ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை ... "ஜெ"வின் கண்டுபிடிப்பு ??

Go down

தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை ... "ஜெ"வின் கண்டுபிடிப்பு ?? Empty தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை ... "ஜெ"வின் கண்டுபிடிப்பு ??

Post by ந.கார்த்தி Sun Jul 24, 2011 7:47 am

முதலில் சமச்சீர் கல்விக்கு சிறப்பான அமலாக்கம் என்ற
பெயரில் ஒரு ஆப்பு. கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்தைவிட தமிழகம் முழுவதும்
தனியார் பள்ளிகள் கோடிகோடியாய் கொள்ளையடித்து கொண்டிருகின்றனர்.
பெற்றோர்கள் கதறிக்கொண்டிருக்கின்றனர். இந்த கொடுமையின் உச்சமாக கோவையில்
ஒரு தாய் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். ஆனால் தங்களிடம் புகார் வரவில்லை
என தமிழக கல்வி அமைச்சர் சி.வி .சண்முகம் அறிக்கைவிடுகிறார். அதாவது
ஆளும் கட்சியினருக்கு இந்த கல்விக்கொள்ளை தெரியாது. என்று இதற்கு அர்த்தம்.

இப்போது தமிழகத்தில் தரிசு நிலங்களே இல்லை என இரண்டாவது ஆப்பு.
தமிழகத்தில் ஐம்பது லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளதாக கடந்த தேர்த்லின்
போது கருணானிதி கூறி “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலமற்ற மக்களுக்கு
இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டும் என்றார்” ஆட்சியின் இறுதி நாட்கள்
வரை அதை அவர் செய்யவிலை. கேட்டால் அம்பூட்டு நிலம் இல்லை என்றார்.
அப்படியெனில் தேர்தலின் போது சொன்னது பொய் என்பதை ஒப்புக்கொள்கிறாரா? என்ற
கேள்வி எழுவது இயல்பானது. மார்க்சிஸ்டுகள் மக்கள் மன்றதிலும்,
சட்டமன்றதிலும் போராட்டம் நடத்திய போது திமுக அரசு மேற்குவங்கத்தைவிட
அதிகம் நிலத்தை மக்களுக்கு வழங்கியதாக புளுகினார்.

மேற்குவங்கத்தில் 1977 ஆம் ஆண்டு ஆட்சிப்
பொறுப்பேற்ற இடது முன்னணி அரசு இதுவரையில் நிலச் சுவான்தாரர்களிடமிருந்த
சுமார் 12 லட்சம் ஏக்கர் (விவசாய விளை நிலத்தை) உபரி நிலத்தை எடுத்து
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக
நாட்டின் விவசாய நிலப்பரப்பில் 3 சதவிகிதம் மட்டுமே மேற்கு வங்கத்தில்
உள்ளது. ஆனால், தேசிய அளவில் மறுவிநியோகம் செய்யப்பட்ட உபரி நிலத்தில்,
மேற்கு வங்கத்தின் பங்கு மட்டும் 22 சதவிகிதம் ஆகும். சுமார் 30 லட்சம்
நிலமற்ற ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்துள்ளனர். அதாவது தேசிய அளவில்
நிலவிநியோகத்தால் பலன் பெற்றவர்களில் 55 சதவிகிதம் பேர் மேற்குவங்கத்தைச்
சேர்ந்தவர்கள். இவ்வாறு பயனடைந்தவர்களில் 57 சதவிகிதத்தினர் தாழ்த்தப்பட்ட-
பழங்குடியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலச் சீர்திருத்த சட்டத்தை, முறையாக செயல்படுத்தி உபரி நிலத்தை எடுத்து
மறுவிநியோகம் செய்ததால், மேற் குவங்கத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பு 70.7
சதவிகிதம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கையில் உள்ளது. மேலும் 15
லட்சம் குத்தகை சாகுபடிதாரர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சாகுபடி
செய்யும் 11 லட்சம் ஏக்கர் நிலத்தில் அவர்களது சாகுபடி உரிமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட-
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பாராட்டுக்குறியது மட்டுமல்ல அந்த
அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடு அது.



ஆனால் தமிழக மாநில அரசு ஆவணங்களில் உள்ள தகவலின்படி உச்சவரம்பு மூலம்
காங்கிரஸ் ஆட்சியில் உபரி நிலம் விநியோகம் 21,304 ஏக்கர். திமுக ஆட்சிக்
காலத்தில் உபரி நிலம் விநியோகம் 1,86,903 ஏக்கர். மொத்த உபரி நிலம்
விநியோகம் 2,08,207 ஏக்கர். 28.2.2009 வரை 6 கட்டத்தில் மாநில அரசு தரிசு
நிலம் விநியோகித்தது 2,10,427 ஏக்கர். ஆக தரிசு நில விநியோகத்தையும்
சேர்த்தால் தமிழகத்தில் நில விநியோகம் 4,18,634 ஏக்கர் தான்.

சரி கலைஞர் இப்படி சொன்னாரே.. உண்மையில் கொஞ்ச்சம் நிலங்கள் மட்டுமே அரசு
புள்ளி விபரப்படி கொடுக்கப்பட்டுள்ளது எனவே, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாவது
அவருக்கு வாக்களித்து அறுதிப் பெரும்பாண்மை கொடுத்த ஏழை மக்களுக்கு நிலம்
கொடுப்பார் என பார்த்தால்.. ஒரே போடாக போட்டார் “தமிழ்நாட்டில்
ஏற்கெனவே இருந்த தரிசு நிலம் முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு எம்ஜிஆர் ஆட்சி
காலத்திலும், எனது முந்தைய ஆட்சி காலத்திலும் வழங்கப் பட்டுவிட்டன.
நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க தரிசு நிலம் இல்லை.”


அதுசரி தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை
கொள்ளையடித்து அவர்களிடம் ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே எஞ்சி நிற்கும் போது,
அதை மிட்டுக்கொடுங்கள் என்றால் என்ன சொல்லுவார் என நினைத்தால் பயமாகத்தான்
இருக்கிறது. "அவர்கள் ஏமார்ந்தால் அரசு என்ன செய்யும் என சொல்லலாம்?"

அது போகட்டும் .. கிழே உள்ள விபரங்கள் அம்மையாருக்காக .. இன்னும் நிறைய விபரங்கள் இருக்கிறது. அவைகளை பின்பு பார்க்கலாம்.

(தமிழக அரசின் 2005-06 வேளாண்துறை கொள்கை விளக்க குறிப்பு - சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பக்கம் 7)

சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலம் 3.74 லட்சம் ஹெக்டேர், மேய்ச்சல் நிலங்கள்
1.14 லட்சம் ஹெக்டேர், நடப்பு தரிசு நிலங்கள் 6.92 லட்சம் ஹெக்டேர், இதர
தரிசு நிலங்கள் 17.04 லட்சம் ஹெக்டேர், மொத்தம் 28.84 லட்சம் ஹெக்டேர்
நிலங்கள் உள்ளது.

இதில் ஆக்ரமிப்பாளர்கள் வசம் உள்ள நிலங்களை பலமுறை பட்டியல் போட்டு சொல்லியும் தமிழக அரசு அதை மீட்க்க தயாரில்லை. உதாரணத்திற்கு..

திண்டுக்கல் மாவட்டம், கொடைகானல் வட்டம், பூண்டி, மன்னவானூர், நாமக்கல்,
பூம்பாறை, வில்பட்டி, கொடைகானல், வடகழஞ்சி, அருகில் ஆகிய கிராமங்களில்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பினாமி பட்டாக்கள் பெற்றுள்ள விபரம்.

கே.ஏ.சி குரியன் ஆப்பிரகாம் குடும்பம் சுமார் 10.000 ஏக்கர், மேக்ஸ் எர்த்
(டி.வி.எஸ் சுசுகி) 1800 ஏக்கர். சூரியா பார்ம் சுமார் 1500 ஏக்கர், சீலா
பிரியா சுமார் 800 ஏக்கர், கோடை கிரிஸ் சுமார் 300 ஏக்கர், வி.ஜி.பி சுமார்
400 ஏக்கர், எம்.ஆர்.ஆர் கம்பெனி சுமார் 1500 ஏக்கர், திண்டுக்கல் சுரேஷ்
குமா சுமார் 700 ஏக்கர், வில் சோல் கம்பெனி சுமார் 1000 ஏக்கர், கொடைகானல்
ஜான் சுமார் 500 ஏக்கர், விஸ்கோஸ் கம்பெனி சுமார் 1000 ஏக்கர், பங்கூர்
பால்ராஜ் சுமார் 500 ஏக்கர், ரோமன் கத்தோலிக் சுமார் 1000 ஏக்கர்.

கிருஷ்ணகிரி வட்டம் பின்னல் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 300 ஏக்கர்
நிலத்தை பினாமி கிரயங்கள் மூலம் ஏழை தலித், பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமிய
மக்களிடமிருந்து அபகரித்து தற்போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர்
முனிவெங்கடப்பன் வசம் உள்ளது.

தூத்துகுடி மாவட்டம், திருவைகுண்டம் தாலுக்கா செட்டி குளம், அரசர் குளம்,
சேர குளம், வல்ல குளம், இள்ளர் குளம், கால்வாய் உள்ளிட்ட பல கிராமங்களில்
190 விவசாயிகளுக்கு சொந்தமான 1080 ஏக்கர் நிலம் மோசடி கிரயபதிவு மூலம்
ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவநத்தின் ஆக்ரமிப்பில் உள்ளது. இந்த
மோசடிக்கு பத்திர பதிவு கட்டணத்துக்கு சலுகை வேறு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை, ஆரம்பூண்டி கிராமத்தில் 800 ஏக்கர்
நிலம் சேலம் மாவட்டத்தை சார்ந்த வினோத் கந்தையா என்பவரது ஆக்ரமிப்பில்
உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பெரியம்மாபட்டி பகுதியில் உபரி நிலமாக
அறிவிக்கப்பட்டு பல்லாண்டுகளுக்கு பின்னரும் சுமார் 5000 ஏக்கர்
கிழ்கண்டவர்களின் ஆக்ரமிப்பில் உள்ளது. குமாரசாமி எக்ஸ் எம்.பி 100 ஏக்கர்,
பழனிசாமி கவுண்டர் (மறிச்சலம்பு) 100 ஏக்கர், ம.செந்தில் கவுண்டர்
(பொள்ளாச்சி) 150 ஏக்கர், துரை சிங், (கோவை) 150 ஏக்கர், சுரேஷ் குமார்
(தெம்பட்டி), சுதர்சனம் (திருப்பூர்) 100 ஏக்கர், சண்முகம் (நிலக்கோட்டை),
தங்கவேல் (பழனி), செந்தில் (தும்மலம்பட்டி), திருமலசாமி ரெவின்யூ
இன்ஸ்பெக்டர் 100 ஏக்கர், மங்கை சில்க்ஸ் (பழனி) 100 ஏக்கர், துரையன்
(சண்முகம்பாறை) 50 ஏக்கர், மகாதேவன் (நெய்சரப்பட்டி), ஜெயபால் முன்னால்
கல்லூரி முதல்வர் 170 ஏக்கர், நித்தியானந்தம் (எல்லம நாயக்கன் பட்டி) 50
ஏக்கர், பி.வி செபஸ்டியன் குருப் (கேரளா) 300 ஏக்கர், எம்.சின்னசாமி எக்ஸ்
எம்.எல்.ஏ 70 ஏக்கர், வி.முத்துசாமி (பெருமாள் கொயில் மேடு) 70 ஏக்கர்.

திருவிடை மருதூர் வட்டம் - சிக்கல் நாயக்கன் பட்டி கிராமத்தில் 1993 ஆம்
ஆண்டு உபரி நிலம் 110 ஏக்கர் நிலமற்ற 94 பயனாளிகளுக்கு பட்டா
வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலம் சட்டையப்பிள்ளை அறக்கட்டளை
உரிமையாளர்கள் வசமே உள்ளது. பட்டா பெற்றவர்கள நிலத்தை அனுபவிக்க
முடியவில்லை.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி பகுதியில் 20க்கு மேற்பட்ட
கிராமங்களில் 10.000 ஏக்கர் நிலம் நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே
பொலியாக கிரய பத்திர பதிவுகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 2
கோடியே 98 லட்சம் செலவில் 281 பத்திர பதிவுகள் மூலம் 2992 ஏக்கர் நிலம்
புரோக்கர்கள் மூலம் வேறு மாநில பிரமுகருக்கு விற்கப்பட்டுள்ளது
கண்டுபிடிக்கப்பட்டுள்லதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதே போன்று
மோசடியான பத்திர பதிவுகள் மூலம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுமார்
3000 ஏக்கர் நிலம் அதே போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல நிலங்கள் வெளி
மாநில ஆட்களுக்கு விற்க்கப்பட்டது.

ஆகவே தமிழகத்தில் தரிசு நிலம் இல்லை என்பது????????
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை ... "ஜெ"வின் கண்டுபிடிப்பு ?? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» 'மோனலிசா'வின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு...!
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி
» கேரள ஒற்றுமை தமிழகத்தில் இல்லை:வைகோ
»  தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum