ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 12:04 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

Admins Online

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

best சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down


best தேங்காய் பர்பி

Post by krishnaamma on Tue May 05, 2015 4:49 pm

தேவையானவை :

1cup தேங்காய் துருவல்
1cup சர்க்கரை
1sp நெய்
ஏலப்பொடி
2sp உடைத்த முந்தரி (தேவையானால் )

செய்முறை:

ஒரு வாணலில் சர்க்கரை, தேங்காய் துருவல் போடவும்.
நன்கு கிளறவும்.
நெய் ஊற்றவும் , ஏலப்பொடி, உடைத்த முந்தரி போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
தேங்காய் பர்பி தயார்.
Cheap and best sweet ,with very less ghee .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best பாதாம் ஹல்வா 2

Post by krishnaamma on Tue May 05, 2015 4:53 pm

பாதாம் ஹல்வா 2

தேவையானவை:

4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
1 / 2cup பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
1 கப் சர்க்கரை
1 டேபிள்ஸ்பூன் நெய்
சிறிதளவு ஏலப்பொடி
பால் சிறிதளவு
2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது

மேலே தூவ:

ரோஜா இதழ்கள் கொஞ்சம்


செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
பாதாம் ஹல்வா ரெடி.
சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.

கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best பாதாம் ஹல்வா 3

Post by krishnaamma on Tue May 05, 2015 4:54 pm

பாதாம் ஹல்வா 3

தேவையானவை:

250 கிராம் பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
200 கிராம் சர்க்கரை
250 கிராம் நெய்
3 கப் பால்
சிறிதளவு ஏலப்பொடி
150 கிராம் ரவை
2 ஸ்பூன் பிஸ்தா தூளாக்கினது
இரண்டு ஷீட் 'சில்வர் ரேக் ' (தேவையானால் )


செய்முறை:

பாதாமை ஒரு இரண்டு மணிநேரம் ஊறவைத்து தோலை உரித்து ரவை போல மிக்சி இல் உடைத்துக்கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில், நெய்விட்டு ரவையை போட்டு வறுக்கவும்.
பிறகு பாதாம் ரவையை போட்டு வறுக்கவும்.
கொஞ்சம் சிவந்ததும், பால் சர்க்கரை போட்டு கிளறவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பிஸ்தா துண்டுகள் தூவவும்.
நெய் பிரிந்து வரும்போது இறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
மேலே 'சில்வர் ரேக் ' ஒட்டவும்.
பாதாம் ஹல்வா வை சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Tue May 05, 2015 4:55 pm

முந்திரி ஹல்வா 2

தேவையானவை:

4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
1 / 2cup முந்திரி ( முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
1 கப் சர்க்கரை
1 டேபிள்ஸ்பூன் நெய்
சிறிதளவு ஏலப்பொடி
பால் சிறிதளவு
2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது

மேலே தூவ:

ரோஜா இதழ்கள் கொஞ்சம்


செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்திரி விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
முந்திரி ஹல்வா தயார்.
சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.

கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best அதிரசம்

Post by krishnaamma on Tue May 05, 2015 4:56 pm

அதிரசம்

தேவையானவை :

பச்சரிசி அரை கிலோ
வெல்லம் கால் கிலோ
நெய் பொரிக்க
ஏலப்பொடி

செய்முறை:

பச்சரிசியை நன்கு களைந்து ,மூன்று மணிநேரம் ஊறவைக்கவும் .
பிறகு வடியவிட்டு தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு பத்து நிமிடம் துணி இல் போட்டு காயவைக்கவும்.
பிறகு சிறிது ஈரத்துடனேயே மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை போடவும்.
அரை அல்லது முக்கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரையவிடவும்.
அது கரைந்ததும் டீ வடிகட்டி இல் வடிகட்டிக்கொள்ளவும்.
இப்படி செய்வதால் வெல்ல தண்ணிரில் இருக்கும் சிறு மண், கல் மற்றும் குப்பைகள் அகற்றப்படும். புன்னகை
இப்போது வெல்லம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
ஒரு சிறு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் அதை கரண்டியால் கொஞ்சம் எடுத்து , கிண்ணி இல் உள்ள தண்ணிரில் விடவும்.
அது கை இல் எடுத்து உருட்டும் படி இருக்கணும்.
அப்படி இருந்தால் அது சரியான பதம்.
இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் கொதிக்கவிடணும்.
மீண்டும் மேலே சொன்னது போல செய்து பார்க்கணும்.
அப்படி சரியான பதம் வந்ததும் ஏலப்பொடி போடணும்.
கிளறி இறக்கணும்.
ஒரு பேசினில் அரிசி மாவை போடவும்.
பாகிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் விடவும்.
மாவை நன்கு கிளறவும
மீண்டும் மற்றும் ஒரு கரண்டி பாகை மாவில் விடவும் , கிளறவும்.
இவ்வாறு மாவு பாகை உறிஞ்சிக்கொண்டு கிட்ட தட்ட சப்பாத்தி மாவு போல வரும் வரை செய்யவும்.
இந்த பதத்தில் அதிரச மாவை இரண்டு நாட்கள் கூட வைத்திருக்கலாம்.
மீதி பாகு இருந்தால் பரவாஇல்லை பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.புன்னகை நல்லா இருக்கும்.
அதிரசம் செய்ய வேண்டும் போது, வாணலி இல் நெய் வைத்து அது காய்ந்ததும், மாவில் ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி நெய் இல் போடவும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
நல்ல பிரவுன் கலர் வந்ததும், கரண்டியால் எடுத்து, மற்றும் ஒரு கரண்டியால் அதில் ( அதிரசத்தில் ) இருக்கும் நெய்யை அழுத்தி நெய் வடிந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும் .
இதே போல மொத்த மாவையும் செய்யவும்.
மிருது வான அதிரசம் தயார் புன்னகை

குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை இல் செய்வார்கள் . அப்படி செய்வதானால் சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகம் போட்டுக்கணும் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best முந்திரி கொத்து

Post by krishnaamma on Tue May 05, 2015 4:58 pm

முந்திரி கொத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த முந்திரி கொத்து மிகவும் பிரபலம் !
நீங்களும் செய்து மகிழுங்கள் இந்த தீபாவளிக்கு!

தேவையானவை :

பூரணம் செய்ய :

பாசி பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம்.
முந்திரி பருப்பு 100 கிராம்.
வெல்லம் 100 கிராம்
ஏலக்காய் 10
தேங்காய் துருவல் 1 கப்
வெள்ளை எள்ளு 50 கிராம்

மேல் மாவு செய்ய :

பச்சை அரிசி மாவு 1 /4 கப் (களைந்து உலர்த்தின அரிசி இல் செய்த மாவு என்றால் நல்லது )
மைதா 3 /4 cup
மஞ்சள் கலர் 1 ,சிட்டிகை
சோடா உப்பு சிறிது
எண்ணெய் பொரிக்க

செய்முறை:

பச்சை அரிசி மற்றும் மைதா மாவை சலித்து மஞ்சள் கலர், சோடா உப்பு சேர்த்து கெட்டியாக , அதாவது இட்லி மாவு பதத்திற்கு
தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
பூரணத்திற்கு பாசி பயறை நன்றாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும், ஆறிய பின் ரவை போல் பொடித்து
கொள்ளவும்.
பிறகு எள்ளு மற்றும் தேங்காய் துருவலை தனி தனியாக வறுக்கவும்.நல்ல பிரவுன் கலர் வரும் வரை தேங்காவை வறுக்கவும்.
'பட பட' வென பொறியும் வரை எள்ளை வறுக்கவும்.
முந்திரி யை ஒரு சுட்டறு மிக்சி இல் பொடிக்கவும். ஏலம் பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டி கொள்ளவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
இளம் பாகு அதாவது ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகில் கொஞ்சம் எடுத்து அதில் விடவும். பிறகு கையால் உருட்டி பார்க்கவும் , உருட்ட வந்தால் அது இளம் பாகு. அப்படி பாகு காய்ந்ததும்,
அடுப்பை சின்ன தாக்கி, பொடித்த அனைத்தையும் கொட்டி கிளறவும்.
கொஞ்சம் ஆறினதும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .
மாவு கெட்டியாக, சிறய சிறிய உருண்டைகளாக பிடிக்கும் பதம் இருக்கவேண்டும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை சேர்த்து கொள்ளலாம்.
பிசைந்த மாவை சிறு சிறு உருளைகளாக உருட்டவும்.
மூன்று மூன்று உருண்டைகளாக சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு , உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா ,அரிசி மாவு கலந்த மாவில் முக்கி
கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
சுவையான முந்திரி கொத்து தயார்
இதை நிறைய நாட்கள் வைத்து சாப்பிடலாம்.சீக்கிரம் கெடாது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best மைசூர் பாகு

Post by krishnaamma on Tue May 05, 2015 4:59 pm

மைசூர் பாகு

தேவையானவை :

ஒரு கப் கடலை மாவு
இரண்டு கப் நெய்
இரண்டு கப் சர்க்கரை
வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி

செய்முறை :

ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் புன்னகை ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
மொத்தமாக கொட்டக் கூடாது  கூடாது  கூடாது  கூடாது
மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
மைசூர் பாகை அதில் கொட்டவும்.
ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.


குறிப்பு: மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best தால் ஹல்வா !

Post by krishnaamma on Tue May 05, 2015 5:02 pm

தால் ஹல்வா !

இது பயத்தம் பருப்பில் செய்வது. ரொம்ப சுவையான வட இந்திய இனிப்பு. ஆனால் செய்ய கொஞ்சம் பொறுமை தேவை புன்னகைபுன்னகை

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கராச்சி ஹல்வா  ! ! - Page 8 TqroocOQei3SxRRdeSFb+DSC05477

தேவையானவை :

பயத்தம் பருப்பு 1 கப்
நெய் 1 கப்
சர்க்கரை 1 கப்
பால் 1/4 கப்
சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.
அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல்  சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.
நன்கு கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா'  பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best வால்நட் ஹல்வா

Post by krishnaamma on Tue May 05, 2015 5:04 pm

வால்நட் ஹல்வா

தேவையானவை :

2 கப் மைதா அல்லது all purpose flour
3 கப் சர்க்கரை
1 கப் வெண்ணை
1 கப் வால்நட் ( பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் )
3 கப் வெந்நீர்

செய்முறை :

ஒரு அடிகனமான வாணலி அல்லது உருளி இல் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போடவும்.
அதிலேயே சர்க்கரையும் போடவும்.
மிதமான தீ இல் அடுப்பை வைக்கவும்.
வெண்ணை உருகி சர்க்கரையும் உருகட்டும்.
அது உருகி கொஞ்சம் பிரவுன் கலரில் குழம்பாக வரும் இதை 'காரமெல்' என்போம்.
அப்படி வந்ததும், அதை கிளரிக்கொண்டே, வெந்நீரை  அதில் விடவும்.
நன்கு கலக்கவும்.
அதில் மொத்த 'caramel ' ம் கரைந்து பிரவுன் கலர் தண்ணீர் கிடைக்கும்.
அதை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
மற்றுமொரு வாணலி இல் பாக்கி வெண்ணை போட்டு அது கொஞ்சம் உருகியதுமே , மைதாவை போட்டு நன்கு பொரிக்கவும்.
கருகாமல் பார்த்துக்கொள்ளனும்.புன்னகை
நல்ல 'பவுன் கலரில் பொரிந்ததும், பொடித்து வைத்துள்ள வாழ்நாட்களை போட்டு கிளறவும்.
அவை நன்கு கலந்ததும், இப்போ எடுத்து வைத்துள்ள 'caramel  water ' ஐ  அதில் விட்டு, கிளறவும்.
கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
மொத்த தண்ணீரும் உ றிந்து கொண்டு 'ஹல்வா' பதத்துக்கு வரும்வரை கிளறவும்.
நெய்தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
தேவையானால் , கொஞ்சம் ஆறினதும், கடைகள் போல வில்லைகள் போடவும்.
அருமையான ' வால்நட்  ஹல்வா ' தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best மோஹன் தால்

Post by krishnaamma on Tue May 05, 2015 5:05 pm

தேவையானவை:

Condensed milk 400 gms tin 1
கடலை மாவு 3 கப்
பிஸ்தா, பாதாம் , முந்திரி பொடித்து வைத்தது 3 டேபிள் ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் நெய்விட்டு கடலை மாவை கருகாமல் வறுக்கவும்.
இதற்கு ஒரு 10 -12 நிமிடங்கள் ஆகும்.
பொறுமையாக வறுக்கணும்.
அப்புறம் ஈசிதான். புன்னகை
அடுப்பை சின்னதாக்கி விட்டு, condensed மில்க் ஐ விட்டு நன்கு கிளறவும்.
கைவிடாமல் கிளறவும், அது மொத்தமாய், சுருண்டு வரும் வரை கிளறவும்.
நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
சமப்படுத்தவும்.
இப்போ உடைத்த பருப்புகளை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடலாம்.
அவ்வளவு தான் 'மோஹன் தால்' ரெடி.
வாயில் கரையும் அற்புதமான ஸ்வீட் ரெடி.
எங்க கிருஷ்ணா அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் இது.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best பாதுஷா

Post by krishnaamma on Tue May 05, 2015 5:08 pm

பாதுஷா - எல்லோருக்கும் பிடித்த 'இனிப்பு' குறைவான இனிப்பு இது புன்னகை செய்வது ரொம்ப கஷ்டம் என்று நினைக்க வேணாம் ரொம்ப சுலபம்.


சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கராச்சி ஹல்வா  ! ! - Page 8 EjB1v5dhQZ6hyo25Nom6+260720141056

இதோ அதன் ரெசிபி :

தேவையானவை :

1 கப் மைதா
பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
சமையல் சோடா ஒரு சிட்டிகை
சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
தயிர் 1 டேபிள் ஸ்பூன்
நெய் - உருக்கியது - 1/8 கப்
வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்

சர்க்கரை பாகு வைக்க :

1 1/2 கப் சர்க்கரை
1 1/2 கப் தண்ணீர்
ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்

பொறிக்க : எண்ணெய்

செய்முறை :

முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
'மெத்' என்று பிசையவும்.
தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
அவசரப்படாமல் காத்திருக்கவும்.
2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.

அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
அது தான் பதம்.
மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் !  ரிலாக்ஸ்
ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் புன்னகை

குறிப்பு: மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best ஷோகன் ஹல்வா !

Post by krishnaamma on Tue May 05, 2015 5:10 pm

ஷோகன் ஹல்வா புன்னகை

இந்த ஹல்வா சாக்கலேட்   போல இருக்கும்................மிருதுவாக இருக்காது புன்னகை நல்லா 'கடக் முடக்' என்று இருக்கும்........பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கராச்சி ஹல்வா  ! ! - Page 8 YJC9O0BnSusGOxjvjMQA+211020141261

தேவையானவை:

கடலை  மாவு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 2 கப்
ஏலப்பொடி கொஞ்சம்
தேவையானால் உடைத்த பாதாம் முந்திரி பருப்புகள் 1 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு தட்டில் நெய் தடவி வைத்துகொள்ளவும்.
ஒரு வாணலி இல் 2 கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஏலப் பொடி  போடவும்.
1 கம்பி பதம் வரும் வரை கொதிக்கட்டும்.
அதற்குள், மற்றும் ஒரு வாணலி இல் அல்லது ஆழமான உருளி இல்  1 கப் நெய்விட்டு கடலை மாவை வறுக்கவும்.
நெய்விட்டதும் அது 'liquid ' ஆக ஆகிவிடும்...........அப்படியே அடுப்பை 'சிம்' இல் வைத்து கை விடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
கொஞ்சம் பிரவுன் ஆகும் வரை இப்படி வறுக்கணும்.
பக்கத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை எடுத்து  இந்த கடலை மாவில் விடவும்.
பொங்கி வரும்...பத்திரம்.............நன்கு கிளறவும்.
பொடித்து வைத்துள்ள பருப்புகளை போடவும்.
மீதி  உள்ள நெய்யையும் கொட்டி கிளறவும்.
நுரைத்து , நன்கு சுருண்டு வரும்போது ஏற்கனவே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடலாம்.
'சூப்பரா ஆக' இருக்கும்.............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by mbalasaravanan on Tue May 05, 2015 5:48 pm

அம்மா நான் எடை குறைக்க டயட் இருக்கலாம்னு நினைக்கும் போது இப்படி சுவையான பதார்த்தங்களை போட்டால் என்ன செய்வேன் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Wed May 06, 2015 11:49 am

DOWNLOAD

இந்த திரி இல் இருக்கும் எல்லா குறிப்புகளையும் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Wed May 06, 2015 11:58 am

@mbalasaravanan wrote:அம்மா நான் எடை குறைக்க டயட் இருக்கலாம்னு நினைக்கும் போது இப்படி சுவையான பதார்த்தங்களை போட்டால் என்ன செய்வேன் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1135130

என்ன செய்வது?.......................எடையை குறைப்பது என்பது ரொம்ப கஷ்டமான வேலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum