புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் நோட்டு: பதறும் புலனாய்வு ஏஜன்சிகள்
Page 1 of 1 •
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் 1000 மற்றும் 500 ரூபாய் மதிப்பிலான இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் மையமாக தென்மாநிலங்கள் மாறிவிட்டதாக, மத்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் எதிரொலியாக, விமான நிலையங்களில் சோதனை நடைமுறைகளை கடுமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளநோட்டு கடத்தல் "மாபியா'கள் மீதான கண்காணிப்பை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டி.ஆர்.ஐ.,), மத்திய குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,), மத்திய புலனாய்வுத்துறை (ஐ.பி.,) தீவிரப்படுத்தியுள்ளன.
"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்றழைக்கப்படும் கோவை, சமீபகாலமாக கள்ளநோட்டு கும்பலின் இலக்குக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி, கோவை மாநகரிலுள்ள கணபதியில் திடீர் சோதனை நடத்திய போலீஸ் குழுவினர் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த கிதான் முகமது(55), கோவை, வடவள்ளியைச் சேர்ந்த புஷ்பலதா(25) ஆகியோரை கைது செய்தனர்; 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நோட்டுகளை பரிசோதித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், ஒரிஜனல் ரூபாய் நோட்டுகளை போன்றே, நுணுக்கமான தொழில்நுட்பத்துடன் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒரிஜனல் ரூபாய் நோட்டுக்கும், கள்ளநோட்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதுமில்லை.வழக்கமாக பிடிபடும் கள்ளநோட்டுகளை போல இவை, தரம் குறைந்ததாக இல்லை. இந்திய அரசு அச்சகங்களில் கரன்சி நோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்படும், உயர்தரமான தாள்கள் பயன்படுத்தப்பட்டிந்தன. இதைக் கண்டு, போலீஸ் உயரதிகாரிகளே ஆடிப்போயினர். கள்ளநோட்டு கும்பலின் "நெட்வொர்க்' நாடு கடந்தும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று விசாரணை நடத்துவதற்கே உள்ளூர் போலீசார் பெரும்பாடுபடும் நிலையில், நாடு கடந்த "நெட்வொர்க்' கொண்ட கள்ளநோட்டு மாபியா கும்பலை கண்டுபிடிப்பது எப்படி? என, புரியாமல் விழிக்கின்றனர்.
கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் 1000, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பிடிபடுவது ஒன்றும் புதிதல்ல. இதற்குமுன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளன. கடந்த மே 24ல், கோவை சி.பி.சி.ஐ.டி., யின் கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு போலீசார் பீளமேடு பகுதியில் சோதனை நடத்தி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்(42), ராமநாதபுரத்தைச் சேர்ந்த காமராஜ்(45) ஆகியோரை கைது செய்தனர்; பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதே போன்று, கடந்த ஆண்டு அக்.,14ல், திருப்பூர் போலீசார் ஒரு வீட்டை சோதனையிட்டு 48 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கைப்பற்றி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த குர்ஷித் (25) என்பவனை கைது செய்தனர். அவனிடம் நடந்த விசாரணைக்குபின், நவ.,1ல், மற்றொரு வீட்டை சோதனையிட்டு 2.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகமது அஷ்ரப்(25), முகமது சதாம் உசேன்(22), அப்துல் ரகீப்(50) கைது செய்யப்பட்டனர். இவை தவிர, கோவை மற்றும் திருப்பூர் போலீசில் கடந்த ஐந்தாண்டுகளில் 25க்கும் மேற்பட்ட கள்ளநோட்டுவழக்குகள் பதிவாகியுள்ளன. புழக்கத்தில்விட்டவர்கள் மட்டுமே இதுவரை போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். பின்னணியிலுள்ள ஏஜன்ட்கள், கடத்தல்காரர்கள் குறித்த விபரங்களை போலீசாரால் திரட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு கள்ளநோட்டு கும்பலின் "நெட்வொர்க்' பரம ரகசியமாக உள்ளது.
தடுமாறுகிறது புலனாய்வு பிரிவு: நாடு கடந்த, மாநிலம் கடந்த கள்ளநோட்டு கும்பலின் நெட்வொர்க் குறித்து உள்ளூர் போலீசாரால் விசாரிக்க முடியாது என்பதால், இவ்வழக்குகளை விசாரிப்பதற்கு என்றே தமிழக போலீசின் சி.பி.சி.ஐ.டி., பிரிவில், "கள்ளநோட்டு தடுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு' செயல்படுகிறது. உள்ளூர் போலீசாரால் பதிவு செய்யப்படும் கள்ளநோட்டு வழக்குகள் இப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. கள்ளநோட்டு தடுப்பு பிரிவு, தமிழக அளவில் நான்கு மண்டலமாக செயல்படுகிறது.
சென்னை அலுவலகத்தில் டி.எஸ்.பி., தலைமையில் இரு இன்ஸ்பெக்டர்கள், இரு எஸ்.ஐ.,கள், 15 போலீசார் பணியாற்றுகின்றனர். கோவையில் ஒரு டி.எஸ்.பி.,- ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே உள்ளனர். திருச்சியில் டி.எஸ்.பி., தலைமையில் 6 பேரும், மதுரையில் டி.எஸ்.பி., உள்பட 8 பேரும் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை பார்த்தாலே, கள்ளநோட்டு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையில் எந்த அளவுக்கு "வீரியம்' இருக்கும் என்பதையும், கள்ளநோட்டு தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு எந்தளவுக்கு தீவிரம் காட்டுகிறது என்பதையும் யூகித்துவிட முடியும்.
உள்ளூர் போலீசாராலும் கள்ளநோட்டு வழக்குகளை விசாரிக்க இயலாது; இவற்றை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக குற்றப்புலனாய்வு பிரிவிலும் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லை என்ற அவல நிலையே கள்ளநோட்டு கும்பல் தமிழகத்தில் ஊடுருவ ஊக்கமளிக்கிறது.
பாகிஸ்தானில் அச்சடிப்பு: பாகிஸ்தான் அரசும், அந்நாட்டின் புலனாய்வு ஏஜன்சியுமான ஐ.எஸ்.ஐ.,யும் (இன்டர் சர்வீஸ் இன்டலிஜென்ஸ்) இந்தியா மீது இரு வகையான பயங்கரவாதங்களை ஏவி விடுகின்றன. ஒன்று, பயங்கரவாத இயக்கங்களை தூண்டிவிட்டு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகளை தகர்த்து, மக்களிடம் அமைதியற்ற சூழலை ஏற்படுத்துவது. அடுத்து, இந்திய கரன்சிக்கு ஈடான தோற்றத்துடன் கள்ளநோட்டுகளை அதிகளவில் அச்சிட்டு இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுவது. இந்த இரண்டாம் யுக்தியானது, இந்திய பொருளாதாரம் மீது தொடுக்கப்படும் ஒருவகை பொருளாதாரச் சீரழிவு பயங்கரவாதம். இவ்விரண்டு தாக்குதல்களையும் இடைவிடாது நடத்தி வருகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானில், அந்நாட்டுக்கான கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும், அரசு அச்சகங்கள் குவெட்டா, கராச்சி, பெஷாவர் நகரங்களில் இயங்குகின்றன. இந்த அரசு அச்சகங்களில் கரன்சி அச்சடிக்க தேவையான தரமான தாள்கள், லண்டனில் உள்ள காகித ஆலைகளில் ஆர்டர் கொடுத்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப காலமாக, கரன்சி தாள் கொள்முதல் அளவு, பாகிஸ்தானின் தேவைக்கும் அதிகமாக இருப்பதாகவும், அளவுக்கு மீறி கொள்முதல் செய்யப்படும் கரன்சி தாள், இந்திய ரூபாய் நோட்டுகளை போன்றே கள்ளநோட்டுகளை அச்சடிக்க பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுவதாக வெளியுலக விவகாரங்களை கவனிக்கும் இந்திய புலனாய்வு ஏஜன்சிக்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும், அந்நாட்டின் மீது இந்திய அரசால் குற்றம்சாட்ட முடிகிறதே தவிர, எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாத அளவுக்கு சர்வதேச சட்டம் சார்ந்த சிக்கல்கள் தடுக்கின்றன. பாகிஸ்தானில் அச்சிடப்படும் இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள், "டி கம்பெனி' என, சுருக்க அடைமொழியுடன் அழைக்கப்படும் நிழலுலக மாபியா தலைவன் தாவூத் இப்ராகிம் கும்பல் மூலமாக, பல வழிமுறைகளிலும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன.
பாகிஸ்தானில் இருந்து நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டு வழியாகவும், பாகிஸ்தான் - துபாய் - இலங்கை வழியாகவும், பாகிஸ்தான் - துபாய் - சிங்கப்பூர் வழியாகவும், பாகிஸ்தான் - டாக்கா (வங்கதேச தலைநகர்) வழியாகவும் இந்திய எல்லைக்குள் கடத்தி வரப்படுகின்றன. இதற்கென, விமானங்களில் தொடர்ச்சியாக பயணம் செய்யும், சோதனை கெடுபிடிகளில் இருந்து தப்பிக்கும் யுக்திகளை நன்கறிந்த "மாபியா' கும்பலைச் சேர்ந்த ஏஜன்ட்களை பயன்படுத்துகின்றனர்.
தென்மாநிலங்களில் மையம்: வங்கதேசம், சிங்கப்பூர், துபாய், இலங்கை, நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்படும் கள்ளநோட்டுகள், இங்குள்ள "மாபியா நெட்வொர்க்' ஏஜன்ட்களுக்கு கைமாற்றப்படுகின்றன. அதன்பின், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சாலை வழியே வாகனங்களில் கடத்தப்பட்டு, மாநில அளவில் செயல்படும், ஏஜன்ட்களுக்கு மாற்றப்படுகிறது. அவர்கள் தொழில், வர்த்தகம் அதிகமுள்ள, பணப்புழக்கம் நிறைந்த டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஊடுருவி புழக்கத்தில் விடுகின்றனர்.
இதற்கு, உள்ளூர் கிரிமினல்கள் உதவுகின்றனர். கள்ளநோட்டுகள் 1:2 விகிதத்தில் கைமாற்றப்படுகின்றன. ஒருநபர் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு ஈடாக 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை தருகின்றனர். "இத்தொழில் சட்டவிரோதமானது; ஆபத்து நிறைந்தது' என்ற போதிலும், அதிக தொகை கிடைக்கிறது என்பதால் படித்த, வேலையில்லா இளைஞர்கள் பலரும் துணிந்து ஈடுபடுகின்றனர்.
பெரும்பாலானோர் பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், சென்னை, கோவை, திருப்பூரில் முகாமிட்டிருப்பதாக மத்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. கோவை மற்றும் திருப்பூரில் அடுத்தடுத்து 1000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பிடிபட்டதே இதற்கு சான்று.
இதனால், இந்திய ரிசர்வ் வங்கியும் உஷார் நடவடிக்கை மேற்கொண்டு கள்ளநோட்டு தடுப்பு நடவடிக்கையை நாடுமுழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது. வங்கிகளுக்கு அடுத்தடுத்து உஷார் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறப்பு முகாம்களை நடத்தி கள்ளநோட்டுகளை கண்டறியும் வழிமுறைகளை விளக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இப்பணியில் வங்கி நிர்வாகங்கள் மட்டுமின்றி, மாநில போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளையில், கள்ளநோட்டு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ.,), மத்திய புலனாய்வுத்துறை (ஐ.பி.,), மத்திய குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.,) உள்ளிட்ட ஏஜன்சிகள் நாடு முழுவதும் தங்களது கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளன. விமான நிலையங்களில் வழக்கமாக நடத்தப்படும் பாதுகாப்புமுன்னெச்சரிக்கை சோதனை நடைமுறைகளுடன், கள்ளநோட்டு ஊடுருவல் தடுப்பு சோதனையையும் கூர்மையாக்குமாறு, விமான நிலைய பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு (சி.ஐ.எஸ்.எப்.,) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமான டூப்ளிகேட் நோட்டு!போலீஸ் கமிஷனர் தகவல்:கோவை நகரில் கடந்த இரு மாதங்களில் மட்டும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன. இவற்றில், கணபதியில் பிடிபட்ட கள்ளநோட்டுகள், ஒரிஜனல் ரூபாய் நோட்டு போன்றே, தரமான தாளில், தத்ரூபமாக, மிக நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டறிந்த தனிப்படை போலீசார், கள்ளநோட்டு வழக்கில் பிடிபட்ட கிதார் முகாமது, புஷ்பலதா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரி கூறுகையில்,""கோவை நகரில் இதுவரை பிடிபட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை காட்டிலும், கணபதியில் பிடிபட்ட நோட்டுகள் அசல் ரூபாய் நோட்டுகளை போன்றே உள்ளன.
உயர்தொழில்நுட்ப யுக்திகளுடன் மிகத்தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் பெரிய அளவிலான "நெட்வொர்க்' இருக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்த யூக விபரங்களை தற்போது வெளியிட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும்; குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்,'' என்றார். கமிஷனர் அமரேஷ் புஜாரி, இதற்குமுன் 10 ஆண்டுகள் மத்திய புலனாய்வுத் துறையில் (ஐ.பி.,) பணியாற்றியவர். அப்போது, பலவிதமான தேச விரோத செயல்கள் குறித்தும், "மாபியா நெட்வொர்க்' குறித்தும் தகவல் அறிந்தவர். அந்த முன்அனுபவத்தை கொண்டு, கள்ளநோட்டு கும்பலின் நெட்வோர்க்கை எப்படியும் கண்டறிந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
திருப்பூரில் மாபியா ஏஜன்ட்கள்!ருப்பூர், ஆசியாவிலேயே அதிகளவில் பனியன் உற்பத்தி செய்யும் மாவட்டம். இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து ஆண்டுதோறும் நடக்கும் பனியன் ஏற்றுமதி மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை அன்னிய செலாவணி கிடைக்கிறது. வேலைவாய்ப்பு அதிகம் மிகுந்த மாவட்டம் என்பதால் வடமாநிலங்களில் இருந்து, குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.கள்ளநோட்டு புழக்கம் பெரும்பாலும் இவர்கள் மூலமாகவே நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்த கள்ளநோட்டு சோதனையில் கைதான முகமது அஷ்ரப், முகமது சதாம் உசேன், அப்துல் ரகீப், குர்ஷித் ஆகிய நான்கு பேருமே மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள். வேலைவாய்ப்புக்காக திருப்பூரில் முகாமிட்டிருப்பதாக கூறி, இவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. எனினும், ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூரில், எந்தெந்த பகுதிகளில் கள்ளநோட்டு கும்பல் பதுங்கியுள்ளது என, கண்டறிவதில் போலீசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியதாவது:நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தக நோக்கங்களுக்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் திருப்பூர் வருகின்றனர். இவர்கள் உண்மையாகவே வர்த்தக நோக்கத்துடன்தான் வருகிறார்களா, "ட்ரக் மாபியா (போதைப் பொருள் கடத்தும் கும்பல்) மற்றும் "கவுன்டர்பீட் கரன்சி மாபியா' (கள்ளநோட்டு) கும்பலைச் சேர்ந்தவர்களா? என்பதை கண்டறிவதில் எண்ணற்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வெளிநாட்டில் இருந்து வருவோர் மாவட்ட போலீசில் பதிவு செய்து செல்கின்றனர். எவ்வளவு நாள் தங்கவுள்ளனர், எங்கு தங்குகின்றனர், தினமும் எங்கு செல்கின்றனர், என்ற விபரங்களையும் அளிக்க வேண்டும் என்பது விதிமுறை. எனினும் அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாரைச் சந்திக்கிறார்கள் என, தினமும் கண்காணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் கூட்டநெரிசல் மிகுந்த "டாஸ்மாக்' மதுக் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் புழக்கத்தில் விடுகின்றனர். ரகசிய தகவலோ அல்லது புகாரோ வந்தால் மட்டுமே எங்களால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்; அந்த அளவுக்கே போலீஸ் பலமும் உள்ளது.இவ்வாறு, திருப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
பயங்கரவாதத்துக்கும் தீனி!மத்திய புலனாய்வுத்துறையில் (ஐ.பி.,) பணியாற்றி, ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் இந்திய கள்ளரூபாய் நோட்டுகள் வான்வழியாக அரபு நாடுகளுக்கு கடத்தப்பட்டு, அங்கு பெருமளவில் பதுக்கப்படுகிறது. இவ்வாறான கடத்தலுக்கு, "பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (பி.ஐ.ஏ.,) விமானப்போக்குவரத்து உதவுவதாக இந்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் பாகிஸ்தானின் ஐ.எஸ். ஐ., புலனாய்வு ஏஜன்சிக்கு நேரடி தொடர்பு உள்ளது. இந்திய தரப்பில் இருந்து எழுப்பப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை, அந்நாட்டு அரசாங்கம் பொத்தாம் பொதுவாக மறுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களது பொய்யுரையை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2008, ஏப்., 24ல் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி நவ்சாத் சலாம்கான், இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். அவர் வசம் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, அந்த அதிகாரிக்கு "ஹூஜி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் முப்தி அப்துல் கனன் உடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது. அதன்பிறகும்கூட, இந்திய பொருளாதாரத்துக்கு எதிரான கள்ள நோட்டு பயங்கரவாதத்தை பாக்., அரசு நிறுத்தவில்லை. கள்ளநோட்டு ஊடுருவலால் இந்திய பொருளாதாரம் சிதைவது ஒருபுறம் இருந்தாலும், இங்கு வேரூன்றி படர்ந்துள்ள சர்வதேச பயங்கரவாத அமைப்புகளை வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது; இது, மிகவும் ஆபத்தானது என்பதை இந்திய அரசும் நன்கு உணர்ந்திருக்கிறது. இவ்வாறு, முன்னாள், ஐ.பி., உயரதிகாரி தெரிவித்தார். -

Similar topics
» பாகிஸ்தான் நோட்டு: பதறும் புலனாய்வு ஏஜன்சிகள்
» பழைய இந்திய, பாகிஸ்தான் நோட்டு
» என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1