புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
29 Posts - 60%
heezulia
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
194 Posts - 73%
heezulia
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
8 Posts - 3%
prajai
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
2 Posts - 1%
Barushree
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_m10வேங்கை விமர்சனம் - பாலா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேங்கை விமர்சனம் - பாலா


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 12:35 pm

ஆற்காடு வீராசாமி என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த மின்தடையால் திருமணமான அன்பர்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. சிலர் அவர் மீது உண்மையான நன்றி கொண்டு ”அச்சம்பவத்தால்” பிறந்த குழந்தைக்கு வீராசாமி எனவும், சில பீட்டர் மாமாக்கள் Bravo God என்பதை சுருக்கி Broad எனவும் பெயரிட்டு மகிழ்ந்த சம்பவங்கள் நம் செவிப்பறையையும், ரெட்டீனாவையும் தாக்குகின்றன. மொட்டைப் பையனான எனக்கு இந்த ஊரில் அது போல வியத்தகு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவ்வபோது சிற்சில லாபகரமான விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அதில் ஒன்றாக நேற்று அலுவகம் அரை நாள் விடுமுறை கண்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் காலையில் அலுவலகம் வரும்போது கண்ட போஸ்டர் நினைவுக்கு வந்தது. நல்ல, ஆறடி நீள அரிவாள் ஒன்று தனுஷை தூக்கி வைத்திருந்தது போல இருந்தது அப்போஸ்டர். இன்று அலுவலகம் விடுமுறை என்பதால்தான் வியாழன் அன்றே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் என்று பட்டாம்பூச்சி விளைவை நினைத்துக் கொண்டு, அதில் என் குருவான உலக நாயகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு யமஹா என்னும் பஞ்ச கல்யாணியை தேட்டர் நோக்கி விரட்டினேன். ரஜினிக்கு லட்சுமியைப் போல, எனக்கு பஞ்ச கல்யாணி. நான் ஆக்ஸிலேட்டரை திருகும் முறையை வைத்தே நான் தேடிப்போவது சினிமாவா, நண்பர்களா , வீடா என தெரிந்துக் கொள்ளும். அதற்கேற்ப சீறும்.

தனுஷின் மாஸ் என்னை நிலைகுலைய செய்தது. தேட்டரில் படம் ஹவுஸ் ஃபுல் இல்லை. சிலர் 180க்கு சென்றார்கள். படத்தைப் பற்றி பேசும்முன் தேவையே இல்லாத சில விஷயங்களை பேசி விடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் நண்பன் சொன்னான் “வேங்கை ஹரி படமா? சண்டைலாம் சூப்பரா இருக்கும்”. நண்பனுக்கு தெரிந்த விஷயம் கூட தெரியாத சிலர் வேங்கைக்கு “முன்பழமைத்துவ காவியம்”, “பின்நவீன பிஞ்ச செருப்பு” என விமர்சனம் எழுதலாம். நான் எந்த அடிப்படையில் இப்பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். ஹரி இப்படத்தை கான்ஸ் திரைப்படவிழாவிற்கோ, சீனாவிற்கோ அனுப்ப போவதில்லையாம். தேனியிலும், அம்பாசமுத்திரத்திலும் தானாம். அதே போல் புதுமையாக எதுவும் இல்லையாம். இது ஹரி படம். குத்துப்பாட்டுக்கும், டாட்டா சுமோவிற்கும் குத்தாளமிடும் மனநிலை கொண்டவர்களுக்கானது. அதில் ஏதும் ஏமாற்றமிருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்போம்.

ஹீரோ தனுஷ். அவர் அப்பா ராஜ்கிரன், ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் ஈகரயிலும், இண்ட்லியும், ஃபேஸ் புக்கிலும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள். ராஜ்கிரணிடம் நல்லவனாய் வாழ்வேன் என்று சத்யம் செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர்தான் வில்லன் என யூகித்தற்கெல்லம் ஷொட்டு கிடையாது. கதை மட்டும் கேளுங்கள். தனுஷ் அடங்காமல் திரிகிறார். நோ ஷொட்டு. அவர் வேலை கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்றும், ராஜ்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகாவும் அவரை வெளியூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே தனுஷின் மாமா ரியல் எஸ்டேட் அதிபர். நோ ஷொட்டு. அந்த ஊரில்தான் தனுஷ் தமன்னாவை பார்க்கிறார். காதல் வருகிறது.பாடல் வருகிறது. நோ ஷொட்டு. தனுஷை கொல்ல பிரகாஷ்ராஜ் ஆள் ஏற்பாடு செய்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வில்லன்கள் குழு அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். ஆனால் தந்தை சொல்படி தனுஷ் அடங்கி போகிறார். நோ ஷொட்டு. ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அவரின் சொத்துகளை மக்களுக்கே கிடைக்குமாறு செய்துவிடுகிறார் தனுஷ். கோவம் பீறிட்டு வருகிறது பிரகாஷ்ராஜுக்கு. நோ ஷொட்டு. இடைவேளைக்கு முன் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தனுஷ் இறங்கி அதகளம் செய்ய, தமன்னா அதைப் பார்த்து வந்த காதலை விழுங்க, விஷயம் கேள்விப்பட்டு ராஜ்கிரன் சிலபல குவாலீஸ்களோடு வர, வில்லன்கள் குழு சிதற.. இடைவேளை.. நோ ஷொட்டு. நன்றி கேபிள் சங்கர்.

இடைவேளையில் அனுஷ்கா படம் டிரெயிலர்

வேங்கை விமர்சனம் - பாலா  IMG_0464%25255B4%25255D


இப்போது பிரகாஷ்ராஜ் மந்திரி ஆகிவிடுகிறார். ராஜ்கிரனின் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து “பருப்பில் சிறந்தது முந்திரி. பதவியில் சிறந்தது மந்திரி” என பன்ச் அடிக்கிறார். ராஜ்கிரன் சிரிக்கிறார். தனுஷ் பொங்குகிறார். அவர் வீட்டிற்கே சென்று “கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் கிலோல வாங்குவாங்க. முந்திரி மட்டும் கிராம்லதான் வாங்குவாங்க” என்று எதிர் பன்ச் அடிக்கிறார். இருவரும் 30 நாட்களுக்குள் யாராவது ஒருவர் தலையை எடுப்பதாக சவால் விடுகிறார்கள். அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள். அவ்வபோது இருவரும் சீண்டி சீண்டி விளையாடுகிறார்கள். கடைசியில் தனுஷ் வெல்கிறார்/ இதற்கு நிச்சயம் நோ ஷொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.

மெட்ராஸ் –மதுரை என போர்டு போட்டி வண்டி ஓட்டுபவர் ஹரி. இவர் படத்தில் மதுரைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து திண்டிவனம், என யூகிப்பதில் அர்த்தமேயில்லை. அதனால் நான் சொன்ன கதையில் எந்த பிரச்சினையும் இல்லை. அது டெம்ப்ளேட் கதை. சண்டைக்கோழியில் இருந்து கதையை திருடும்போது ராஜ்கிரனை இலவசமாக எடுத்திருக்க வேண்டாம். அவரும் வழக்கம் போல அஷ்ட கோணலில் முகபாவனைகள் காட்டி மிளிர்கிறார். புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், வேகமான இயக்கத்தாலும் ஹரி எக்ஸ்பிரஸ் எப்போதும் வேகமாக ஊர் சேரும். வேங்கை எவ்வளவு வேகத்தில் சேர்ந்தது என்பதுதான் முக்கியம். எளிதில் சொன்னால் சாமி, சிங்கம் அளவிற்கு எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. அருள், சேவல் அளவிற்கு பேசஞ்சரும் இல்லை. 60கிமீ வேகத்தில் வேங்கை ஓடுகிறது. பிரச்சினை என்னவென்றால் சீரான வேகமில்லை. முதல் பாதியில் நிதானமாக ஓடிய படம் இடைவேளைக்கு 15 நிமிடம் முன்பு சடாரென ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது.

சார்மினர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு தெரியும். 8.10க்கு செண்ட்ரல் வர வேண்டுமென்றால் 6.55க்கே திருவொற்றியூர் வந்துவிட்டு ஆமை வேகத்தில் நகரும். அது போல க்ளைமேக்ஸை நோக்கி ஓடிய வேங்கை அங்கே தொங்கிவிட்டது. தமன்னாவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் சொருகி, அதை நிகழ்காலத்தில் தீர்க்க முனைந்து பஞ்சர் ஆகிறது. மீண்டும் வேகமெடுக்கும்போது இன்னுமா தாம்பரம் வரலை என்கிறான் பயணி. எனக்கு படம் பைசா வசூல். நல்ல டைம் பாஸ் என்றுதான் சொல்வேன்.

ஹரியின் ஆளுமை எனக்கு பிடிக்கிறது. சினிமா ஒரு கலை, வலை என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் செய்யும் வேலையே ஒரு கலைதான். அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அல்லது தொழில்நுட்பம் மிளிரும். ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம்? கிளையண்ட் தரும் பிரஷரால் சரியான நேரத்தில் முடித்தால் போதுமென்போமா? அல்லது அதில் 100% வரும் வரை பொறுத்து தருவோமா? எந்த ஒரு வடிவமும் வியாபரமயமாகி வரும் காலம் இது. விளையாட்டு, கலை, எழுத்து,தொழில்நுட்பம் என எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் சினிமாவும். ஹரி அதை தொழிலாக பார்க்கிறார். அதற்கு எந்த பங்கமும் அவர் வைப்பதில்லை. சரியான திட்டமிடல், அயராத உழைப்பு, வேகமான செயல்பாடுகள் என அழகாக வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், நாயகன் என யார் மாறினாலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹரியின் முத்திரை ஆழமாக இருக்கிறது. இந்த ஆளுமையைத்தான் நான் ரசிப்பதாக சொல்கிறேன். இதை பலரும் ஆமோதிக்க மறுக்கலாம். ஆனால் சினிமாவில் ஒரு பகுதி வணிக சினிமாவாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். எல்லா சினிமாவும் கலை நோக்கோடுதான் எடுக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

பெரிதாக படம் பற்றி நான் எழுதவில்லை. காரனம் திரைப்படம் பற்றிய என் எல்லாப் பதிவுகளுமே நான் சினிமா பார்த்த அனுபவம் குறித்துதானே ஒழிய, திரைப்பட விமர்சனமில்லை. இறுதியாக வேங்கை சிங்கத்திடமும், சாமியிடமும் தோற்கும். அருளிடமும், சேவலிடமும் ஜெயிக்கும். தாமிரபரணியோடும், வேலிடமும் பரிசை பகிர்ந்துக் கொள்ளும் என்று சொல்லி முடிக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.






ஈகரை தமிழ் களஞ்சியம் வேங்கை விமர்சனம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 24, 2011 1:52 pm

படம் சூப்பரோ,மொக்கையோ தெரியவில்லை ஆனால் உங்கள் விமர்சனம் அருமை அண்ணா... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 2:14 pm

ரா.ரமேஷ்குமார் wrote:படம் சூப்பரோ,மொக்கையோ தெரியவில்லை ஆனால் உங்கள் விமர்சனம் அருமை அண்ணா... சூப்பருங்க
நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் வேங்கை விமர்சனம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 24, 2011 2:31 pm

அது எப்படி படத்தில் ஹீரோ மட்டும் புத்திசாலி மத்தவங்க எல்லாம் முட்டாளா..!
வழக்கம் போல் உங்கள் உங்கள் விமர்சனம் ..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 2:37 pm

அருண் wrote:அது எப்படி படத்தில் ஹீரோ மட்டும் புத்திசாலி மத்தவங்க எல்லாம் முட்டாளா..!
வழக்கம் போல் உங்கள் உங்கள் விமர்சனம் ..! சூப்பருங்க

இது ஹரி படம் அதுனால அப்படித்தான் நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் வேங்கை விமர்சனம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 2:46 pm

படம் சுமார் ரகம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேங்கை விமர்சனம் - பாலா  Image010ycm
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 24, 2011 2:48 pm

அண்ணா விமர்சனம் வேங்கை விமர்சனம் - பாலா  224747944 வேங்கை விமர்சனம் - பாலா  224747944 வேங்கை விமர்சனம் - பாலா  224747944



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வேங்கை விமர்சனம் - பாலா  Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 5:10 pm

kitcha wrote:படம் சுமார் ரகம்

மீண்டும் விமர்சனத்தை படிக்கவும் மகிழ்ச்சி புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் வேங்கை விமர்சனம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 5:10 pm

ந.கார்த்தி wrote:அண்ணா விமர்சனம் வேங்கை விமர்சனம் - பாலா  224747944 வேங்கை விமர்சனம் - பாலா  224747944 வேங்கை விமர்சனம் - பாலா  224747944

நன்றி கார்த்தி அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் வேங்கை விமர்சனம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 5:26 pm

balakarthik wrote:
kitcha wrote:படம் சுமார் ரகம்

மீண்டும் விமர்சனத்தை படிக்கவும் மகிழ்ச்சி புன்னகை

திரைப்படத்தை ஏற்கனேவே பார்த்தாச்சு .....பார்த்தாச்சு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேங்கை விமர்சனம் - பாலா  Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக