ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

+4
ரபீக்
கண்ணன்3536
kitcha
dsudhanandan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by dsudhanandan Thu Jul 14, 2011 7:57 am

வினியோகஸ்தர்களை மிரட்டிய வழக்கில், சென்னை கே.கே.நகர் போலீஸ் அனுப்பிய சம்மனில், "சன் டிவி' கலாநிதி ஆஜராகவில்லை. சேலத்தைச் சேர்ந்த கந்தன் பிலிம்ஸ் உரிமையாளர் செல்வராஜ்; இவர், கடந்த 1ம் தேதி, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், "தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் வினியோக உரிமையை, சன், "பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, சேலம் பகுதிக்கு கொடுப்பதாக, 1.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, பணத்தை பெற்றுக் கொண்டார்.
ஒப்பந்தப்படி, வினியோக உரிமையை தனக்கு கொடுக்காமல், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வினியோகித்து விட்டார். பணத்தை கேட்ட போது, அதில், 82.53 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை அடுத்து, கடந்த 3ம் தேதி, சக்சேனா கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தள்ளப்பட்டார். கோர்ட் உத்தரவின்படி, சக்சேனாவை இரண்டு நாட்கள், "கஸ்டடி'யில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது, சக்சேனா, "நான், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஊழியன் மட்டுமே. என் முதலாளி(கலாநிதி) சொன்னதைத் தான் செய்தேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சக்சேனா மீது, சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும், "மாப்பிள்ளை' படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் புகார் அளித்ததையடுத்து, அந்த வழக்குகளிலும் சக்சேனா, ஐயப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். சக்சேனா அளித்த தகவலின் அடிப்படையில், சன் குழும நிர்வாக இயக்குனரான கலாநிதியை, நேற்று(புதன் கிழமை) காலை 10 மணிக்கு ஆஜராகக் கூறி, கே.கே.நகர் போலீசார், கடந்த திங்களன்று சம்மன் அனுப்பினர். கலாநிதி, போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்தாக வேண்டும் என்பதால், பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.

பரபரப்பான சூழலில், காலை 10:15 மணிக்கு, பாட்சா என்பவர் தலைமையில் ஏழு வக்கீல்கள், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி, கலாநிதி சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கலாநிதி, சொந்த விஷயமாக தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், வரும், 26ம் தேதி சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐயப்பன், விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதால், தானும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில், கலாநிதி திடீரென வெளிநாடு பயணம் சென்றதாக தெரிகிறது. எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் கலாநிதி சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு கால அவகாசம் கொடுப்பதா அல்லது அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் கைது செய்வதா என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கலாநிதி எங்கே? : திங்களன்று சம்மனை பெற்ற கலாநிதி, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்று, அங்கிருந்து, "சுவிஸ்' விமானம் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்று விட்டார். எப்போதும், விமானத்தில் முதல் வகுப்பிலேயே பயணம் செய்யும் கலாநிதிக்கு, அந்த வகுப்பில், அப்போது, "சீட்' இல்லை எனக் கூறி விட்டனர். "பிசினஸ் வகுப்பில்' பயணம் செய்வதை தவிர்க்கும் கலாநிதி, வேறு வழியில்லாமல், "பிசினஸ்' வகுப்பிலேயே, அவரது கன்னடத்து மனைவி காவிரியுடன், "ஜூரிச்' நகரத்துக்கு பறந்து விட்டார்.
-- தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by kitcha Thu Jul 14, 2011 8:08 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by Guest Thu Jul 14, 2011 10:43 am

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:44 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by கண்ணன்3536 Thu Jul 14, 2011 10:48 am

தப்பிச் சென்ற கலாநிதி மாறன், ஜெனீவாவில்!

Viruvirupu, Thursday 14 July 2011, 05:02 GMT
ஜூரிச்,சுவிட்சலாந்து: சன் பிக்சர்ஸ் முறைகேடுகள் (மிரட்டல், பண மோசடி) காரணமாக நேற்று (புதன் கிழமை) காலை 10 மணிக்கு கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் எதிர்பார்க்கப்பட்ட கலாநிதி மாறன், அதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். புதன் கிழமை காலை 10 மணிக்கு போலீஸில் ஆஜராக வேண்டும் என்ற சம்மன் அவருக்கு வழங்கப்பட்டது, திங்கட்கிழமை.

கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் கலாநிதி மாறன் ஆஜராக வேண்டியிருந்த அதே புதன் கிழமை காலை 6.20 மணிக்கு, அவர் பயணம் செய்த விமானம், Flughafen Zürich விமான நிலையத்தில் தரையிறங்கியது. புதுடில்லியிலிருந்து அதிகாலை 1.15க்குப் புறப்படும் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் அது. தடம் இலக்கம் LX147.

புதுடில்லியிலிருந்து 3 நிமிட தாமதத்துடன் சரியாக 1.18க்குப் புறப்பட்ட விமானத்தின் பிசினெஸ் கிளாஸ் வகுப்பில் கலாநிதி மாறனும் அவரது மனைவியும் ஜூரிச் வந்திறங்கினர். அவர்களது இந்தியப் பாஸ்போர்ட்களில் சுவிட்சலாந்துக்கான ‘லோங் டேர்ம் – மல்டிபிள் என்ட்ரி’ பிஸினெஸ் விசாக்கள் உள்ளன. 2013ம் ஆண்டுவரை செல்லுபடியாகக்கூடிய விசாக்கள் அவை.

ஜூரிச் விமான நிலைய இமிகிரேஷன் கன்ட்ரேலை எவ்விதச் சிரமமும் இன்றிக் கடந்த அவர்கள், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவில்லை. அரைவல் எக்ஸிட் வழியாக வெளியேறிய அவர்கள், அதிலிருந்து ஒரு தளம் மேலே அமைந்துள்ள டிப்பாச்சர் ஏரியாவுக்குச் சென்றனர்.

அங்கிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் செக்-இன் கௌண்டரில் மீண்டும் ஒருமுறை, மற்றொரு விமானத்துக்கு போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டனர். சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் தடம் எண் LX2804 விமானத்துக்கான போர்டிங் பாஸ்கள் அவை. காலை 9.40க்கு ஜெனீவா நோக்கிச் செல்லும் விமானம் அது.

இவர்கள் ஜெனீவாவில் தங்குகிறார்களா, அல்லது அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்று விடுவார்களா என்பது தற்போதைக்குத் தெரியாமல் உள்ளது. தகவல் கிடைக்கும்போது அறியத் தருகிறோம்.

திங்கட்கிழமை அவர் இந்தியாவில் இருந்த நிலையில் சம்மனை வாங்கியிருந்தும், புதன் அதிகாலையில் அவரால் நாட்டைவிட்டு வெளியேற முடிந்திருக்கின்றது. இதற்குக் காரணம், குறிப்பிட்ட சம்மன், சாதாரண விசாரணைக்காக அழைக்கப்படுவதற்காக வழங்கப்படும் ஒன்றாக இருந்திருக்கின்றது.

இந்த ரகத்திலான சம்மன் ஒருவருக்கு வழங்கப்படுகையில், அதுபற்றி குடிவரவுத் துறைக்கு அறிவிக்கப்படுவதில்லை. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு எக்ஸிட் முத்திரை குத்திய இமிகிரேஷன் அதிகாரிக்கு, அவருக்கு அன்று போலீஸில் ஆஜராக வேண்டிய அவசியம் இருப்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை.

குறிப்பிட்ட சம்மன் கலாநிதியின் கைகளில் கிடைத்தபோது, புதன் கிழமை தன்னால் வரமுடியாதபடி வெளிநாட்டு புரோகிராம் இருப்பதாக அவரால் சொல்லியிருக்க முடியும். சட்டம் அதை அனுமதிக்கின்றது. அல்லது, புதன்கிழமை அதிகாலை வெளிநாடு செல்லும் பயணம் உறுதியானதும்கூட, தன்னால் புதன்கிழமை வரமுடியாது என்ற விஷயத்தை காவல்துறைக்கு அவர் அறிவித்திருக்க முடியும்.

இந்த இரண்டையும் அவர் செய்யவில்லை.

தனது பயணத் திட்டத்தை ரகசியமாக வைத்திருந்த நிலையிலேயே, அவர் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இதிலிருந்து, போலீஸ் விசாரணையில் முகம் கொடுக்க விரும்பாத நிலையிலேயே அவர் தப்பிச் சென்றிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by ரபீக் Thu Jul 14, 2011 10:48 am

அவர் வாக்கிங் சென்றுள்ளார் !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by அருண் Thu Jul 14, 2011 12:47 pm

நல்ல பிளான் பண்ணி அருமையாக தப்பித்து உள்ளாரே... அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by உமா Thu Jul 14, 2011 12:56 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:இந்த செய்திக்கு ஒரு கருத்து தினமலர் பதிவு செய்தேன் அதை நிச்சயம் பதிவு செய்யமாட்டார்கள் அதனால் ஈகரையிலும் வெளியிடுகிறேன்...

தினமலரின் தலைமை நிறுவனர் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கிகொண்டாலும் ஓட்டம் என்றுதான் தினமலர் செய்தி வெளியிடுமா..?
எதிராளி வீழ்ந்துகிடக்கும்போது கைகொட்டி சிரிப்பது அவர் செய்த பாவம், துரோகங்களை விட கீழானது. தினமலருக்கு புரியுமா???

சூப்பருங்க நல்ல கேள்வி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by ஸ்ரீஜா Thu Jul 14, 2011 2:58 pm

பிராடு பயபுள்ள .............. விடாதீங்க எங்க போனாலும் ................ கோபம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by SK Thu Jul 14, 2011 3:09 pm

அவர் எந்த்ரன் இரண்டாம் பாகம் location பாக்க போயீருக்கார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by ஸ்ரீஜா Thu Jul 14, 2011 3:12 pm

SK wrote:அவர் எந்த்ரன் இரண்டாம் பாகம் location பாக்க போயீருக்கார்


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை Empty Re: "சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 2 குழந்தைகளுடன் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்: கணவர் போலீசில் புகார்
» இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
» தப்பிச் சென்ற கலாநிதி மாறன், ஜெனீவாவில்
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum