ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானிய நாடோடிக் கதை: ஒற்றைப் புல் லட்சாதிபதி!

2 posters

Go down

ஜப்பானிய நாடோடிக் கதை: ஒற்றைப் புல் லட்சாதிபதி! Empty ஜப்பானிய நாடோடிக் கதை: ஒற்றைப் புல் லட்சாதிபதி!

Post by சிவா Mon Jul 18, 2011 6:39 am

ஒரு ஊரில் ஏழை மனிதன் ஒருவன் இருந்தான். அவன் கடும் உழைப்பாளி. சூரியோதயத்திலிருந்து அந்தி சாயும்வரை கடுமையாக உழைத்தாலும் வசதியாக வாழ்வதற்கான பணத்தை அவனால் சம்பாதிக்க முடியவில்லை. அதிர்ஷ்டமும் அவனுக்கில்லை. தனது துன்பத்தை எண்ணி அவன் வேதனைப்படாத நாளில்லை.

கடைசியாக, அவன் கருணைத் தேவதையான கானூனிடம் முறையிடுவதென்று முடிவு செய்தான். தேவதை தனக்குக் கருணை காட்டும் என்று நம்பினான்.

"கருணையே வடிவான கானூன் தேவதையே! எனக்குக் கொஞ்சமாவது அதிர்ஷ்டத்தைக் கொடு. இல்லாவிட்டால் நான் பிறந்ததனால் ஒரு பயனுமில்லை. உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். நான் வாழ்வதால் யாருக்காவது பயன் இருக்குமானால் தயவுசெய்து எனக்கு உதவி செய்!' என்று வேண்டிக் கொண்டான்.

பகலும் இரவும் விடாமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்தான். உணவுகூட அருந்தாமல், மயக்கமுற்று தரையில் விழுகிறவரை பிரார்த்தனை செய்தான்.

அப்போது அவனை யாரோ கூப்பிடுவது போல இருந்தது.

"ஹே...ஹே... நீ இங்கிருந்து எழுந்திரு' என்று அந்தக் குரல் கூறியது.

அவன் கண்ணைத் திறந்து பார்த்து, "யார் நீ... நீ...?' என்று பதறினான்.

"நான்தான் கருணைத் தேவதை கானூன்!'

"நான் இறந்துவிட்டேனென்று கருதி என்னை சொர்க்கத்துக்கு அழைத்துப் போக வந்திருக்கிறாயா?' என்று அலுப்புடன் கேட்டான்.

"இல்லை... எழுந்திரு! நீ கேட்ட அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்திருக்கிறது. நான் சொல்வது போல செய். நீ கோவிலுக்கு வெளியே போய் தலை குப்புற முகம் தரையில் படும்படி விழு!'

"இன்னும் என் கஷ்டம் தொடருகிறதே!' என்று கவலைப்பட்டான் அவன்.

"இல்லையில்லை... உன் எதிர்காலம் பிரகாசிக்கப் போகிறது. நீ தரையிலிருந்து எழுவதற்கு முன்பு தரையைத் தடவிப் பார். உன் கையில் ஒரு பொருள் கிடைக்கும். எதுவாயிருந்தாலும் அதை எடுத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி நடந்து போ...' என்றது தேவதை.

ஏதோ கனவு கண்டது போல இருந்தது அவனுக்கு. வெளியே வந்தவுடன் தடுமாறிக் கீழே விழுந்தான். அடிபட்ட அவனது கணுக்காலை நீவி விடுவதற்காக எழுந்து உட்காரும்போது அவன் கையில் ஒற்றைப் புல் ஒன்று இருப்பதைக் கண்டான்.

"அட, கானூன் சொன்னது போலவே நடக்கிறதே! ஆனால் இந்த ஒற்றைப் புல்லை வைத்துக் கொண்டு என்ன செய்வது. இதுவே ஒரு தங்கத் துண்டாக இருந்தாலாவது உபயோகமாக இருந்திருக்கும். ஒரு வேளை அப்படி இல்லாததும் நல்லதுக்குத்தானோ என்னவோ!' என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டான்.

அவன் இப்படி யோசனை செய்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய ஈ வந்து, அவனைச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டு, அவன் தோள் மீது உட்கார்ந்தது.

அவன் அதைப் பிடித்து, அந்த ஒற்றைப் புல்லில் கட்டிக் கொண்டு மேற்கு திசை நோக்கி நடந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு, எதிரே ஒரு வயதான பெண் ஒரு குழந்தையை முதுகில் தூக்கிக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி வருவதைப் பார்த்தான். குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது.

"பாப்பா... பாப்பா... நீ நல்ல பாப்பாதானே! இந்தப் புல்லைப் பார். அதிலிருக்கும் ஈயைப் பார். ல...லல்ல...லல்லல்லா!'

என்று அந்தக் குழந்தைக்கு சிரிப்பு மூட்ட முயற்சித்தான் அவன்.

அந்தக் குழந்தை அவன் கையிலிருந்த புல்லிலிருந்த ஈயையே உற்றுக் கவனித்தபடி, "ஈ... ஈ... ஈ...' என்றது.

"அப்படியா? இந்த ஈ உனக்கு வேணுமா? இந்தா!' என்று அந்த ஈயைப் பிடித்து குழந்தையின் கைகளில் வைத்தான். ஈயை வாங்கிக் கொண்ட குழந்தை சந்தோஷமாகச் சிரித்தது.

அந்தப் பெண் அவனது நல்ல குணத்துக்காக அவனுக்கு ஏதாவது பரிசு கொடுக்க நினைத்தாள்.

"உனக்கு எவ்வளவோ கொடுக்கலாம். ஆனால் என்னிடமுள்ள இந்த மூன்று அபூர்வ பழங்களைத் தருகிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்!' என்றாள்.

அவன் நன்றியுடன் அந்தப் பழங்களை வாங்கிக் கொண்டு மேற்கு நோக்கி மேலும் நடந்தான்.

வழியில் தாகம் எடுக்கவே, ஒரு பழத்தைச் சாப்பிடத் தொடங்கினான். அப்போது ஒரு பெண்ணின் வேதனைக் குரல் கேட்டது.

பாதையின் ஓரத்தில் ஒரு வயோதிகர் பக்கத்தில் இளம்பெண் ஒருத்தி உட்கார்ந்து கொண்டு வேதனையால் துடித்துக் கொண்டிருந்தாள். பயங்கர வயிற்று வலி போலும். வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

அவன் அருகே சென்று, "ஏதாவது உதவி வேண்டுமா?' என்று கேட்டான்.

"இவளுக்கு திடீரென்று வயிற்று வலி வந்துவிட்டது. உடனடியாகக் குடிக்கத் தண்ணீராவது கொடுக்க வேண்டும்' என்றார் அந்த முதியவர்.

"இங்கே தண்ணீர் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் என்னிடம் நல்ல பழங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றைத் தருகிறேன்' என்று சுயநலமில்லாத அந்த மனிதன் பழத்தை நீட்டினான்.

பழத்தை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள். பழம் சாப்பிட்டதில் வயிற்று வலி குறைந்ததை உணர்ந்தாள்.

நன்றியுணர்வு பொங்க, அந்த முதியவர், மூன்று பட்டுச் சுருள் துணிகளைப் பரிசாகக் கொடுத்தார்.

"நீ செய்த உபகாரத்தை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்' என்று சொல்லிவிட்டு அவரும் அந்த இளம்பெண்ணும் தங்கள் வழியே சென்றார்கள்.



ஒற்றைப் புல், மூன்று அபூர்வ பழங்களாக மாறியது. அவையும் இப்போது, பட்டுத் துணிகளாக மாறிவிட்டதை நினைத்துப் பார்த்து, "எனக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போதுதான் நல்ல காலம் ஆரம்பித்திருக்கிறதுபோல் தெரிகிறது. ஒரு வேளை, இதுதான் அதிர்ஷ்டம் என்கிறார்களோ?' என்று வியந்தபடியே மேலும் நடக்க ஆரம்பித்தான் அந்த நல்ல மனிதன்.

ஒரு நதிக் கரையைக் கடந்து கொண்டிருக்கும்போது, ஒரு முரட்டு மனிதனையும் அவனருகே தரையில் ஒரு குதிரை படுத்துக் கிடப்பதையும் கண்டான்.

முரட்டு மனிதன் அவன் கையிலிருந்த பட்டுத் துணிச் சுருளையே உற்றுக் கவனித்தான்.

பிறகு, "உன்னிடமிருக்கும் பட்டுச் சுருள்களுக்குப் பதிலாக இந்தக் குதிரையைத் தருகிறேன், என்ன சொல்கிறாய்?' என்றான்.

குதிரையைப் பார்த்தால் இறந்துவிட்டது போலத் தோன்றியது. அதனால் அந்த மனிதன் தயங்கினான்.

முரடன் சற்றும் தயக்கமில்லாமல் அந்தப் பட்டுத் துணிச் சுருள்களை அவன் கையிலிருந்து பலவந்தமாகப் பறித்துக் கொண்டு, "நமது வியாபாரம் முடிந்துவிட்டது! நான் வருகிறேன்' என்று பயங்கரமாகச் சிரித்தபடி கிளம்பிப் போயே விட்டான்.

மனம் சோர்ந்து போனாலும், அந்தக் குதிரையைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது.

அதன் முதுகை வருடிக் கொடுத்தான். அது லேசாக அசைந்தது. உடனே தன்னிடமிருந்த கடைசிப் பழத்தை குதிரையின் வாயில் வைத்து ஊட்டிவிட்டான்.

பழத்தைத் தின்ற குதிரை, தனது முழு பலத்தையும் திரட்டிக் கொண்டு எழுந்து நின்றது. அவனது கைகளைத் தனது நாவினால் நன்றியுடன் தடவ ஆரம்பித்தது. அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை! குதிரையின் மீது அமர்ந்தபடி மறுபடியும் மேற்கு நோக்கி சவாரி செய்ய ஆரம்பித்தான்.

தூரத்தில் ஒரு நகரம் தெரிந்தது.

"நமக்கு இங்கே ஏதாவது உணவு கிடைக்குமா? என்று பார்ப்போம்' என்று குதிரையிடம் சொல்லிக் கொண்டே நடந்தவன் ஒரு பெரிய பண்ணையைக் கண்டான். பண்ணையை நோக்கி நடையைக் கட்டினான்.

அந்தப் பண்ணைக்குள் ஒரு குதிரை லாயம் தென்பட்டது. லாயத்தை நோக்கி நடந்தான். அப்போது அவனை நோக்கி ஒரு வேலையாள் ஓடி வந்தான்.

ஓடி வந்தவனிடம், "எனது குதிரைக்கு ஏதாவது தீனி கிடைக்குமா?' என்று கேட்டான்.

"நிச்சயம் தருகிறேன்!'

"ரொம்ப நன்றி! குதிரை மிகவும் பசியாக இருக்கிறது...' என்றான்.

அந்தப் பண்ணை ஒரு பெரிய பணக்காரருக்குச் சொந்தமானது. அந்த வேலையாள், தனது எஜமானனிடம் குதிரையைப் பற்றிச் சொல்வதற்காக ஓடினான்.

குதிரையைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பணக்காரர், அவசர அவசரமாகக் குதிரை லாயத்துக்கு வந்தார். குதிரையைப் பார்த்தவுடன், "இது உயர்ந்த ஜாதிக் குதிரை. உலகம் பூராவும் தேடினாலும் இதுபோன்ற குதிரையைக் காண முடியாது. நான் இந்தக் குதிரையை விலைக்கு வாங்கிக் கொள்கிறேன். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்? ஐந்நூறு தங்கக் காசுகள் தருகிறேன். போதுமா?' என்று கேட்டார்.

"ஐந்நூறு தங்கக் காசுகளா?' ஆச்சரியத்துடன் விழித்தான் இவன்.

"அப்ப சரி..! ஆயிரம் தங்கக் காசுகள் தருகிறேன்! முடிவாக நான் இவ்வளவுதான் கொடுக்க முடியும்.'

"ஓராயிரம் தங்கக் காசுகளா?' அந்த ஏழை முகம் வெளுத்து மயங்கிக் கீழே விழுந்துவிட்டான்.

"ஹே! மகளே! சீக்கிரம் தண்ணீர் கொண்டு வா!'

அந்தப் பணக்காரனின் மகள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தாள். அவள் அங்கே மயங்கிக் கிடந்தவனைப் பார்த்தவுடனே அதிர்ச்சியுடன்,

"அப்பா! இந்த மனிதன்... இதே மனிதன்தான் அவன்..!' என்றாள்.

ஆமாம்! சில மணி நேரத்துக்கு முன்புதான் அந்த ஏழை மனிதன் அந்த இளம்பெண்ணுக்குத் தன்னிடமிருந்த அந்த அதிசயப் பழத்தை தாகத்துக்காகக் கொடுத்தான். அவளது பயங்கர வயிற்று வலி நீங்கியது அவனது உதவியினால்தான்... என்ன அதிசயம்!

ஏழை கண்ணைத் திறந்ததும், அவளைப் பார்த்தான். அடையாளம் தெரிந்து கொண்டான்.

"ஆ... நீயா... நாம் மீண்டும் சந்திக்கிறோம்!' என்றான் மகிழ்ச்சியுடன்.

"நீ ஒரு நல்ல மனிதன். உன்னுடைய இரக்க குணத்தை என் மகள் மூலம் கேள்விப்பட்டேன். நீ லட்சத்தில் ஒருவன்! நான் உனது குதிரையை வாங்கிக் கொள்கிறேன். அதற்கு ஈடாகக் கொடுப்பதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லாவிட்டாலும் என் மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுத்து இந்தப் பண்ணைக்கு உன்னை வாரிசாக்குகிறேன்' என்றார் அந்தப் பணக்காரர்.

அந்த ஏழை மனிதனால் ஒன்றும் பேச முடியவில்லை. ஆனந்த வெள்ளத்தில் மிதந்தான். தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, "கானூன்... என் தகுதிக்கு மேல் அதிகமாக எனக்குக் கொடுத்துவிட்டாய். உனக்கு எப்படி நன்றி சொல்வேன்!' என்று திணறினான்.

அவனது நல்ல மனம் காரணமாக அவன் ஒரு பண்ணைக்கே சொந்தக்காரனாக மாறிப் போனான். அந்த தேவதையை அவன் என்றும் மறக்கவில்லை. ஒரு ஒற்றைப் புல்லுக்குக்கூட அதிக மதிப்பு உண்டு என்பதை உணர்ந்து கொண்டான்.

அவன் சோம்பேறியாக இருக்காமல் உழைத்து, கிடைத்த செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டான். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து பெரும் புகழைச் சேர்த்துக் கொண்டான்.

அவனது புகழ் நாடு முழுவதும் பரவியது. எல்லோரும் அவனை "ஒற்றைப் புல் லட்சாதிபதி' என்று கொண்டாடினார்கள்.

தமிழில்: சொ.மு.முத்து


ஜப்பானிய நாடோடிக் கதை: ஒற்றைப் புல் லட்சாதிபதி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பானிய நாடோடிக் கதை: ஒற்றைப் புல் லட்சாதிபதி! Empty Re: ஜப்பானிய நாடோடிக் கதை: ஒற்றைப் புல் லட்சாதிபதி!

Post by மகா பிரபு Mon Jul 18, 2011 7:16 am

இது தான் அதிஷ்டமோ!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum