ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்!

Go down

மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்! Empty மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்!

Post by mgopalak Wed Sep 16, 2009 2:58 pm

மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்! Raghul

"ராகுல் கிளப்பிவிட்டுப் போயிருப்பது புய லையா, புழுதியையா?' -இதுதான் தமிழக அரசியலின் பரபர விவாதம். இளைஞர் காங்கிரசைப் பலப்படுத்து வதற்காக 3 நாள் விசிட்டாக தமிழகம் வந்த ராகுலின் பயணத்தின் நோக்கம், தமிழகத்தில் காங்கிரசை வலுப் படுத்தி, திராவிடக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக் குக்கொண்டு வர வேண்டும் என்பதுதான். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில், ஆட்சிக்கனவுடன் ராகுல் மேற்கொண்ட பயணமும் இந்தப் பயணத்தின்போது, கூட்டணித் தலைவரான கலைஞரை ராகுல் சந்திக்காததும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக அலசப்படுகின்றன.

தமிழக காங்கிரசாரின் ஏற்பாடுகளில் அதிருப்தி

"காங்கிரஸ் இளைஞர்கள் சந்திப்பு' என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் தி.மு.க. இளைஞரணி, அ.தி.மு.க. இளைஞர் பாசறை ஆகியவற்றிலிருந்து ஆட்களை அழைத்து வந்து கூட்டம் காட்டிய தகவல்கள் ராகுலை எட்டி யிருக்கிறது. அதுபோல, இளம் விவசாயிகள் என தஞ்சையில் அழைத்துவரப் பட்டவர்களில் 30% பேருக்குமேல் இளைஞர்கள் இல்லை என்பதும் ராகுலை அப்செட்டாக்கியுள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் ராகுல் பேசும்போது, ""தமிழ்நாடு போல கட்சியை பலவீனமாக்கியிருக்கும் நிர்வாகிகள் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. பயண ஏற்பாடுகளை அவர்கள் சரிவர செய்யாவிட்டாலும் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் எனக்கு கொடுத்த வரவேற்பு மனநிறைவு தருகிறது. விருதுநகரில் 17 டாக்டர்கள் இளைஞர் காங் கிரசில் சேர்ந்திருக்கிறார்கள். 100-க்கும் அதிக மான இன்ஜினியர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர்களை வைத்து தான் மாநிலத்தில் கட்சியை வளர்க்க வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார். பணம், சிபாரிசு, வாரிசு இவைகளுக்கு இடம்கொடுக்காமல் தகுதியின் அடிப் படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப் படவேண்டும் என்பது ராகுலின் திட்டம். டிசம்பர் அல்லது ஜனவரியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைமை யிலும் மாற்றம் ஏற்படும் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

ஆட்சியில் பங்கா? தனி ஆட்சியா?
மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்! Raghul1
தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ராகுல் நடத் திய ஆலோசனையின்போது, ""மத்தியில் நம் தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றிருப்பதுபோல, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில் நமக்கு பங்கு வேண் டும்'' என்ற குரல் பலமாக ஒலித்தது. அதற்கு ராகுல், ""ஏன் நாம் பங்கு கேட்க வேண்டும்? நாமே ஆட்சியமைக்கும் வகையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். இப்போது தி.மு.க. அரசில் பங் கேற்றால் அவர்கள் செய்யும் தப்பு களுக்கெல்லாம் மக்களிடம் நாம் பொறுப் பாளியாக வேண்டும்'' என்றிருக்கிறார் ராகுல். அப்படிப் பார்த்தால், "மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க. மந்திரிகள் செய்யும் தவறுகளுக் கும் நாம் பொறுப்பாளியாக வேண்டுமே' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கேட்க... ""நம் கட்சிக்குத் தேவை க்ளீன் இமேஜ். அதை மெயின்டெய்ன் பண்ணி, நாம் பலம் பெறுவோம்'' என்று ராகுல் சொல்லியிருக் கிறார்.

தி.மு.க. மத்திய அமைச்சர் களின் செயல்பாடுகளை கண் காணிப்பதற்கு டீம் நியமித் திருக்கும் ராகுல், 2011 சட்ட மன்றத் தேர்தல் நெருங்கும்போது அவர்கள் தரப்பு ஊழல்களை வெளியிட்டு, "காங்கிரஸ் பரிசுத்த மான கட்சி' என்ற இமேஜுடன் தேர்தல் களத்தை எதிர்கொள்ளத் திட்டம் வகுத்திருக் கிறார் என்றும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அத்துடன், தமிழக காங் கிரஸ் தலைமைக்கும் மிஸ்டர் க்ளீன் இமேஜ் வேண்டும் என்பதால் ஜி.கே.வாசன் அல்லது ப.சிதம்பரம் தலைவராக்கப்படலாம் என் கிறார்கள். விஜயகாந்த்துடன் கூட்டணி அமைக்க விரும்பும் காங்கிரசாரோ, தங்கள் கட்சியின் தலைமையில் அணி அமைத்தால் விஜயகாந்த் வருவாரா என்ற குழப்பத்தில் உள்ளனர். ஃபிஃப்டி ஃபிஃப்டி ஷேருடன் அவரை உள்ளே கொண்டுவரவேண்டும் என்பது இவர்களின் விருப்பம்.

கலைஞரைத் தவிர்த்த ராகுல்

""நான் இளைஞர் காங்கிரசை பலப் படுத்த வந்திருக்கிறேன். இது சாதாரணமான விசிட்தான். அதனால்தான் கலைஞரை சந்திக்கவில்லை. அவரை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். அவர் மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும் மாநிலத்திலும் வலுவாக உள் ளது'' என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோதும், கலைஞருடனான ஒரு ஃபோட்டோ செஷனுக்கு காங்கிரஸ் தலைவர் கள் சிலரே ஏற்பாடு செய்தபோது அதனைப் பிடிவாதமாகத் தவிர்த்திருக்கிறார் ராகுல்.
மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்! Raghul2
இதற்கான காரணத்தை பத்திரிகை அதிபர் களுடனான சந்திப்பின்போது ஆஃப் த ரெகார்டாக வெளிப்படுத்தியிருக்கி றார் ராகுல்.

""42 வருடத்திற்குப்பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற கனவுடன் வந்திருக் கிறேன். புதிய தலைமுறை இளைஞர்கள் ஆர்வமாக வரு வதைப் பார்க்கிறேன். அவர்கள் ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். இந்த நிலையில், நானும் வழக்கமான காங் கிரசாரைப்போல தமிழக முதல்வரை சந்தித்தால் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிடும். கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்கிற என் நோக்கமும் கெட்டுவிடும், அதனால் தான் சந்திக்கவில்லை'' என்றிருக் கிறார்.

தி.மு.க.வின் பார்வை

ராகுல் விசிட்டின் முதல்நாளில் தி.மு.க. தரப்பு இதை சாதாரணப் பயணமாகவே பார்த்தது. ஆனால், இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் ராகுல் சென்னையில் இருந்தும்கூட கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்றதும் தி.மு.க. சீனியர்களிடமிருந்து அதிருப்தி வெளிப்படத் தொடங்கிவிட்டது. "கலைஞரை சந்திக்க வலியுறுத்தினால் டூர் புரோகிராமை கேன்சல் செய்துவிட்டு டெல்லிக்குத் திரும்பிடு வேன்' என்று அவர் காங்கிரசாரிடம் சொன்ன தகவலையறிந்ததும் சீனியர்கள் சிலர் கோபமடைந்துள் ளனர். தி.மு.க. தரப்பு அப்செட் டாகியிருப்பது ஐ.பி மூலம் காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவிக்கப்பட, மகனை தொடர்பு கொண்டு அட்வைஸ் செய்திருக்கிறார் சோனியா. அதன் பிறகே, செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது கலைஞரைப் புகழும் வார்த்தைகளை வெளிப்படுத் தினார் ராகுல். தி.மு.க. தலைமையைப் பொறுத்தவரை, தங்கள் கட்சியின் இளைஞர் வாக்குவங்கியை பலப்படுத்தும் பணியைத் தீவிரமாக்கும் திட்டங் களுக்குத் தயாராகிவிட்டது. 2007 டிசம்பரில் நெல்லை யில் நடந்த இளைஞரணி மாநாட்டில் தமிழக இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல தீர்மானங்கள் போடப் பட்டன. அந்த தீர்மானங்களை தூசு தட்டத் தொடங்கி விட்டது அறிவாலயம். கனிமொழி முன் னின்று நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களை பல மாவட்டங்களுக்கும் விரிவாக்குவதுடன், இதனை கட்சிக்குப் பலம் சேர்க்கும்விதமாக மாற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து திரும்பும் ஸ்டா லின், தமிழகம் தழுவிய அளவில் வேகம் காட்டுவார் என்கிறது தி.மு.க. தரப்பு.

அ.தி.மு.க. கோணம்

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என காங்கிரசை ராகுல் முன்னிறுத்த நினைப்பது தங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என நினைக்கிறது அ.தி.மு.க. நேரு குடும்பத்தினர் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அபிமானம், ராகுல் விசிட்டில் ஒர்க் அவுட் ஆனால் அது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் பாதிப்பை உண்டாக்கும் என்கிற சீனியர் ர.ர.க்கள், 1989 தேர்தலுக்காக தமிழகத்தில் ராஜீவ் மேற் கொண்ட பயணங்களால் அ.தி.மு.க. வாக்கு கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டது என்கின் றனர். இப்போதும் கூட, இளைஞர் காங்கிரசுக் கான உறுப்பினர் படிவத்தில் உள்ள பல கேள்விகள், அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கான விண்ணப்பத் தைப் போலவே இருப்பதால், ராகுலின் திட்டங்களை தங்களுக்கு எதிரானதாகப் பார்க்கிறது அ.தி.மு.க. அதற்கு ஈடுகொடுப்பதற் கான ஆலோசனைகள் தொடங்கியுள்ளதாம்.

தனது விசிட்டின் மூலம் தமிழ்நாடு காங்கிரசின் கையிருப்பு என்ன என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டு டெல்லி சென்றிருக்கிறார் ராகுல். "பலவீனமாக இருக்கும் தமிழக காங்கிரசை எந்த வகையில் பலப்படுத்த முடியும்' என தனது ஆலோச னைக் குழுவிடம் ராகுல் ஆலோசிக்கத் தொடங்கியுள்ள நிலையில், "ராகுலின் விசிட்டால் தங்களுக்கு எந்த பாதிப்பும் உருவாகிவிடக்கூடாது' என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கின்றன இரு திராவிடக் கட்சிகளும்.

-இளையசெல்வன், கார்த்திகைச்செல்வன்

மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்! Raghulbox

ராகுலை சந்திக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களும் இளைஞர்களும், இவர் வித்தியாசமான அரசியல்வாதியாக இருக்கிறார். எளிமையாகப் பழகுகிறார் எனப் புகழ்கின்றனர். ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்க முடிகிறது என்பது அவர்களுக்குப் புது அனுபவமாக இருந் திருக்கிறது.

மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்! Raghul3
வேலூர் சி.எம்.சி.யில் மருத்துவ மாணவர்களுடன் நடந்த சந்திப்பின் போது, "இன்னமும் இடஒதுக்கீடு தேவையா' என ஒரு மாணவர் கேட்க, "இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி கல்லூரிகள் இல்லை. அதிக கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, எல்லோருக்கும் இடம் கிடைத்தால் இடஒதுக்கீடே தேவையில்லை' என்றார் ராகுல். இடஒதுக் கீட்டின் பின்னணி தெரியாமல் பேசுகிறாரே என மாணவர்களிடம் முணு முணுப்பு கிளம்பியது.


அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் சந்திப் பின்போது ஒரு மாணவி, "ஐ.டி துறைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விவசாயத்திற்கு எந்த ஆதரவுமில்லை. நாளெல்லாம் பாடுபடும் விவசாயியைவிட ஐ.டி.துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 5 மடங்கு அதிக வருமானம் கிடைக்கிறது' என்றார்.


தஞ்சையில் இளம் விவசாயிகளை சந்தித்தார் ராகுல். காவிரி பிரச்சினை பற்றி ஏதாவது பேசுவார் என விவசாயிகள் எதிர்பார்க்க, கட்சி வளர்ச்சி பற்றி பேசிவிட்டுச் சென்றதில் விவசாயிகளுக்கு ஏமாற்றம்.


சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில், "நதிகளை இணைப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ' என்று ராகுல் தெரிவிக்க, "தமிழக முதல்வர் உள்பட பலரும் நதிநீர் இணைப்பை வலியுறுத் துகிறார்களே' என நிருபர்கள் மடக்கினர். "இது என் தனிப்பட்ட கருத்து. மாநில அளவில் இணைக்கலாம். தேசிய அள வில் இணைக்கக்கூடாது' என சமாளித் தார் ராகுல். இலங்கைப் பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக் கும்போது பதற்றம் தெரிந்தது.


திருக்கோவிலூரில் ராகுலின் விசிட் நேரம் ஒரு மணி நேரம் மட்டும் தான். பாதுகாப்புக்காக அப்பகுதியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை விடப்பட்டது.


பயண வழியில் மக்களோ, மாண வர்களோ காத்திருந்தால் காரைவிட்டு இறங்கி அவர்களிடம் நெருங்குவது ராகுலின் வழக்கமாக இருந்தது. ஈரோட் டில் சாரதா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி மாணவிகள், ராகுல் அண்ணா என்றபடி அவரிடம் ஓடினர். ராகுலைச் சுற்றியிருந்த பயில் வான் பாதுகாவலர் கள் அந்த மாணவி களைத் தடுக்க, ராகுல் தனது பாதுகாவலர்களைக் கடிந்துவிட்டு, மாணவிகளிடம் மகிழ்ச்சியோடு பேசினார். கோவை காந்திபுரம் ஜெயில் மைதானத்தில் ராகுல் வருகையை யொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களில் வாசன் பேனர்களை பிரபு தரப்பு கிழித்தெறிய அவர்களைப் புரட்டி எடுத்தது வாசன் தரப்பு.


ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களும், "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல உதவிய சோனியா மகனே...தமிழகத்தை விட்டு வெளியேறு' என கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்து கைதாயினர்.


கோவை பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் திடீர் மாரடைப்பால் எக்ஸ் எம்.பி. டெலிபோன் கந்தசாமி சரிந்தார். அவசரமாக அவரை ஜி.ஹெச் கொண்டு சென்றபோதும் காப்பாற்ற முடியவில்லை. பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுலிடம் இத்தகவலை காங்கிரசார் சொல்ல, ஜி.ஹெச்சுக்குப் போய் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார் ராகுல்.




avatar
mgopalak
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum