ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரி விதிப்பு எதிரொலி: பீடி, சிகரெட் விலை திடீர் உயர்வு; பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கூடுதலாக விற்பனை

Go down

வரி விதிப்பு எதிரொலி: பீடி, சிகரெட் விலை திடீர் உயர்வு; பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கூடுதலாக விற்பனை Empty வரி விதிப்பு எதிரொலி: பீடி, சிகரெட் விலை திடீர் உயர்வு; பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கூடுதலாக விற்பனை

Post by ரஞ்சித் Wed Jul 20, 2011 2:44 pm

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சமையல் எண்ணை, ஜவுளி, புகையிலை உள்ளிட்ட பல பொருட்களுக்கு மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியது. வரி வருவாயை பெருக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன் காரணமாக அந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

புகையிலை பொருட்கள் மீது 2.5 சதவீதம் வாட் வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் அதிகபட்ச விலையை புகையிலை தயாரிப்பாளர்கள் உயர்த்தவில்லை. ஆனாலும் அதன் லாபத்தை குறைத்து விலையை சிறிது உயர்த்தி உள்ளனர். இதனால் பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்துபவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அதே விலையில் விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகம் முழுவதும் அனைத்து பீடி, சிகரெட் விலைகள் திடீரென அதிக விலைக்கு விற்கப்படுகின்றனர். சிகரெட் பாக்கெட்டிற்கு ரூ.5 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. வரி விதிப்பு அறிவித்த உடன் சிகரெட் விற்பனை அளவை குறைத்து விட்டனர். மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு குறைந்த அளவில் சிகரெட் வினியோகம் செய்தனர்.

இதன் காரணமாக சில்லறை வியாபாரிகள் அவரவர் இஷ்டத்துக்கு சிகரெட் விலையை உயர்த்தி விட்டனர். ஒரு சிகரெட்டிற்கு 50 பைசா அதிகமாக நிர்ணயம் செய்தனர். பாக்கெட்டாக வாங்கும்போது ரூ.2 முதல் ரூ.5 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

இது குறித்து சிகரெட் மொத்த வியாபாரி காரட் ஞானராஜ் கூறியதாவது:-

சிகரெட்டின் அதிகபட்ச விற்பனை விலையில் (எம்.ஆர்.பி.) எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே உள்ள விலையில்தான் விற்க வேண்டும். கோல்டு பிளாக் பில்டர், வில்ஸ் பில்டர் சிகரெட் ஒரு பாக்கெட் மொத்த விற்பனைக்கு ஏற்கனவே ரூ.36.25 பைசாவிற்கு வழங்கப்பட்டது. தற்போது ஒரு ரூபாய் கூடுதலாக ரூ.37.25 பைசாவிற்கு விற்கப்படுகிறது. அதிகபட்ச விலையாக சில்லறையில் ரூ.40-க்கு விற்கவேண்டும்.

வரி உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் சிகரெட்டை “ஸ்டாக்” செய்து விட்டனர். வழக்கமாக கேட்ட அளவிற்கு சிகரெட் பெட்டிகள் வழங்கப்படவில்லை. திடீரென சரக்கு நிறுத்தப்பட்டதால் சில்லறை விலையில் தாறுமாறாக சிகரெட் விற்கப்படுகிறது.

புதிய விலை உயர்வு நேற்று தினம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரி விதிப்பால் சிகரெட் விலை உயரவில்லை. மொத்த விற்பனையாளர்களின் லாபம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் சிகரெட் விலை பல மடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது. கோல்டு கிங்ஸ் முன்பு ரூ.5 விற்கப்பட்டது. தற்போது ரூ.5.50-க்கு விற்கப்படுகிறது. முழு பாக்கெட் விலை ரூ.52, ரூ.55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோல்டு பில்டர், வில்ஸ் பில்டர் ரூ.4.50-க்கு பெட்டி கடைகளில் விற்கிறார்கள். இதேபோல பீடியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கட்டு கணேஷ் பீடியின் விலை ரூ.2 கூடியுள்ளது. ஒரு பண்டல் ரூ.156 கடைகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது ரூ.181-க்கு விற்கப் படுகிறது. இதனால் சில்லறை கடைக்காரர்கள் பீடி விலையையும் இஷ்டத்துக்கு கூட்டி விற்கிறார்கள்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும்
» ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி
» பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது
»  டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum