புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சென்னைக்கு வயது-370 Poll_c10சென்னைக்கு வயது-370 Poll_m10சென்னைக்கு வயது-370 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னைக்கு வயது-370


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jul 16, 2011 5:00 pm

தமிழகத்தின் தென்கோடியில் இருந்து வரும் மக்களானாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களானாலும் சென்னையில் வந்து வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

அதற்கெல்லாம் காரணம் தமிழக தலைநகரம் சென்னையின் கட்டமைப்பு வளர்ச்சி, மேம்பாலங்கள், சாலை போக்குவரத்து, புறநகர் ரயில் சேவைகள், கடற்கரை அழகு, வணிக வளாகங்கள், ஐ.டி. பூங்காக்கள், சிறந்த ஒளி-ஒலி வசதியைக் கொண்ட திரையரங்குகள், மல்டி-பிளக்ஸ் என எண்ணற்ற காரணங்களைச் சொல்ல முடியும்.

ஆனால், இன்று ஒரு மெட்ரோ நகரமாக உருவெடுத்து வியாபித்திருக்கும் சென்னை தோன்றி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன தெரியுமா? ஆகஸ்ட் 22ஆம் தேதி (இன்று) சென்னைக்கு 370 ஆவது பிறந்த நாள்.

1639 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் 'மதராஸ்' நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள்.

சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

வியாபாரம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் 17_ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்தனர். அப்போது சென்னை நகரமாக இல்லை சிறிய கிராமமாக இருந்தது.

கப்பல் போக்குவரத்துக்கு வசதியான கடல், நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து பொருட்களை சேகரித்து வந்து வியாபாரம் செய்ய இந்த இடம்தான் பொருத்தமாக இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். எனவே வியாபாரத்துக்காக வந்திருந்த ஆங்கில வியாபார பிரதிநிதிகள் பிரான்சிஸ்டே, ஆன்ரூகோகன் ஆகியோர் இங்கு ஒரு இடத்தை வாங்குவதற்காக 'பெரி திம்மப்பா' என்பவரிடம் பேசினார்கள்.

அப்போது சென்னையின் சில பகுதி விஜயநகர அரசரிடம் இருந்தது. அதை 'பூந்தமல்லி வெங்கடாத்ரி நாயக்கர்' என்பவர் நிர்வாகம் செய்து வந்தார். அவரிடம் ஆங்கிலேயர்களுக்கு வியாபாரம் செய்ய நிலம் வேண்டும் என்று கேட்பதற்காக திம்மப்பா வந்தார். 1639ம் வருடம் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.

இதையடுத்து, ஆங்கிலேயர்கள் வங்க கடலுக்கு எதிராக சிறிய வர்த்தக பகுதியை அமைக்க ஒப்பந்தம் ஏற்பட்டது. அங்குதான் பின்னர் செயிண்ட் ஜார்ஜ்கோட்டை அமைக்கப்பட்டது. அது ஆங்கிலேயர்களின் குடியிருப்பாகவும் மாறியது. அப்போது மயிலாப்பூர் சிறிய கிராமமாக இருந்தது. பல்லவ துறைமுகமாகவும் இருந்தது.

இந்த நிலையில், கோல்கொண்டா சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்த திருவல்லிக்கேணி கிராமத்தையும், ஆண்டு தவணைக்கு ஆங்கிலேயர் பெற்றுக் கொண்டனர். இதற்கான ஆண்டு கட்டணம் ரூ.175 என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதுபோல எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளும் ஆங்கிலேயர் வசம் வந்தன. பின்னர் நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், வியாசர்பாடி, சாத்தாங்காடு, கொட்டிவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, வேப்பேரி ஆகியவையும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தன.

சென்னை துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் தான் மக்கள் வசித்தார்கள். மீன்பிடி கிராமமாக இருந்த இந்நகரை சென்னப்ப நாயக்கர் என்பவர் நிர்வகித்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த கால கட்டத்தில்தான் செயிண்ட் ஜார்ஜ்கோட்டை பகுதியில் ஆங்கிலேயர் இருந்த பகுதி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த மற்ற பகுதிகள் பூந்தமல்லி வெங்கடாத்ரியின் தந்தையான 'சென்னை கேசவ நாயக்கரின்' பெயரால் 'சென்னைப்பட்டினம்' என்று பெயர் பெற்று இருந்தது.

இதுவே, பெயர் மருவி சென்னை என்று ஆனது ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் குடியிருந்த மெட்ராஸ், வெங்கடாத்ரியின் மேற்பார்வையில் இருந்த மற்ற பகுதிகள் எல்லாம் சேர்ந்து மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. தற்போது முழு பகுதியும் சென்னை நகரம் ஆகி இருக்கிறது. சிறிய கிராமமாக இருந்த சென்னை நாட்டின் மிகப் பெரிய சிறந்த நகரமாக இப்போது உருவாகி இருக்கிறது.

'மெட்ராஸ் டே' என்ற பெயரில் சென்னை தோன்றிய தினம் ஒரு வார காலம் கொண்டாடப்படுகிற்து.