ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள்

4 posters

Go down

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Empty இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள்

Post by கோவைசிவா Tue Sep 15, 2009 1:25 pm

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Cmalarnews_41382998229
இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Cmalarnews_73579043150






இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.


1969: ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.
1972: ரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார்.
1973: ஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின.


1974: டி.சி.பி. (TCP) என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf மற்றும் Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றை யொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும். இதுவே பின்னர் கூஇகஐக என்ற இன்னொரு வகை இன்டர்நெட் வழிமுறைக்கு வழி தந்தது.


1983: டொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து ".com, .edu .gov" என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன.


1988: Morris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது.
1989: இப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது. இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.
1990: நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார்.


1993: இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen) தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.
1994: ஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர்.
1995: அமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது.
1996: ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.


1998: ஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporation for Assigned Names and Numbers அல்லது ICANN என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது.
1999: இசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது.


2000: 1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது.
2002: உலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது.
2004: ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook) தளத்தை உருவாக்கித் தந்தார்.
2005: வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.
2006: இன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.
2007: ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது.


2008: இன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர்.
2009: முழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Empty Re: இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள்

Post by செரின் Tue Sep 15, 2009 1:27 pm

அருமையான தொகுப்பு நண்பரே இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் 677196 இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் 677196
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Empty Re: இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள்

Post by ரூபன் Tue Sep 15, 2009 1:33 pm

எனக்கு தேவையான தகவல் மிக்க நன்றிகள் நண்பரே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Empty Re: இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள்

Post by கோவைசிவா Tue Sep 15, 2009 1:37 pm

தங்களுக்கும் நன்றிகள் நண்பரே
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Empty Re: இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள்

Post by தாமு Tue Sep 15, 2009 3:47 pm

மிக அருமை இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் 677196 இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் 677196 இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் 677196 இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள் Empty Re: இன்டர்நெட் 50- கடந்து வந்த மைல்கற்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum