புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் இனப் போராட்ட வரலாறு-ஓர் அறிமுகம்-1


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jan 25, 2011 3:46 pm

தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேச விடுதலை எண்ணமும் மேலோங்கி வரும் இவ்வேளையில், தமிழரின் போராட்ட வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலப் போராட்ட அனுபவங்களில் இருந்துதான் எந்த இனமும் தமது எதிர்காலத்தைத் திட்டமிட இயலும். அவ்வகையில், தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே போராடி வந்தாலும், அப்போராட்டங்கள் அனைத்தும் தவறான வழி நடத்தல்களால்/பிழையான கோட்பாடுகளால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘தமிழ்-தமிழர்-தமிநாடு’ என்ற சிந்தனை மேலோங்கியது. இந்தச் சிந்தனை எழுச்சியை வெகு தந்திரமாக மடை மாற்றியது திராவிட இயக்கம். ‘திராவிடம்-திராவிடர்-திராவிட நாடு’ எனும் புத்தம் புதிய முழக்கங்களை அது முன்வைத்தது. இம்முழக்கம், ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகால தமிழ் இன வரலாற்றில் ஒரு போதும் நிலவாதது ஆகும். மேலும், திராவிடர் எனும் சொல்லால் தமிழர்கள் தம்மை, அதற்குமுன் ஒருபோதும் அழைத்துக் கொண்டதும் இல்லை.

இன்றும், தமிழர் என்ற அடையாளத்தை மறைக்க திராவிட முகமூடியைச் சுமந்து வருவோர் இருப்பதைக் கவனித்தால், தமிழ்-தமிழர்-தமிழ்நாடு ஆகிய முழக்கங்களின் இன்றியமையாமை விளங்கும்.

தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற விருப்பம் தமிழர்களின் ஆழ் மனதில் எப்போதும் உண்டு. ஏனெனில், வரலாற்றில் பெரும்பான்மையான காலப்பகுதிகளில் தமிழர்கள் தமக்கான அரசுகளை அமைத்து ஆண்டவர்கள். அந்த நினைவு தமிழ்ச் சமூகத்தின் மா உளவியலில்(mass psychology) அழுந்தப் பதிந்துள்ளது. ஆரிய பிராமணர்களின் ஆழ்மனம் எப்போதும் ஒரு நிலத்தில் கால் ஊன்றால், சுரண்டுவதற்கான் இடம் தேடி அலையும் என்பது அவ்வினத்தின் மா உளவியலே.

தமிழர்களின் தனிநாட்டு வேட்கை, காலந்தோறும் வெடித்துக் கொண்டுதான் இருந்துள்ளது. தமிழர் போராட்ட வரலாற்றைச் சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.

சிந்து வெளித் தமிழர்
இந்திய நிலப்பரப்பின் வடமேற்கில் தொடங்கிய சிந்துவெளி அரசு, தெற்காசியாவின் வடமேற்குத் திசை வழியே ஏறத்தாழ 10 இலட்சம் சதுர கி.மீ. பரவி இருந்தது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே(கி.மு.2600-கி.மு.1900), மிக உயர்ந்த நாகரிகத்தை எட்டியிருந்தது சிந்து வெளித் தமிழர் அரசு. சிந்து நதியின் பெரு வெள்ளத்தையே தடுத்து, பாசனம் செய்ய அணைகள் கட்டி இருந்தனர் சிந்துவெளித் தமிழர்கள். அடுக்குமாடி வீடுகள், நகரின் மையத்தில் நீச்சல் குளம், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வீதிகள், தொழிலாளர்களுக்கென தனி வீடுகள், பாதாளச் சாக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிந்துவெளியில் இருந்தன. உலகின் மிகப் பெரிய பண்டைய நாகரிகம் இது ஆகும்.

கப்பற் கலையில் சிந்துவெளித் தமிழர் விற்பன்னர்களாக இருந்தனர். சிந்து ஆற்றின் வழியே கலங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலுக்கு வந்து, அங்கிருந்து கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் சென்றனர். இறக்குமதிக்கும் இவ்வழியே பயன்படுத்தப்பட்டது.

சிந்துவெளி அரசு தமிழர்களுடையதுதான் என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வாளர்கள் அனைவரும் சிந்துவெளி மக்களை, ‘மூல திராவிடர்’ என்கின்றனர். தமிழர் என்று அறுதியிட்டுக் கூறவியலா வண்ணம் ‘திராவிட அரசியல்’ தமிழகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகளும் கிடைத்துவிட்டன. அக்காலத்தில் இருந்த தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆதலின், சிந்துவெளி மொழியை மூலத் தமிழ் மொழி என அழைத்தாலே பொறுத்தமானது. ஆனால், திராவிடம் குறித்த பெரு எடுப்பிலான பரப்புரையின் விளைவு, ஆய்வுலகையும் தாக்கியுள்ளதால், சிந்துவெளி மொழியை ‘மூல திராவிட மொழி’ என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் உள்ள எழுத்துக்களை, ஒலி வடிவத்துடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் அறிஞர் பலர். முனைவர்.இரா.மதிவாணன் தமது ஆய்வில் வெளியிட்டுள்ள சிந்து வெளி எழுத்துகள் சிலவற்றைக் காண்போம்:
• அவ்வன்
• அண்ணன் அப்பு
• அட்டன்
• அதியன்
• சானன் அவ்வன்
• நன்னன்
• அந்தனன்
(Indus script Dravidian- Dr.Madhivanan/Tamil chanror peravai/1995)

ஆகவே, சிந்துவெளி அரசு தமிழர் அரசு என்பதில் யாதொரு ஐயமும் தேவை இல்லை.

சிந்துவெளித் தமிழர் அரசு நிலைகுலையத் தொடங்கியது ஆரியப் படையெடுப்பினால்தான்.

தமிழர்கள் மாபெரும் நாகரிகத்தைக் கட்டியாண்ட காலத்தில், கொள்ளையர்களாகவும், கால்நடை மெய்ப்பவர்களாகவும் வடமேற்கு இந்தியாவிற்குள் புகுந்தவர்கள் ஆரியர்கள். தமக்கென ஒரு நிலையான நாடு இல்லாமல், நிலைத்த அரசு இல்லாமல் வழிப்பறி செய்தும் சூறையாடியும் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆரியர்கள். கால்நடை மேய்த்தல் ஒன்றுதான் அவர்கள் அறிந்த உற்பத்தி சார்ந்த தொழில். பல்வேறு நாகரிகப் பழங்குடிகளின் குடியிறுப்புகளைச் சூறையாடி அவர்களது பண்பாட்டு மதிப்பீடுகளையும் உற்பத்தி நுட்பங்களையும் தமதாக்கிக் கொண்டுதான் ஆரிய இனம் சிந்துவெளிக்குள் நுழைந்தது.

தமிழரது சிந்துவெளி அரசின் கட்டமைப்பும் வளமையும் ஆரியருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிந்துவெளியின் மீது ஆரியர் போர் தொடுத்தனர். ஆரியரது போர் முறையின் அடிப்படி ஒன்றுதான் – அழித்தொழி! எஞ்சியதைக் கைப்பற்று!

இந்த அடிப்படையில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்கள் இவ்விதமான போரை அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்களுக்கு, தற்காப்பு நிலை தேவைப்பட்டது. ஏனெனில், ஒரு மாபெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அவர்கள். நகரங்கள், கப்பல்கள், எண்ணற்ற உற்பத்தி ஆலைகள், வேளாண் நிலங்கள், அணைகள் என அவர்கள் கட்டமைத்திருந்த செல்வங்கள் ஏராளம். பொதுமக்கள் அனைவரும் போர் வீரர்களும் அல்லர். அவர்கள் அமைதியான வாழ்வியலைக் கடைபிடித்துக் கொண்டிருந்தனர்.

ஆரியர்களுக்கோ அழித்தொழிப்பதும், எஞ்சியவற்றைப் பிடுங்குவதுமே வாழ்வியல். வெறிபிடித்த கொள்ளைக் கூட்டத்திற்கும் நாகரிகமயப்பட்ட மாந்தருக்கும் இடையே நடந்த போர் அது. இப்போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது. ஆரியரது முதல் வேதமான ’ரிக் வேதம்’ இப்போர் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. ரிக் வேதம் வாய் வழியாகப் பாடப்பட்டு வந்தது. ஆரிய முனிவர்கள் தமது வரலாற்றைப் பாடல்களாக்கி வழி வழியாகப்பாடியே, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு ஆரிய வெறி ஊட்டினர். ஆரியருக்கு அப்போது எந்த எழுத்து மொழியும் இல்லை.

ரிக் வேதம், சிந்துவெளித் தமிழரை ‘தஸ்யூக்கள்’ என்கிறது. தாசர்கள் என்பது இதன் தமிழ் ஒலிப்பு முறை. தாசர்கள் என்றால், ‘வள்ளல் என்பதெ மூலப் பொருள். ஆனால், அது இப்போது அடிமை என்று மாறிவிட்டது. ஆரியன் என்றால் நாடோடியாகத் திரிகிறவன் என்று பொருள். அது இப்போது உயர்ந்தவன் என மாறிவிட்டது’ என்பார் அறிஞர் கோசாம்பி(நூல்:பகவான் புத்தர்)

பெரும் செல்வச் செழிப்புடனும் வளமையுடனும் வாழ்ந்த சிந்துத் தமிழர், ஆரியருக்கும் பிறருக்கும் வாரி வழங்கிய வள்ளன்மையுடன் வாழ்ந்ததன் அடையாளம் ‘தாசர்’ என்ற பெயர்.

சிந்துவெளித் தமிழரது தலைவர், விருத்திரன் என்று அறியப்படுகிறார். இந்திரன், ஆரியரின் தலைவன். இந்திரன், குடி வெறியன், பெண்பித்தன்(இவர் தான் இன்று தேவர்களின் தலைவன் இந்திரன் என்று பிராமணர்கள் கதைக் கட்டி நம்பவைத்துள்ளனர்) தமிழர்களது நீர்த்தேக்கங்களைப் பாதுகாக்கும் தலைவராக, அகி என்பவர் அறியப்படுகிறார். இந்திரனது படைகள், சிந்துவெளியின் நீர்த் தேக்கங்களையே கூடுதலாக குறி வைத்துத்தாக்கின. இதற்கு ஆரியர்கள் கூறிய காரணம் கவனிக்கத்தக்கது.

‘மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பதுபோல், இந்தத் தாசர்கள் தண்ணீரைப் பிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே! இதைக் கட்டுத் தறியிலிருந்து மாட்டை அவிழ்த்துவிடுவதுபோல, சிறைப்பிடித்து வைத்திருக்கின்ற இந்தத் தண்ணீரை அவிழ்த்துவிடு இந்திரா’
-இவ்வாறு ஆரிய முனிவர்கள்/தலைவர்கள் கூறக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு பேரழிவை ஏற்படுத்தும் முன், அதை நியாயப்படுத்தும் முன், அதை நியாயப்படுத்தும் விதமான பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் பின்னணியாக இருக்கலாம். ஆரியரது உடன் பிறந்த இயல்பு இதுவாகும்.
சிந்துவெளித் தமிழரை அழிப்பதற்கு ஆரியர் கூறிய பல்வேறு காரணங்களில் சில,

• தாசர்கள் வேள்வி செய்யாதவர்கள். அதுமட்டுமன்றி, ஆரியரது வேள்விகளைத் தடுக்கின்றனர். இரவிலே வந்து வேல்விகளை அழித்துச் செல்கின்றனர். ஆகவே, இவர்களை அழிக்க வேண்டும்.
• தாசர்கள் கடவுள்களை நம்பாதவர்கள்.
• தாசர்கள் மதச் சடங்கு அற்றவர்கள். அறிவு இல்லாதவர்கள். மனிதத்தன்மையே இல்லாதவர்கள்.
-இவ்வாறெல்லாம் சிந்துத் தமிழர்கள் மீது ஆரியர்கள் வேறுப்பு ஏற்படுத்தினர்.

ஒரு சமூகத்தை அழிக்கும் முன், அச்சமூகம் குறித்த பொய்யான அபாயகரமான மதிப்பீடுகளை உருவாக்குவது ஆரியம் இன்றும் செய்யும் திட்டமிட்ட பணியாகும்.

ஈழத்தில் பேரழிவு ஏற்படுத்தும் முன், ‘தீவிரவாதம், சகோதர யுத்தம், இரத்த வெறி’ என்றெல்லாம் பல ஆண்டுகளாக ஆரியம் பரப்புரை செய்தது. பின்னர், அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஒரு ஞாயமான போராட்டத்தை அழிப்பதற்குத் தேவையான உள உறுதியையும் துணிவையும் அகத்திலும் புறத்திலும் வழங்கும் அடிப்படைக் காரணி இந்த பொய்ப் பரப்புரை ஆகும்.

நீர்த்தேக்கங்களின் தலைவர் அகி, இந்திரன் படைகளால் கொல்லப்பட்டார். பல நீர்த் தேக்கங்களை ஆரிய வெறிப்படை உடைத்தது. வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரம் சிந்துத் தமிழர் அழிந்தனர். விருத்திரன் காட்டில் தன் தாயுடன் ஒளிந்திருந்து சிறிய சண்டைகள் நடத்தினார். பின்னர் விருத்திரனும் தாயும் கொல்லப்பட்டனர்.

சிந்துவெளித் தமிழர்தான் ஆரியரை முதன் முதலில் எதிர்த்துப் பெரும்போர் புரிந்தோர் ஆவர். ஆரியரை எதிர்க்கும் மனத் துணிவும் மரபு வழி அறிவும் இந்திய நிலப்பரப்பில் எவரைக் காட்டிலும் தமிழருக்கே மிகுதியாக உண்டு. சிந்துவெளிப் போர் பல நூற்றாண்டுகளாக நீடித்தது. ஆரியர் வெற்றிக்கொள்ளத் தொடங்கினர். தமிழர் பகுதிகள் ஆரியக் குடியேற்றங்களாயின. பின்னர் இயற்கைச் சீற்றங்களால், சிந்துவெளித் தமிழர் நிலம் அழிந்தது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jan 25, 2011 3:49 pm

சங்ககாலத்தில் ஆரியர்-தமிழர் போர்கள்
சங்க காலத்தில் ஆரிய-தமிழர் போர் மீண்டும் தொடங்கியது. தமிழரது ஆட்சியெல்லை, தெற்கே குமரி முதல் வடக்கே விந்திய மலை வரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே, ஆரியர் ஆட்சியும், தெற்கே தமிழர் ஆட்சியும் நிலவியது.

இக்காலத்தில், தமிழர்கள் அரசுகள் அமைத்து, போர்க்கலைகள் கற்று வலுவுடன் இருந்தனர். முற்கால மூவேந்தர்கள் ஆட்சி செலுத்தினர். ஆரியர், தமிழரைத் தேடி வந்து படையெடுத்ததாக, எந்த சான்றும் இல்லை. மாறாக, தமிழ் வேந்தர்கள் இமயம் வரை சென்று ஆரியரை அழித்ததற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரிய அரசுகள் தமிழர் அரசுகளுக்கு அடங்கி வாழ்ந்தன என்பதையே வரலாறு உணர்த்துகிறது.

ஆரிய பிராமணர்கள், தமிழகத்தை நோக்கிப் பிழைப்புத் தேடி வந்தனர். அவர்களது ஆட்சியமைப்புக் கலை, தமிழக வேந்தர்களுக்குப் பயன்பட்டது. அரச உருவாக்கம் என்பது, சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை, பாகுபாடுகளை ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இப்பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் ஞாயப்படுத்தும் கோட்பாடு எதுவும் தமிழரிடத்தில் இல்லை. அவ்விதமான கோட்பாடு, இன்றுவரை தமிழரிடத்தில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆரியரோ, ரிக் வேத காலத்திலிருந்தே பாகுபாடுகளை/சுரண்டலைக் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள். அவர்களது அர்த்தசாத்திரம், ஆட்சியமைப்புக் கலையின் உச்சகட்ட சீரழிவுகளை போதிக்கும் நூல் ஆகும்.

வேந்தர்கள் பேரரசு உருவாக்கத்தில் ஈடுபட்ட காலத்தில், தமிழக அந்தணர்கள்(பிராமணர்கள் அல்ல-அறிவாளர்கள்!) தமிழ்ச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறக்கோட்பாடுகளை வலியுறுத்தினர். வீரம், தமிழ் அந்தணர்களால் போற்றப்பட்டது. அதேவேளை, அறம் சார்ந்த வாழ்வியலே அடிப்படையானதாகக் கற்பிக்கப்பட்டது. புறநானூறு, தமிழ் அரசர்களின் வீரத்தைப் போற்றும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. உண்மையில், தமிழ் அரசர்களுக்கு அறம் போதிக்கும் பாடல்கள் புறநானூற்றில் ஏராளமாக இருக்கின்றன. இவ்வகையான அறம் போதிக்கும் மரபு, தமிழருக்கே உரிய சிறப்பு.

தமிழகத்தின் எல்லை, ‘வட வேங்கடம் – தென் குமரி’ என வரையறுக்கப்பட்டது. ஆனால், தமிழ் வேந்தர்கள் பல்வேறு படையெடுப்புகளை இமயம் வரை நடத்தி வெற்றி கண்டனர். பேரரசு உருவாக்கத்தில், ஓர் அரசர் எந்த எல்லை வரை படையெடுத்துச் சென்று வெல்கிறாரோ அந்த எல்லையே அவரது பேரரசின் எல்லை ஆகும். ஆனால், தமிழர்கள், இவ்விதமாகத் தமது எல்லையை விரிவுபடுத்தவே இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய சேதியாகும்.

படையெடுத்து வெற்றி கொள்வது வேறு, இனத்தின் ஆட்சி எல்லை வேறு என்ற ஆழமான புரிதல் அக்காலத் தமிழ் வேந்தருக்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழ் அந்தணர்களுக்கும் இருந்தமையை இது உணர்த்துகிறது. தமிழரின் வெளிநாட்டு வணிகத்திற்கான போக்குவரவுகளை ஆரியர் சீர்குலைத்தமையும், மரபுவழிப்பட்ட தமிழரின் பண்பாட்டு நடவடிக்கைகளை, வட இந்தியாவில் ஆரியர் தடுத்தமையும் ஆரியருக்கும் தமிழருக்குமான போர்களுக்கான காரணங்களாக, இருந்திருக்கலாம்.

வாள் வலிமையால் போர் வெற்றி கண்ட தமிழர்கள், தம் இனத்தின் எல்லையை விரிவாகக்காததன் விளைவாக, ஆரியம் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி, தமிழகத்தைக் குறுக்கியது. ஆரியக் கலப்பால், வட தமிழகம் ஆந்திரமானது தென் தமிழகம் கேரளமானது மேற்கே கன்னடம் உருவானது.

பல்லவர் – களப்பிரர் ஆட்சியில் ஆரியம் வளர்ந்தது.

சங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்று களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர்களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.

கி.பி. 2 முதல் கி.பி. 9 வரையிலான 700 ஆண்டுகாலம், தமிழினம் ஆரியப் புதல்வர்கள் ஆட்சியின் கீழ் வாடியது. தமிழர் தவிர்த்த, தென்னிந்திய இனங்கள் ஆரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவையே ஆகும். பல்லவரது ஆட்சியில் வடமொழியே ஆட்சிமொழி. களப்பிரர் ஆட்சிப் பகுதிகளிலும் வடமொழியின் ஆதிக்கமே மிகுந்தது. இவ்விரு அரசுகளும் தமிழ் இனத்தின் மீது பகைமை கொண்டவை. தமிழர்கள், பேரரசுகள் கட்டி தமது அரசை விரிவாக்கவில்லை. பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை. ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர்.


avatar
Guest
Guest

PostGuest Tue Jan 25, 2011 3:51 pm

தமிழர் இனப் போராட்ட வரலாறு-ஓர் அறிமுகம்-1 677196 தமிழர் இனப் போராட்ட வரலாறு-ஓர் அறிமுகம்-1 677196 கண்டிப்பாக இந்த பதிவு இப்போது முக்கிய தேவை தான் அண்ணே,,,,, தமிழர்கள் உணர்ந்து திருந்தடட்டும் .....

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jan 25, 2011 3:52 pm

தமிழகத்தில் பிராமணர் குடியேற்றம்
பிராமனர் குடியேற்றங்கள் முதன்முதலாகப் பெருமளவில் நடந்தது பல்லவர் காலத்தில்தான். முதலில், தமிழகச் சிற்றூர்களில் பிற தமிழ்க் குலத்தவருடன் பிராமணரும் கலந்து வாழும்படியான குடியேற்றங்களே செய்யப்பட்டன. அதாவது, பிராமணர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகள் – சிறப்புத் தன்மைகளுடன், தொடக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென ஆய்ந்தால், தமிழரின் மரபுப் பெருமை விளங்கும். சங்ககாலம் வரை, ஆரிய பிராமணர்களுக்குத் தமிழரிடையே நன் மதிப்பு இல்லை. அவர்கள் இரண்டாம் தரமாகவே நடத்தப்பட்டனர். கலித்தொகையில் வரும் தலைவி, ‘நம் ஊரைவிட்டுத் துரத்தினாலும் போகாமல் சுற்றிவரும் பார்ப்பான்’ என்று ஒரு முதிய பிராமணனைக் கேலி செய்யும் பாடலை இதற்கான மிகச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம்.(குறிஞ்சிக்கலி-29)

வைகை ஆற்றின் கரையில் பிராமணர்கள் வேள்வித் தீ வளர்க்கும் போது, ஆற்றில் குளித்து விளையாடிய இளம் பெண்கள் வேள்வித் தீயில் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக, பரிபாடல் காட்சிப்படுத்தியுள்ளது.(பரிபாடல்-11/’விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’ எனும் பாடல்)

மேற்கண்ட இரு சான்றுகளிலுமே, பெண்களே பிராமணர்களை கேலி செய்கின்றனர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.

அரசதிகார மட்டத்தில் மட்டுமே, பிராமணர்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதுவும், பொதுமைப்படுத்திக் கூற இயலாத அளவுக்கு மட்டுப்பட்டுதான் இருந்தது. சமூகத்தில், பிராமனர்களுக்கு வரவேற்பு இல்லை. அவர்களைப் பெரும்பகுதித் தமிழர்கள், தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவே கருதினர்.

இந்த நிலையை முதன் முதலில் மாற்றியவர்கள் திராவிடர்களான பல்லவர்களே ஆவர். முதலில், பிராமணர்களைத் தமிழர் வாழும் ஊர்களில் சமமாகக் குடியேற்றினர். பிறகு, பிரமதேய ஊர்கள் உருவாக்கப்பட்டன. பல்லவர்கள்தான் முதன்முதலில் பிராமணர்களுக்கு எனத் தனி ஊர்களை உருவாக்கித் தந்தவர்கள் ஆவர்.

இந்த பிரமதேய நிலங்கள், பிராமணர்களுக்கென இலவசமாக, உரிமையாக வழங்கப்பட்டவை. இவற்றிற்கு அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இதேபோல, சமண மதத் தலைவர்கலுக்கென, ‘பள்ளிச் சந்தம்’ எனப்பட்ட இறையிலி நிலங்களையும் பல்லவர்களே உருவாக்கினர்.

ஆக, ஆரிய மதக் கருத்தியல்களை ஆதரித்து வளர்த்து, அவற்றுக்காக தமிழரது நிலங்களை தானமாகக் கொடுத்தவர்கள் பல்லவர்கள். சோழர்காலத்தில், பிராமணர்களுக்கு, பிரமதேய நிலங்கள் ‘உரிமையாக்கப்படவில்லை’ என்பது இந்த இடத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சோழர்காலத்தில், பிரமதேய நிலங்கள், அரசனின், வேளாளரின் கட்டுபாட்டில்/மேற்பார்வையில் இருந்தன. அந்த நிலங்கள் தற்காலிக அனுபவிக்கும் உரிமையின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டனவே தவிர, உரிமை ஆக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சோழர்கால பிரமதேய முறை, பிராமணர்களுக்கு நிலம் வழங்குவது என்பதல்லாமல், நிலத்தின் வருவாயில் பங்கு தருவது என்பதே ஆகும்.

பிற்காலச் சோழர் அரசமைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவர் செய்த சீரழிவே பிரமதேய முறை ஆகும். இம்முறையின் தீவினைகளைக் குறைத்தவர்கள்தான் சோழர்கள் என்பதை மேற்கண்ட ஒப்பீடு காட்டும்.

சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டுகால வரலாற்றில், களப்பிரர், பல்லவர் – 700 ஆண்டுகளும், விசயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.

தமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பின்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப்படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத்தவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? என்பது வெளிப்படையாகப் புரியும்.

இது ஒரு எளிய உண்மையே. ஆனால், இந்த எளிய ஊன்மையைக்கூட தமிழர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதில்தான் திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரிகளின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றன.

திராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப்பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jan 25, 2011 3:55 pm

ஆரியத்தின் பிள்ளையே திராவிடம்!
ஆரியம், சிந்துவெளியில் தமிழரை வென்றது. அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை. கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.

பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலை நிறுத்திய போதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தின் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.

சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் மலையாள இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளன. இந்தி மொழியைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென்னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம் தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வடமொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத்தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.

பல்லவர்கள் தம்மை ‘பரத்வாச கோத்திரத்தார்’ என்றுதான் அழைத்துக் கொண்டனர். பரத்வாச கோத்திரம் என்பது, ஆரிய பிராமண குலம் ஆகும். உண்மையில் இவர்கள் பிராமணர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும், தம்மை பிராமணர் எனப் பொய்யாகவேனும் கூறிக்கொள்ளுமளவு ஆரியத்தில் கரைந்து போனவர்கள் என்பதைக் குறிக்கவே இச்சான்றை முன்வைக்கிறேன்.

பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விசயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக்காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகாளாக்கினர். பெண்களை வணிகம் செய்த அரசு விசயநகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறையான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.

20ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களால் தமிழரது தேசிய இன விடுதலை உணர்வு மட்டுப்பட்டது. இதைக் காட்டிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கதில் திராவிடர் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேசிய இன விடுதலை உணர்வு பொங்கிவிடாது பார்த்துக்கொள்ளப்பட்டது. இப்போதும், தமிழர்களுக்கென தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கையை, எந்தத் திராவிட இயக்கமும் தமது கொள்கையாக முன்வைப்பதில்லை. இதற்கான காரணம், திராவிடம் என்ற சொல்லே, தமிழருக்கு எதிரான வரலாற்றைக் கொண்டிருப்பதுதான்.

தமிழரிடையே தமிழ்த் தேசிய உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போதெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்கள் ‘தமிழனுக்கு நாடு வேண்டும்’ என்பார்கள். அந்தப் போர்க் குணம் மட்டுப்படும் வரை காத்திருந்துவிட்டு, ‘திராவிடம்தான் சரி’ என்பார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்படும் வித்தை ஆகும்.

தமிழரது இனப் போராட்ட வரலாற்றை
1. ஆரியர்-தமிழர் போர்
2. தமிழர்-திராவிடர் போர்
என்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர்.

சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை:
• ஆரியர் கூட்டத்திற்கு அழித்தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.
• சிந்துவெளித் தமிழருக்கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆகவே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.
• சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர் சுய நலனையே வேதங்களாக்கினர்.

இந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.

விசயநகர பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆகிய திராவிடக் காலகட்டத்தில் தமிழரால் எதிர்த்துப் போரிடக் கூட இயலவில்லை. எங்கெங்கு காணினும் இனக் கலப்பு மிகுந்துவிட்டது. இந்தத் துரோக வரலாறு தமிழர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, ’திராவிடம்’ என்றாலேயே புரட்சிகரமான சொல் என்பது போல் மடைமாற்றம் செய்யப்பட்டது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jan 25, 2011 3:58 pm

குருதித் தூய்மைவாதம்
இப்போது, தமிழினம் குறிப்பிட்ட எல்லைக்குள் குறுகி நிற்கிறது. ஆயினும், இதுவே தமிழினத்தின் போர்க்களம். இந்தக் களத்தில், பல்வேறு இனத்தவரும் தமிழராய்க் கலந்துதான் நிற்கின்றனர். தூய தமிழ்க் குருதி வாதம் தமிழ் இனத்தின் மரபுக்கு எதிரானது. ஏனெனில், தமிழ் இனம் என்பது, ஒரு பேரினம் ஆகும். இந்திய நிலப்பரப்பு எங்கும் ஆண்ட இனம் இது. இவ்வினத்தில் பல்வேறு சிறு இனங்கள் கால வெள்ளத்தில் கலந்துவிட்டன. அவற்றை ஏற்று அவ்வினத்தவரையும் தமிழர் ஆக்கியதுதான் தமிழின சிறப்பு.

பல்லவர் குல அரசர்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன், தமிழை ஏற்று சிவனியத்தைத் தமிழில் பரப்பினர். கூற்றுவ நாயனார் எனும் சிவனியத் தொண்டர் களப்பிரர் வழி வந்தவர்தான்.

இவர்கள்போல் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். இந்திக்கு எதிராக நடந்த போரில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகிகளில் பிற இனத்திலிருந்து உருவான மறவர்களும் உண்டு.

விசயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், தோல் தொழில்களுக்காகவும் பிற ஏவல் பணிகளுக்காகவும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் சக்கிலியர் என்ப்படும் அருந்ததியர். கடும் உழைப்பாளர்களான இம் மக்களைத் திராவிட அரசர்கள், அடியாட்களாகவும் பயன்படுத்தினர். மதுரை வீரன் அவர்களில் ஒருவர்தான். திருமலை நாயக்கனின் சாதி வெறியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மதுரைவீரன்.

அவரைத் தமிழர்கள் இன்று தங்கள் தெய்வமாக்கிக் கொண்டுள்ளனர். தமிழரின் சிவன் கோயில்களிலும், சிற்றூர் குல தெய்வக் கோயில்களிலும் கூட மதுரைவீரன் சிலை வணங்கப்படுகிறது. இதுவே, தமிழரின் அறச் சிந்தனை மரபின் சான்று.

அருந்ததியர் மக்கள் இன்று சந்திக்கும் சாதிக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட அரச குலத்தவர்தான். ஆனால், திராவிட அரசர்கள், தமிழரிடையே சாதிய மோதல்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்து, ஒற்றுமையின்மையை உருவாக்கிவிட்டனர். அருந்ததியர்கள் இன்று கடைநிலை இழிவைச் சந்திக்கும் பிரிவினராக வாடுகின்றனர். இம்மக்கள் தமிழர்கள் தான். இவர்களின் இழிவைப் போக்க வேண்டிய முதற்கடமைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குத்தான் உண்டு.

இதுபோலவே, திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே! இதில் குருதித் தூய்மைவாதம் கூடாது. தமிழ்த்தேசிய அரசியலில் கரம் கோக்க வேண்டிய கடமை இவர்களுக்கும் உண்டு. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராகவும், கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இச்சதியை முறித்துக்கொண்டு வந்து தமிழராகத் தலைநிமிர்த்தும் பொறுப்பு இம்மக்களுக்கு உள்ளது. தமிழ்த் தேசியக் கருத்தியல் இவர்களை அரவணைக்க வேண்டும்.

தமிழ், களபிரர்களை, பல்லவர்கலை, நாயக்கர்களை, பிரித்தானியர்களையெல்லாம் கண்டுவிட்டு செம்மாந்து நிற்கும் மொழி. இம்மொழியைப் பிற மொழிகளால் எவ்வாறு அழிக்க முடியவில்லையோ, அதேபோல பிற இனங்களால், தமிழ் இனத்தை அழித்துவிட முடியாது. ஆனால், இனத்தின் பாதுகாவலர்களாக தமிழர்கள் தம்மை உணர வேண்டும். போராடாத இனம் வெல்லாது. ஈழத்தில் நடப்பது ஆரியத்தின் நவீன வடிவங்களான சிங்கள-இந்திய கூட்டணிக்கு எதிரான தமிழரின் போர்தான்.

தமிழினத்தின் போராட்ட வரலாற்றின், சுருக்கம் நமக்கு உணர்த்தும் உண்மைகள்,
ஆரியமே தமிழரின் முதல் பகை
திராவிடம் ஆரியத்தின் கிளை!
-என்பவையாகும்.

இந்தப் பாடங்களிலிருந்து, எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். திராவிட இனங்களான/ ஆரிய பிராமணியத்தில் தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா.

இந்திய தேசிய ஒடுக்குமுறை என்பது, இந்தி பேசும் மக்கள் நேரடியாக தமிழர் மீது படையெடுத்து வருவது அல்ல; ஆரியத்தின் தென்னிந்திய சட்டாம்பிள்ளைகளாக உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள இனங்கள், இந்தியாவின் தமிழர் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்.

இவ்வினங்கள் தமக்குள் உள்ள எல்லைச் சிக்கல்களை சுமூகமாகவும் விட்டுக்கொடுத்தும் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், தமிழகத்துடன் உள்ள சிக்கல்களில் மட்டும் ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம், இவ்வினங்களுக்குத் தமிழர் மீது உள்ள இனப்பகையே ஆகும். இந்த இனப்பகையை இந்தியம் வளர்த்தெடுக்கிறது.
ஆகவே, திராவிடம்-இந்தியம் இரண்டும் தமிழினத்தை எதிர்க்கின்றன, அழிக்கத் துடிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடம் குறித்த நமது ஆய்வு முடிவுகள் அனைத்துமே, தமிழ் இன விடுதலைக்கான தேடலின் விளைவுகள்தாம். ’திராவிடர் என்றால் பிராமணர் வரமாட்டார்’ என்ற வாதம் முழுக்க முழுக்க பொய்யானதும், தமிழின விடுதலை உணர்வை மட்டுப்படுத்தியதும் ஆகும்.

இந்தியத்தைப் போலவே ‘திராவிடமும்’ தமிழரின் முகவரியை மறைத்தது. இவை இரண்டுமே தமிழர் தன்னுணர்வு பெறுவதைத் தடுத்தவை; தடுத்து வருபவை.


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jul 19, 2011 5:23 pm

தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா.
சோகம்



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக