கருத்தாக அமைந்தது. மேலும், இறைவன் ஒருவருக்கு எல்லாவற்றையும் கொடுத்து அதை அனுபவிக்காமல் இருப்பது, அதைக் கொடுத்த இறைவனைப் பழிப்பதைப் போலாகும் என்பதும் இதில் மறைந்துள்ள கருத்தாகும். அதே நேரம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ""நீங்கள் விரும்புவதை சாப்பிடலாம். விரும்பும் ஆடையை அணியலாம். ஆனால், கர்வமும், வீண் விரயமும் இருக்கக்கூடாது,'' என்று ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இறைவன் கொடுத்ததை அவரவர் தகுதிக்கேற்ப நன்றாக அனுபவித்து மகிழலாம்.

சொல்லாற்றல் வேண்டும்: இஸ்லாத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அரபுநாட்டில் பிரசாரம் செய்து வரும் வேளையில், ஏமன் மாகாணத்தை சேர்ந்த ஒரு கோத்திரத்தின் தலைவரான, அம்ரு அலி தவ்ஸி என்பவர், மெக்கா வந்தார். அவரிடம், நாயகம் (ஸல்) அவர்களின் எதிர்ப்பாளர்களான குறைஷி இனத்தவர், நாயகத்தின் போதனைகளைப் பற்றியும், புதிய மார்க்கத்தைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததுமாக கூறி, நாயகத்தின் மீது வெறுப்பு ஏற்பட வைத்து விட்டனர். குறைஷி இனத்தலைவர் ஒருவர், "அம்ரு அவர்களே! தாங்கள், நாயகத்தின் போதனைகளைக் கேட்கவே கூடாது. அதற்கு உறுதி தாருங்கள்,'' என்றார். அம்ருவும், தன் காதில் பஞ்சை வைத்துக் கொள்வதாக உறுதி கூறி, கையில் சிறிது பஞ்சையும் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் கஃபாவுக்குச் சென்றார். அங்கே, நாயகம்(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார். அவர் கூறிய இறை வசனங்கள் காற்றில் மிதந்து வந்தன. அவை அம்ருவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன. நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய திருவசனங்களின் சொல்லழகு, நடையழகு, இனிய குரல், தெளிவான உச்சரிப்பு ஆகியவை அம்ருவை ஈர்த்தன. அவரது கையில் இருந்த பஞ்சு தானாக கீழே விழுந்து விட்டது. அவர் செயலற்று நின்றுவிட்டார். நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பும் போது, அம்ரு நிற்பதைக் கவனிக்கவில்லை. அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். அம்ரு அவர்களது இல்லத்துக்கே சென்று, ""பெருமானாரே! நான் உங்கள் அடிமை, உங்கள் சீடன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்றியருள வேண்டும்,'' என்றார். நபிகளார் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உபசரித்து, இஸ்லாத்தின் கருத்துக்களைப் போதித்தார். அம்ரு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். சண்டை போட வேண்டும் என வருபவர்களையும், சமாதானமாக்கும் சொல்லாற்றல் நமக்கு வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

முக்கியமான பத்து இரவுகள்: ரம்ஜான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. "லைலத்துல் கத்ர்' எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது. இந்த பத்து இரவுகளில் குறிப்பிட்ட ஒரு இரவை, நாம் லைலத்துல் கத்ர் இரவாகக் கொண்டாலும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுப்படி, ""எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள்,'' என்றார்கள். ""ரமலான் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடுங்கள்,'' என்று நாயகத்தின் துணைவியார் ஆயிஷா (ரலி) அம்மையார் அறிவித்திருக்கிறார். கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படையான இரவுகளில் இந்த இரவை அடைந்து கொள்ளுமாறு கூறினாலும், அதை அடைந்து கொள்வதற்கு, அண்ணலார் அவர்கள், செயலில் வழிகாட்டும் போது, கடைசி பத்து நாட்கள் முழுவதிலும் முயற்சி செய்து காட்டியுள்ளதைக் காணலாம். ""ரமலான் கடைசி பத்து நாட்கள் வந்துவிட்டால் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்,'' என்கிறார் ஆயிஷா அம்மையார். ரமலான் மாதத்தில் அதிக அளவு தொழுகை நடத்த வேண்டும். அதிலும் கடைசி பத்து இரவுகளில் மேலும் மேலும் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது இதன் மூலம் புலனாகிறது. நோன்பின் கடைசி பத்துநாட்களில் நாம் இருக்கிறோம். எனவே, தொழுகைகளை அதிகப்படுத்தி, பாவங்களைப் போக்கி, இறைவனின் நற்கருணையைப் பெற வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

சாந்தமுள்ளவராய் மாறுவோம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாமை, மக்கள் மத்தியில் வளர்த்த காலத்தில், அனுபவித்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மெக்காவில் வசித்த, இஸ்லாம் எதிர்ப்பாளரான அபூஜஹல் என்பவன், ""நாயகத்தின் தலையை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை பரிசாகத் தருவேன்,'' என அறிவித்தான். இதையடுத்து, உமர் என்ற இளைஞர் இந்தப் பொறுப்பை ஏற்றார். அப்போது நாயகம்(ஸல்) அவர்கள், அர்க்கம் மாளிகையில் இருந்தார். உமர் அவரைக் கொல்ல வாளுடன் செல்லும் வழியில், அப்துல்லாஹ் என்பவர் உமரைச் சந்தித்தார்.""இளைஞனே! நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்கிறீர். ஆனால், உம் தங்கையும், அவரது கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உமக்கு தெரியுமா? உம் குடும்பத்தினரைத் திருத்திய பிறகல்லவா, நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்ல வேண்டும்!'' என்றார். உமருக்கு அது நியாயமாகப்பட்டது. அவரது கோபம் தங்கையை நோக்கித் திரும்பியது. தங்கை வீட்டுக்குச் சென்றார். கதவு தாழிடப்பட்டிருந்தது. உள்ளே குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டது. அவர் கதவைத் தள்ளிக்கொண்டு வாளுடன் வீட்டுக்குள் பாய்ந்தார். தங்கை உம்மு ஜலீல் பாத்திமாவும், கணவர் ஸயீதுப்னு ஜைதும் அங்கிருந்தனர். மைத்துனர் மீது அவர் வாளுடன் பாயவே, கணவரைக் காப்பாற்ற பாத்திமா குறுக்கே பாய்ந்தார். அவரது முகத்தில் வாள் கீறி ரத்தம் கொப்பளித்தது. இதைப் பார்த்ததும் உமரின் வெறி அடங்கியது. அவளை இரக்கத்துடன் பார்த்தார். பாத்திமா மிகுந்த தைரியத்துடன்,""அண்ணா! நாங்கள் அண்ணல் நபிகளின் மார்க்கத்தை தழுவியுள்ளோம். உம் வாளுக்குப் பயந்து தடம் மாறமாட்டோம்,'' என்றார்.
தங்கையின் தைரியம் அவரது மனதை மாற்றி விட்டது. ""பாத்திமா! சற்றுமுன் நீர் ஓதியதை எனக்கும் சற்று காட்டுங்களேன்,'' என்றார். பாத்திமா தான் ஓதிய பகுதியைக் கொடுத்தார். அதைப் படித்ததும் அவர் கண்ணீர் வடித்தார். மனம் மாறினார். மறுநாள் நபிகளாரைச் சந்தித்து, இஸ்லாத்தில் இணைந்தார். கோபக்காரர்களையும் சாந்த சொரூபிகளாக்கும் வல்லமை கொண்டது குர்ஆன். ரமலான் காலத்தில் மிக அதிகமாக குர்ஆனை ஓத வேண்டும்.

ஊருக்கு மட்டும் உபதேசமா?சிலர் கவர்ச்சியாகப் பேசுவார்கள். ""என் புத்திமதியைக் கேட்டு நடந்து, இந்த ஊரில் நல்லபடியாக வாழ்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?'' என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.உதாரணத்துக்கு ஒரு நண்பர், ""உன் மனைவியோட ஒழுங்கா குடித்தனம் நடத்து! அவள் கேட்டதை வாங்கிக் கொடு. குடிச்சிட்டு வீட்டுக்குப் போகாதே. புகை பிடிக்காதே. அது உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் ஏண்டா செய்றே' என தன் இன்னொரு நண்பரை எச்சரிப்பார். ஆனால், உபதேசம் செய்தவரின் வீட்டில் போய் பார்த்தால், கதை வேறு மாதிரியாக இருக்கும். காரணம்இல்லாமல், மனைவியை உதைப்பது, குடிப்பது...இப்படி நேர்மாறாக நடப்பார்.ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தப் பாவிகளுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என எச்சரிக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.""இப்படி அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு, அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவான். இதைப் பார்த்து இவனிடம் அறிவுரை பெற்றவர்கள் "நீ நல்லவனாகத்தானே இருந்தாய். நல்லதைத் தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது?' எனக் கேட்பார்கள்.அதற்கு அவன் "நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நல்லதின் அருகில் கூட நான் சென்றதில்லை. தீமைகளை விட்டும் உங்களைத் தடுத்தேன். ஆனால், நான் தீமை புரிந்து கொண்டிருந்தேன்' என்று பதிலளிப்பான்,'' என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. அந்த உபதேசத்தை சொல்பவரும் கடைபிடித்தால் தான், ரமலான் நோன்பு நோற்றதின் பயனை அல்லாஹ்விடம் பெற முடியும்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா! கெட்ட பழக்கங்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ்2:195ல், ""உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,'' என்றும், ஹதீஸ் 4:29, ""உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,'' என்றும் தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன.இன்றைய உலகச் சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் மிக எளிதாக அடிபணிந்து விடுகிறார்கள். சிலர் நோன்பு காலத்தில் கூடஇப்படிப்பட்ட பழக்கங்களை மேற்கொள்வது மிகுந்த மனக்கஷ்டத்தைத் தருகிறது. மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு வாழும் நிஜமான முஸ்லிம்இத்தகைய கெட்ட பழக்கங்களை அனுமதிக்கமாட்டார். கெட்ட பழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன்.ஹதீஸ் 6:141, ""நீங்கள் வீண் விரயம்செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,'' என்றும், ஹதீஸ் 17:26, ""நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,'' என்றும் சொல்கிறது.கெட்ட வழிக்கு செலவிடும் காசை நீங்கள் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ் மரணத்திற்குப் பின் உங்களை மூன்று கேள்விகள் கேட்பான்.""பணத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வழியில் அதனைச் செலவு செய்தாய்? உனது உடம்பை எதில் அழித்தாய்?'' என்பதே அவை.இதற்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போது, நமது தவறுகளெல்லாம் வெளிப் பட்டு, இறைவனின் முன்னிலையில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.எனவே, நோன்பு காலத்தில் கெட்ட பழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள். நோன்பு முடிந்த பிறகு, மீண்டும் அதைப் பிடித்துக் கொள்ளாதீர்கள். உடலைக் கெடுக்கும் பழக்கங்களுக்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச்செலவுக்கு உதவுங்கள். அது நம்மை அல்லாஹ்வின் அருகில் கொண்டு சேர்க்கும்.கெட்ட பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

உடையில் கவனம் வேண்டும்: ஒழுக்கத்தின் அடிப்படை ஆண், பெண் உறவில் தான் இருக்கிறது. குறிப்பாக, ஆண்களுடன் பழகும் விஷயத்தில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இஸ்லாம். ""நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கை யாளரின் மனைவிகள் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,'' என ஒரு வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பெண் நல்ல அலங்காரம் செய்து கொண்டால் தன் கணவர், திருமண உறவு அல்லாத உறவினர்கள் (சகோதர வகையினர்), வேலையாட்கள், சிறுவர்கள், பிற பெண்கள் மத்தியில் நடமாடலாம். மற்ற ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்பு பர்தா அணிந்தே வரவேண்டும். இப்படி சொல்வது ஒரு பெண்ணின் உரிமையை பறிப்பதற்கான சட்டம் அல்ல. ஆண்களிடமிருந்து அவளது மானத்தைக் காப்பாற்றவே இந்த ஏற்பாடு! பெண்ணின் உடலமைப்பை ஒட்டியும், ஒழுக்கக் கேடில்லாத சமுதாயத்தை உருவாக்கவுமே குர்ஆன் இந்த சட்டத்தை வகுத்துள்ளது. இதை விட்டுவிட்டு சம உரிமை என்ற பெயரில் ஆடம்பர அலங்காரத்துடன் பெண்கள் நடமாடுவது அவர்களுக்கு ஆபத்தையே தரும் என்பது இன்றைய ரமலான் சிந்தனையாக அமையட்டும்.

வாழ்வுக்கு பிரதானமான படிப்பு: அல்லாஹ் இறக்கிய முதல் குர்ஆன் வசனமே... "ஓதுவீராக, உம்மைப் படைத்த இறைவனின் பெயரால். அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்..' என்பதுதான். ஆம்... படிப்பே பிரதானம் என்று துவங்குகிறது குர்ஆன். அரபு நாட்டில் கல்வியறிவு குறைந்திருந்த காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். ""கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். சீன தேசம் சென்றாவது சீர்கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்,'' என்றார்கள் அவர்கள். இஸ்லாமைக் காப்பாற்றும் பத்ரு போர்க்களத்தில் பிடிபட்ட சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால், ஒவ்வொரு கைதியும், அரபு மக்களில் பத்து பேருக்காவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டது. ""கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால், இறைவனின் பாதையில் அவன் பயணம் செய்கிறான்,'' என்கிறார்கள் நாயகம். ஒருமுறை, முஆது என்ற தோழரை, நாயகம் (ஸல்) அவர்கள், ஏமன் நாட்டுக்கு தன் பிரதிநிதியாக அனுப்பினார். அவரிடம், ""அங்கே ஏதேனும் பிரச்னைகள் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு முஆது, "குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்' என்றார். "அதற்கும் முடியாமல் போனால்' என்று அண்ணலார் கேட்க, ""உங்கள் சொல் செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து தீர்ப்பேன்,'' என்றார். ""அதனாலும் முடியாமல் போனால்,'' என அவர்கள் கேட்டதும், ""இந்த இரண்டின் அடிப்படையில் சொந்த அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும்,'' என்றார். இதைக் கேட்ட நாயகம்(ஸல்) அவர்கள், ""நீர் சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்,'' என்றார்கள். சொந்த அறிவு என்பது கல்வியினால் வருவதாகும். படிப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, மாணவர்கள் அனைவரும் மிக நன்றாகப் படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்பதும், படிக்காதவர்கள் கல்விக் கூடத்துக்குள் நுழைய வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனையாகட்டும்.

சிரித்து வாழ வேண்டும்: டென்ஷன் என்னும் மனஇறுக்கம், மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது. "என் பணியில் டென்ஷன்' என்று சொல்லிக்கொள்வதை சிலர் பெருமையாகவும், நாகரீகமாகவும் கூட கருதுகின்றனர். "லாபோதெரபி' என்ற வைத்திய முறை கூட மனிதர்களைச் சிரிக்க வைக்க வந்திருக்கிறதாம்! இது சரியான போக்கல்ல! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்' என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டி நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், "அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். ""இறைத்தூதரே! என்னிடம் ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் மிகவும் சிரமப் படுகிறேன்,''என்றார். அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள். அந்தப் பெண்மணி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார். ""இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம்(ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண்ஜாடை காட்டினார்கள். சற்றுநேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார். ""அண்ணலாரே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,'' என்றதும், நாயகம் புன்னகைத்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,'' என்றார்கள்.இதைக்கேட்டு அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். நாமும் சிரிக்க வேண்டும், நம்மால் பிறரும் சிரிக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

சொந்தமாகும் சொர்க்கம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். ""நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும் ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களுடையதாகி விடும்,'' என்று. அவர்கள் மேலும் சொன்னார்கள். ""நான் உங்களிடம் பலமான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறி விட மாட்டீர்கள். ஒன்று இறைவேதமாகிய திருக்குர்ஆன். மற்றொன்று எனது வாழ்க்கையும், வாய்மொழியுமான "சுன்னத்' ஆகும். இன்று உங்களின் இந்நாட்டிலே, தனது ஆட்சி தகர்ந்து தவிடு பொடியாகி விட்டதைக் கண்டு ஷைத்தான் மனம் உடைந்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். அற்ப விஷயத்திலேனும் நீங்கள் அவனுக்கு வழிபட்டு (உடன்பட்டு) விடுவீர்களாயின், அவன் பெருமகிழ்ச்சி அடைவான். ஆதலின், இறைவனின் ஏகத்துவத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியுடன் இருந்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்,'' என்றார்கள். ரமலான் நோன்பிருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஓட வேண்டிய சிந்தனை இது. ஏனெனில், இறைவனே எல்லாம். இறைவனின் கட்டளைகளுக்கு நாம் பயந்து நடக்க வேண்டும். மாறாக, மனதில் பல மோசமான எண்ணங்களுக்கு ஷைத்தான் வித்திடுவான். அவனது பிடியில் அகப்பட்டு விட்டால், நம்மால் மீளவே முடியாது. குடிக்கக்கூடாது, பிறரைத் துன்புறுத்தக்கூடாது என்றெல்லாம் நமக்கு கட்டளை இறங்கியிருக்கிறது. ஷைத்தானோ, "இதையெல்லாம் செய்' எனத் தூண்டிக்கொண்டே இருப்பான். ஆனால், இறைவனை நினைத்தபடியே, நிஜமான நோன்பிருப்பவர்களைக் கண்டு அவன் ஓடியே போய் விடுவான்.

ரமலான் மாதத்தின் சிறப்பு: ரமலான் மாதத்தில் நோன்புக்குரிய மாதம். சிறப்பாக நோன்பிருந்தபடியே, மாதத்தின் மையப்பகுதியை எட்டிவிட்டோம். சரி! இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே அதுபற்றி சொல்கிறார்கள். ""ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் "லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆதமுடைய மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர, பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளிலே விழிப்புடன் இருக்கும்,'' என்கிறார்கள் அண்ணலார். ""நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,'' என்கிறான் அல்லாஹ். எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இன்னும் வரும் நாட்களிலும் மிகச்சிறப்பாக நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.

இறைவன் நினைப்பதே நடக்கும்: நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளைப் பிடிக்காத அவரது எதிரிகள், அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஒருநாள் இரவில், கொலை முயற்சி நடந்த போது, இருளைப் பயன்படுத்தி தப்பி, தம் நண்பர் அபூபக்கர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அவரையும் அழைத்துக்கொண்டு மெக்காவை விட்டு வெளியேறி, தௌர் என்ற மலைக்குகைக்கு சென்று ஒளிந்து கொண்டனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். குகைக்குள் புகுந்து நாயகம்(ஸல்) அவர்களைத் தேடிப்பிடிக்க, எதிரிகள் முடிவெடுத்தனர். அப்போது அபூபக்கர் அவர்கள், ""நாம் இங்கிருப்பதை எதிரிகள் எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி, நாம் இறப்பது உறுதி,'' என்றார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அபூபக்கரிடம், ""தோழரே! பயப்பட வேண்டாம். நாம் இருவராக இருந்தால் அல்லவா அவர்களால் நம்மைக் கொல்ல முடியும். இங்கே, நம்மைத் தவிர மூன்றாவதாகவும் ஒருவர் இருக்கிறார்,'' என்றார்கள். அபூபக்கர் அவர்கள் ஆச்சரியத்துடன் நாயகம்(ஸல்) அவர்களைக் கேள்விக்குறியுடன் நோக்கவும், அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாயகம், ""எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இங்கிருக்கிறான். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை,'' என்றார்கள். இதற்குள் எதிரிகள் உள்ளே புகுந்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே சென்ற பிறகு, எதிரிகள் உள்ளே நுழைவதற்குள், நுழைவு வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டது. அப்போது ஒரு எதிரி தன் நண்பர்களிடம், ""இங்கே சிலந்தி வலை பின்னியிருக்கிறது. நாம் தேடி வந்தவர்கள் உள்ளே புகுந்திருந்தால், குகைக்குள் நுழையும் போது இது அறுபட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை,'' என்றான். இதை ஏற்ற மற்றவர்கள் திரும்பிச் சென்றனர். இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

தர்மம் செய்யும் குணம் வேண்டும்: ரமலான் நோன்பு நோற்கும் போது, காலை முதல் மாலை வரை பிரச்னையில்லை. ஏதும் சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால், மாலையில் நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில், ஏதேனும் சாப்பிட வேண்டுமல்லவா! சாப்பிட வழியில்லாத ஏழை ஜனங்களுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ ஏதோ ஒன்று கொடுக்க வேண்டுமல்லவா! இந்த தர்ம சிந்தனையை, நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாயகம்(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார், ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தான். அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரமலான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.""அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,'' என்றாள். அம்மையார் அவளிடம், ""அதுபற்றி நீ கவலைப்படாதே,'' எனச் சொல்லி விட்டார். ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடை அணிந்திருக்கவில்லை. நகைகளைப் பூட்டிக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கியை அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்! ஒருமுறை ஒரு பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் பசி தாளாமல் ஆயிஷா அம்மையாரிடம் வந்தாள். அப்போது அம்மையாரிடம் இரண்டே இரண்டு பேரீச்சம் பழங்கள் தான் இருந்தன. அதை அவளிடம் கொடுத்தார். அந்தப் பெண் அவற்றை பசியுடன் நின்ற தன் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

நன்மை செய்ய விரும்புங்கள்:""நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், "நான் நோன்பாளி, நான் நோன்பாளி' என்று கூறிவிடுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ரம்ஜான் காலத்தில் நோன்பிருக்கும் சமயத்தில் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா? இந்த பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச் செய்யும். நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும். அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,''.இப்படி நோன்பின் காரணமாக, எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்த நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும். ""நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக! அதிகமதிகம் நன்மை செய்வாயாக. பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள் செய்வதைக் குறைத்துக் கொள்,'' என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள். பிறருக்கு நன்மை செய்வது பற்றி, இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில் சிந்திப்போம்.

உயர்ந்த குணம் வேண்டும் பெண்களே! ""ஒரு பெண்ணை அவளுடைய செல்வம், அழகு, குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மணம் முடிக்கப்படுகிறது. நீங்கள் மார்க்கப்பற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணமுள்ள பெண்களைத் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். எந்த நேரமும் சண்டை போட்டுக் கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும், இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புவதும், கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் "என்ன சுகத்தைக் கண்டேன்' என குறை சொல்வதும், முன்னாள் கணவரை மறக்க முடியாமல் அவருக்கு பிறந்த குழந்தைகளை நினைத்து வருந்துவதும், கணவரின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்பதும், வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துவதும், அதிகமாகப் பேசுவதுமான குணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகிறார். நோன்பு காலத்தில், பட்டினி கிடப்பதும், அதிக நேரத்தை தொழுகையில் செலவிடுவதும் மட்டும் உயர்ந்த இடத்தை தந்து விடாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் மேற்கண்ட குறைகளைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பெண்களை மரியாதையுடன் நடத்த ஆண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். ""பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஏனென்றால், அவர்களே உங்கள் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். பெண்கள் உயர்ந்த குணங்களுடன் திகழ வேண்டும், ஆண்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமென்பதை இன்றைய ரமலான் சிந்தனையாகக் கொள்வோம்.

முக்கியமான இளமைக்காலம்: நபிகள் நாயகம்(ஸல்) அவ



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 4:51 pm

ரம்ஜான் சிந்தனைகள் 224747944 ரம்ஜான் சிந்தனைகள் 224747944 ரம்ஜான் சிந்தனைகள் 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 4:53 pm

பகிருவுக்கு நன்றி ரேவதி !!!

சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:55 pm

ஜாஹீதாபானு wrote:ரம்ஜான் சிந்தனைகள் 224747944 ரம்ஜான் சிந்தனைகள் 224747944 ரம்ஜான் சிந்தனைகள் 224747944

என்ன பாஸ்டு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jul 27, 2011 5:35 pm

நல்ல பதிவு
ரம்ஜான் சிந்தனைகள் 677196



சதாசிவம்
ரம்ஜான் சிந்தனைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக