ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

+6
கலைவேந்தன்
அப்துல்லாஹ்
kitcha
kummachi
நட்புடன்
கே. பாலா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by கே. பாலா Tue Jul 19, 2011 4:07 pm

First topic message reminder :

ஒரு ஜனநாயக தேசத்தை மன்னராட்சிப் பாணியில் ஆட்சி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு சமீபத்திய தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்த தோல்வியே சாட்சி.

அதே போல, ஒரு மக்களாட்சியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்தால் சில சமயங்களில் அவமானங்களையும் சந்திக்க நேரும் என்பதற்கு சமச்சீர் கல்வி விவகாரமே சாட்சி. இதே போல சர்வாதிகாரியாக ஆட்சி செய்ததன் விளைவாக 1996ஆம் ஆண்டிலும் 2006ஆம் ஆண்டிலும் ஆட்சியை பறி கொடுத்த ஜெயலலிதா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. தி.மு.க அரசு கொண்டு வந்தது என்பதாலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீச நினைக்கும் ஜெயலலிதா நீதித் துறையிடம் வரிசையாக மூன்று முறை தோற்றிருக்கிறார். இந்த வருடம் சமச்சீர் கல்வியையே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தெளிவான தீர்ப்பையும் மீறி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செல்லக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு பிடிவாதமிக்கவராக ஒரு தலைவர் இருப்பது ஆபத்தானது.

அ.தி.மு.க அரசின் பிடிவாதம் மக்கள் மத்தியில் அக்கட்சியின் ஆட்சிக்கு எவ்வளவு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது என்ற தகவல் அவரைச் சென்று சேர்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு வலுவான எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி செய்து வரும் சமயத்தில் ஜெயலலிதா இவ்வாறு வலியப் போய் பிரச்சனையை சந்திப்பது அவரின் மாறாத இயல்பைக் காட்டுகிறது. அ.தி.மு.க ஆட்சி குறித்து என்னென்ன நல்லெண்ணங்கள் உருவானதோ அவை அனைத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தில் அவரது பிடிவாதம் நாசமாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2001-06 ஆட்சிக் காலம் போலவே ஜெயலலிதா மக்களால் வெறுக்கப்படும் தலைவியாக மாறிவிடக்கூடும். 1 கோடி மாணவர்களின் கல்வியை நிர்கதியில் வைத்திருப்பது அவரின் முந்தை ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தைவிட மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

உண்மையில் ஜெயலலிதா கெட்ட பெயருக்கு பதில் நிறைய நிறைய நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில் ஒரு மிகப் பெரிய கண்டத்தை அடுத்து கடக்கவிருக்கிறார் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா. பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதாவுக்கு எதிரான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக் கட்டத்தை எட்டிவிட்டது. அதில் அவர் சிறை செல்வது உறுதி என்று சட்டத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காக ஜூலை 27ந் தேதி நேரில் ஆஜராகி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு குற்றவாளிக் கூண்டில் நிற்பதே அவரின் பிம்பத்திற்கு மிகப் பெரிய அடியாக இருக்கும்.

தி.மு.கவினர் ஏராளமானோர் வரிசையாக சிறை சென்றாலும் ஒரு கட்சியின் தலைவரே சிறை செல்வது என்பது அக்கட்சியின், ஆட்சியின் பிம்பத்திற்கு தீராத களங்கத்தை உண்டாக்கும்; மற்ற அனைத்தையும்விட மோசமான களங்கமாக அது இருக்கும். மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவை உருவாகி வரும் ஒரு காலக் கட்டத்தில், ஜெயலலிதா தனது சர்வாதிகார குணங்களை மாற்றிக்கொள்ளாமலிருப்பது அவரது கட்சிக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது.

கருணாநிதியின் எதிர் துருவமாக செயல்படும் ஜெயலலிதா, தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்றோ, சமச்சீர் கல்வியில் உள்ள குளறுபடிகளை வைத்து அதை நிராகரிக்க வேண்டும் என்றோ நினைப்பது ஒரு வழி. மாநில வாரியம், மெட்ரிக் வாரியம் என்ற பிரிவை அகற்றியது மட்டுமே தி.மு.கவின் சமச்சீர் கல்வியின் ஒரே சாதனை என்பதை புரிந்துகொண்டு கல்வியாளர்கள் அனைவரும் விரும்பும் பொதுக் கல்வியை நோக்கி அடியெடுத்து வைப்பது இன்னொரு வழி. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை புதிய முழுமையான காப்பீட்டுத் திட்டம் என்றும், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என்று கொண்டு வர முடிந்த ஜெயலலிதாவால், சமச்சீர் கல்வித் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட பொதுக் கல்வித் திட்டமாக கொண்டு வர முடியாதா? அதைத் தடுப்பது யார்? சோ போன்ற வலதுசாரி, அடித்தட்டு மக்கள் விரோத ஆலோசகர்களா? தங்களின் கல்விக் கொள்ளைக்கு எந்த கடிவாளமும் வர விரும்பாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பண செல்வாக்கா? ஜெயலலிதாவுக்கும் மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அவரின் மனசாட்சிக்குமே வெளிச்சம்.


உயிரோசை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by கலைவேந்தன் Tue Jul 19, 2011 7:59 pm

நடப்பு உண்மைகள் முழுதும் புரியாமல் ஜெயலலிதாவின் ஆணவப்போக்கு என்பதை மட்டும் இங்கே அனைவரும் வைத்ததைக் கண்டு வேதனையுற்று நான் மதியம் முதலே தொகுத்த என் கருத்துகளை இங்கே பதிந்துவிட்டேன்.

சிறிதேனும் உண்மை புரிந்துகொண்டால் ஒரு சாராராய் பேச வாய்ப்பில்லை என்பதை உணரலாம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by கோபி சதீஷ் Tue Jul 19, 2011 8:09 pm

மிக அருமை. அனைத்து தரப்பினரும் இதை உணர வேண்டும்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by நட்புடன் Tue Jul 19, 2011 8:21 pm

கலைவேந்தன் wrote:என் மாற்றுக்கருத்தை பதிய அனுமதி உண்டா?

கருத்து என்று ஒன்று உண்டெனில்
கண்டிப்பாக
மாற்று கருத்துக்கள் அவசியம் வேண்டும்.

என்வரை நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்க வில்லை.
ஆணவப் போக்கினால் பாதிக்கப்படுவது யார் - பாவம் நம் மாணவர்கள் தானே?

மூன்று மாதங்களில் சமச்சீரை சீர் படுத்துங்களேன்.
அதைத் தானே பொறுப்பான அரசிடம் கேட்கிறோம்?


Last edited by நட்புடன் on Wed Jul 20, 2011 8:55 am; edited 1 time in total
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jul 20, 2011 6:07 am

சமச்சீர் கல்வி - நிறைவேறாத கனவு


தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை பெருகி வருவதன் எதிரொலியாகத் தமிழக அரசு சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தும் குரல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு ஆசிரியர்-மாணவர் அமைப்புகளும் அறிவுத் துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் 2006 செப்டம்பரில் தமிழக அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் தலைமையில் ஒன்பது உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது. 2007அக்டோபரில் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த குழு தற்போதைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அரசுக்குப் பரிந்துரை செய்தது. அறிவுத் துறையினர், கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர்-மாணவர் அமைப்புகள் எனப் பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்ற, தமிழக அரசின் இந்த நடவடிக்கை கல்வியில் அடிப்படையான மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்பட்டது. கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறைகொண்ட பல்வேறு அமைப்புகள் முத்துக்குமரன் குழுவுக்குப் பல ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்கின. ஒரு ஜனநாயக, சமத்துவ, மதச் சார்பற்ற முற்போக்கான மனித சமூகத்தை உருவாக்குவதே கல்விமுறையின் தலையாய நோக்கமாக இருத்தல் வேண்டுமெனவும் அதற்கேற்ப அரசின் கல்விக் கொள்கையில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தம் யோசனைகளை முன்வைத்த அறிவுத் துறையினர் தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளையும் அவற்றுக்கான காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நம் அரசியல் சாசனத்தின் 21ஆம் பிரிவு கல்வி கற்கும் உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உறுதிப்படுத்தியிருக்கும்போதிலும் அனைவருக்கும் தரமான, இலவசக் கல்வி வழங்குவது என்பது நிறை வேற்றப்பட முடியாத கனவாகவே இன்றுவரையிலும் நீடித்து வருகிறது. ஆரம்பக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை மலிந்து காணப்படும் ஏற்றத் தாழ்வுகளும் வேறுபாடுகளும் சமூக வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்துவருவதைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மாநிலக் கல்விக் கழகப் பாடத்திட்டம், மத்தியக் கல்விக் கழகப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம், அவற்றுக்கானத் தனித் தனி இயக்ககங்கள் எனப் பல்வகைக் கல்வி அமைப்புகளும் வாரியங்களும் செயல்பட்டு வருவதே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் அது வணிகமயமாக்கப்பட்டதற்கும் அடிப்படைக் காரணம். இதனால் அதிகமும் பாதிப்புக்குள்ளாவது கல்வியை விலைகொடுத்து வாங்க முடியாத நலிந்த பிரிவினரே.

தரமான கட்டமைப்பு வசதிகளோ உரிய தகுதிபெற்ற ஆசிரியர்களோ இல்லாத போதிலுங்கூடப் பெற்றோர் தம் குழந்தைகள் தனியார் நிறுவனங்களில் கல்வி கற்பதையே விரும்புகின்றனர். இவற்றில் பெரும்பாலானவற்றில் கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருப்பதும் ஆங்கிலம் வேலை வாய்ப்புக்கும் உயர் கல்விக்கும் இன்றியமையாத ஒன்று என்னும் பெற்றோரின் நம்பிக்கையுமே இதற்குக் காரணம். இந்த நம்பிக்கை யதார்த்தமாக இருப்பது மற்றொரு காரணம். சமச்சீர் கல்விமுறை பற்றிய விவாதங்களில் இந்த யதார்த்தம் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டால் தான் நமது கல்விமுறையில் தீவிரமான மாற்றங்கள் சாத்தியமாகும். முதலாவதாக ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்விவரை தரமான தாய்மொழிக் கல்வி அளிப்பதற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு அது அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தாய்மொழிக் கல்வியின் தரத்தை உயர்த்தாமல் ஆங்கில வழிக் கல்விக்குள்ள சந்தை மதிப்பைக் குறைக்க முடியாது. பெற்றோரின் ஆதரவு காரணமாகவே ஆங்கிலப் பள்ளிகளால் தாய்மொழிக் கல்விக்கெதிரான ஒரு வெளியை உருவாக்க முடிகிறது. பலவகையான கல்விமுறைகளும் பாடத்திட்டங்களும் ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் சீரான ஒரே பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கை.

முத்துக்குமரன் தலைமையிலான குழு பொதுவான ஒரு நிர்வாக அமைப்பைப் பரிந்துரைத்திருக்கிறது; பொதுவான பாடத்திட்டத்தையோ பொதுப் பள்ளியையோ பரிந்துரைக்கவில்லை. அரசும் அந்தத் திசையில் சிந்திக்காமல் மாணவர் சேர்க்கையில் நன்கொடை வசூலிப்பதற்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதே போதுமானது என்பது போல் நடந்துகொள்கிறது. மழலையர் கல்வியை அரசு தன் முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்னும் பரிந்துரையை அரசு நடைமுறைப்படுத்தும் என்பதற்கான எந்தவொரு தடயமும் தென்படவில்லை. மழலையர் கல்வி நூறு சதவீதமும் தனியார் கல்வி நிறுவனங்களின்-இவர்களில் கணிசமானவர்களைக் கல்விக் கொள்ளையர்கள் என்றே விவரிக்க முடியும்-கைகளில் இருக்கிறது.

அரசியல் அதிகார மட்டங்களில் செல்வாக்குப் பெற்றுள்ள கல்விக் கொள்ளையர்களிடமிருந்து அதை மீட்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கும் எனத் தோன்றவில்லை. குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியம் குறித்த அக்கறையோ புரிதலோ அற்ற மழலையர் பள்ளிகள் குழந்தைகளின் இயல்பான ஆளுமை வளர்ச்சியைச் சிதைத்து ஆங்கிலப் பள்ளிகளுக்கான மாணவர்களை உருவாக்கித் தரும் பட்டறைகளாகச் சுருங்கிப் போயிருக்கின்றன. அரசு நடத்தும் அங்கன்வாடி, பால்வாடி பள்ளிகளின் நிலையோ படுமோசம். போதிய பயிற்சியோ கல்வித் தகுதியோ பெற்றிராத ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இப்பள்ளிகளில் மழலையர் கல்விக்கான உபகரணங்களோ உள் கட்டமைப்பு வசதிகளோ குறைந்தபட்சமாகக்கூடச் செய்துகொடுக்கப்படுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டுவரும் சர்வ சிக்ஸ அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கருத்தாளர் பயிற்சிகளின் தரம் குறித்து நிறையச் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எஸ்எஸ்ஏ திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருப்பது உண்மை என்றாலும் அது கற்பித்தலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் போதுமானவையாக இல்லை. கற்றல், கற்பித்தல் குறித்த கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களை உருவாக்காமல் இத்தகைய பயிற்சிகளால் பெரும் பயன் விளையும் எனச் சொல்ல முடியாது. தேர்ச்சி விழுக்காட்டை அடிப்படையாகக்கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மதிப்பிடப்படும் நிலை நீடிக்கும்வரை ஆசிரியர்கள் மாணவர்களை அதிக மதிப்பெண் பெறுவதற்குத் தூண்டும் வகையில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கச் செய்வதையே தம் கற்பித்தல் முறையாகக் கொண்டிருப்பார்கள். மழலையர் வகுப்புகளுக்குத் தேர்வு முறையை அறவே ஒழிப்பது, தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வை முற்றாக ஒழித்து வாய்மொழித் தேர்வை நடத்துவது போன்ற பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது தொடர்புடைய ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல்-கற்றல் சார்ந்த பதற்றங்கள் தணிய வாய்ப்பிருக்கிறது. எனினும் இந்த நடைமுறை காரணமாக உயர் கல்வியை எதிர்கொள்வதில் மாணவர்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியதைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளும் இதனுடன் சேர்த்து ஆராயப்பட வேண்டும்.

சமச்சீர் கல்வி என்னும் கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்துவது பொதுப் பள்ளி என்னும் கருத்தாக்கத்துடன் நேரடியான தொடர்புடையது என்பதால் அந்த நோக்கில் மாற்றங்கள் முன்னெடுக்கப்படாதவரையில் இது போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. 12ஆம் வகுப்புவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியைப் பொதுப் பள்ளி மூலம் வழங்குவது தவிர, கல்வியில் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாக வேறு சுருக்கு வழிகள் இல்லை.

கல்வி, தனியாரின் கொள்ளை முயற்சிகளுக்கான கருவியாய் இருக்கக் கூடாது என்னும் நிலையை அரசு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து அதற்குள் உருவாக்க வேண்டும். சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் அரசு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் நலிந்த பிரிவினருக்கு அப்பள்ளிகளில் முழுமையான இலவசக் கல்வி பெறுவதற்கும் அரசு கடுமையான சட்டங்களை இயற்றிக் கண்காணிக்க வேண்டும். உரிய கல்வித் தகுதியுள்ள ஆசிரியர்களை முறையான ஊதியத்தில், போதிய எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும்.

அரசியல் சட்டம் வலியுறுத்துவது போல் பாடத்திட்டங்களும் விதிமுறைகளும் கற்பித்தல் முறைகளும் கற்பவருக்குச் சுமையாய் இருக்கும் நிலையை மாற்றி, கல்வியை மகிழ்வூட்டும் ஒன்றாக மாற்றுவதற்கு உரிய சூழலை அரசு உருவாக்க வேண்டும். கல்வி தொண்டு நிறுவனங்களின் சேவை அல்ல, அது குடி மக்களின் அடிப்படை உரிமை என்பதைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டியதே இன்றைய தேவை.

நன்றி kalachuvadu


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by கலைவேந்தன் Wed Jul 20, 2011 7:46 am

இக்கட்டுரையில் கட்டுரையாளர் சொல்ல வருவதன் சாராம்சம் என்ன என்பதை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by கோபி சதீஷ் Wed Jul 20, 2011 4:17 pm

கலைவேந்தன் wrote:இக்கட்டுரையில் கட்டுரையாளர் சொல்ல வருவதன் சாராம்சம் என்ன என்பதை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
நாம் அனைவருமே இந்த பிரச்சினையை கட்சிக் கண்ணோட்டத்தில் பர்க்கிறோமோ என்னும் ஐயம் மேலிடுகிறது. சமச்சீர்கல்வி திட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வரும்போதே பல கல்வி நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக நடந்துகொண்ட கருணாநிதி அரசும் சரி, இப்போது அதை கண்மூடித்தனமாக எதிர்க்கும் ஜெயலலிதா அரசும் சரி, வழக்கின் நுணுக்கங்களை அராய்ந்தறியாமல் ஒரு தலைப்பட்சமாக தடலடியாக தீர்ப்பளித்த உயர் நீதி மன்றமும் சரி,உடனே அதை முழுமையாக பாகுபடுத்தி அறியாமல் பாராட்டும் நாமும் சரி...

யாருமே இங்கே சரியில்லை..!

இதைத்தான் அவரும் சுத்திவளசு இதைத்தான் சொல்லுறருனு நினைக்கிறேன்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by krishnaamma Wed Jul 20, 2011 4:48 pm

கலைவேந்தன் wrote:நடப்பு உண்மைகள் முழுதும் புரியாமல் ஜெயலலிதாவின் ஆணவப்போக்கு என்பதை மட்டும் இங்கே அனைவரும் வைத்ததைக் கண்டு வேதனையுற்று நான் மதியம் முதலே தொகுத்த என் கருத்துகளை இங்கே பதிந்துவிட்டேன்.

சிறிதேனும் உண்மை புரிந்துகொண்டால் ஒரு சாராராய் பேச வாய்ப்பில்லை என்பதை உணரலாம்.

ரொம்ப அற்புதமாக விளக்கிஉள்ளீர்கள் கலை புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நிஜமாகவே எனக்கு சமச்சீர் கல்வி என்றால் என்ன என தெரியாமல் இருந்தது , இப்ப அதனையும் அதன் சாதக பாதகங்களையும் நன்கு புரிந்து கொண்டேன்.

தி முக கொண்டு வந்ததை எதிர்க்கவேண்டும் என ஜயலலிதாவுக்கு தோன்றினால், மொத்த பேர்களியும் சி பி எஸ் சி படிக்க சொல்ல வேண்டியது தானே? கல்வி இன் தரமாவது உயரும் ? இந்த மொண்டிப்பிடிவாதம் அவங்களுக்கு மட்டும் அல்ல 1 கோடி பிள்ளைகளுக்கும் ஆபத்தாகி விட்டது. பள்ளி துவங்கி இவ்வளவு நாட்கள் ஆகியும் பாவம் குழந்தைகள் படிக்க முடியவில்லை, ஆசிரியர்களும் செயல் இழந்து வருந்துகிறார்கள் சோகம் ரொம்ப கஷ்டமான காலம் இது

ஒரு நல்ல கட்டுரைக்கு மீண்டும் நன்றி கலை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by 2009kr Wed Jul 20, 2011 6:18 pm

இது போன்ற நிலை தொடருமானால் ஏராளமாக எதிர்பார்புகளுடன் இவரை தங்க சிம்மாசனத்தில் அமர வைத்த அதே மக்கள் வரும் உள்ளாட்சி தேர்தலில் இவருக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள்.

இவரின் கடந்த ஆட்சிகாலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்விக்கு பின்னர்தான் அரசு ஊழியர்களை பகைத்துக்கொண்டது தவறு என்று உணர்ந்து பின் ஒழுங்காக நடந்துகொண்டார். ஆனால் பழைய பாடங்களை மறந்து போய் தான் என்ற அகம்பாவத்தில் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கும் இழி நிலையை என்னவென்று சொல்வது? அரசு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படலாம்!! ஆனால் தமிழகத்தின் கல்வித்தரம்??!!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   - Page 2 Empty Re: ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum