புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 11:35 am

First topic message reminder :

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…

“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.

“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.


பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

***

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

***

தட்டிக்கழிக்க பல காரணங்கள்…

“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.

“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றி-தினத்தந்தி



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வாசகி ஒருவர் வெளியிட்ட கருத்து


என்னமோ திருமண பந்தங்கள் ஏற்படாமல் போவதற்கு பெண்ணும், பெண் வீட்டாரும் மட்டுமே காரணம் என ஒருதலை பட்சமாக எழுதியுள்ளீர்கள் .

மணமகனின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கைகள் , சம்பாதிக்க கையாலாகாமல் மாமனார் சொத்து மற்றும் மனைவி சம்பாத்தியத்தில் குளிர் காய எண்ணுதல் , சம்பாதிக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் மாப்பிள்ளை திமிர் , பந்தா காட்டிக்கொள்ள எண்ணுதல் போன்றவையே திருமணம் நடைபெறாமல் போக முக்கிய காரணங்கள் .

ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்ணுக்கு சுதந்திரம் இல்லாமல் அடிமைப்பட்டு கிடந்தாள் . இன்று பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் இன்றும் அவள் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது ஆண்களின் உச்ச கட்ட சுயநலத்தைக் காட்டுகிறது .

பெண்ணை கட்டிகொடுத்துவிட்டு , பெண்ணின் பெற்றோர் முதியோர் இல்லம் போய்விடவேண்டும் அல்லது எங்கேயோ எப்படியோ நாசமாய் போய்விட வேண்டும் ஆனால் ஆண்மகனை பெற்ற பெற்றவர்கள் மட்டும் ,வீட்டிற்கு வரும் மருமகளை அடிமையாய் கசக்கி பிழிந்து வேலை வாங்கி , போய் சேருகின்ற காலம் வரை சொகுசாக டீ , காபி , டிபன் சாப்பிட்டுக் கொண்டு போய் சேரவேண்டும் . நன்றாக இருக்கிறதையா இந்த சமூக நீதி !

ஒரு காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்பதல் என்பது ஆணிற்கு அவமானம் என்று நினைத்தார்கள் . ஆனால் இன்றோ வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என கேட்டு கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆண்கள் .

நம் இந்திய பண்பாடை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் , ஆனால் பெண்கள் மாத்திரம் மாமனார் , மாமியார் என எல்லா நார்களையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் அப்படிதானே

பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லத்திற்கு செல்லும் போது ஆணை பெற்றவர்களும் முதியோர் இல்லத்திற்கு செல்லட்டுமே , என்ன கெட்டுவிடப் போகிறது .

பெரியவர்களை பேணிகாப்பது என்பது மனிதாபிமான செயல் .
இதை நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் செய்யவேண்டும் .

ஆக ஆணின் பெற்றோர் பேணி காக்கப்படவேண்டியவர்கள் என்றால் பெண்ணின் பெற்றோரும் பேணி காக்கப்படவேண்டியவர்கள் தானே

ஒரு பெண்ணிற்கு தன் பெற்றோரை அவர்களது கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்ள உரிமை இல்லை என கூறும் இந்த மாப்பிளை வர்க்கம் கணவனின் பெற்றோரை மட்டும் அப்பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடூரமான சுயநலச் செயல்

எனவே இந்த ஏற்றத்தாழ்வு நீங்கி ஆண் , பெண் இருவருமே தங்களது பெற்றோரையும் , மாமனார் , மாமியார் அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் .அவர்களது கடைசிகாலத்தில் நிம்மதியாக அவர்கள் இருக்க வழிவகை செய்யவேண்டும் . அவர்களை காப்பாற்றவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூடாது .




aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 1:35 pm

உமா wrote:ஆத்மா, பெண்களை குறைகூறி இதில் நிறைய கருத்துக்கள் இருந்தது...நான் எதிர்ப்பு மேர்க்கோல் போடலாம்னு நினைத்தேன்..ஆனால், ஏற்கனவே ஒரு பெண் அவளின் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்...அதை நான் ஆமோதிக்கிறேன்.
பெண்கள் மட்டுமே அனைத்திர்க்கும் காரணமில்லை.

காதிலிக்கும் போது சொல்வதை சில ஆண்கள் திருமணத்திர்க்கு பின் நிறைவேற்றுவது இல்லை....இன்றும் திருமணமான பெண்ணையும், குழந்தையும் தனியே விட்டுவிட்டு அம்மாவின் சம்மததிர்க்காக காத்திருக்கும் கேடுகெட்ட ஆண்களும் உள்ளனர்...

அம்மா, காதலிக்கும்போது வேண்டாம் என்றாள்...திருமணம் ஆனா பின்னும் அந்த பெண் வேண்டாம் என்கிறாள்,ஒரு குழந்தை பிறந்த பின்னும் வேண்டவே வேண்டாம் என்கிறாள்...இவள் ஒரு நல்ல தாயா...எனக்கே தெரியல....காரணம் சமூதாயம் கேவல படுத்துமா, பெண் வீட்டில் பெக்ரௌண்ட் சரி இல்லையாம்....

ஒரு பெண்ணை பெற்றவள், ஒரு பெண்ணையும், அவளுக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையையும் தவிக்க விட்டு சுய கவ்ரவத்தோடு இருக்காங்க..அந்த தாயின் பின்னே மறைந்து வாழ்கிறான் மகன்...
இப்போ அந்த பெண்ணின் நிலை தனிமை....

இதேர்க்கென்ன பதில் சொல்வார்கள்!


சகோதரி உமா அவர்களே , உங்கள் கருத்தேதான் என் கருத்தும்

பெண்களுக்கு எதிராக கருத்து சொல்லப்பட்டு இருப்பதை நான் ஆமோதிக்கவில்லை

மாப்பிள்ளையும் , மாபிள்ளையை பெற்றோரும் மிகவும் நல்லவர்கள்
பெண்ணும் பெண்ணை பெற்றோரும் மிகவும் கெட்டவர்கள் என்பதைப்போன்று அந்த நாளிதழில் வெளியாகி இருந்தது அந்த செய்தி

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல , மாப்பிள்ளை வீட்டாரின் அராஜகங்களை மறைத்துவிட்டு பெண்ண வீட்டாரை பற்றி மட்டுமே குறை சொல்லி எழுதப் பட்டு இருக்கிறது

நியாம் என்று சொன்னால் இரு தரப்பினரிடத்திலும் உள்ள குறைகளை சொல்லவேண்டும் . அதுதான் நியாம்
அதைவிடுத்து இப்படி ஒருதலை பட்சமாக செய்தி வெளியிடுவது தவறு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2011 1:43 pm

உமா wrote:ஆத்மா, பெண்களை குறைகூறி இதில் நிறைய கருத்துக்கள் இருந்தது...நான் எதிர்ப்பு மேர்க்கோல் போடலாம்னு நினைத்தேன்..ஆனால், ஏற்கனவே ஒரு பெண் அவளின் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்...அதை நான் ஆமோதிக்கிறேன்.
பெண்கள் மட்டுமே அனைத்திர்க்கும் காரணமில்லை.

காதிலிக்கும் போது சொல்வதை சில ஆண்கள் திருமணத்திர்க்கு பின் நிறைவேற்றுவது இல்லை....இன்றும் திருமணமான பெண்ணையும், குழந்தையும் தனியே விட்டுவிட்டு அம்மாவின் சம்மததிர்க்காக காத்திருக்கும் கேடுகெட்ட ஆண்களும் உள்ளனர்...

அம்மா, காதலிக்கும்போது வேண்டாம் என்றாள்...திருமணம் ஆனா பின்னும் அந்த பெண் வேண்டாம் என்கிறாள்,ஒரு குழந்தை பிறந்த பின்னும் வேண்டவே வேண்டாம் என்கிறாள்...இவள் ஒரு நல்ல தாயா...எனக்கே தெரியல....காரணம் சமூதாயம் கேவல படுத்துமா, பெண் வீட்டில் பெக்ரௌண்ட் சரி இல்லையாம்....

ஒரு பெண்ணை பெற்றவள், ஒரு பெண்ணையும், அவளுக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையையும் தவிக்க விட்டு சுய கவ்ரவத்தோடு இருக்காங்க..அந்த தாயின் பின்னே மறைந்து வாழ்கிறான் மகன்...
இப்போ அந்த பெண்ணின் நிலை தனிமை....

இதேர்க்கென்ன பதில் சொல்வார்கள்!


இப்ப கல்யாணத்தை நிறுத்துவது தானே பிர்ச்சனை உமா?எல்லோருக்குமா இப்படி நடக்கிறது? எல்லோருமே கெட்டவா இல்லயே, அடர்க்காக கமல் மாதிரி வாழ்ந்து பார்த்தா கல்யாணம் கட்ட முடியும்? எவ்வளவு செலவழித்து ஏற்பாடு செய்கிறார்கள் , நிமிஷமாக ஒரு கரணமுமே இல்லம் நிறுத்தினா? அல்லது காரணத்தை சொல்ல மறுத்தா? அதுக்கு என்ன சொல்கிறீர்கள் ?

என் உயீர் தோழி , அவள் நாத்தனார் மகனுக்கு கல்யாணம் என்று கூர்காவுன் வருவதாக இருந்தாள்.நாங்க பரிதாபாதில் இருந்ததால் எங்கள் வீட்டுக்கும் வருவதாக சொன்னால். 21 கல்யாணம் , டிக்கெட் எல்லாம் புக் பண்ணி யாச்சு.
ஆக்ரா மதூரா போக வண்டியும் ஏற்பாடு செய்து விட்டோம், பார்த்தால் இவ 17தித் சொல்கிறா ,நாங்க வரலை சுமதி எல்லாம் கான்சல் பண்ணிடு, கல்யாணம் நின்னு போச்சு என்று. எனக்கு ஒரே ஷாக், என்னடி எண்டால் இப்ப கேகாதே அப்புறம் சொகிறேன் என ஃபோன் ஐ வைத்துவிட்டாள். பாவம் அந்த பையனுக்கு அம்மா கிடையாது, இவதான் (மாமி) எல்லாம். பிறகு தெரிந்த து அந்த பெண்ணின் தாயாருக்கு இந்த சம்பந்தத்தில் முதலில் இருந்த விருப்பம் இல்லையாம் பெண்ணுக்கு பையனை பிடித்துவிட்டதால் , பெண்ணின் அப்பாவும் சம்மதித்து இருந்ததாலும் ஒப்புக்கொண்டு இருந்திருக்கா, பிறகு ஹைதராபாத் போயி பையனை பார்த்தவள் வந்ததும் ஒரு டி‌வி ஆர்டிஸ்ட் ஐ பிடித்து அந்த பையனின் முதல் மனை வி போல் தான் மகளிடமே பேசவைத்துள்ளா ள, இது இவர்களுக்கு பிறகு தெரிந்த தாம். ஏனென்றால், பெண்ணின் விருப்பம் இவர்கள் அறிந்தது தான், எனவே அவளை அவா அண்ணா மன்னி மூலம் கூட்டி வந்து கல்யாணம் செய்யவும் இவர்கள் முயன்று உள்ளார்கள். அப்ப அந்த பெண்ணின் மன்னி கேட்டு இருக்கா இவளை உங்க பையனுக்கு முதல் மனைவி உண்டா என ? எப்படி சினிமா போல போகுது பார்த்தீர்களா? என்றாலும் இன்னும் பேச்சு வார்த்தை நடக்கிறது, ஆனால் நின்ற கல்யாணம் நின்றது தானே? இதுக்கு என்ன சொல்கிறீர்கள் , பெண்ணை விட அவளை பெற்றவள் ரொம்ப மோசம் சோகம் பெண்ணை பெற்ற அம்மா டாலி ஈடு இல்லாமல் இருந்தாலே எல்லாம் நல்ல படி நடக்கும் என்பது என் கருத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 21, 2011 1:48 pm

நல்ல தெளிவு பிறக்கும் கட்டுரை வாழ்த்துக்கள் ஆத்மா சூப்பருங்க

ஆண் மேலும் குறை உள்ளது பெண்மெலும் குறை உள்ளது ..
முதலில் இருவரும் சமம் என்பதை உணர வேண்டும் இருவருக்கும் மனம் அதில் ஆசைகள் கடமைகள் இப்படி அதிகம் உண்டு தன்மானம் இப்படி...தான் தனக்கு என்று வட்டம் சுயநலமாக போட பட்டால் அவர்கள் திருமணம் நன்றாக அமையும் ஆனால் அவர்களை சுற்றி உள்ள குடும்ப பந்தம் ..உறவினர் எல்லாரையும் பிரித்து விட்டு தான் மட்டும் தனித்து வாழ்தல் பார்ப்பது நன்றாக இருக்கும் ஆனால் இப்படியே கால சக்கரம் ஓடுவதில்லை ஒரு நாள் இவர்களும் தேவை அவர்களும் தேவை என வரும் பொது யார் வீட்டிலும் நிற்க முடியாது ..
குடும்பமாய் வாழும் பெண்கள் நல்ல கலாசாரத்தை உருவாக்குகிறார்கள் ..தனி குடித்தனம் போயி தான் குழந்தைகளையும் தனிமை படுத்துகிறார்கள் ... இதற்கெல்லாம் சுயநலம் ஒன்று தான் என நினைக்கிறேன் . தான் பெற்றோரை கவனிக்காத மகன்களும் உண்டு மகள்களும் உண்டு .. இன்றைய கால சூழ்நிலை வருத்தம் தான் அதிகரிக்கிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 2 Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2011 1:49 pm

உமா wrote:
பையன்கள் எப்பவுமே தங்கள் அப்பா அம்மா வை விட பெண்டாட்டி இன் அப்பா அம்மாக்கு மதிப்பு அதிகம் தருவா.
அப்படி எந்த பெண்ணும் நினைப்பது இல்லை.....
இன்னும் விளக்கினால் நமக்குலே விவாதங்கள் தான் ஏற்படும்.
ஒரு பெண்ணாக சொல்ட்றேன்...சுயநலம் இருக்கும் ஆண்கள் வீட்டில் ஒரு பெண்ணால் வாழவே முடியாது..
மகனின் சந்தோஷம் தான் முக்கியம் என்று பெண்ணை அவலப்படுத்தும் கேவலமான சில மாமியார்கள் இருந்தால் அவரகளை அடக்க ஒரு மருமகள் வருவாள்... அனுபவத்தில் கூறுகிறேன்.

நீங்கள் சொவது ரொம்ப சரி ,(நான் சிவப்பு எழுத்தில் போட்டுள்ளதும் 100% சத்தியம் நிஜம் ) சில மாமியார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள் பாருங்கள் புன்னகை யாரும் பையங்களை பெர்ற்றவர்கள் ரொம்ப சொக்க தங்கம் என்று சொல்லவில்லை ஆனால் கல்யாணத்தை நிறுத்துவது பெண்கள் பக்கம் அதிகமாகி வருகிறது அதுவும் அற்ப கரணங்களுக்காக என்பது தான் அந்த பத்திரிகை இன் செய்தி என் வாதமும் அது தான். மற்ற படி வேறு ஏதும் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 1:58 pm

krishnaamaa wrote
ஆனால் பெண்களின் குணம் ரொம்ப மாறிவிட்டது இதை யார்ம் மறுக்க முடியாது தானே?

ஆமாம் அம்மா , மறுக்க முடியாது தான்

ஆனால் ஏன் குணம் மாறக் கூடாது என்று சொல்கிறீர்கள்

பெண்ணானவள் நன்றாக படித்து ( BE , ME படித்து இருக்கவேண்டும் , Bsc , Msc எல்லாம் படித்து இருக்க கூடாது அதெல்லாம் படிப்பே இல்லை )
கை நிறைய சம்பாதிக்கவேண்டும் .

மாப்பிள்ளைக்கு அதிகஅளவு வரதட்சினை கொட்டிகொடுக்கவேண்டும்

தங்கம் விலை விண்ணை தொட்டாலும் கூட
குறைந்தது 40 , 50 பவுன் போடவேண்டும் .
இதை தவிர கார் , பங்களா இத்தனையும் தரவேண்டும்

இத்தனையும் செய்துவிட்டு அந்த பெண்ணும் , பெண்ணை பெற்றவர்களும் மாப்பிள்ளைக்கும் , மாப்பிள்ளையின் பெற்றோருக்கு அடிமையாக இருக்க வேண்டும்

இதைத்தானே மாப்பிள்ளை வீட்டார் காலம் காலமாக எதிர்பார்கின்றனர் .

இந்த எதிர்பார்ப்பு எப்படி சாத்தியமாகும் ?

மாப்பிள்ளையின் தகுதிக்கு தக்க வரதட்சினைதான் பெண் வீட்டார் கொடுப்பர்

பெண்ணை விடவே குறைவாக சம்பாதிக்கும் மாப்பிளைக்கு வரதட்சினை எப்படி கொட்டி கொடுப்பர் ?

மாப்பிள்ளை வீட்டாரின் பேராசைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது .

தனக்கு அடங்கி நடக்கும் பெண் வேண்டும் எனில் தன்னை விட பொருளாதாரத்தில் குறைந்த பெண்ணைத் தான் அவர்கள் தேர்ந்து எடுக்கவேண்டும் . அதைவிடுத்து தன்னை விட அந்தஸ்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ள பெண்ணை தேர்ந்து எடுத்துவிட்டு அவள் தனக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்

அந்தஸ்தில் உயர்ந்த மாப்பிள்ளை வீட்டார் , எப்படி வேண்டுமானாலும் மற்றவர்களை மதிக்காமல் நடந்துகொள்ளலாம் . ஆனால் பெண்ண வீட்டார் மட்டும் அப்படி நடந்துகொள்ளக்கூடாது அப்படிதானே ?

மனைவியை வேலைக்கு அனுப்புவதை கேவலமாக எண்ணினர்
ஆண்கள் ஒரு காலத்தில் . தன் கையாலாகதவன்தான் பெண்டாட்டியை வேலைக்கு அனுப்புவான் என்று கேவலமாக பேசுவர் ஒரு காலத்தில்

ஆனால் இன்று வேலைக்கு போகும் பெண்களை மாத்திரமே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று நினைக்கின்றனர் மாப்பிள்ளை வீட்டார்

மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாப்பிள்ளையும் , மாப்பிள்ளை வீட்டாரும் மாறலாம் . ஆனால் பெண் வீட்டார் மட்டும் மாறக் கூடாது , அடிமையாகவே இருக்கவேண்டும் . அப்படிதானே ?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 2:04 pm

krishnaamaa wrote

அம்பிளங்கள.அடக்க நினைக்காதீங்க நீங்க அன்பா இருந்த அவனே அடங்கி போவான், அடக்க நினத்தால்....


எத்தனை குடும்பங்களில் பெண்கள் எவ்வளவோ பொறுமையுடன் , கணவர் செய்யும் அட்டூழியங்களை சகித்துக்கொண்டு அன்பாக குடும்பத்தை நடத்தி சென்று கொண்டு இருக்கிறார்கள் . அப்படி இருந்தும் அந்த கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை போட்டு மாட்டை அடிக்கிறமாதிரி அடிகிறாரே ? அது ஏன்.

தறிகெட்டு போகும் கணவனை அடக்க ஒரு மனைவி நினைத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது ?



krishnaamma wrote

எந்த காலத்திலும் பெண்களுக்கு அடக்கம் வேண்டும்.

ஆமாம் , பெண்கள் மாத்திரம்தான் அடங்கி போகவேண்டும்
ஆண்கள் எப்படிவேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் அப்படிதானே ?

அடக்கம் என்ற பெயரில் மாப்பிள்ளை வீட்டார் செய்யும் அராஜகத்திற்கு
பெண்கள் பலியாகவேண்டும் .

அடக்கம் என்ற பெயரில் பெண் முட்டாளாகவே இருக்கவேண்டும் அப்போதுதானே நன்றாக அவளை ஏமாற்ற முடியும் மாப்பிள்ளை வீட்டாரால்

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு , தனக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஒரு பெண் குரல் கொடுத்தால் அவள் திமிர் பிடித்தவள் அப்படிதானே

அடங்கி நடக்க வேண்டிய இடத்தில் , பெண் அடங்கி நடப்பாள் .
அவளுக்கு தெரியும் யார் நல்லவர் , யார் கெட்டவர் , யாருக்கு அடங்கி நடக்க வேண்டும் , யாருக்கு பாடம் சொல்லி கொடுக்கவேண்டும் என்று

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 2:14 pm

krishnaamma wrote

என்ன பேசினாலும் பெண்கள் தானே பெற்று கொடுக்கணும்? இல்ல அதுக்கும் முறை வைப்பார்களா?

பெண்தான் பெற்றுகொடுத்தாகவேண்டும் .

ஆனால் எத்தனை ஆண்கள் ,தான் பெற்ற குழந்தைக்கு ,
ஒரு நல்ல தகப்பனாக நடந்து கொள்கிறார்கள் ?

குழந்தையை வளர்க்கும் பொறுப்பு பெண்ணுக்கு
குழந்தைக்கு தேவையானதை வாங்கி தரும் செலவு ஆணுடையது
என்று இருந்தது ஒரு காலத்தில்

ஒரு காலத்தில் தான் பெற்ற குழந்தையின் மருத்துவ செலவு போன்ற செலவுகளுக்காக தன்னையே உருக்கி , ரத்தம் சிந்தி உழைத்த தகப்பன்மார்கள் இருந்தார்கள் . அவர்கள் தன் கடமையை ஒருபோதும் தட்டிகழித்தது இல்லை

ஆனால் இன்றைய தகப்பன்மார்கள் ( ஒரு சிலர் ) தன் கடமையை தட்டி கழிக்கிறார்களே ?

குழந்தை பிறந்தது முதல் அது வளர்ந்து பெரியவனாகும் வரை எல்லா பொறுப்பும் , ஆகும் செலவும் தன் பெண்டாட்டியே கவனித்துக்கொள்ளட்டுமே என்று எத்தனை கணவன்மார்கள் நினைகிறார்கள் தெரியுமா ?

ஆண்கள் தன் முறையை தட்டிகழிக்கிறார்களே இது கேவலமானது இல்லையா ?






aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 2:19 pm

krishnaamma wrote

பையன்கள் எப்பவுமே தங்கள் அப்பா அம்மா வை விட பெண்டாட்டி இன் அப்பா அம்மாக்கு மதிப்பு அதிகம் தருவா.அதுவும் ஒரு பெண் அல்லது இரண்டுமே பெண் ஆகி விட்டால் அந்த அக்கறை அதிகம் இருக்கும்.

ஆமாம் , அக்கறை அதிகமாகத்தான் இருக்கும் மாப்பிள்ளைக்கு
மாமனாரின் கையில் பணம் அதிகம் இருந்தால் .
பின்னே நல்ல கறக்கவேண்டாமா மாமனாரிடமிருந்து ?
அதற்காக நல்ல பிள்ளை போல் வேஷம் போட்டுதானே ஆக வேண்டும்

அதுவும் நீங்கள் சரியாதத்தான் சொல்லி இருக்கிறீர்கள் , இரு பெண்கள் உள்ள வீடு என்றால் மாப்பிள்ளை மாமனாருக்கு அதிகம் மரியாதை கொடுப்பார் என்று .

பின்னே ஆண் வாரிசு இல்லாத சொத்து ஆயிற்றே மாமனார் சொத்து அதை அப்படியே லவட்டிக்கொள்ள வேண்டும் என்றால் மரியாதை கொடுப்பது போல நடிக்கத்தானே வேண்டும்

பணவசதி மாமனார் கையில் குறைந்து விட்ட பின் தானே தெரியும்
மாப்பிளையின் மரியாதை நாகரீகம் எல்லாம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 2:23 pm

krishnaamma wrote

தன் அம்மா அப்பாக்கு ஒரு நியாயம் அகமுடையானின் அம்மா அப்பா கு வேறு ஒரு நியாயம் என இருக்கும் இவளை போன்ற பெண்களால் தானே இந்த அவலம் ?

நீங்கள் அவள் எழுதியதை சரியாக படிக்கவில்லை

இருதரப்பு பெற்றோரையும் கவனித்துக் கொள்ளவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக்கூடாது என்றுதான் எழுதி இருக்கிறாள் .

இரு தரப்பு பெற்றோரையும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது .

அந்த பெண் சொன்னபடி, பெண்ணை பெற்றோர்
எங்கேயோ போய் நாசமாக போய்விடவேண்டும்
ஆனால் ஆணின் பெற்றோர் மட்டும் வசதியாக இருக்கவேண்டும்

நல்ல நீதி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 21, 2011 2:23 pm

ஆத்மா, உங்களின் அனைத்து கருத்துக்களையும் நான் ஆமோத்திக்கிறேன்...
அனுபவத்தில்............





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக