ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு

Go down

இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு  Empty இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு

Post by சிவா Sun Jul 17, 2011 9:32 am

இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு  S.SAMYVELLU

சிறீலங்காவில் உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் அந்நாட்டு தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் என்று முன்னாள் மலேசிய அமைச்சர் ச.சாமிவேலு கூறினார்.

“சிறீலங்காவில் நடந்து முடிந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல. சக மனிதர்கள் என்ற அடிப்படையில் மலேசிய தமிழர்கள் சிறீலங்கா தமிழர்களுக்கு உதவ வேண்டும்”, என்று நேற்றிரவு கிளப் கோல்ப் நெகாரா சுபாங்கில் நடந்த நிதி திரட்டும் நிகழ்வில் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கி உரையாற்றிய ச.சாமிவேலு கேட்டுக்கொண்டார்.

தமிழர் பேரவை மலேசியா நேற்றிரவு கிளப் கோல்ப் நெகாராவில் ஏற்பாடு செய்திருந்த மனித இன நல நிதி திரட்டும் விருந்து சிறீலங்காவில் போரால் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தும் மலேசியாவில் அகதிகளாகவும் வந்துள்ள தமிழர்களுக்கு பல்வேறு தேவையான உதவிகளை வழங்குவதற்கு ரிம1 மில்லியன் திரட்டும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

மலேசிய முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலுவின் தலைமையில் அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவ்விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழர் பேரவை மலேசியாவின் தலைவர் டாக்டர் என். ஐங்கரன் மலேசியாவில் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 4,000 க்கு, 500 குழந்தைகள் உட்பட, மேற்பட்ட சிறீலங்க தமிழர்களுக்கும் சிறீலங்காவிலுள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்கும் தமிழர் பேரவை மலேசியா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை விவரித்தார்.

இத்திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது இவ்விருந்து என்று கூறிய அவர், மலேசிய முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு ரிம415,000 நன்கொடையாக வழங்கியுள்ளதைச் சேர்த்து ரிம750,000 திரட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இவ்விருந்தில் 500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் அ. வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.மனோகரன், டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மலாயா பல்கலைக்கழக நிறைநிலைப் பேராசிரியர் டாக்டர் கூ கே கிம் ஆகியோரும் அடங்குவர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பாதிரியார் இமேனுவல் தமது நீண்ட உரையில் சிறீலங்கா தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை ஹிட்லரின் ஆட்சியில் நடந்த கொடுமைகளுடன் ஒப்பிட்டார்.

உலகமுழுவதும் பரவியுள்ள தமிழர்கள் சிறீலங்கா தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர் என்றாரவர்.

பெருமளவில் உதவிகள் வழங்கி வரும் மலேசிய தமிழர்களுக்கு அவர் நன்றி கூறினார்.

முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு அவர் வழங்க முன்வந்திருந்த ரிம300,000 த்தோடு மேலும் ரிம115,000 ஐ தமிழர் பேரவை தலைவர் டாக்டர் ஐங்கரனிடம் வழங்கினார்.

மேலும், விருந்தின் மூலம் ரிம1 மில்லியன் திரட்டும் இலக்கை எட்ட இன்னும் ரிம250,000 தேவைப்படுவதைச் சுட்டிக் காட்டிய ச. சாமிவேலு, இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான ஏற்பாட்டை செய்வதாக கூறினார். விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் அந்த அறிவிப்பை பலத்த கைத்தட்டலுடன் வரவேற்றனர்.

மலேசியாஇன்று


இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!
» மலேசிய டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!
» ஜொகூர்பாருவில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு பேரணி
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
» மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum