ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்!

2 posters

Go down

சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Empty சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்!

Post by சிவா Mon Jul 18, 2011 6:11 am

சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Rathika

மயக்கும் மாலைப்பொழுது. பசுமையான புல்வெளி. பள்ளிக்கு சென்று திரும்பிய மகனுடன் விளையாடுகிறார் ராதிகா. உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொண்டிருப்பதை முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அருகில் சென்று அவரிடம் பேசத் தொடங்கினால்...

மகன் ரோகனின் மெல்லிய கேசத்தை தடவிவிட்டுக் கொண்டே "என் வாழ்க்கையில் இப்படி ஒரு அற்புதம் நிகழும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை'' என்று சொல்லும் போதே அந்த பளபள முகத்தில் சோக ரேகைகள் தென்படுகின்றன.

ராதிகா கடந்த காலத்துக்குள் மூழ்கிப்போகிறார்...

"நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் சகோதரியின் திருமணத்திற்கு வாங்கிய கடனால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. என் படிப்பை நிறுத்த வேண்டிய சூழல். வீட்டு வேலை ஏதாவது செய்தால் கடன் தீர உதவியாய் இருக்கும் என்று எண்ணி பெற்றோர் என் படிப்பை நிறுத்திவிட்டனர்.

வீட்டின் நிலைமையைக் கூறி பஜாரில் நின்ற ஒருவனிடம் வேலை கேட்டேன். அழகாக பேசிய அவன் வேலை வாங்கித் தருவதாக கூறி நேபாளத்தில் இருந்து ரயிலில் ஏற்றி இந்தியா கொண்டுவந்து மும்பை சிவப்பு விளக்கு விடுதியில் என்னை விற்றுவிட்டு போய்விட்டான். அதோடு என் வாழ்க்கையும் தொலைந்துபோனது'' என்று மீதி சோகத்தை சொல்ல முடியாமல் விம்மி அழுகிறார் ராதிகா.

பகலில் தூக்கம். இரவு முழுவதும் மற்றவர் களுக்கு பாலியல் சுகம் கொடுக்க வேண்டும். இதுவே அவரது வாடிக்கையாகிப் போனது.

ஒரு நாளைக்கு 20 வாடிக்கையாளர்களையாவது திருப்தி செய்ய வேண்டிய கட்டாயம். இந்த கொடுமைக்கு உடல் மறுத்தாலும், அவள் மறுக்க முடியாது. அடம்பிடித்தால் அடி உதைதான். அத்தனைக்கு பிறகும் பலவந்த உறவுகள் கண்டிப்பாய் நடந்தேறும். 16 வயதிலேயே இவ்வளவு கொடுமையை சந்தித்திருக்கிறார் ராதிகா.

போராட்டமான இந்த வாழ்வில் அவள் இரவில் தூங்கியதே இல்லையாம். அந்த ராதிகா இன்று அம்மாவாக மாறி நிற்கும் கதையும் சோகமானது. கொடூரமாக நடந்து கொள்ளும் சிவப்பு விளக்கு விடுதியினர் ஒருநாள் இனிமையாக பேசி `கூல்டிரிங்ஸ்' வாங்கி கொடுத்துள்ளனர்.

சந்தோஷமாக குடித்தவளுக்கு என்ன நடந்தது என்பது புரிய சில நாட்களாகிவிட்டது. கண்விழித்துப் பார்த்தபோது ஆஸ்பத்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள். வயிற்றை கிழித்திருந்த தழும்பு, ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அவளுக்கு உணர்த்தியது. அந்த அட்டூழியத்தை ராதிகாவே சொல்கிறார்...

"கோடீஸ்வரர் ஒருவருக்கு எனது ஒரு சிறுநீரகத்தை திருடி விற்றுவிட்டனர். அதற்காக ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்தது. அதை என்னிடம் தராமல் வைத்திருந்தனர். பிறகு அந்த கும்பலிலேயே ஒருவனுக்கு என்னை திருமணம் பேசினார்கள். அவனுக்கு அந்த ஒரு லட்ச ரூபாயை வரதட்சணையாக கொடுத்து மணம் முடித்தார்கள். அவன் அந்த ரூபாயை காலி செய்துவிட்டு என்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டான். அவனிடம் இருந்து எனக்கு கிடைத்த சொத்துதான் என் மகன் ரோகன்'' என்று சொன்னபடி முத்தமிடுகிறார் தன் மகனை!

திருமணத்திற்குப் பிறகும் மற்ற ஆண்களை திருப்திப் படுத்துவதுதான் வேலையாக இருந்தது ராதிகாவுக்கு. குழந்தையுடனாவது சந்தோஷமாக இருக்கலாம் என்றால் அது முடியவே முடியாதாம். குழந்தைகளை தனியாகப் பிரித்து வைத்து விடுவார்களாம்.

ஒருநாள் தன் மகனுடன் எப்படியோ நழுவி தப்பித்து வந்துவிட்டார். ஒரு ரெயிலைப் பிடித்து சொந்த நாடான நேபாளத்துக்கு வந்திருக்கிறார்.

கையில் குழந்தை இருக்கிறது, கணவர் இல்லை. கயவர்கள் கைகளில் மீண்டும் மாட்டினால் தொல்லை. எங்கு செல்வது, யாரிடம் அடைக்கலம் கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். தலைநகர் காத்மாண்டில் `மைதி நேபாள்' என்னும் பெண்கள் அமைப்பு அவருக்கு புகலிடம் தந்தது. அங்கு அவரைப்போலவே பாதிக்கப்பட்ட பல பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். மொத்தம் 83 பெண்களும், 252 குழந்தைகளும் இருந்தனர்.

ராதிகாவுக்கு வழங்கப்பட்ட அறையில் 6 பெண்களும், அவர்களின் குழந்தைகளும் இருந்தனர். இப்போது அந்த மகளிர் விடுதியில் மகனுடன் சந்தோஷமாக வாழ்கிறார் ராதிகா.

தினதந்தி


சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Empty Re: சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்!

Post by positivekarthick Mon Jul 18, 2011 7:21 am

படிக்க படிக்க வேதனை !!!! அழுகை அழுகை அழுகை


சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Pசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Oசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Sசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Iசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Tசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Iசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Vசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Eசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Emptyசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Kசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Aசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Rசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Tசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Hசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Iசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! Cசிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum