புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
62 Posts - 40%
heezulia
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
187 Posts - 41%

177 Posts - 39%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
21 Posts - 5%
prajai
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_m10வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து

Page 1 of 2 1, 2  Next

ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Sun Jul 24, 2011 4:32 pm

அங்கதம் – மரபுகளை, பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தல்
அஞ்சனம் – கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
ஆதனம் – சொத்து
ஆரம் – மாலை
ஆலிங்கனம் – தழுவுதல்
இடாப்பு – பதிவேடு
இரண்டகம் – நம்பிக்கைத் துரோகம்
ஈடாட்டம் – உறுதி குலைதல்
ஈனம் – இழிவு, கேவலம்
உத்தரீயம் – மேலாடை
உற்பாதம் – தீய விளைவு
ஊடு – பொய்க்கோபம் கொள்ளுதல்
ஊசு – பதம் கெட்டுப்போதல்
எத்தனம் – முயற்சி
எதேஷ்டம் – தேவைக்கு அதிகம்
ஏகாலி – சலவைத் தொழிலாளி
ஏனம் – பாத்திரம்
ஐது – அடர்த்திக்குறைவு
ஐமிச்சம் – சந்தேகம்
ஒக்கிடு – பழுது பார்த்தால்
ஒழுகலாறு – பழக்க வழக்கம்
ஓந்தி – ஓணான்
ஓம்பு – பேணுதல்
ஔஷதம் – மருந்து
இனி உயிர்மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்..
கச்சு – பெண்கள் மார்பில் அணியும் துணி
கபோலம் – கன்னம்
சண்டமாருதம் – பெரும் காற்று, சூறாவளி
சதிபதி – தம்பதி
ஞாலம் – பூமி
டாம்பீகம் – ஆடம்பரம்
தசம் – பத்து
தந்துகி – மிக நுண்ணிய ரத்தக்குழாய்
நயனம்- கண்
நிகண்டு – அகராதி நூல்
பத்தாயம் – எலிப்பொறி
பரதவர் – மீனவர்
மதலை – குழந்தை
மாச்சரியம் – பகைமை
யாக்கை – உடல்
ரோகம் – நோய்
லோபி – கருமி
வயணம் – சரியான விவரம்
விகசித்தல் – மலர்தல்
வைரி – எதிரி

சூதானம் – பத்திரம்
வெஞ்சனம் – சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு – தெரு முடியும் இடம்
வெங்கப்பய – உருப்படாதவன்
சொளகு – முறம்
சோப்ளாங்கி – சோர்ந்து போனவன்
மெனா – பைத்தியம் போல் இருப்பவன்
தளை – கட்டு, கைவிலங்கு
தடாகம் – குளம்
அன்னம் – சாதம்
தொன்மை – பழமை
இலக்கம் – எண்
வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை – தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் – மாலை மயங்கிய வேளை

ஆச்சி – அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ…
அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது “அழிவில்லாமல் இரு” என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்…

நன்றி: மெயிலில் வந்தது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 4:54 pm

எதோ என்னால முடிந்தது,

சாலேகம் - ஜன்னல்

அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவப்பில் உள்ள இந்த வார்த்தைகளை கிராமங்களில் நாங்கள் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம் நண்பா
சூதானம் – பத்திரம்
வெஞ்சனம் – சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு – தெரு முடியும் இடம்
வெங்கப்பய – உருப்படாதவன்
சொளகு – முறம்
சோப்ளாங்கி – சோர்ந்து போனவன்
மெனா – பைத்தியம் போல் இருப்பவன்
தளை – கட்டு, கைவிலங்கு
தடாகம் – குளம்
அன்னம் – சாதம்
தொன்மை – பழமை
இலக்கம் – எண்
வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை – தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் – மாலை மயங்கிய வேளை

ஆச்சி – அப்பாவின் அம்மா.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 5:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Sun Jul 24, 2011 5:41 pm

சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 24, 2011 6:47 pm

அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு)
அந்திக்கு- இரவுக்கு
அங்கராக்கு - சட்டை
அட்டாரி, அட்டாலி - பரண்
அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
அப்பத்தா- தாய்வழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்படா, செவுனி திரும்புகிறாற்போலே)
அம்மாயி - அம்மாவின் அம்மா
ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்
ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
ஆயா - அப்பாவின் அம்மா
இக்கிட்டு - இடர்பாடு
இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
உப்புசம் , உக்கரம் - புழுக்கம்
ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
ஊளைமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
எச்சு - அதிகம்.
எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்
ஏகமாக - மிகுதியாக,பரவலாக
ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒடக்கான் - ஓணான்
ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி
ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
கடைகால், கடக்கால் - அடித்தளம்
கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
கடையாணி - அச்சாணி
கரடு - சிறு குன்று
கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
குக்கு - உட்கார்
கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
கொரவளை \ தொண்டை -குரல்வளை
கொழுந்தனார்- கணவரின் தம்பி
கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
சாங்கியம் - சடங்கு
சிலுவாடு - சிறு சேமிப்பு
சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
சுல்லான் (சுள்ளான்?) - கொசு
செகுனி, செவுனி - தாடை/கன்னம்
செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
தாரை - பாதை
தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
துழாவு - தேடு
திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்
நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
நீசதண்ணி- பழையசோற்றுத்தண்ணி
நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
நோன்பு (நோம்பி) - திருவிழா
பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )
பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
வட்டல் -தட்டு
புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெருக்கான் - பெருச்சாளி
பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
பொட்டாட்டம் - அமைதியாக
பொடக்காலி - புழக்கடை
பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
பொழுதோட- மாலைநேரம்
பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
கொழுந்தியாள் - கணவனின் தங்கை
மலங்காடு - மலைக்காடு
மசையன் - விவரமற்றவன்
மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
முக்கு - முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு
வெகு - அதிக
வேளாண்மை (வெள்ளாமை) - உழவு, விவசாயம்
வேசகாலம்- வெய்யில்காலம்
வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்
சீக்கு - நோய்
பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
முட்டுவழி - முதலீடு
கொழு -ஏர்மனை
நன்றி விக்கிப்பீடியா

இதில் உள்ள சில சொற்களை தவிர மற்ற அனைத்து சொற்களும் நான் பேசும் பொழுது என்னை அறியாமலே வந்து விடும் சில சமயம் இதனால் நண்பர்களின் கேலிகளுக்கு இலக்காவேன்...
உதாரணமாக கல்லூரி முடிந்தவுடன் சொல்லுவேன் சரி நாளைக்கு பாக்கலாம் நான் வூட்டுகு(வீட்டுக்கு)போறேன் என்று சொல்லி மாட்டிக்கொள்வேன்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 24, 2011 6:56 pm

வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து 224747944

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 24, 2011 10:08 pm

அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 10:26 pm

நல்லதொரு பதிவு.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jul 25, 2011 8:29 am

என் தமிழை எனக்கு அறியத்தந்தமைக்கு நன்றி

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jul 25, 2011 9:30 am

சில வார்த்தைகள் உருது, சமஸ்கிருதம் கலந்து இருக்கிறது!
எடுத்துக்காட்டாக ..

உத்தரீயம் – மேலாடைஎதேஷ்டம் – தேவைக்கு அதிகம்ஔஷதம் – மருந்துமாச்சரியம் – பகைமை

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக