ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

3 posters

Go down

புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!! Empty புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

Post by kitcha Mon Jul 11, 2011 6:28 pm

சென்னை: வரும் புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரசிகர்கள் சார்பில் சென்னையில் மிகப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்திய சினிமாவின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் ரஜினி. இந்தியாவைத் தாண்டி உலகம் எங்கும் அவருக்கு ரசிகர்கள் பல கோடி. ஆசிய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்தான். ராணா படத்தின் மூலம் ஜாக்கி சானையே இந்த விஷயத்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டவர் ரஜினி.

எந்திரன் படம் அவரை உலக அளவில் பெரிய நட்சத்திரமாக மாற்றியது. இந்தப் படம் ரூ 450 கோடி வசூலித்தது. இந்தியாவில் மட்டும் ரூ 375 கோடி என்கிறது அதிகாரகப்பூர்வ கணக்கு.

3000 திரையரங்குகளில் உலகமெங்கும் இந்தப் படம் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 900 அரங்குகள் படம் ரிலீஸானது. முதல் ஒரு வாரம் 24 மணி நேரமும் ரவுண்ட் தி க்ளாக் ஷோக்களாக ஓடிய படம் எந்திரனாகத்தான் இருக்கும்.

திரைப்பட வசூல், ரசிகர் பலம், அரசியல் செல்வாக்கு என சகல மட்டத்திலும் இந்தியாவின் மிகப் பெரிய செல்வாக்கு மிக்க விவிஐபியாகத் திகழ்கிறார் தலைவர் ரஜினி.

அவரது மக்கள் செல்வாக்கு என்னவென்பது, கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.

ராணா துவங்கிய நாளில்…

எந்திரனுக்குப் பின் ராணா என்ற புதிய படத்துக்கு பூஜை போட்டார் ரஜினி. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய். ரஜினியின் மகள் சௌந்தர்யாவும் ஈராஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

இந்தப் படத்தின் துவக்க விழாவன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு என்று ஆரம்பித்தது பிரச்சினை.

படப்பிடிப்புத் தளத்திலிருந்து உடனே வெளியேறிய ரஜினி, உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துமனையில் சேர்ந்தார். அன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட, மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பின் காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சிறப்பு பூஜையும் பெசன்ட் நகர் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடும் முடித்து வீட்டுக்குவந்தார்.

ஆனால் மே 13-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை பற்றி மிக மோசமான வதந்திகள் பரவ துடித்துப் போனார்கள் ரசிகர்கள். ராமச்சந்திரா மருத்துவமனை முன்பு குவிந்தனர் ரசிகர்கள்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு உடல் பரிசோதனை நடத்தி, பிரச்சினைகளைக் கண்டறிந்தனர்.

அவருக்கு சிறுநீரகக் கோளாறும், நுரையீரலில் நீர்க்கோர்ப்பும் இருப்பது தெரிய வந்தது. நுரையீரலில் இருந்த 1.5 லிட்டர் நீரை வெளியேற்றினர். ஆனாலும் உடல்நிலை சீராகவில்லை. எனவே உடனடியாக அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது.

சென்னையில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் 50 சதவீதம்தான் இயங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடன் சென்னையிலிருந்து சிறுநீரக ஸ்பெஷலிஸ்டுகளும் சென்றனர். மே 28-ம் தேதி அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் அவருக்கு மூன்று முறை டயாலிஸிஸ் செய்தனர். அதன் பிறகு இந்த பிரச்சினையின் மூல காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டனர் சிங்கப்பூர் மருத்துவர்கள்.

சிறுநீரக கோளாறுக்கு மட்டும் அவர்கள் சிகிச்சை அளிக்க, படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது.

ரசிகர்கள் கண்ணீர் பிரார்த்தனை

இதற்கிடையே ரஜினியின் உடல்நிலை சீரடைய வேண்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கோயில்களில் அன்னதானம், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், சர்வமத பிரார்த்தனைகள், உலகளாவிய கூட்டுப் பிரார்த்தனைகள், பாதயாத்திரை என அவரவருக்குத் தெரிந்த வழிகளில் பிரார்த்தனை நடத்தினர். இதுவரை கிட்டத்த 2 லட்சத்துக்கும் அதிகமான முறை பிரார்த்தனைகள் ரஜினிக்காக நடத்தப்பட்டன.

உலகில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு மனிதருக்கு இத்தனை பிரார்த்தனைகள் நடந்தது இதுவே முதல் முறை.

பூரண நலமடைந்தார்…

இன்னொரு பக்கம் சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி பூரண நலமடைந்தார், கடந்த ஜூன் 14-ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெடுத்தார்.

சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரும்பலாம். படங்களில் முன்புபோல நடிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்தனர்.

இந்தத் தகவல் அவரது ரசிகர்களை துள்ள வைத்தது.

எப்போது அவர் சென்னை திரும்புவார் என காத்திருந்தனர் ரசிகர்கள். அவர் திரும்பும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என லதா ரஜினியிடம் நேரில் தெரிவித்தனர். அவரும் அதற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்தார்.

இப்போது ரஜினி சென்னை திரும்பும் தேதி ஜூலை 13 என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட வரவேற்பு

இந்த செய்திக்காகவே காத்திருந்த அவரது ரசிகர்கள், சென்னையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகி வருகின்றனர்.

புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்கபடுகின்றது .

ரஜினி வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள், அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வருகையை உறுதி செய்த நிர்வாகிகள்

ரஜினியின் வருகை குறித்து அவரது இல்லத்தில் என்வழி சார்பில் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், “ரசிகர்கள் அன்பினாலும் இறைவனின் ஆசியாலும் மருத்துவர்களின் பெரு முயற்சியாலும் தலைவர் ரஜினி நலமுடன் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார்,” என்றனர்.

-என்வழி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!! Empty Re: புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

Post by kitcha Mon Jul 11, 2011 9:43 pm

:நல்வரவு: :நல்வரவு: :suspect: :suspect: 🐰 🐰 நடனம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!! Empty Re: புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

Post by அசுரன் Mon Jul 11, 2011 9:50 pm

முதலில் வரட்டும் பிறகு பார்க்கலாம். அவர் வருகிறாரோ இல்லையோ,யாரோ தவறாது தகவல்களை தந்துக்கொண்டிருக்கிறாங்கப்பா!!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!! Empty Re: புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

Post by அருண் Mon Jul 11, 2011 9:56 pm

:நல்வரவு: ரஜினி அவர்களே!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!! Empty Re: புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum