புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
5 Posts - 3%
prajai
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
2 Posts - 1%
சிவா
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
435 Posts - 47%
heezulia
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
30 Posts - 3%
prajai
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_m10இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Wed Jul 27, 2011 9:44 am

இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை

தென்னகப் பண்பாடு
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தகுடி”. தமிழ்க்குடி. இதனால் தமிழ்க குடியின் பழமையும் வீரமும் புலப்படுகின்றது. மனிதனின் தோற்றம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு பழமையானது தென்னகப்பண்பாடு. தென்னவர் வாழ்ந்த நாட்டை ‘திராவிடம்’ என்றும் அவர்களின் மொழியைத் திராவிட மொழி என்றும் வரலாறு கூறுகிறது.
பண்பாடு மிக்க அவர்கள் பேசிய மொழி தமிழ். மொழியினால் சிறப்புப் பெற்றவர்கள் தமிழர்கள். ‘உணவு தேடல்’ காரணமாக பிரிந்தவர்கள், தங்களுக்குள் தொடர்பு இன்மையால் பேசிய மொழிகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவையே இன்று திராவிட மொழிகள் என்று கூறப்படும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும்.

நன்றி: facebook

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Wed Jul 27, 2011 9:44 am

தமிழ்ப் பண்பாடு
தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழிவியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தனை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது.

தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி; தான் தோன்றிய கால் மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்கு காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

காதல்
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள்.
இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
என்று வள்ளுவரும் காதல் வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Wed Jul 27, 2011 9:45 am

வீரம்
பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன.
அக்கால தமிழரிடம் அறப்போர் முறையே அமைந்திருந்தது. இதனை நெட்டிமையார் புறப்பாடலால் அறியலாம்.
பசுக்களும், பசுவை ஒத்த பார்ப்பனர்களும், பெண்களும், நோயுடையவர்களும், புதல்வர்களை பெறாதவரும், யாம் அம்பு விடுவதற்குமுன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள், என வீரன் ஒருவன் கூறுவதிலிருந்து தமிழரின் அறப்போர் முறை விளங்கும்.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுமுன் நும் அரண்சேர்மின்”
மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

நட்பு
சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
“முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு”.
உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.
கபிலரும் பறம்பு மலைத்தலைவன் பாரியும் நட்பாயிருந்தனர். பாரியின் மகளிர் இருவரையும் பாரி இறந்தபின் கபிலரே மணமுடித்து வைக்கிறார். மேலும் கபிலர் சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கண்டு பறம்பு நாட்டின் வளம், பாரியின் சிறப்பு, அவன் வீரம், அவனைப் பிரிந்து வாடும் மக்கள் நிலையைக் கூறுகிறார். தன் வறுமையைக் கூறாது, நண்பனின் பிரிவை சேரமன்னனிடம் கூறும் நிலை அவர்கள் நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
கோப்பெருஞ்சோழன் தம் மக்களிடம் நாட்டை விட்டு மனம் நொந்து வடக்கிருந்து உயிர் துறக்க முயல்கிறான். அது கேட்டு, இதுவரை கோப்பெருஞ்சோழனை நேரில் பாராமலே நட்புக்கொண்டிருந்த புலவர் பிசிராந்தையார் தாமும் நண்பனுடன் வடக்கிருந்து உயிர்துறக்க வந்து விரும்பியவாறு உயிர் துறக்கிறார்.
“அழிவி னவை நீக்கி, ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு”
என்ற வள்ளுவரின் வாக்குப்படி தீமையை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வரும்போது உடனிருந்து அனுபவிப்பதே நட்பாகும் என்பதற்குத் தாமே சான்றாகிறார் பிசிராந்தையார்.
அதியமான் நெடுமானஞ்சியிடம் நட்பு கொண்ட ஒளவையார் தொண்டை மானிடம் சென்று அதியமானின் வீரம் வெளிப்படுமாறு வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடி நடக்க விருந்த பெரும்போரைத் தடுத்ததும் சங்க இலக்கியங்களால் அறியப்படும் செய்திகளாககும். அதியமானும் அமிழ்தினும் இனிய நெல்லிக்கனியை தானுண்ணாது ஒளவைக்குக் கொடுத்து மகிழ்ந்தான். சங்க காலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்துப் போற்றினர்.

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Wed Jul 27, 2011 9:45 am

விருந்தோம்பல்
‘விருந்து” என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
என்கிறார் திருவள்ளுவர். “அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்புதல், ஆகிய அறங்களைத் தான் செய்யாது விட்டேன்” என்று கண்ணகி வருந்திக் கூறுவதை சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.
விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
“விருந்து புறத்ததார் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”
என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.

ஈகை
கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை. திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
“வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து”
என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.

கொடை
சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, ஓரி, காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர்.
ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மை அறிய முடிகிறது.

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Wed Jul 27, 2011 9:45 am

கற்புடைமை
சங்க கால மக்களின் இல்லறம் நல்லறமாக நடந்தமை இலக்கியங்களால் அறிய முடிகிறது. பெண்கள் தற்காத்துத்தற் கொண்டாள் பேணி. சொற்காத்துச் சோர்வு இல்லாதவர்களாகக் கற்புக் கடம்பூண்டு இருந்தமை அறிய முடிகிறது. திருவள்ளுவர்
“தெய்வம் தொழாஅள் கொழுநன் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்று கூறுகிறார். காலத்தில் பெய்து காக்கும் மழைக்குச் சமமானவர்களாகக் கற்புடைய பெண்டிர் மதித்து வணங்கப்பட்டனர். ஆண்கள் போர் முதலியவற்றால் இறந்து படுதலின், ஆண் இனம் குறைந்தே இருந்தமையால் ஒரு ஆண் இரண்டு அல்லது மூன்று பெண்களை மணந்து வாழ்ந்தமை அறிய முடிகிறது.

உலக ஒருமைப்பாடு
பண்டைத் தமிழர்கள் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு, நெசவு, வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின் சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெளிநாடுகளுக்கும் சென்று தமிழர் வணிகம் செய்து சிறந்தனர். நமது பண்பாடு, நாகரிகம், மொழி யாவும் வெளிநாடுகளில் சிறக்கக் காரணம் பண்டைத் தமிழர்களே.
கணியன் பூங்குன்றனார் என்னும் புலவரின் புறப்பாடல் ஒன்றே நம் தமிழரின் உலக ஒற்றுமைக் கொள்கையை உலகுக்குப் பறைசாற்றும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
உலக மக்கள் யாவரையும் உறவாக எண்ணும் பண்டைத் தமிழரின் உள்ளம் உயர்ந்ததேயாகும்.
கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறப்பாடல் வரி ஐக்கியநாடுகள் சபை நுழைவு வாயிலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கல்லில் வடித்து பதிக்கப் பெற்றிருக்கிறது என்று எண்ணி மகிழத்தக்க

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jul 27, 2011 11:35 am

நன்றி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 27, 2011 2:06 pm

அருமையான பதிவு.ரொம்ப நன்றி சூப்பருங்க சூப்பருங்க: சூப்பருங்க: சூப்பருங்க: சூப்பருங்க: சூப்பருங்க: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை  Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக