புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
65 Posts - 64%
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
257 Posts - 44%
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 11:35 am

First topic message reminder :

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…

“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.

“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.


பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

***

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

***

தட்டிக்கழிக்க பல காரணங்கள்…

“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.

“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றி-தினத்தந்தி



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வாசகி ஒருவர் வெளியிட்ட கருத்து


என்னமோ திருமண பந்தங்கள் ஏற்படாமல் போவதற்கு பெண்ணும், பெண் வீட்டாரும் மட்டுமே காரணம் என ஒருதலை பட்சமாக எழுதியுள்ளீர்கள் .

மணமகனின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கைகள் , சம்பாதிக்க கையாலாகாமல் மாமனார் சொத்து மற்றும் மனைவி சம்பாத்தியத்தில் குளிர் காய எண்ணுதல் , சம்பாதிக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் மாப்பிள்ளை திமிர் , பந்தா காட்டிக்கொள்ள எண்ணுதல் போன்றவையே திருமணம் நடைபெறாமல் போக முக்கிய காரணங்கள் .

ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்ணுக்கு சுதந்திரம் இல்லாமல் அடிமைப்பட்டு கிடந்தாள் . இன்று பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் இன்றும் அவள் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது ஆண்களின் உச்ச கட்ட சுயநலத்தைக் காட்டுகிறது .

பெண்ணை கட்டிகொடுத்துவிட்டு , பெண்ணின் பெற்றோர் முதியோர் இல்லம் போய்விடவேண்டும் அல்லது எங்கேயோ எப்படியோ நாசமாய் போய்விட வேண்டும் ஆனால் ஆண்மகனை பெற்ற பெற்றவர்கள் மட்டும் ,வீட்டிற்கு வரும் மருமகளை அடிமையாய் கசக்கி பிழிந்து வேலை வாங்கி , போய் சேருகின்ற காலம் வரை சொகுசாக டீ , காபி , டிபன் சாப்பிட்டுக் கொண்டு போய் சேரவேண்டும் . நன்றாக இருக்கிறதையா இந்த சமூக நீதி !

ஒரு காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்பதல் என்பது ஆணிற்கு அவமானம் என்று நினைத்தார்கள் . ஆனால் இன்றோ வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என கேட்டு கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆண்கள் .

நம் இந்திய பண்பாடை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் , ஆனால் பெண்கள் மாத்திரம் மாமனார் , மாமியார் என எல்லா நார்களையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் அப்படிதானே

பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லத்திற்கு செல்லும் போது ஆணை பெற்றவர்களும் முதியோர் இல்லத்திற்கு செல்லட்டுமே , என்ன கெட்டுவிடப் போகிறது .

பெரியவர்களை பேணிகாப்பது என்பது மனிதாபிமான செயல் .
இதை நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் செய்யவேண்டும் .

ஆக ஆணின் பெற்றோர் பேணி காக்கப்படவேண்டியவர்கள் என்றால் பெண்ணின் பெற்றோரும் பேணி காக்கப்படவேண்டியவர்கள் தானே

ஒரு பெண்ணிற்கு தன் பெற்றோரை அவர்களது கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்ள உரிமை இல்லை என கூறும் இந்த மாப்பிளை வர்க்கம் கணவனின் பெற்றோரை மட்டும் அப்பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடூரமான சுயநலச் செயல்

எனவே இந்த ஏற்றத்தாழ்வு நீங்கி ஆண் , பெண் இருவருமே தங்களது பெற்றோரையும் , மாமனார் , மாமியார் அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் .அவர்களது கடைசிகாலத்தில் நிம்மதியாக அவர்கள் இருக்க வழிவகை செய்யவேண்டும் . அவர்களை காப்பாற்றவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூடாது .




aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 4:04 pm

பூஜிதா wrote:


சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி பூஜிதா அவர்களே ,

இனியொரு விதி செய்வோம்
அதை
எந்த நாளும் காப்போம்

என்ற தாரக மந்திரத்தை பெண் வீட்டார் தற்பொழுது செயல் படுத்தி வருகின்றனர்

இனி வரும் எதிர்காலத்திலாவது ஆண் , பெண் ஏற்றதாழ்வு , பேதம் இல்லாமல் போக வேண்டும்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 4:23 pm

krishnaamma wrote:

இப்ப கல்யாணத்தை நிறுத்துவது தானே பிர்ச்சனை உமா?எல்லோருக்குமா இப்படி நடக்கிறது? எல்லோருமே கெட்டவா இல்லயே, அடர்க்காக கமல் மாதிரி வாழ்ந்து பார்த்தா கல்யாணம் கட்ட முடியும்? எவ்வளவு செலவழித்து ஏற்பாடு செய்கிறார்கள் , நிமிஷமாக ஒரு கரணமுமே இல்லம் நிறுத்தினா? அல்லது காரணத்தை சொல்ல மறுத்தா? அதுக்கு என்ன சொல்கிறீர்கள் ?

அம்மா , பெண் வீட்டார் காரணத்தை சொல்ல மறுப்பதற்க்கும் காரணம் இருக்கின்றது

மாப்பிள்ளை ஸ்திரீலோலன் என்பதை தெரிந்து கொண்ட பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தி விட்டார் .

மாப்பிள்ளையின் தந்தை காரணம் கேட்டார் . பெண்ணின் தந்தை மறைக்காமல் உண்மையான காரணத்தை கூறிவிட்டார் .

மாப்பிள்ளையின் தந்தை அதை ஏற்கவில்லை . மறுத்து வாதம் செய்தார் . ஒரு கட்டத்தில் பெண்ணின் தந்தை , எங்களுக்கு விருப்பம் இல்லை தயவு செய்து விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டார் .

மாப்பிள்ளையின் தந்தையும் சரி என்று சம்மதித்து விட்டு விட்டார் .
இந்த விஷயம் மாப்பிள்ளையின் காதிர்க்கு எட்டியது .

அந்த மாப்பிள்ளைக்கு தன் ஒழுக்கக் கேடான நடத்தை தவறாக தெரியவில்லை மாறாக திருமணத்தை நிறுத்தியது அவமானமாக தெரிந்தது .

எனவே பெண் வீட்டாரை பழி வாங்க நினைத்தார் மாப்பிள்ளை

அந்த பெண்ணை பார்க்க வரும் மற்ற மாப்பிள்ளை வீட்டாரிடம் , தனக்கும் அந்த பெண்ணிற்கும் தொடர்பு இருக்கின்றது என்று சொல்லி அந்த பெண்ணிற்க்கு திருமணமாகாமலே தடுத்துக் கொண்டு இருக்கிறார் அந்த மாப்பிள்ளை இன்றும் .

பெண்ணின் வயது தற்போது 38



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 5:11 pm

krishnaamma wrote:
என் உயீர் தோழி , அவள் நாத்தனார் மகனுக்கு கல்யாணம் என்று கூர்காவுன் வருவதாக இருந்தாள்.நாங்க பரிதாபாதில் இருந்ததால் எங்கள் வீட்டுக்கும் வருவதாக சொன்னால். 21 கல்யாணம் , டிக்கெட் எல்லாம் புக் பண்ணி யாச்சு.
ஆக்ரா மதூரா போக வண்டியும் ஏற்பாடு செய்து விட்டோம், பார்த்தால் இவ 17தித் சொல்கிறா ,நாங்க வரலை சுமதி எல்லாம் கான்சல் பண்ணிடு, கல்யாணம் நின்னு போச்சு என்று. எனக்கு ஒரே ஷாக், என்னடி எண்டால் இப்ப கேகாதே அப்புறம் சொகிறேன் என ஃபோன் ஐ வைத்துவிட்டாள். பாவம் அந்த பையனுக்கு அம்மா கிடையாது, இவதான் (மாமி) எல்லாம். பிறகு தெரிந்த து அந்த பெண்ணின் தாயாருக்கு இந்த சம்பந்தத்தில் முதலில் இருந்த விருப்பம் இல்லையாம் பெண்ணுக்கு பையனை பிடித்துவிட்டதால் , பெண்ணின் அப்பாவும் சம்மதித்து இருந்ததாலும் ஒப்புக்கொண்டு இருந்திருக்கா, பிறகு ஹைதராபாத் போயி பையனை பார்த்தவள் வந்ததும் ஒரு டி‌வி ஆர்டிஸ்ட் ஐ பிடித்து அந்த பையனின் முதல் மனை வி போல் தான் மகளிடமே பேசவைத்துள்ளா ள, இது இவர்களுக்கு பிறகு தெரிந்த தாம். ஏனென்றால், பெண்ணின் விருப்பம் இவர்கள் அறிந்தது தான், எனவே அவளை அவா அண்ணா மன்னி மூலம் கூட்டி வந்து கல்யாணம் செய்யவும் இவர்கள் முயன்று உள்ளார்கள். அப்ப அந்த பெண்ணின் மன்னி கேட்டு இருக்கா இவளை உங்க பையனுக்கு முதல் மனைவி உண்டா என ? எப்படி சினிமா போல போகுது பார்த்தீர்களா? என்றாலும் இன்னும் பேச்சு வார்த்தை நடக்கிறது, ஆனால் நின்ற கல்யாணம் நின்றது தானே? இதுக்கு என்ன சொல்கிறீர்கள் , பெண்ணை விட அவளை பெற்றவள் ரொம்ப மோசம் சோகம் பெண்ணை பெற்ற அம்மா டாலி ஈடு இல்லாமல் இருந்தாலே எல்லாம் நல்ல படி நடக்கும் என்பது என் கருத்து புன்னகை


அந்த மாப்பிள்ளையை பெண்ணின் தாய்க்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் அல்லவா அது என்ன ?

ஒரு தாய் அதுவும் பெண்ணை பெற்றவள் இவ்வளவு தூரம் நாடகமாடி கல்யாணத்தை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன ?
அப்படி அந்த மாப்பிள்ளையிடம் என்ன குற்றம் குறை இருக்கிறது ?

பெண்ணை பெற்றவர்கள் அப்பெண்ணை கல்யாணம் செய்துகொடுக்கத்தான் பார்ப்பார்கள் . அதை விடுத்து பெண்ணை தன் வீட்டில் வைத்து அழகு பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்

அப்படியிருக்க பெண்ணின் தாயே போராடி இந்த திருமணத்தை நிறுத்துகிறார் என்றால் அந்த மாப்பிள்ளையிடம் அப்படி என்ன தவறு இருக்கிறது ?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் தேடுங்கள்

மனசாட்சிக்கும் , தெய்வசாட்சிக்கும் புறம்பாக இல்லாமல் ,
நியாயத்திற்கு கட்டுபட்டு
இந்த மாப்பிள்ளைக்கு நம் மகளை பெண் கேட்டால் நாம் பெண் தருவோமா ? என்று பெண் வீட்டாரின் மன நிலையில் இருந்து யோசியுங்கள்

இவ்வாறு பாரபட்சமின்றி நடுநிலையோடு யோசித்தபின் மாப்பிள்ளையிடம் எந்த தவறும் இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த பின் பெண் வீட்டாரிடம் தைரியமாக கேளுங்கள் எங்கள் பையனுக்கு ஏன் பெண் கொடுக்க மறுக்கிறீர்கள் என்று

நியாம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் யாருக்கும் பயப்பட தேவை இல்லை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:14 pm

தொடர்ந்து மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாரின் திருவிளையாடல்களை பற்றி நான் இங்கு சொல்லஇருக்கிறேன்

பின்வரும் கட்டுரைகளில் சில நம் நண்பர்கள் நம் தளத்தில் வெளியீட்டு இருக்கிறார்கள் .

அவற்றை இங்கே இணைப்பது சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்

திருவிளையாடல் 1


ஆசிரியையைத் திருமணம் செய்துவிட்டு போலி பொறியாளர் தலைமறைவானார். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தை உள்ளது தெரியவந்தது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ளது கருத்தப்பிள்ளையூர் கிராமம். இந்த ஊர் புனித சூசைதெருவைச் சேர்ந்த ஸ்டீபன் தேவதாசன்-லில்லிபுஷ்பம் தம்பதியினரின் மகள் சந்தியா பெனிட்டோமேரி. இவர் பிஎஸ்சி பிஎட் பட்டதாரி ஆவார். இவருக்கும் அதே ஊர் காமராஜர் தெருவைச் சேர்ந்த அருள்தாஸ்-இந்திரா ஆகியோரின் மகன் பிரவீன்சுந்தர் என்பவருக்கும் கடந்த 23-12-09 அன்று திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை டிஎம்இ(டிப்ளமோ இன்ஜினியர்) படித்துவிட்டு திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்வீட்டார் ரூ.75 ஆயிரம் ரொக்கம், 25 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்திற்குச் சீர்வரிசை செய்து விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் சந்தியாவின் சகோதரர்கள் அவர்களைத் திருப்பூருக்கு அழைத்துச்சென்று தனிக்குடித்தனம் வைத்தனர். பிரவீன்சுந்தரும் காலையில் வேலைக்குச் செல்வதுபோல் வெளியே சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவார். ஒருவாரம் கடந்த நிலையில் அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். இதை பார்த்த மனைவி, ஏன் வீட்டில் உள்ளீர்கள் என கேட்டதற்கு, "அந்த கம்பெனியில் வேலை பிடிக்கவில்லை; அதனால் வேலையை விட்டுவிட்டேன். வேறு கம்பெனியில் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இப்படி 2 மாதமாக பிரவீன்சுந்தர் வேலைக்குச் செல்லவில்லை.

இதனால் கணவன், மனைவி இடையே சிறிய அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒருநாள் பிரவீன்சுந்தர், நீ பைக் வாங்கி தந்தால்தான் வேலைக்குச் செல்லமுடியும் என்று மனைவியிடம் கூறியுள்ளார். இது ஒரு பக்கம் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கணவருக்குத்தானே என கருதி சந்தியா ஊரில் உள்ள பெற்றோரிடம் கூறினார். அவர்களது சகோதரர்கள், புதுபைக் வாங்கி அதை திருப்பூரில் கொடுத்துவிட்டு வந்தனர்.

அதற்கு பிறகும் பிரவீன்சுந்தர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும் புது பைக்கில் ஊர் சுற்றி, குடித்துவிட்டு வந்து தகராறும் செய்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் இரவு செல்போனில் வந்த எஸ்எம்எஸ் சந்தியா வாழ்க்கையைப் புரட்டிபோட்டது. அந்த எஸ்எம்எஸ்சில் இருந்த செய்தியில், ''உங்கள் அன்பு மனைவி ஷைலா'' என்று குறிப்பிட்டிருந்தது. இதைபார்த்த சந்தியா அதிர்ச்சியடைந்தார். அதோடு அந்த செல்லில் அந்த பெண்ணின் படம் மற்றும் குழந்தை படம் ஆகியவையும் இருந்துள்ளது. உடனே கணவரிடம், "யார் அந்த ஷைலா?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "அது எனது மனைவிதான். ஊட்டியைச் சேர்ந்த அவருக்கும் எனக்கும் திருமணமாகி 3 வயதில் சுசிமோனிகா என்ற குழந்தை உள்ளது. இது எனது பெற்றோருக்கும் தெரியும்" என்றார். "முதல் மனைவி இருக்கும்போது ஏன் இப்படி என்னை ஏமாற்றி திருமணம் செய்தீர்கள்?" என்று அவரிடம் சந்தியா சண்டை போட்டார்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் பிரவீன்சுந்தர் தலைமறைவாகிவிட்டார். பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் பதறிப்போன சந்தியா அவரது செல்போனில் தொடர்புகொண்டார். நான் வெளியூரில் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் வர ஓரிரு மாதம் ஆகும் என்று கூறியுள்ளார். இது சந்தியாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே கருத்தப்பிள்ளையூரில் உள்ள மாமனார் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர்களும் "வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பான் எப்படியும் வந்துவிடுவான்" என்ற கூறியதால் சந்தியா பல்லைக் கடித்துக்கொண்டு நாட்களை நகர்த்தியுள்ளார்.

ஆனால் கணவர் ஊட்டியில் உள்ள முதல் மனைவியுடன்தான் உள்ளார் என சந்தியாவுக்குத் தெரியவந்தது. இனியும் இங்கு தனியாக இருந்தால் தனக்கு பாதுகாப்பு இருக்காது என கருதிய சந்தியா பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஊருக்கு வந்த சந்தியா நேராக மாமனார் வீட்டிற்குச் சென்று கணவர் பற்றி கேட்டார். அதற்கு அவர்கள், "வரதட்சணையாக மேலும் ரூ.1 லட்சம் தரவேண்டும். தந்தால்தான் சேர்த்துவைப்போம். இல்லாவிட்டால் அவனுக்கு வேறு கல்யாணம் செய்து வைப்போம்" என்று மிரட்டி இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்திற்கு விவகாரம் சென்றது. அங்கும் சந்தியாவின் மாமனார் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் பிரவீன்சுந்தர் வேலை பார்த்ததாக கூறிய திருப்பூர் கம்பெனியில் சந்தியா தரப்பினர் விசாரித்தனர். அப்போதுதான் பிரவீன் பற்றிய குட்டு அம்பலமானது. அவர் இன்ஜினியர் அல்ல என்றும், சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்தார் என்பதும் அந்த வேலையை விட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கு மேல் போராடி பார்த்த சந்தியா இனி கணவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவெடித்து அவர்கள் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று அம்பையில் உள்ள மகளிர் காவல்துறையில் புகார் செய்தார். மேற்கண்ட தகவல்களை அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சந்தியா கூறும்போது, "இனிமேல் அவருடன் வாழ முடியாது. முதல் மனைவி இருப்பதை மறைத்து என்னைத் திருமணம் செய்துள்ளார். இன்னொரு பெண் பாவத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை. எங்களை ஏமாற்றிய கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு திருமணத்தின்போது கொடுத்த ரூ.75 ஆயிரம் ரொக்கம், நகை மற்றும் சீர்வரிசைகளைத் திருப்பி தரவேண்டும்" என்று கூறினார்.


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:16 pm

திருவிளையாடல் 2

போபால்: கட்டிய மனைவியின் ரத்தத்ததை சிரிஞ்ச் மூலம் உறிஞ்சி எடுத்து குடித்து ருசித்த கொடூர கணவன் மீது மூன்று ஆண்டுகள் கழி்த்து மனைவி போலீசில் புகார் செய்தார். இது ‌தொடர்பாக போலீசார் தலைமறைவான கணவன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கொடூர சம்வபத்தினை விஞ்சும் அளவுக்கு நிஜத்திலும் ஒரு வக்ரபுத்தி கொண்ட கணவன் இருந்துள்ளான். மத்தியபிரதேச மாநிலம் தாமோக் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூரா கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் அகிர்வார்.

ஒரு சாதாரண விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தீபா (22) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. துவக்கத்தில் நல்ல குணமுள்ள கணவனாக இருந்த மகேஷ்அகிர்வார், மனைவி தீபா கர்ப்பிணியான பின்னர் தான் தனது சுயரூபத்தினை காட்டியுள்ளான். மனைவியின் கைகளை பிடித்து ஊசிமூலம் ரத்தத்தினை உறிஞ்சி எடுத்து அதை ஒரு டம்பளரில் ஊற்றி ஆசையுடன் மனைவி முன்பே குடித்து சுவைத்துள்ளான். ஆரம்பத்தி‌ல் கணவனின் போக்கினை கண்டுகொள்ளதாக தீபா. இதே போன்று கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியை மிரட்டியே ரத்தத்தினை உறிஞ்சி குடித்துள்ளான் மகேஷ் அகிர்வார். எதிர்த்து கேட்டால் உன்னையும் ,குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும், இதனை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளான்.

இந்த சூழ்நிலையில் கருவுற்றிருந்த தீபாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. மகன் பிறந்தவுடன், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் கைகளில் ஊசியை செலுத்தி ரத்தத்தினை உறிஞ்ச முயன்ற போது தான் தீபாவிற்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட்டது. உடனே பட்டீரா போலீஸ் நிலையம் சென்ற தீபா தனது கணவனின் ரத்தகாட்டேரி குணம் பற்றிய வக்கிரத்தை புகாராக தெரிவித்தார். உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவி்ல்லை. பின்னர் தீபாவின் பெற்‌றோருக்கும் விசயம் தெரியவர அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஹின்டோரியா போலீஸ் ஸ்டோசனின் மகேஷ் அகிர்வார் மீது புகார் கொடுத்தனர். இதை அறிந்த மகேஷ் தலைமறைவானான். இது குறித்து ஹின்டோரியா போலீசார் தலைமறைவான மகேஷ் அகிர்வார் மீது மனைவியை கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்


இப்படியெல்லாம் மாப்பிள்ளை காட்டுமிராண்டியாக இருந்தால்
பெண்ணை பெற்றவர்கள் பயப்படத் தானே செய்வர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:18 pm

திருவிளையாடல் 3


திருமணத்தரகர் ஒருவர் தனது மனைவியை 65 வயது வயோதிபருக்கு விற்றதாகக் கூறப்படும் சம்பவம் திருகோணமலை மகாதிவுல்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாதிவுல்வௌ பிரதேசத்துக்கு வந்த திருமணத்தரகர் ஒருவர் அதே பிரதேசத்திலுள்ள செல்வந்தர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு தனிமையில் வாழ்ந்துவந்த 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனக்கு ஒரு மணமகள் தேவை அதுவும் இளையவராக இருக்கவேண்டும் எனத் தரகரிடம் கேட்டாராம்.

இதனையடுத்து, தரகர், ஐயா! இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் முன்னிலையில் ஒருத்தியைக் கொண்டுவந்து நிறுத்துகிறேன் பாருங்கள் எனக் கூறி விட்டுச் சென்றார்.தரகர் தனது வீட்டுக்கு விரைந்ததும், எனக்கு வெளியில் அலுவல் ஒன்று உள்ளது. அதன் பொருட்டு இரண்டு நாள்கள் நான் வெளியில் செல்கின்றேன். நீ தனியாகத் தான் இருப்பாய். உன்னை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துச் செல்கிறேன். நாளைகாலை என்னுடன் வா என மனைவியிடம் கூறினாராம்.

கணவன் என் மீது இவ்வளவு அன்பா? இப்படியான தொரு கணவன் கிடைத்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ? என எண்ணிய வண்ணம் அவளும் சம்மதித்தாள்.மனைவியின் சம்மதம் கிடைத்ததும், உடனடியாக வயோதிபர் வீட்டுக்குச்சென்ற தரகரான கணவன் 8ஆயிரம் ரூபா காசு வாங்கினார். அதுவும் வாடகைக் காசாம்.மறுநாள் காலை மனைவி சகிதம் அந்த செல்வந்தர் வீட் டுக்குச் சென்ற அவர் வயோதிபரிடம் மனைவியை ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

கணவன் சென்ற மறு கணமே அவளிடம் பிரஸ்தாப வயோதிபர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. செய்வதறியாது தவித்த அவள் இரண்டு நாள்களுக்குப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாள்.

முறைப்பாட்டை அடுத்து, தீவிரமடைந்த பொலிஸார் வயோதிபரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது தான், கல்யாணத் தரகர் தனது மனைவியை 8ஆயிரம் ரூபாவுக்கு விற்றார் எனத் தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:21 pm

திருவிளையாடல் 4

குஜராத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் ஷா, புதுச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரேம்சந்த் ஷாவின் மனைவி பத்மா ஷா. இவர்களுக்கு ரவி ஷா, கமல் ஷா ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

ரவி ஷாவுக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த பார்வதியைத் திருமணம் செய்து வைத்தனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியன்று வீட்டில் பார்வதி ஷா மட்டும் தனியாக இருந்தார். அப்போது கமல்ஷா, தனது அண்ணியைக் கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்தார்.

முதலில் திருடர்கள் வந்து அண்ணியைக் கொன்று விட்டதாக கமல்ஷா நாடகமாடினார். ஆனால் பார்வதி ஷாவின் சகோதரர்கள் இது கொலை என்று புகார் கூறவே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் உண்மை தெரிய வந்தது.

இந்த வழக்கில் கமல்ஷா, பத்மா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரவி ஷா தலைமறைவாகி விட்டார்.

இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் படுபாதக செயலை செய்யும் தன் மகனை தட்டிக்கேட்க வேண்டியே அவனது தாயே இந்த கொடூர செயலுக்கு துணை நின்றாள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:24 pm

திருவிளையாடல் 5

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு, "இம்ரானா' சம்பவம் அரங்கேறியுள்ளது. மருமகளை கற்பழித்த மாமனாருக்கு, ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் அபராதம் விதித்து விடுவித்தனர் பஞ்சாயத்தார். ஆனால், கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை விவாகரத்து செய்து, பெற்றோர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என, கணவனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த படுபாதகமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தரபிரதேச மாநிலம் கோரப்பூர் மாவட்டம் பாய்ரியவான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஷீத்; இவரின் மனைவி மெகருன்னிசா(30). ஒரு வருடத்திற்கு முன், ரஷீத், வேலைக்காக துபாய்க்கு சென்று விட்டதால், அவரின் தந்தையான முகமது ரம்சான் அலி(58) பாதுகாப்பில் மெகருன்னிசா இருந்தார். ஆனால், மெகருன்னிசாவை சில நாட்களுக்கு முன், ரம்சான் அலி கற்பழித்துவிட்டார்.

துபாய்க்கு வேலைக்கு சென்ற ரஷீத், கடந்த வாரம் திரும்பி வந்தார். அப்போது, தான் கற்பழிக்கப்பட்ட விவரத்தை கணவரிடம் மெகருன்னிசா கூறினார். உடன், தம்பதியர் இருவரும், தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கிராம பஞ்சாயத்தாரை அணுகினர். பிரச்னையை விசாரித்த கிராம பஞ்சாயத்தினர், ரம்சான் அலிக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். செய்த பாவத்திற்கு தண்டனையாக, இதைச் செலுத்தும்படி கூறினர். அதே நேரத்தில், மெகருன்னிசா குற்றவாளி என, அறிவித்தனர்.

"மெகருன்னிசா, தன் உடல் கவர்ச்சியை காட்டி, மாமனாரின் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அதுவே கற்பழிப்பு நடக்க காரணமாகி விட்டது. அதனால், மெகருன்னிசா குற்றவாளியே. அவரை, கணவர் ரஷீத் விவாகரத்து செய்ய வேண்டும். பின்னர் அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டனர். தான் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக, ரஷீத் பல முறை வேண்டுகோள் விடுத்தும், பஞ்சாயத்து தலைவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். "உன் மனைவியை விட்டு விலகு, அவரை தாய் வீட்டுக்கு அனுப்பு' என்று உறுதியாகக் கூறி விட்டனர். மேலும், கற்பழித்த ரம்சான் அலிக்கு எதிராக போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.


இப்பிரச்னை தொடர்பாக ரஷீத் கூறியதாவது: நான் துபாயில் வேலை பார்த்தேன். கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினேன். அப்போது, என் தந்தையால் கற்பழிக்கப்பட்ட விவரத்தை மனைவி மெகருன்னிசா கூறினார். போலீசில் புகார் செய்வதற்கு முன்னால், கிராம பஞ்சாயத்து மூலம் நியாயம் கேட்க தீர்மானித்தோம். ஆனால், பஞ்சாயத்தார் பாதகமான தீர்ப்பை வழங்கி விட்டனர். போலீசில் புகார் செய்தால், கிராமத்தை விட்டே ஒதுக்கி வைத்து விடுவோம் என்று கூறி விட்டனர்.


ஷரியத் சட்டப்படி, என் மனைவி என்னுடன் வாழ முடியாது என்கின்றனர். அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ அவர் என்னைத் தேடித்தான் வருவார். ஆனால், மெகருன்னிசா எனக்கு மனைவியாக இருக்க தகுதியில்லை என, பஞ்சாயத்தார் கூறி விட்டனர். அதனால், மற்றொரு பெண்ணுடன் புதிய வாழ்க்கையை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இவ்வாறு ரஷீத் கூறினார்.


போலீசாரோ, இச்சம்பவம் பற்றியே தங்களுக்கு தெரியாது என்றும், புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டில், முசாபர்நகரைச் சேர்ந்த இம்ரானா என்ற பெண்ணும் மாமனாரால் கற்பழிக்கப்பட்டு, பஞ்சாயத்தாரின் இதேபோன்ற தண்டனைக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:28 pm

திருவிளையாடல் 6


பரங்கிப்பேட்டை:புதுச்சத்திரம் அருகே மாமனார், மாமியார் அடித்து துன்புறுத்தியதால் வேதனையில் இளம்பெண் தனது இரண்டு வயது குழந்தையுடன், தீக்குளித்து இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த மடவாப்பள்ளம் சுனாமி நகரை சேர்ந்தவர் ராமன் (35). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோனியா (25). மகன் ஸ்ரீவித் (2).இந்நிலையில் தனது மகன் ராமன் வெளிநாடு செல்வதற்கு, உன் தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கித் தரவில்லை என மாமனார் வாழ்முனி, மாமியார் ரோகிணி ஆகியோர் அடிக்கடி சோனியாவிடம் தகராறு செய்து வந்தனர். இதனால் சோனியா தனது குழந்தையுடன், தாய் வீடான புதுக்குப்பத்திற்கு சென்று விட்டார்.
கடந்த வாரம் சோனியா மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் சோனியாவிடம் மீண்டும் தகராறு செய்து, உன் தாய் வீட்டிற்கு சென்று விடு என கூறி துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து சோனியா வெளிநாட்டில் உள்ள தனது கணவர் ராமனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதற்கு, ராமன் எனது பெற்@றாருடன் பிரச்னை செய்யாமல் இருந்தால் பணம் அனுப்புவேன். இல்லையென்றால் பணம் அனுப்ப மாட்டேன் என கூறியுள்ளார்.இதனால் வாழ்க்கையை வெறுத்த சோனியா தனது மகன் ஸ்ரீவித்தை மடியில் உட்கார வைத்து தன் மீதும், தனது மகன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் இறந்தனர்.இதுகுறித்து சோனியாவின் தந்தை கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:30 pm

திருவிளையாடல் 7

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் உடலில் தீ வைத்துதற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆவடி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

ஆவடி முத்தாபுதுப்பேட்யைைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சீனிவாசன். இவரது மனைவி மாலதி (வயது 28).இவர்களுக்கு கமலி (6), வருசம்மா (5), கிஷோர் (3) ஆகிய மூன்று குழந்தைகள். இவர்களது வீட்டுக்கு அருகில்சீனிவாசனின் தாயார் கிருஷ்ணவேணி வசித்து வருகிறார்.

மாமியார் கிருஷ்ணவேணிக்கும் மாலதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. மாலதியை கிருஷ்ணவேணிகொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந் நிலையில் நேற்றிரவும் மருமகள் மாலதியுடன் சண்டைக்குப் போனார் கிருஷ்ணவேணி. வாய்க்கு வந்தபடிஅவர் திட்டியதால் அழுதபடியே தன் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் போன மாலதி, அவர்கள் மீதுமணணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டார். இதில் குழந்தைகள் அலறித் துடித்தன. வீட்டை உள்பக்கமாக மாலதிபூட்டிக் கொண்டதால் யாராலும் உள்ளே நுழைய முடியவில்லை. சிறிது நேரத்தில் வீடே தீப்பிடித்துக் கொண்டது.

பொது மக்கள் திரண்டு வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது மாலதியும், குழந்தைகள் கமலியும்கிஷோரும் உடல் முழுவதும் கரிக்கட்டையாக எரிந்து, இறந்து கிடந்தனர். வருசம்மாவின் உடலில் உயிர் இருந்தது.

அந்தக் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றிஅவளும் இறந்தாள்.


Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக