புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
61 Posts - 80%
heezulia
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
397 Posts - 79%
heezulia
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
8 Posts - 2%
prajai
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_m10புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே?


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 21, 2011 11:59 pm

என்ன இது? புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? என்று தலைப்பிட்டு இருக்கிறதே? யார் பொட்டு? என்று நீங்கள் எல்லாம் சிந்தையை கசக்கி பிழியும் முன்பு சின்ன பிளாஷ்பேக்.
8.8.2010. அதாவது சரியாக ஒரு வருடத்துக்கு முன்பாக, தமிழ்நாடே ‘பொட்டு’ என்ற வார்த்தையால் கிலுகிலுத்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் நாளிதழ்கள், வார இதழ்கள், டிவி மீடியாக்கள் ஆகிய பத்திரிகை சாம்ராஜ்யமே, இனி நாம் பத்திரிகை தொழிலை நடத்தலாமா, வேண்டாமா என்ற பீதிக்குள் உறைந்தது

பத்திரிகைத் துறை மட்டுமா?

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் 210 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 800 காவல்துறையினரும், இன்று முதல் நாம் வேலை செய்யலாமா…. இல்லை நம்மை சும்மா உட்கார வைத்து அரசாங்கம் சோறு போடுமா என்று யோசிக்கத் தொடங்கியது?

காவல்துறை மட்டுமா?

தமிழ்நாட்டின் ராஜாதி ராஜ… ராஜ கம்பீர.. ராஜ குலோத்துங்க… பத்திரிகா தர்மத்தை காப்பதற்கே பிறந்த திருக்குவளையின் கோமகன் கலைஞர் கருணாநிதியும், இனி முதல்வர் பதவி நம்மிடம் இருக்குமா? இல்லை அதையும் அவரிடமே கொடுத்துவிடலாமா என்று தனது சகாக்களிடம் ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

அட… என்னங்க… சும்மா அறுக்காதீங்க. யாரு.. என்னன்னு சட்புட்டுன்னு விஷயத்துக்கு வராம, இத்தனை பில்டப் கொடுக்க…. அந்த பொட்டு யார்? லேடீஸ் நெத்தியில வைச்சிக்கிற பொட்டுக்கு இத்தனை பில்டப்பா… என்று நீங்கள் சத்தம் போட்டால்… அது தவறு!

அந்த ’பொட்டு’ வேறு யாருமில்லை. தி.மு.க.வின் தூண்களில் ஒன்றாக கருதப்படும் ‘பொட்டு’ சுரேஷ். மதுரையைச்2 சேர்ந்த இவரது இயற்பெயர் சுரேஷ்பாபு. தி.மு.க.வில் உறுப்பினராக இருந்த இவர், முதலில் தஞ்சமடைந்த இடம் எது தெரியுமா? மதுரை மண்டல மன்னர் அழகிரியின் எதிர் துருவமாக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனிடம் தான்.

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் ஜமீன் பரம்பரை. கட்சிக்கும் அவருக்கும் பல காத தூரம். நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜனின் மகன் என்பதாலும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் பரம்பரை தர்மகத்தாவுமான பழனிவேல்ராஜனுக்கு மதுரைக்குள் ஒரு மரியாதை இருந்தது. அந்த மரியாதையுடன் வாழ்ந்து வந்த அவர், மாலையில் டென்னிஸ் ஆடுவார். அதன் பின்னர், சீட்டு ஆடுவார். அவருடன் சீட்டு ஆட வந்த கும்பலில் சுரேஷ்பாபுவும் அடக்கம்.

ஒரு முறை, சீட்டு ஆட பழனிவேல்ராஜன் வீட்டில் தயாராக இருந்தார். “யோவ்… ஒரு கை குறையுது… அந்த சுரேஷை போய் கூட்டிக்கிட்டு வாங்க’ என்று ஜமீன் உத்தரவு போட… அங்கே இருந்த உடன்பிறப்புகள் ஓடிச் சென்று சுரேஷை கூட்டிக்கிட்டு வந்தார்கள்.

”அட.. நான் இந்த சுரேஷை சொல்லலை… நெத்தியில பெரிசா பொட்டு வைச்சிருப்பானே… அந்த பையனை சொன்னேன். அவனை போய் கூட்டிக்கிட்டு வாங்க…” என்று ஜமீன் சொல்ல… பொட்டு வைத்த (கருப்பு) நிலாவை அழைத்து வந்தார்கள்.

அன்று முதல் சுரேஷ்பாபு… ’பொட்டு’ சுரேஷ் என்று செல்லமாக பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டார். இதுதான் அவருக்கு பொட்டு பட்டத்துக்கான காதை. ஜமீன் பழனிவேல்ராஜன், 2006ம் ஆண்டு ஆட்சி அமைந்த ஒரு 3வாரத்துக்குள் மாரடைப்பால் காலமானார்.

அதுவரையில் பொட்டு இங்கே ஒட்டிக் கொண்டிருந்தது. அதன்பின்னர், அழகிரியிடம் ஒட்டிக் கொண்டது. ஐந்து வருடங்களில் பொட்டுவின் வளர்ச்சி, அசூர வளர்ச்சி. காரணம், அழகிரியின் நிழல். கட்சியில் உறுப்பினராக மட்டும் இருந்த பொட்டு சுரேஷ், அரசு போடும் ரோடு காண்ட்ராக்ட் தொழிலில் கொழித்தார். பொதுப்பணித்துறையின் ஏ கிளாஸ் ஒப்பந்தக்காரராக மாறினார். அண்ணன் அழகிரிக்கு இடது, வலது எல்லாமே பொட்டு சுரேஷ் தான்.

அழகிரியுடன் பத்தாண்டுகளுக்கு மேலாக உயிராக உடலாக இருந்தவர்களைவிட, குறிப்பாக 2000ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து அழகிரியை தூக்கியடித்த போது, அவரை தூக்கிப்பிடித்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். அழகிரியின் குரல் கேட்டால், அது ‘பொட்டு எங்கே?” என்று மட்டும் தான் ஒலிக்கும்.

மதுரையின் இரண்டாவது அழகிரியாகவே பொட்டு சுரேஷ் மாறிவிட்டார். அழகிரி தன் குடும்பத்தை கூட பார்க்காமல் பல நாள் இருப்பார். ஒரு நாள் சுரேஷ் இல்லையென்றால், அழகிரியின் உள்ளம் வாடும். உடல் வதங்கும்.

பொட்டு இல்லையென்றால், அண்ணனே ஆவின் நெய் போல உருகுவதை கண்ட, தென் மண்டலத்துக்குட்பட்ட4 மந்திரிமார்களும் எம்.எல்..ஏ.க்களும் சொல்ல வேண்டுமா? பொட்டு வந்தால் எழுந்து நின்று சல்யூட் அடிப்பார்கள். எம்.எல்.ஏ.க்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள்.

முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் ஆகியோரைத்தவிர அனைத்து தமிழக அமைச்சர்கள் எல்லாமே அவரது கையில். பொட்டு உத்தரவு காலையில் வந்தால், மாலையில் அரசு உத்தரவாக மாறிவிடும். அதிலும் குறிப்பாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்ற அமைச்சர் இருந்தாரே. அவர்தான் தி.மு.க.விலேயே பெரிய ரோஷக்காரர். பொட்டு வந்தால், தனது இருக்கையில் அவரை உக்காத்தி வைத்து, கால் அமுக்கவா.. கை அமுக்கவா என்று (கர்ணனிடம் துரியோதனன் கேட்பானே)… அது போல கேட்பார்.

அடடா… ஐந்து வருடத்தில் பொட்டுவுக்கு தி.மு.க.வில் கிடைத்த மரியாதை… ஒரு அமைச்சருக்கு கூட கிடைத்திருக்காது.

இப்படியாக வளர்ந்த பொட்டு சுரேஷூக்கு 8.8.2010 அன்று என்னவாயிற்று?

ஜூனியர் விகடனில் கழுகார் பகுதியில் ஓர் செய்தி.

'பேரென்ன ஊரென்ன என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது. அமைச்சர்கள் தொடங்கி போலீஸ் வட்டாரம் வரை, இந்த விவகாரம்தான் இப்போது பெரிதாகப் பேசப்படுகிறது. மூத்த புள்ளிக்கு முழு நேர உடன்பிறப்பாக இருக்கும் குங்குமப் புள்ளியை போலீஸ் வகையாகக் கவனித்த கதைதான் அது. அமைச்சர் ஒருவர் கடந்த வாரம் 5அந்தக் குங்குமப் புள்ளிக்கு போன் போட்டிருக்கிறார். 'உடனடியாக சென்னைக்கு வாருங்கள்!' என அமைச்சர் அழைக்க, 'சரி' எனத் தலையாட்டிய குங்குமப் புள்ளி சட்டென உஷாராகிவிட்டாராம். 'நான் வர முடியாது!' என அமைச்சரிடம் தடாலடியாக மறுத்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் முதல்வருக்கு நிழலான அதிகாரியிடம் இருந்து குங்குமப் புள்ளிக்கு போன் போயிருக்கிறது. அதி உயர்வான ஒரு பெயரைத் துணைக்கு அழைத்தவர், 'அவருடைய ஆர்டர்... சீக்கிரம் வந்து சேருங்க!' எனச் சொல்லப்பட, தனது 'சூப்பர்' நண்பருடன் சென்னைக்கு வந்திருக்கிறார் குங்குமப் புள்ளி. 'சூப்பரை' வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, குங்குமத்தை தனி அறைக்குக் கூட்டிக்கொண்டு போனது கட்டுமஸ்தான ஒரு டீம். இதை போலீஸ் என்கிறார்கள் சிலர். இல்லை போலீஸ் மாதிரி என்கிறார்கள் இன்னொரு சிலர். உள்ளே தரப்பட்ட பிரசாதத்தில் வெலவெலத்துப்போன குங்குமம், 'அண்ணனுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல...' எனக் குமுற, 'அவர் சொல்லித்தான் பூசை...' என வரி வரியாகப் போட்டு அனுப்பினார்களாம்.''

-இதுதான் அந்தச் செய்தி.

உடனே என்ன நடந்தது தெரியுமா. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. மரியாதையாக ஜூனியர் விகடன் மன்னிப்பு கேட்காவிட்டால், நடப்பதே வேறு என்று சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விட்டது ’பொட்டு’ உமிகள்.



“வக்கீல் நோட்டீஸுக்கு நாம் உரிய பதில் அளிப்பதற்கோ, ஜூ.வி. மூலம் அதற்கான நமது விளக்கத்தை தருவதற்கோ முன்பாகவே மளமளவென பல விஷயங்கள் மதுரையிலும் சென்னையிலும் அரங்கேறிவிட்டன!

கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட வகையிலான பிரமாண்ட போஸ்டர்கள் நூற்றுக் கணக்கில் அச்சடிக்கப்பட்டு மதுரையின் சகல பகுதிகளிலும்
ஒட்டப்பட்டன. சாதி சங்கங்கள், கட்சி அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் என்று சொல்லிக்கொண்ட அத்தனை போஸ்டர்களும் ஜூனியர் விகடனையும் அதன் இரு நிருபர்களையும் நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்தன.

ஆனால், அதில் ஒரு போஸ்டரில்கூட அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர் குறிப்பிட்டு இருக்கவில்லை! அதோடு, இத்தனை அமைப்புகளும் ஒரே பாணியில் ஒரே நேரத்தில் விழித்துக்கொண்டு ஜூ.வி-யின் செய்திக்கு எப்படி இவ்வளவு வேகமாகக் கண்டனம் தெரிவித்தன என்பதும் ஆச்சர்யம்தான்!”

அதற்கு முன்பாக, மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இதோ:
இப்படியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தவிர காலை நாளிதழிலும் மாலை நாளிதழிலும், ஜூவி அலுவலகம் முன்பாக சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் முற்றுக்கைப் போராட்டம் நடத்தப்படும் என்று விளம்பரமும் வெளிவந்தது.

இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்று ‘பொட்டு; சுரேஷ் சார்பில் வக்கீல் நோட்டீசில் தெரிவித்திருந்தார்.

பொட்டு சுரேஷூக்கு ஒன்றுமே நடக்காமல் ஏன் ஜூனியர் விகடனில் அப்படி வெளிவந்தது. நெருப்பு இல்லாமல் புகையுமா?

நடந்த உண்மை பொட்டுவுக்கும் தெரியும். அத்துடன், அப்போதைய முதல்வர் கருணாநிதி, அவரது உதவியாளர்கள் ராஜமாணிக்கம், சண்முகநாதன் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே தெரியும் நடந்த உண்மை.

அந்த உண்மை என்ன?

பொட்டு சுரேஷ் சென்னைக்கு அழைக்கப்படுகிறார். அதுவரைக்கு உண்மை. ஆனால், தனியறையில் அவரை யாரும் கட்டி வைத்து அடிக்கவில்லை. தனியறையில் நிற்க வைத்து, நா கூசும் அளவுக்கு திட்டித் தீர்த்தார்(அதற்கு கட்டி வைத்தே அடித்திருக்கலாம்).

அப்படி திட்டித் தீர்த்தவர் வேறு யாருமில்லை. சாட்சாத் கலைஞர் கருணாநிதிதான். இந்த சம்பவத்துக்கு ராஜமாணிக்கமும், சண்முகநாதனும் மட்டுமே சாட்சி. அவர் திட்டித் தீர்க்கும் வரை, சாஷ்டங்கமாக கீழே விழுந்தவரின் தலை கூட நிமிரவில்லையாம்.

“நீ யார்?’ ஆரம்பித்து கலைஞர் எப்படி பேசியிருப்பார் என்று உடன்பிறப்புக்களை கேட்டுத் தெரிந்துக் கொள்ளவும். காரணம், அந்த வார்த்தைகள் ஒன்று கூட இங்கே பதிவு செய்தல் முறையாகாது. “இனி இப்படி நடந்தால்… அங்கம் பங்கமாகிவிடும்’ என்ற வார்த்தையோடு முடிந்திருக்கிறது.

இச்சம்பவம் அரசல் புரசலாக, வேறு விதமாக ஜூனியர் விகடனுக்கு செய்தியாக போனது. ஜூனியர் விகடனுக்கு மட்டுமல்ல…. தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் இருக்கும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் செய்தி போனது. சொல்லப்போனால், கூப்பிட்டு கூப்பிட்டு செய்தியை பரப்பினார்கள். பரப்பியதும் சாட்சாத் உடன்பிறப்புக்கள் தான்.

ஆக, பொட்டுவுக்கு உடல் முழுவதும் வார்த்தைகளால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியது அக்கட்சியின் தலைவர். அங்கம் பங்கமாகிவிடும் என்ற வசனம் மட்டும் காட்டுத்தீ போல பரவியதால், அடி விழுந்ததாகவே அனைவரும் நம்பிவிட்டனர். இதுதான் செய்தி வந்த விதம்.

ஆனால், எதுவுமே நடக்காதது மாதிரி, பொட்டு சுரேஷூம், அவரது அடிப்பொடிகளும் செய்த ரகளை அடடா….

எல்லாம். சரி. ஏதோ ஜூனியர் விகடனில் தம்மாதூண்டு செய்தி. அதுவும் இலை மறை… காய் மறையாக ‘மடக்கப்பட்ட மதுரை திலகம்’ என்ற செய்திக்கு…. மன்னிப்பு கேள்… சட்டம் ஒழுங்குக்கு சவால்… என்றெல்லாம் போஸ்டர் அடித்து நாட்டையே பீதிக்குள்(!) உறைய வைத்த திருவாளர் சுரேஷின் வீரர் படை இப்போது எங்கே?

அத்தனை பேருக்கும் ரத்தம் கொதிக்கவில்லையா? அத்தனை பேருக்கும் நரம்பு முறுக்கேறவில்லையா?

அதுதான், கேவலம் நில அபகரிப்பு மோசடியில் பொட்டு சுரேஷை கைது செய்து… பாம்புகளும் பல்லிகளும் இருக்கும்(!) பாளைங்கோட்டை சிறையினிலே அடைத்து வைத்திருக்கிறார்களே.

மதுரையில் இருந்து பாளைங்கோட்டை சிறைக்கு நடைப்பயணம் செய்து, சிறையை தகர்த்து சுரேஷை மீட்க வேண்டியதுதானே?

சட்டம்-ஒழுங்குக்கு சவால் விட முடியவில்லையா? சவால் இல்லை வால் போஸ்டர் கூட ஒட்ட முடியவில்லையே ஏன்?

2010-ல் இருந்த தைரியம்… ஆணவம்… திமிர்… அதிகாரம் எல்லாம் எங்கே போயிற்று திருவாளர் சுரேஷ் அவர்களே!

கடைசியாக ஒரே ஒரு கேள்வி?

குறைந்த பட்சம் போயஸ் தோட்டத்தை முற்றுகையிட்டு, சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் போராட்டம் நடத்தாவிட்டாலும், ஜெயலலிதாவை கண்டித்து தக்குனுண்டு பிட் நோட்டீஸ் அச்சடிக்குமா பொட்டு வட்டாராம்?
தமிழ் லீடர்









புழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Pபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Oபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Sபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Iபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Tபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Iபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Vபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Eபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Emptyபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Kபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Aபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Rபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Tபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Hபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Iபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? Cபுழுதி பறக்க… குருதி சிந்த புறப்பட்ட ’பொட்டு’ எங்கே? K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக