ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

+3
kitcha
அருண்
dsudhanandan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Empty மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

Post by dsudhanandan Wed Jul 13, 2011 8:30 pm

First topic message reminder :

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டுவெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 10 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.

ஜாவேரி பஜார் பகுதியில் இருந்த மீட்டர் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதே போல், தாதர் பகுதியில் கபுதார் கானா என்ற இடத்தில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

- dinamalar



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Empty Re: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

Post by dsudhanandan Wed Jul 13, 2011 10:38 pm

20 பேர் இறந்ததாகவும், 113 பேர் காயமடைந்ததாகவும் டைம்ஸ் நவ் - செய்தி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Empty Re: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

Post by dsudhanandan Thu Jul 14, 2011 7:10 am

21 பேர் இறந்ததாகவும், 141 பேர் காயமடைந்ததாகவும் மகாராஷ்டிரா அரசு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Empty Re: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

Post by puthuvaipraba Thu Jul 14, 2011 7:17 am

தீவிரவாததிற்கு உடனே பக்கவாதம் வரச்செய் காலமே !
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Empty Re: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

Post by dsudhanandan Thu Jul 14, 2011 7:26 am

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் யுசுப் ராஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் டெக்மினாஜான்ஜூவா வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை‌யில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் மற்றும்‌ அதிபர் , பிரதமர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர் என்றார். மும்பையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த மூன்று இடங்களில், நேற்று மாலை அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில், 21 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது: மும்பையின் தென்பகுதியில், புகழ்பெற்ற மும்பா தேவி கோவில் அருகேயுள்ள ஜாவேரி பஜாரில், நேற்று மாலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்தனர். இந்த ஜாவேரி பஜார் பகுதி, தங்க நகை மற்றும் வைர நகைக் கடைகள் நிறைந்த பகுதி. மாலை நேரம் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய மும்பை தாதர் பகுதியில், அனுமன் கோவில் அருகே, கபுதார் கானா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த இடம், தாதர் ரயில் நிலையம் அருகேயுள்ளது. மூன்றாவதாக சார்னி ரோட்டில், ஓபேரா ஹவுஸ் அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இந்த குண்டும் காரில் வைக்கப்பட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த இந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில்,21 பேர் பலியானதாகவும், 100 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குண்டு வெடிப்புகளும், மாலை 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் நிகழ்ந்தன.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விரைந்து சென்று, குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டனர்; தடயங்களை சேகரித்தனர். எப்படிப்பட்ட தன்மை கொண்ட குண்டு வெடித்துள்ளது என்பதை முதலில் கண்டறிய முடியாவிட்டாலும், பின்னர் தெரிய வரும்.
இவ்வாறு போலீசார் கூறினர். மும்பையில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பை அடுத்து, மும்பை நகரத்தின் மற்ற பகுதிகளில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், தலைநகர் டில்லியிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நடந்த விவரங்களை கேட்டறிந்தார். அத்துடன், தேசிய பாதுகாப்புப் படையினர், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவும் எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் ஒன்றில், டில்லியில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றது. இந்த குண்டு வெடிப்பில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2008ம் ஆண்டில், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட சோகத்தின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், ""முதலில் கிடைத்த தகவலின்படி, மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 56 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ், நாயர் மற்றும் கே.இ.எம். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு எப்படிப்பட்டது என்பதை உறுதி செய்ய, பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்,'' என்றார். இந்த மூன்று குண்டு வெடிப்புகளிலும் 10 பேர் பலியானதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், டில்லியில் உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அவர்களுடன் விவாதித்தார்.

முக்கிய குண்டுவெடிப்புகள் : மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 20 ஆண்டுகளாக தொடர்கிறது. இங்கு நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்.
1993 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.
1998 பிப். 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.
2002 டிச. 2: மேற்கு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலி, 31 பேர் காயம்.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.
ஆக. 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.
2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயமடைந்தனர்.
2008 நவ. 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர்.
2011 ஜூலை 13: ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. 2008 பயங்கரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி கசாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.


மும்பை குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், முக்கிய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, மாவட்டந்தோறும் எஸ்.பி.,க்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி, வெடிகுண்டு நிபுணர்கள் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயல்: சிதம்பரம் : ""மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக உள்ளது,'' என உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி நேற்றிரவு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் டில்லியில் உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டம் நடந்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின், அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 54 ஆகவும் உள்ளது. இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என எண்ணுகிறேன். 6.45 மணிக்கு முதல் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த செயல், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன். மும்பையில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படை உள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களை தவிர, மும்பையில் வேறு எங்கும் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் இல்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

- dinamalar


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Empty Re: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

Post by dsudhanandan Thu Jul 14, 2011 7:30 am

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Tamil-Daily-News_Paper_26444643736மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Large_274925மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 LhnxIschahb


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - Page 2 Empty Re: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum