ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

+5
இளமாறன்
balakarthik
உமா
krishnaamma
aathma
9 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by aathma Thu Jul 21, 2011 11:35 am

First topic message reminder :

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…

“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.

“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.

பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

***

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

***

தட்டிக்கழிக்க பல காரணங்கள்…

“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.

“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றி-தினத்தந்தி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வாசகி ஒருவர் வெளியிட்ட கருத்து

என்னமோ திருமண பந்தங்கள் ஏற்படாமல் போவதற்கு பெண்ணும், பெண் வீட்டாரும் மட்டுமே காரணம் என ஒருதலை பட்சமாக எழுதியுள்ளீர்கள் .

மணமகனின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கைகள் , சம்பாதிக்க கையாலாகாமல் மாமனார் சொத்து மற்றும் மனைவி சம்பாத்தியத்தில் குளிர் காய எண்ணுதல் , சம்பாதிக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் மாப்பிள்ளை திமிர் , பந்தா காட்டிக்கொள்ள எண்ணுதல் போன்றவையே திருமணம் நடைபெறாமல் போக முக்கிய காரணங்கள் .

ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்ணுக்கு சுதந்திரம் இல்லாமல் அடிமைப்பட்டு கிடந்தாள் . இன்று பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் இன்றும் அவள் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது ஆண்களின் உச்ச கட்ட சுயநலத்தைக் காட்டுகிறது .

பெண்ணை கட்டிகொடுத்துவிட்டு , பெண்ணின் பெற்றோர் முதியோர் இல்லம் போய்விடவேண்டும் அல்லது எங்கேயோ எப்படியோ நாசமாய் போய்விட வேண்டும் ஆனால் ஆண்மகனை பெற்ற பெற்றவர்கள் மட்டும் ,வீட்டிற்கு வரும் மருமகளை அடிமையாய் கசக்கி பிழிந்து வேலை வாங்கி , போய் சேருகின்ற காலம் வரை சொகுசாக டீ , காபி , டிபன் சாப்பிட்டுக் கொண்டு போய் சேரவேண்டும் . நன்றாக இருக்கிறதையா இந்த சமூக நீதி !

ஒரு காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்பதல் என்பது ஆணிற்கு அவமானம் என்று நினைத்தார்கள் . ஆனால் இன்றோ வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என கேட்டு கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆண்கள் .

நம் இந்திய பண்பாடை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் , ஆனால் பெண்கள் மாத்திரம் மாமனார் , மாமியார் என எல்லா நார்களையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் அப்படிதானே

பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லத்திற்கு செல்லும் போது ஆணை பெற்றவர்களும் முதியோர் இல்லத்திற்கு செல்லட்டுமே , என்ன கெட்டுவிடப் போகிறது .

பெரியவர்களை பேணிகாப்பது என்பது மனிதாபிமான செயல் .
இதை நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் செய்யவேண்டும் .

ஆக ஆணின் பெற்றோர் பேணி காக்கப்படவேண்டியவர்கள் என்றால் பெண்ணின் பெற்றோரும் பேணி காக்கப்படவேண்டியவர்கள் தானே

ஒரு பெண்ணிற்கு தன் பெற்றோரை அவர்களது கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்ள உரிமை இல்லை என கூறும் இந்த மாப்பிளை வர்க்கம் கணவனின் பெற்றோரை மட்டும் அப்பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடூரமான சுயநலச் செயல்

எனவே இந்த ஏற்றத்தாழ்வு நீங்கி ஆண் , பெண் இருவருமே தங்களது பெற்றோரையும் , மாமனார் , மாமியார் அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் .அவர்களது கடைசிகாலத்தில் நிம்மதியாக அவர்கள் இருக்க வழிவகை செய்யவேண்டும் . அவர்களை காப்பாற்றவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூடாது .

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by aathma Thu Jul 21, 2011 2:25 pm

krishnamma wrote
பெண் மட்டமாக கமெண்ட் அடிக்கிறாள்

உண்மையான வாதத்தை முன் வைத்தால் , அதற்கு சரியான விளக்கம் கொடுக்க இயலாத காரணத்தால் ஏதாவது ஒன்றை சொல்லி பெண்ணின் வாயை அடைப்பது தானே நமது சமூக நீதி

Last edited by aathma on Thu Jul 21, 2011 2:41 pm; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by உமா Thu Jul 21, 2011 2:32 pm

krishnaamma wrote:
உமா wrote:
பையன்கள் எப்பவுமே தங்கள் அப்பா அம்மா வை விட பெண்டாட்டி இன் அப்பா அம்மாக்கு மதிப்பு அதிகம் தருவா.
அப்படி எந்த பெண்ணும் நினைப்பது இல்லை.....
இன்னும் விளக்கினால் நமக்குலே விவாதங்கள் தான் ஏற்படும்.
ஒரு பெண்ணாக சொல்ட்றேன்...சுயநலம் இருக்கும் ஆண்கள் வீட்டில் ஒரு பெண்ணால் வாழவே முடியாது..
மகனின் சந்தோஷம் தான் முக்கியம் என்று பெண்ணை அவலப்படுத்தும் கேவலமான சில மாமியார்கள் இருந்தால் அவரகளை அடக்க ஒரு மருமகள் வருவாள்... அனுபவத்தில் கூறுகிறேன்.

நீங்கள் சொவது ரொம்ப சரி ,(நான் சிவப்பு எழுத்தில் போட்டுள்ளதும் 100% சத்தியம் நிஜம் ) சில மாமியார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள் பாருங்கள் புன்னகை யாரும் பையங்களை பெர்ற்றவர்கள் ரொம்ப சொக்க தங்கம் என்று சொல்லவில்லை ஆனால் கல்யாணத்தை நிறுத்துவது பெண்கள் பக்கம் அதிகமாகி வருகிறது அதுவும் அற்ப கரணங்களுக்காக என்பது தான் அந்த பத்திரிகை இன் செய்தி என் வாதமும் அது தான். மற்ற படி வேறு ஏதும் இல்லை புன்னகை

புன்னகை புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by aathma Thu Jul 21, 2011 3:24 pm

உமா wrote:ஆத்மா, உங்களின் அனைத்து கருத்துக்களையும் நான் ஆமோத்திக்கிறேன்...
அனுபவத்தில்............

நன்றி தோழி ,

அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளின் அடிப்படையில்
மாப்பிள்ளை வீட்டாரின் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்
ஒவ்வொரு பெண்ணும் .

அப்பொழுதான் பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் ஒடுங்கும் .

முன்னொரு காலத்தில் மாப்பிள்ளை வீட்டார் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டார்கள் . அப்பொழுது பெண் வீட்டார் கொடுத்த சாபம்தான் இப்பொழுது பலித்துக் கொண்டு இருக்கிறது .

திருமணம் நின்றுவிட்டால் தன் பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்த பெற்றோர் , இன்று திருமணம் நின்றாலும் பரவாயில்லை ஆனால் தன் பெண் கொடுமைக்காரர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் .

திருமணதிற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டார் இவ்வளவு ஆட்டம் போடுகின்றனரே , திருமணத்திற்கு பின் இவர்கள் எப்படியெல்லாம் கொடுமைபடுத்துவார்களோ என்று பயந்தே பெண்ணை பெற்றவர் திருமணத்தை நிறுத்துகின்றார் .

ஆக திருமணத்தை நிறுத்த வைப்பதே மாப்பிள்ளை வீட்டார் தானே ?
அது ஏன் அவர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது ?

முதலில் தான் நியாமாக நடந்துகொண்டாமா என்று பார்த்துவிட்டு பின் மற்றவரைப் பார்த்து அநியாயவாதி என்று சொல்லட்டும் இந்த மாப்பிள்ளை வீட்டார் .

Last edited by aathma on Thu Jul 21, 2011 3:57 pm; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by உமா Thu Jul 21, 2011 3:35 pm

aathma wrote:
உமா wrote:ஆத்மா, உங்களின் அனைத்து கருத்துக்களையும் நான் ஆமோத்திக்கிறேன்...
அனுபவத்தில்............

நன்றி தோழி ,

அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளின் அடிப்படையில்
மாப்பிள்ளை வீட்டாரின் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்
ஒவ்வொரு பெண்ணும் .

அப்பொழுதான் பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் ஒடுங்கும் .

முன்னொரு காலத்தில் மாப்பிள்ளை வீட்டார் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டார்கள் . அப்பொழுது பெண் வீட்டார் கொடுத்த சாபம்தான் இப்பொழுது பலித்துக் கொண்டு இருக்கிறது .

திருமணம் நின்றுவிட்டால் தன் பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்த பெற்றோர் , இன்று திருமணம் நின்றாலும் பரவாயில்லை ஆனால் தன் பெண் கொடுமைக்காரர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் .

திருமணதிற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டார் இவ்வளவு ஆட்டம் போடுகின்றனரே , திருமணத்திற்கு பின் இவர்கள் எப்படியெல்லாம் கொடுமைபடுத்துவார்களோ என்று பயந்தே பெண்ணை பெற்றவர் திருமணத்தை நிறுத்துகின்றார் .

ஆக திருமணத்தை நிறுத்த வைப்பதே மாப்பிள்ளை வீட்டார் தானே ?
அது ஏன் அவர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது ?

முதலில் தான் நியாமாக நடந்துகொண்டாமா என்று பார்த்துவிட்டு பின் மற்றவைப் பார்த்து அநியாயவாதி என்று சொல்லட்டும் இந்த மாப்பிள்ளை வீட்டார் .

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by SK Thu Jul 21, 2011 3:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by aathma Thu Jul 21, 2011 3:46 pm

இன்னும் மற்றும் ஒரு உண்மையை இங்கு நான் சொல்லி ஆக வேண்டும்

நாற்பது வயதாகியும் இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு
காரணம் பெண் வீட்டார் அல்ல

அந்த இளைஞர்களின் பெற்றோரே காரணம் .

எப்படி எனில் ,

ஆணை பெற்றவருக்கு ஒரு அலட்சியம் இருக்கிறது , ஆண் மகந்தானே அப்படியிருக்க கட்டாயம் அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது இல்லை . அவனே எப்படியோ வாழ்ந்துகொண்டு போகிறான் . பொறுப்பாக , அக்கறையாக நான்கு இடம் ஏறி இறங்கி பெண் தேடவேண்டும் என்று அவசியம் இல்லை என்று நினைக்கின்றனர்

மகனுக்கு 25 முதல் 35 வயது ஆகும் வரை வேண்டுமானால் பெண் தேடுகின்றனர் .
அதற்க்கு மேற்பட்ட வயதுடைய மகனுக்கு பெண் தேடுவதில்லை அவர்கள் .

சரி ,மகனுக்கு 35 வயது ஆகும் வரை பெண் தேடுகின்றனரே , அதையாவது ஒழுங்காக செய்கின்றனரா என்றால் இல்லை .

மகனை பணம் காய்க்கும் மரமாக எண்ணிக் கொண்டு , மகனை வைத்து பெண் வீட்டாரிடம் பேரம் பேசி பணத்தை கறக்க முயல்கின்றனர் .
மகனும் தன் பெற்றோர் தனக்காகத்தானே இவ்வாறு பேரம் பேசுகின்றனர் என்று அவர்களை முட்டாள்தனமாக நம்பி காத்திருக்கின்றார் நல்ல பண பசையுள்ள இடம் சிக்கும் என்று

ஒரு கட்டத்தில் மகனுக்கு வயது அதிகமாகியபின் ,
வயது அதிகமாகிய காரணத்தால் முன்புபோல்
அடித்து பேரம் பேச முடியாது பெண் வீட்டாரிடம் என்பதை
தெரிந்து கொள்ளும் பெற்றோர் அப்படியே சைலன்ட் ஆகி விடுகிறார்கள்

இப்போது அந்த இளைஞனின் கதி என்ன ?
பெற்றோர் தன்னை கவனித்து திருமணம் செய்து வைக்கமாட்டேன் என்கிறார்கள் .
பெண்ணை பெற்றோரோ , மாப்பிள்ளை தன் பெற்றோர் உடன் வந்து பெண் கேட்டால்தான் பெண் கொடுப்பேன் என்கின்றனர் .

இவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பது இளைஞர்களே

இன்னும் சில பெற்றோர்கள் இருக்கின்றனர் எங்கே தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் வருகின்ற மருமகளின் பேச்சை கேட்டு மகன் தனிக்குடித்தனம் போய்விட்டால் தான் நடுதெருவில் நிற்கவேண்டுமே என்று எண்ணி மகனுக்கு அவர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வது இல்லை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by ரேவதி Thu Jul 21, 2011 3:48 pm

ஆத்மா உங்கள் வாதம் அருமை உண்மையை சிறப்பாக கூறி உள்ளீர் அருமையிருக்கு அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by பூஜிதா Thu Jul 21, 2011 3:51 pm

aathma wrote:இன்னும் மற்றும் ஒரு உண்மையை இங்கு நான் சொல்லி ஆக வேண்டும்

நாற்பது வயதாகியும் இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு
காரணம் பெண் வீட்டார் அல்ல

அந்த இளைஞர்களின் பெற்றோரே காரணம் .

எப்படி எனில் ,

ஆணை பெற்றவருக்கு ஒரு அலட்சியம் இருக்கிறது , ஆண் மகந்தானே அப்படியிருக்க கட்டாயம் அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது இல்லை . அவனே எப்படியோ வாழ்ந்துகொண்டு போகிறான் . பொறுப்பாக , அக்கறையாக நான்கு இடம் ஏறி இறங்கி பெண் தேடவேண்டும் என்று அவசியம் இல்லை என்று நினைக்கின்றனர்

மகனுக்கு 25 முதல் 35 வயது ஆகும் வரை வேண்டுமானால் பெண் தேடுகின்றனர் .
அதற்க்கு மேற்பட்ட வயதுடைய மகனுக்கு பெண் தேடுவதில்லை அவர்கள் .

சரி ,மகனுக்கு 35 வயது ஆகும் வரை பெண் தேடுகின்றனரே , அதையாவது ஒழுங்காக செய்கின்றனரா என்றால் இல்லை .

மகனை பணம் காய்க்கும் மரமாக எண்ணிக் கொண்டு , மகனை வைத்து பெண் வீட்டாரிடம் பேரம் பேசி பணத்தை கறக்க முயல்கின்றனர் .
மகனும் தன் பெற்றோர் தனக்காகத்தானே இவ்வாறு பேரம் பேசுகின்றனர் என்று அவர்களை முட்டாள்தனமாக நம்பி காத்திருக்கின்றார் நல்ல பண பசையுள்ள இடம் சிக்கும் என்று

ஒரு கட்டத்தில் மகனுக்கு வயது அதிகமாகியபின் ,
வயது அதிகமாகிய காரணத்தால் முன்புபோல்
அடித்து பேரம் பேச முடியாது பெண் வீட்டாரிடம் என்பதை
தெரிந்து கொள்ளும் பெற்றோர் அப்படியே சைலன்ட் ஆகி விடுகிறார்கள்

இப்போது அந்த இளைஞனின் கதி என்ன ?
பெற்றோர் தன்னை கவனித்து திருமணம் செய்து வைக்கமாட்டேன் என்கிறார்கள் .
பெண்ணை பெற்றோரோ , மாப்பிள்ளை தன் பெற்றோர் உடன் வந்து பெண் கேட்டால்தான் பெண் கொடுப்பேன் என்கின்றனர் .

இவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பது இளைஞர்களே

இன்னும் சில பெற்றோர்கள் இருக்கின்றனர் எங்கே தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் வருகின்ற மருமகளின் பேச்சை கேட்டு மகன் தனிக்குடித்தனம் போய்விட்டால் தான் நடுதெருவில் நிற்கவேண்டுமே என்று எண்ணி மகனுக்கு அவர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வது இல்லை

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by உமா Thu Jul 21, 2011 3:53 pm

aathma wrote:இன்னும் மற்றும் ஒரு உண்மையை இங்கு நான் சொல்லி ஆக வேண்டும்

நாற்பது வயதாகியும் இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு
காரணம் பெண் வீட்டார் அல்ல

அந்த இளைஞர்களின் பெற்றோரே காரணம் .

எப்படி எனில் ,

ஆணை பெற்றவருக்கு ஒரு அலட்சியம் இருக்கிறது , ஆண் மகந்தானே அப்படியிருக்க கட்டாயம் அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது இல்லை . அவனே எப்படியோ வாழ்ந்துகொண்டு போகிறான் . பொறுப்பாக , அக்கறையாக நான்கு இடம் ஏறி இறங்கி பெண் தேடவேண்டும் என்று அவசியம் இல்லை என்று நினைக்கின்றனர்

மகனுக்கு 25 முதல் 35 வயது ஆகும் வரை வேண்டுமானால் பெண் தேடுகின்றனர் .
அதற்க்கு மேற்பட்ட வயதுடைய மகனுக்கு பெண் தேடுவதில்லை அவர்கள் .

சரி ,மகனுக்கு 35 வயது ஆகும் வரை பெண் தேடுகின்றனரே , அதையாவது ஒழுங்காக செய்கின்றனரா என்றால் இல்லை .

மகனை பணம் காய்க்கும் மரமாக எண்ணிக் கொண்டு , மகனை வைத்து பெண் வீட்டாரிடம் பேரம் பேசி பணத்தை கறக்க முயல்கின்றனர் .
மகனும் தன் பெற்றோர் தனக்காகத்தானே இவ்வாறு பேரம் பேசுகின்றனர் என்று அவர்களை முட்டாள்தனமாக நம்பி காத்திருக்கின்றார் நல்ல பண பசையுள்ள இடம் சிக்கும் என்று

ஒரு கட்டத்தில் மகனுக்கு வயது அதிகமாகியபின் ,
வயது அதிகமாகிய காரணத்தால் முன்புபோல்
அடித்து பேரம் பேச முடியாது பெண் வீட்டாரிடம் என்பதை
தெரிந்து கொள்ளும் பெற்றோர் அப்படியே சைலன்ட் ஆகி விடுகிறார்கள்

இப்போது அந்த இளைஞனின் கதி என்ன ?
பெற்றோர் தன்னை கவனித்து திருமணம் செய்து வைக்கமாட்டேன் என்கிறார்கள் .
பெண்ணை பெற்றோரோ , மாப்பிள்ளை தன் பெற்றோர் உடன் வந்து பெண் கேட்டால்தான் பெண் கொடுப்பேன் என்கின்றனர் .

இவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பது இளைஞர்களே

இன்னும் சில பெற்றோர்கள் இருக்கின்றனர் எங்கே தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் வருகின்ற மருமகளின் பேச்சை கேட்டு மகன் தனிக்குடித்தனம் போய்விட்டால் தான் நடுதெருவில் நிற்கவேண்டுமே என்று எண்ணி மகனுக்கு அவர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வது இல்லை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by aathma Thu Jul 21, 2011 3:56 pm

ரேவதி wrote:ஆத்மா உங்கள் வாதம் அருமை உண்மையை சிறப்பாக கூறி உள்ளீர் அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி தோழி ரேவதி அவர்களே

நிச்சயம் என் வாதத்திற்கு ஆதரவு கிடைக்கும் மனிதத் தன்மையுள்ள , மனசாட்சிக்கு பயந்த நேர்மையான மனிதர்கள் இந்த பூமியில் உள்ள வரை .

இன்னும் மானிட இனம் முற்றிலும் தடம் மாறி அநியாய பாதைக்கு சென்றுவிடவில்லை .

பெண் விடுதலைக்கு போராடும் பாரதியார்கள் இன்றும் உலகெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்

தனக்கு எதிரான அநீதியை எதிர்க்கும் ஜான்சி ராணீகளும் இருக்கத்தான் செய்கின்றனர் இன்றும்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 3 Empty Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum