ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹன்சிகாலயம்

+21
ஜாஹீதாபானு
கே. பாலா
krishnaamma
நியாஸ் அஷ்ரஃப்
மஞ்சுபாஷிணி
திவ்யா
கலைவேந்தன்
ayyamperumal
SK
நட்புடன்
பாலாஜி
அதி
சிவா
muthu86
balakarthik
பூஜிதா
அருண்
Manik
உமா
ரேவதி
dsudhanandan
25 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty ஹன்சிகாலயம்

Post by dsudhanandan Thu Jul 21, 2011 12:00 pm

First topic message reminder :

ஹன்சிகாலயம் - Page 2 Hansika


இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு

(வாசலில் ஹன்சிகா ரசிகர்கள்)

சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்?

ரசிகர்: நாங்கெல்லாம் கோயமுத்தூர் தங்கத் தாரகை ஹன்சிகா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே?

ரசிகர்: ஹி.. ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். ஹன்சிகாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆனந்தமா, அமர்க்களமா, அமோகமாப் பண்ணிட்டாப் போச்சு!

ரசிகர்: அதுலே பாருங்க சாமி! திருச்சியிலே குஷ்புவுக்குக் கோவில் கட்டினாங்க! அதுக்கப்புறம் குஷ்புவுக்கு மார்க்கெட் போயிருச்சு. தேவையில்லாம இந்தியாவுலே பாஸ்கெட்பால் கோர்ட், டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் தவிர இருக்கிற எல்லா கோர்ட்டும் ஏறி இறங்கினாங்க!

சாஸ்திரிகள்: ஆமாமாம்!

ரசிகர்: அப்புறம் திருநெல்வேலியிலே நமீதாவுக்குக் கோவில் கட்டினாங்க! அவங்க மார்க்கெட்டும் அவுட்டாயிருச்சு! கோவில் திருப்பணியும் பாதியிலேயே நின்னுருச்சு! மூணு வருஷமாகப்போகுது, இன்னும் கும்பாபிசேகம் கூட ஆகலை! இருந்த ஒரு உண்டியலையும் யாரோ திருடிட்டாங்களாம்.

சாஸ்திரிகள்: அவா ப்ராப்தம் அவ்வளவு தான்!

ரசிகர்: அப்புறம் தமன்னாவுக்கு தூத்துக்குடியிலே ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாங்க... மார்கெட் இல்ல... காதல் தோல்வி அப்படின்னு பேசிக்கிறாங்க...

சாஸ்திரிகள்: ஆமாமாம்!

ரசிகர்: எங்க ஹன்சிகாலயம் அப்படி ஆயிடக்கூடாது சாமீ! அதுனாலே எல்லாத்தையும் முறைப்படி செய்யணும். அதுனாலே தான் உங்க கிட்டே வந்திருக்கோம். தட்சணை எவ்வளவு வேண்ணாலும் தர்றோம் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன? எல்லாத்தையும் சாஸ்திரோக்தமாப் பண்ணிட்டாப் போச்சு! எதுக்கும் ஹன்சிகாவோட ஜாதகம் இருந்தாக் கொடுங்கோ! இல்லேன்னா அவாளோட பொறந்த நாளாவது சொல்லுங்கோ!

ரசிகர்: 1991-ம் வருஷம் ஆகஸ்ட் மாசம் 9-ம் தேதி

சாஸ்திரிகள்: அப்படீன்னா, பூசம் நட்சதிரம், கடக ராசி! இந்த வருஷம் சக்கைப்போடு போடுவாளே!

ரசிகர்: ஆமாம் சாமி! ரிலீஸ் ஆகிற எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகணும்!

சாஸ்திரிகள்: இருக்காதா பின்னே? நல்லா முயற்சித்தா கோடீஸ்வரரா ஆகலாம்னு இந்த வருஷ ராகு, கேது பெயர்ச்சி பலன் சொல்லுதே... எங்காத்துக்காரிக்கும் கடக ராசிதான்! பின்னு பின்னுன்னு பின்னறாளோன்னோ?

ரசிகர்: வரும்போதே கேட்டோம்! ’ஐயோ அம்மா’ன்னு கூவிக்கிட்டிருந்தீங்க! சரி சாமி! முதல்லே திருப்பணியை எப்படி ஆரம்பிக்கலாமுன்னு சொல்லுங்கோ!

சாஸ்திரிகள்: நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதேள்! என்னதான் கும்பாபிஷேகம் நான் பண்ணினாலும், கொஞ்சம் நம்ம தமிழ்ப்பண்பாடு கலந்து பண்ணுங்கோ! இல்லேன்னா, சுயமரியாதை பேசறவா கோவிலுக்கு வரமாட்டா!

ரசிகர்: அதுவும் சரிதான்! எங்க ஹன்சிகாலயத்துலே எந்த ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது சாமீ! அப்படியிருந்தா தலைவியோட அருள் கிடைக்காது.

சாஸ்திரிகள்: உங்க ஹன்சிகா எங்கே பொறந்தாங்க?

ரசிகர்: ஆஸ்பத்திரியிலே....!

சாஸ்திரிகள்:
அதைக் கேட்கலேங்காணும்! எந்த ஊருலே பொறந்தான்னு கேட்கறேன்!

ரசிகர்: ஓ! அதுவா! இந்தூர், மத்தியப் பிரதேசத்திலே பொறந்தாங்கோ!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! அதான் மஹாகாலேஷ்வர் அருள் பரிபூரணமா இருக்கு! நீங்க என்ன பண்ணறேள், ஹன்சிகாவோட சிலைக்கு தேவையான கல்லை மத்தியப் பிரதேசத்திலேருந்து எடுத்துண்டு வாங்கோ!

ரசிகர்: மத்தியப் பிரதேசத்திலே மலையிருக்கா சாமீ?

சாஸ்திரிகள்: என்ன அப்படிக் கேட்டுட்டேள்? பிம்பெட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka Rock Shelters), பாறை ஓவியங்கள் எல்லாம் இருக்கு! அங்கேருந்து கல்லைப் பேத்து எடுத்துண்டு வந்து அந்தக் கல்லிலே ஹன்சிகாவுக்கு சிலை பண்ணுங்கோ!

ரசிகர்: இதை மாதிரி யாரோ ஒரு தமிழ் மன்னர் பரங்கிமலையிலேருந்து கல்லெடுத்துட்டு வந்து மணிமேகலைக்குக் கோவில் கட்டினதா பூகோளத்துலே படிச்சிருக்கேனே?

சாஸ்திரிகள்: பகவானே! கஷ்டம்! கஷ்டம்!! அது பரங்கிமலை இல்லை, இமயமலை! மணிமேகலைக்கு இல்லை, கண்ணகிக்கு! நீர் படிச்சது பூகோளம் இல்லேங்காணும், சரித்திரம்!

ரசிகர்: ஏதோ ஒண்ணு! இப்போ அதுவா முக்கியம்? சரி சாமி! நீங்க சொல்லுறா மாதிரியே மத்தியப் பிரதேசத்திலேருந்து கல்லைப் பேத்து எடுத்து, எங்க தலை மேலேயே வச்சிக்கிட்டு அங்கிருந்து கோயமுத்தூரு வரைக்கும் பொடிநடையா வந்து சேர்ந்திடறோம்.

சாஸ்திரிகள்: அதெல்லாம் எதுக்கு? ரயில்லே வர வேண்டியது தானே?

ரசிகர்: இல்லை சாமி! டிக்கெட் கிடைக்காது! அப்புறம் எங்க தலைவி சிலைக்கு தேவைப்படும் கல்லை தலையிலே வச்சிட்டு வர்றதை பெரிய புண்ணியமா கருதறோம்!

சாஸ்திரிகள்: சும்மாச்சொல்லப்படாது! உங்க பக்திக்கு முன்னாலே ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஒண்ணுமேயில்லை போங்கோ!

ரசிகர்:
இன்னும் முழுசா நான் சொல்லவே இல்லை சாமி! எங்க ஹன்சிகா கோவிலிலே விபூதி, குங்குமம் கொடுக்க மாட்டோம். எங்க தங்கத்தாரகை படத்தைப் பார்த்தவங்க மீதியிருக்கிற பாதி டிக்கெட்டை ஒரு தனி உண்டியலிலே போடுவாங்க! நாங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிசா யாகம் பண்ணி, அதுலே அந்த டிக்கெட்டையெல்லாம் போட்டு பொசுக்கி, அந்த சாம்பலைத் தான் திருநீறாக் கொடுக்கப்போறோம்!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்!!

ரசிகர்: அது மட்டுமா? விசேஷ பூஜையெல்லாம் கூட முடிவு பண்ணிட்டோம். மாப்பிள்ளை பூஜை, வேலாயுதம் பூஜை, காதல் பூஜைன்னு ஒவ்வொரு நாளும் தலைவிக்கு விதவிதமா அலங்காரம் பண்ணுவோம்.

சாஸ்திரிகள்: பிரமாதம்! உற்சவம் உண்டா?

ரசிகர்:
அது இல்லாமலா? தலைவி பொறந்த நாளை ஒவ்வொரு ஆகஸ்ட் மாசம் 9-ம் தேதியும் ஹன்சிகாவோற்சவமுன்னு கொண்டாடுவோம். எல்லாருக்கும் தடலும், வரோவும் பிரசாதமாக் கொடுப்போம்.

சாஸ்திரிகள்: என்னது? தடலும், வரோவுமா?

ரசிகர்: ஆமாம் சாமீ! எங்க தலைவி சிந்தி பொண்ணு இல்லையா? அதான் பிரசாதமா தடலும், வரோவும்... சிந்தி பட்சணம் சாமி...

சாஸ்திரிகள்: விசேஷம் தான் போங்கோ! சரி, பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு கும்பாபிஷேகத்துக்கு ஒரு நல்ல நாள் முடிவு பண்ணி தகவல் அனுப்பறேன். உங்க அட்ரஸ், செல்போன் நம்பரெல்லாம் கொடுத்திட்டுப்போங்கோ!

ரசிகர்: சரி சாமீ! இந்தாங்க எங்களோட தட்சணை!

சாஸ்திரிகள்: என்னது, பெரிய மூட்டையான்னா இருக்கு?

ரசிகர்: அதொண்ணுமில்லே சாமி! எங்க கிட்டே காசு இல்லை! இப்பெல்லாம் டெபிட் கார்டு ஆனதினாலே அப்பன் பாக்கெட்டிலேயும் ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது... அதுனாலே எல்லாரும் அவனவன் போட்டிருக்கிற வாட்சு எல்லாத்தையும் கழட்டி மூட்டையாக் கட்டிக் கொண்டு வந்திருக்கோம். இதையெல்லாம் வித்தா நல்ல தொகை தேறும்!

சாஸ்திரிகள்: அட கஷ்டமே!

ரசிகர்: நீங்க ஃபீல் பண்ணாதீங்க சாமி! பட்டினி கிடந்து செத்தாலும் சரி, தலைவிக்கு கோவில் கட்டியே தீருவோம்.

சாஸ்திரிகள்:
பண்ணுங்கோ பண்ணுங்கோ! இந்தச் சாக்குலே நானும் மருதமலையைப் பார்த்த மாதிரி இருக்கும்.

ரசிகர்: சாமீ! அத நீங்க DVD-லே பாத்துடலாமே!

சாஸ்திரிகள்: என்னது?

ரசிகர்: அர்ஜுன், நிலா நடிச்ச படம்தானே?

சாஸ்திரிகள்: கிரஹசாரம்! நான் சொன்னது மருதமலை முருகன் கோவில்! அது கோயமுத்தூர்தானே?

ரசிகர்: ஓ! சாரி சாமி! நான் வரலாறிலே ரொம்ப வீக்!

சாஸ்திரிகள்: அது சரித்திரம் இல்லை! பூகோளம்!!

ரசிகர்: ஏதோ ஒண்ணு, அதுவா முக்கியம்? சரி சாமீ! கிளம்பறேன்! தலைக்கு மேலே வேலையிருக்கு! தலைவிக்குக் கோவில் மட்டும் கட்டி முடிச்சா கோயமுத்தூரிலிருந்து பழனிக்கு தலைகீழா நடந்து வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன். வரட்டுமா?

சாஸ்திரிகள்: ஓ! பேஷா போயிட்டு வாங்கோ!

(ஹன்சிகா ரசிகர்கள் கலைகிறார்கள். சாஸ்திரியின் மனைவி கோமதி மாமி வருகிறார்)


மாமி: ஏன்னா, அவாதான் அச்சுப்பிச்சுன்னு ஏதோ உளர்றான்னா, நீங்களும் நாள் குறிச்சுக் கொடுக்கறேன்னு சொல்றேளே?

சாஸ்திரிகள்: நீ சித்த சும்மாயிரு! நான் கும்பாபிஷேகம் பண்ண மாட்டேன்னு சொன்னா அவா யாராவது அரசியல் தலைவரை வச்சுண்டு சுயமரியாதை குடமுழுக்குன்னு பண்ணுவா! நம்மளைத் திட்டுவா! அதுக்கு நாமளே பண்ணிடலாமோன்னோ? உள்ளே போயி பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா!

(மாமி உள்ளே போகிறாள். மீண்டும் வாசலில் யாரோ....!)


குரல்: சாமீ!

சாஸ்திரிகள்: யாரு? உள்ளே வாங்கோ!

வந்தவர்: வணக்கம் சாமீ! என் பேர் சிவா! அகில உலக நமீதா ரசிகர் மன்றத்திலேருந்து வர்றேன்.... மலேசியாவிலே ஒரு...

சாஸ்திரிகள்: கோமூ... அந்த பஞ்சாங்கத்தை சித்த சீக்கிரமா எடுத்துண்டு வாடீ...

(குறிப்பு: ஆலயத் திருப்பணிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றது)


Last edited by dsudhanandan on Thu Oct 27, 2011 9:02 am; edited 2 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by Manik Thu Jul 21, 2011 12:31 pm

செரி செரி விடுங்க சண்டை போட்டுக்காதீங்க கூடாது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by உமா Thu Jul 21, 2011 12:39 pm

அருண் wrote:ஹன்சிகாலயம் - Page 2 Paravaimunniyama_28_3_5

அப்படியே இவங்களுக்கும் கோவில் கட்டுலாம் நு இருக்கோம் சாஸ்திரிகள் கிட்ட ஒரு நல்ல தேதியா வாங்கி கொடுங்க..! சிரி


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by பூஜிதா Thu Jul 21, 2011 1:14 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by balakarthik Thu Jul 21, 2011 1:18 pm

ஆண்சிகாவுக்கு கோவில் கட்டுறது இருக்கட்டும் மோதலா ஹன்சிகாவ நல்ல துனியா கட்ட சொல்லுங்க தட் இஸ் இம்பார்டண்ட் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹன்சிகாலயம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan Thu Jul 21, 2011 1:23 pm

balakarthik wrote:ஆண்சிகாவுக்கு கோவில் கட்டுறது இருக்கட்டும் மோதலா ஹன்சிகாவ நல்ல துனியா கட்ட சொல்லுங்க தட் இஸ் இம்பார்டண்ட் சூப்பருங்க

2 பட்டுப்புடவை வாங்கி அனுப்புனா அம்மனுக்கு சார்த்திடறேன் .... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by balakarthik Thu Jul 21, 2011 1:31 pm

dsudhanandan wrote:
balakarthik wrote:ஆண்சிகாவுக்கு கோவில் கட்டுறது இருக்கட்டும் மோதலா ஹன்சிகாவ நல்ல துனியா கட்ட சொல்லுங்க தட் இஸ் இம்பார்டண்ட் சூப்பருங்க

2 பட்டுப்புடவை வாங்கி அனுப்புனா அம்மனுக்கு சார்த்திடறேன் .... புன்னகை

நான் ரெண்டு படாத புடவயா அனுபினேனே அது இன்னும் சாத்தலயா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹன்சிகாலயம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan Thu Jul 21, 2011 1:57 pm

balakarthik wrote:
நான் ரெண்டு படாத புடவயா அனுபினேனே அது இன்னும் சாத்தலயா

அது பாடாவதி புடவையா இருந்துச்சு அதனால சாத்தல... 2 பாடரவதி புடவையா அனுப்புங்கோ... ஜாலி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan Thu Jul 21, 2011 3:37 pm

யாருமே நன்கொடை தரவேல்லையே!? என்ன?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by muthu86 Thu Jul 21, 2011 9:18 pm

சுதன் பாஸ் ,நான் தான் கோவில் அறங்காவலர் குழு தலைவர்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by சிவா Thu Jul 21, 2011 9:20 pm

muthu86 wrote:சுதன் பாஸ் ,நான் தான் கோவில் அறங்காவலர் குழு தலைவர்

கோவில் தலைவர் நான் இருக்கும் பொழுது யார் இடையில் வருவது? நான் ரெடி, நீ ரெடியா


ஹன்சிகாலயம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹன்சிகாலயம் - Page 2 Empty Re: ஹன்சிகாலயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum