புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
1 Post - 50%
heezulia
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
20 Posts - 3%
prajai
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_m10இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 10:42 am


இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  K.kamaraiar+image.jpg+%25287%2529




இன்று பெருந்தலைவர் கமாராஜர் அவகளின் பிறந்தநாள் அவரை வணங்குவோம்



காமராஜர் வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 10:52 am

இவரை பற்றி ஒரு சில தவறான செய்திகள் கேள்விப்பட்டேன்.உண்மையா.நானும் விபரங்களை தேடுகிறேன்.தெரிந்தவர்கள் கூறவும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 11:15 am

தவறான செய்திகள அது என்ன நண்பா கூறவும்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 11:49 am

காமராஜர் முதல்வராக இருந்தபொழுதுதான் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது. எல்லைகளை வகுப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு அப்போதே மாநிலங்களுக்கிடையே மனஸ்தாபங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. தெற்கே தேவிகுளம், பீர்மேடு, குமுளி உள்ளிட்ட இடிக்கி மாவட்டம் முழுவதுமே தமிழர்கள் அன்று மிகுதியாக இருந்த போதிலும் திருவிதாங்கூர்-கொச்சி பிரதேசம் என்ற நிலவரத்தை மாற்றி, தமிழர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளையும் சேர்த்து, தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த மலபாரையும் சேர்த்து மலையாள மொழிக்கான கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்நாட்டின் தெற்கு எல்லை சுருங்குவதை எதிர்த்து தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் முன்னின்று மீட்புப் போராட்டம் தொடங்கினார். பலரும் அதனை ஆதரித்தனர்.

முல்லைப் பெரியாறு அணைத் தேக்கத்திற்கு நீர்வரத்து உள்ள தேவிகுளம் பீர்மேடு பகுதிகளாவது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் தவறினால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் விவசாயத்திற்குப் போதிய பாசன வசதியின்றி சங்கடப்பட நேரிடும் என்றும் டாக்டர் பா.நடராஜன் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், காமராஜரே தென்மாவட்டத்துக்காரராக இருந்த போதிலும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. குளமாவது மேடாவது என்றார். மேலும், “அவையிரண்டும் எங்கும் போய்விடவில்லை, இந்தியாவில்தான் உள்ளன,” என்றும் கூறினார்.

காமராஜரின் உள்ளத்தில் தேசிய உணர்வு மிகவும் ஆழப் பதிந்து போயிருந்ததால்தான் அவையிரண்டும் இந்தியாவில்தான் உள்ளன என்று அவரைக் கூறவைத்தன

தேவிகுளம் பீர்மேடு கேரளத்துடன் சேர்க்கப்படுவதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடாது என்ற காமராஜரின் எண்ணத்திற்கு மாறாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்ததால் இன்று முல்லைப் பெரியாறு எவ்வளவு பெரிய தலையிடியாகிவிட்டிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும் என்று காமராஜர் தன் செல்வாக்கைப் பயன்படுத்திச் செயல்பட்டிருந்தால் அவற்றோடு கூடவே மங்கலாபுரம் பகவதி காவும் தமிழ்நாட்டின் பகுதியாகி, தமிழர்கள் ஆண்டு தோறும் எவ்விதச் சிக்கலும் இன்றி அங்கு சென்று வழிபட்டுத் திரும்புவது சாத்தியமாகியிருக்கும்.

ஏனெனில் அந்த பகவதிதான் சிலப்பதிகாரக் கண்ணகியாவாள்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 15, 2011 11:57 am

அது சரி kitcha அண்ணா அவர் விட்டு கொடுத்ததன் நோக்கம் ஒரே நாட்டில் இருக்கும் மாநிலம் என்று தானே அதில் தவறு இல்லை
“அவையிரண்டும் எங்கும் போய்விடவில்லை, இந்தியாவில்தான் உள்ளன,”

பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 12:36 pm

பூஜிதா wrote:அது சரி kitcha அண்ணா அவர் விட்டு கொடுத்ததன் நோக்கம் ஒரே நாட்டில் இருக்கும் மாநிலம் என்று தானே அதில் தவறு இல்லை
“அவையிரண்டும் எங்கும் போய்விடவில்லை, இந்தியாவில்தான் உள்ளன,”

அவரை பற்றி தவறாகச் சொல்லவில்லை. எப்படி கல்வியை தொலை நோக்கு பார்வையுடன் தந்தாரோ அதே தொலை நோக்கு பார்வையுடன் அவர் எல்லை முடிவில் செய்திருந்தால் ........................இந்த நிலைமை வந்திருக்காது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 15, 2011 2:26 pm

தரை வார்க்கும் படலம் கட்ச தீவு வரைதான் தொடர்ந்துள்ளதே !!!!தமிழன் என்றோர் இனமுண்டு , தனியே அதர்க்கோர் குணமுண்டு அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 2:47 pm

தமிழ்
காசினியின்
ணிமகுடம்
ராசரீக
சர்வஞ்ஞத்துவம்
எங்கள் மூதறி பெருந்தலைவர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Hஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Aஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Sஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Aஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 2:49 pm

கே. பாலா wrote:தரை வார்க்கும் படலம் கட்ச தீவு வரைதான் தொடர்ந்துள்ளதே !!!!தமிழன் என்றோர் இனமுண்டு , தனியே அதர்க்கோர் குணமுண்டு அதிர்ச்சி

கோபம் கோபம் கோபம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 3:07 pm

திரு.SK அவர்களே ஒரு சிறு கோரிக்கை, தங்களது இந்த பதிவில் சில வரிகளில் பெயருடன் சேர்த்து வரும் ஜாதியினை நீக்கிவிடுங்களேன்... இனி வரும் தலைமுறையாவது காமராஜ நாடாரை காமராஜராக மட்டும் பார்க்கட்டும், முத்துராமலிங்க தேவரை முத்துராமலிங்கமாக மட்டும் பார்க்கட்டும், முத்துலக்ஷ்மி ரெட்டியை முத்துலக்ஷ்மியாக மட்டும் பார்க்கட்டும்... வ. உ. சிதம்பரம் பிள்ளையை வ.உ.சிதம்பரமாக மட்டும் பார்க்கட்டும், கண்ணப்ப முதலியாரை கண்ணப்பராக மட்டும் பார்க்கட்டும், வெங்கடராம ஐயரை வெங்கடராமராக மட்டும் பார்க்கட்டும், நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் ஒவ்வொரு பெருந்தலைவர்கள் பிறந்த நாளையும், இறந்த நாளையும் அந்த தலைவரின் ஜாதி நாளாக கொண்டாடுகிறார்கள்... இது கட்டாயம் மாற்றப்பட வேண்டிய திருத்தப்படவேண்டிய ஒன்று.. இறந்த தலைவர்களின் தொண்டினை மறைக்கும் அளவிருக்கு ஜாதி முலாம் அவர்கள் மீது பூசப்படுகிறது... மறைந்த ஒவ்வொரு பெருந்தலைவர்களுக்கும் நாம் செய்ய கூடிய உண்மையான தொண்டு அவர்கள் வகுத்த கொள்கையை பின்பற்றி வாழ்வதே அவர்களின் ஜாதியை பின்பற்றுவதல்ல.. இந்த மறுமொழியை பொதுவாக அனைத்து தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும் பகிர விழைகிறேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Hஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Aஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Sஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  Aஇன்று பெருந்தலைவர் கமாராஜர் பிறந்தநாள்  N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக