ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

+15
சதாசிவம்
கே. பாலா
ஜாஹீதாபானு
ayyamperumal
செய்தாலி
kitcha
பூஜிதா
SK
இளமாறன்
பாலாஜி
அருண்
உமா
ரஞ்சித்
அப்துல்லாஹ்
மகா பிரபு
19 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by மகா பிரபு Sat Jul 16, 2011 6:50 am

First topic message reminder :

இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.

Last edited by மகா பிரபு on Sun Jul 17, 2011 7:03 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by மகா பிரபு Sun Jul 17, 2011 6:23 am

கருகிய இதயங்களுக்கு
கவிதையால் உயிர் கொடுத்து
கண்ணான மணிகளுக்கு கண்ணீரால் உடல் கொடுத்து
கடவுளாக வணங்கிய
கருணை உறவுகளை
கை கூப்பி வணங்குகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by சதாசிவம் Sun Jul 17, 2011 12:22 pm

நண்பர்களே,
இது போல் மேலும் சில சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதம் செய்வோமே?
இன்று தீ விபத்து பல இடங்களில் நடக்கிறது, தீ விபத்தில் இருந்து தப்புவது எப்படி என்று சற்று யோசிப்போம். தீ ஆபத்து நாம் அன்றாடம் செல்லும் ரயில் நிலயம், சூப்பர் மார்க்கெட், திரை அரங்கம், பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் இருக்கிறது. இந்த விபத்தில் இருந்து நாமும், நாம் பிள்ளைகளும் தப்பிக்க சில விஷயங்களை கற்போம் .

1. முதலில் எங்கு சென்றாலும், emergency exit எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2. உங்கள் பிள்ளைகளுக்கு தீ விபத்து ஏற்படும் காலத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி வெளியேற வேண்டும் என்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
3. பள்ளியில் சேர்க்கும் போது அங்கு ஆசிரியர் எப்படி, நிர்வாகம் எப்படி என்று மற்று பார்க்காமல், அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்புகள் என்ன, ஆசியர்களுக்கு பாதுகாப்பு, தீ அணைப்பு பயிற்சி அளிக்க பட்டுள்ளதா, ஆபத்து காலத்தில் எப்படி வெளியேற வேண்டும் என்று குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க படுகிறதா என்று விசாரித்து பின்பு சேர்க்க வேண்டும்.
4. பார்க், கடற்கரை என்று மற்று சுற்றாமல் அருகில் உள்ள தீ அணைப்பு அலுவலகத்திர்க்கு உங்கள் பிள்ளைகளை கூட்டி சொல்லுங்கள். பக்குவமான மாணவர்களுக்கு (from 8th std) தமிழ்நாடு அரசு சிறப்பு தீ அணைப்பு பயிற்சிகளை அளிக்கிறது. உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடம் வாயிலாக இதை அணுகலாம்.
5. உங்கள் வீட்டில், காரில் சிறிய தீ அணைப்பு கருவி, முதல் உதவி பெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
6. St.John ஆம்புலன்ஸ் நிறுவனம் (egmore) Rs.200 இரண்டு நாள் முதல் உதவி பயிற்சி அளிக்கிறது. நீங்களும் இதை கற்றுக் கொள்ளலாம். அரசுப் பேருந்து நடத்துனர், ஆசிரியர்கள் இதை பழக வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. ஆனால் நடை முறையில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதை கற்பதில்லை. உங்கள் குழந்தையின் ஆசிரியருக்கு இந்த பயிற்சி உள்ளதா என்று கேட்டு பள்ளியில் சேருங்கள்.
7. எளிதில் தீ பற்றும் பொருளான ஆடைகளை குழந்தைக்கு உடுத்தாதீர்.

சதாசிவம்
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by அப்துல்லாஹ் Sun Jul 17, 2011 12:29 pm

சதாசிவம் wrote:நண்பர்களே,
இது போல் மேலும் சில சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதம் செய்வோமே?
இன்று தீ விபத்து பல இடங்களில் நடக்கிறது, தீ விபத்தில் இருந்து தப்புவது எப்படி என்று சற்று யோசிப்போம். தீ ஆபத்து நாம் அன்றாடம் செல்லும் ரயில் நிலயம், சூப்பர் மார்க்கெட், திரை அரங்கம், பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் இருக்கிறது. இந்த விபத்தில் இருந்து நாமும், நாம் பிள்ளைகளும் தப்பிக்க சில விஷயங்களை கற்போம் .

1. முதலில் எங்கு சென்றாலும், emergency exit எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2. உங்கள் பிள்ளைகளுக்கு தீ விபத்து ஏற்படும் காலத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி வெளியேற வேண்டும் என்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
3. பள்ளியில் சேர்க்கும் போது அங்கு ஆசிரியர் எப்படி, நிர்வாகம் எப்படி என்று மற்று பார்க்காமல், அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்புகள் என்ன, ஆசியர்களுக்கு பாதுகாப்பு, தீ அணைப்பு பயிற்சி அளிக்க பட்டுள்ளதா, ஆபத்து காலத்தில் எப்படி வெளியேற வேண்டும் என்று குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க படுகிறதா என்று விசாரித்து பின்பு சேர்க்க வேண்டும்.
4. பார்க், கடற்கரை என்று மற்று சுற்றாமல் அருகில் உள்ள தீ அணைப்பு அலுவலகத்திர்க்கு உங்கள் பிள்ளைகளை கூட்டி சொல்லுங்கள். பக்குவமான மாணவர்களுக்கு (from 8th std) தமிழ்நாடு அரசு சிறப்பு தீ அணைப்பு பயிற்சிகளை அளிக்கிறது. உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடம் வாயிலாக இதை அணுகலாம்.
5. உங்கள் வீட்டில், காரில் சிறிய தீ அணைப்பு கருவி, முதல் உதவி பெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
6. St.John ஆம்புலன்ஸ் நிறுவனம் (egmore) Rs.200 இரண்டு நாள் முதல் உதவி பயிற்சி அளிக்கிறது. நீங்களும் இதை கற்றுக் கொள்ளலாம். அரசுப் பேருந்து நடத்துனர், ஆசிரியர்கள் இதை பழக வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. ஆனால் நடை முறையில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதை கற்பதில்லை. உங்கள் குழந்தையின் ஆசிரியருக்கு இந்த பயிற்சி உள்ளதா என்று கேட்டு பள்ளியில் சேருங்கள்.
7. எளிதில் தீ பற்றும் பொருளான ஆடைகளை குழந்தைக்கு உடுத்தாதீர்.

பயனுள்ள மற்றும் பின்பற்றவேண்டிய மிக நல்ல தகவல்கள்...மிக்க நன்றி சதா ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by rameshnaga Sun Jul 17, 2011 11:11 pm

"அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்"-
கற்கத்தான் உன்னை அனுப்பியது கல்விச் சாலைக்கு.

இப்படிக் கருகி நீ வருவாய் என்றால்...

எப்படி?
********
உன் அறிவின் சிறகுகளால் எனக்கான வானம்
தருவாய் என்றிருந்தேன்..

இப்படிப் பசித்த நெருப்புக்கு
இரையாவாய் என்றால்...

எப்படி?
**********
இன்றும்-
என் உணவுத் தட்டில் மிச்சமிருக்கிறது
உனக்கான "அடிக் குழம்பு! ஆனைக்குட்டி!-சோறு.

நீ
"போய் வருகிறேன்"-என வீசிச் சென்ற
கை நிழலின் பிம்பம் ...
இன்னமும் நிற்கிறது என் கண்களில்.

திரண்டெழுந்து திரும்பும்
என் ஒவ்வொரு மூச்சிலும்
திரும்பி ஒலிக்கிறது உனது பெயர்.
*********
ஆதியில்-
நீ சொன்ன "அம்மா"-வால் வளர்ந்தவள் நான்.

வெறும் விடலையாய் இருந்தவளை
"கடவுளை" நோக்கி நகர்த்தியவன் நீ.

இன்னமும் மிச்சமிருந்தது...
உன்னால் நான் வளர வேண்டிய காலங்கள்.
************
ஆயிரம் கடவுள்கள் கூடி வசிக்கும் ஊரில்..
ஒரு கடவுளின் கருணையும் எனக்கில்லை
உன்னையும், உன் தோழன்மார், தோழிமாரையும்..
ஒரு கருப்பு நெருப்பு பற்றித் தின்ற நாளில்.
**************
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியில்..
மாவில் கால் நனைத்து நீ நடந்த தடம்
இன்னமும் அப்படியே நம் வீட்டில் இருக்க..

நீயும் இருக்கிறாய்..
நமது வீட்டின் பூஜையறையில்
உனக்குப் பிடித்த குட்டிக் கிருஷ்ணனோடு..
***********
நீ என்னோடு இருந்த நாட்களில்..
வெள்ளிக் கொலுசு கட்டி வெறும் தரையில் நீ நடக்க..

நான்
அண்ணாந்து பார்த்த வானமெல்லாம்
என் தரைக்கடியில்..

இன்றோ..
எனக்கு வெறும் தரையே வானமாகிவிட..

வெற்றிடத்தை வெறித்து நோக்கி
என் நிழலோடு சாகிறேன் .. என்னை வெறுத்த படி.
*********
இன்று
எல்லா ஊர்களிலும்..எல்லாத் தெருக்களிலும்
கூவி விற்கப்படும் நுகர்வோர் பொருளாகி விட்டது
கடவுளும், கல்வியும்.

வாழும் நிர்பந்தத்தில் ..
செத்து வாழ்கிறது சமூகம்.

பிணம் திண்ணிக் கழுகுகளோடு..வாழ்ந்து விடலாம்.
ஆனால்-பணம் தின்னும் பேய்களோடு.
*********
ஓடியே போய் விடுகிறது காலம்.
நேற்று உன் ஏழாம் நினைவு நாள்.
இருந்தாலும்-இப்போதெல்லாம் நான்
நாட்களோடு..வாழ்வதே இல்லை.

இன்று-என் வழியில்..
கடவுளும் இல்லை..காலமும் இல்லை..

இருந்தாலும்..
"நான்"-இன்னமும் இருந்து கொண்டிருக்கிறேன்..
வெகு நிச்சயமாய்..
ஒரு "இறந்தவள்"இருந்து கொண்டிருக்கிறேன்....

நீ வந்துவிடுவாய்..
என்னிடம்.. என
என் உயிர் துளிர்க்கும் நம்பிக்கையோடு
உன்னை மட்டும் எதிர்பார்த்தபடி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by மகா பிரபு Mon Jul 18, 2011 6:21 am

அனைத்து கவிதைகளும் உடம்பை புல்லரிக்க வைக்கிறது.

சதாசிவத்தின் தகவல்கள் அவசியமானவை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by rameshnaga Mon Jul 18, 2011 8:56 am

நன்றி ! மகா பிரபு!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by கலைவேந்தன் Mon Jul 18, 2011 10:52 am

அங்கே கருகியவை பிஞ்சுகளல்ல..
சுயநலமிப் பூகம்பத்தில் கலங்கிய பல நெஞ்சுகள்..

எதிர்காலம் மறுக்கப்பட்ட
மொட்டுகளின் உதிர்காலம்..!

விடியுமுன்னே வீழ்ந்துவிட்ட‌
நம்பிக்கை நட்சத்திரங்கள்..

சிலரது பை நிறையவேண்டி
பின்னப்பட்ட சாதக சிலந்திவலையில்
சட்டென வீழ்ந்து உயிர்மரித்த‌
பொன்வன்டுகள்..!

சொந்தப்பாவத்தை
கோயில் நகரம் சென்று
தீர்த்துவிடலாம்...
இந்த பாவத்தை தீர்க்க
என்ன செயல் புரிந்தோம்..?

மலருமுன்னே கருகிய
மலர்ப்பிஞ்சுகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலிகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by ரபீக் Mon Jul 18, 2011 10:54 am

எதிர்காலம் மறுக்கப்பட்ட
மொட்டுகளின் உதிர்காலம்..!

விடியுமுன்னே வீழ்ந்துவிட்ட‌
நம்பிக்கை நட்சத்திரங்கள்

உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,,,,,,,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by கலைவேந்தன் Mon Jul 18, 2011 3:14 pm

நன்றி ரஃபீக் தம்பி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 18, 2011 3:24 pm

உண்மையே கலை எத்தனை கோயில்கள் ஏறி இறங்கினாலும் இத்தனை பிஞ்சுகளை கருகச்செய்த பாவம் விடாது சோகம் பெற்றோரின் அழுகைக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது...

என் கண்ணீர் அஞ்சலிகள் உதிர்ந்த மொட்டுகளுக்கு....சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 3 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum