புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
90 Posts - 77%
heezulia
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
255 Posts - 77%
heezulia
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_m10பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 10, 2011 8:39 pm

இந்திய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய பல மேதைகளும் வியந்து குறிப்பிட்டிருப்பது அதன் கலைச் சிறப்பைத்தான்.

“உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவிற்கு நிகரான கலை நயத்தை, கட்டிட நுணுக்கத்தைப் பார்க்க முடியாது. இந்த கலை நயம் வெறும் அழகுணர்ச்சி மட்டுமல்ல, விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களைப் பாதுக்காக்கும் ரகசிய பிரதேசங்களும் கூட,” என்கிறார் வரலாற்று ஆசிரியர் கிளிங்கிங்ஸ்மித்.

இந்த ரகசியங்களைத் தேடிப் பிடித்து கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்ட பல வெள்ளையர் கூட்டங்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தின் போது இந்தியாவில் அலைந்ததையும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஒரு கோயில் போதும், இந்தியாவின் மொத்த ஆண்டு பட்ஜெட்டையும் போட்டுவிடலாம்’, என்கிறார் மேடிஸன்.

இவர்களுக்கெல்லாம் வெகு நீண்ட காலத்துக்கு முன்பே, அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 430 ஆண்டுகள் முன்பே, இந்தியாவின் தங்க வளம் பற்றி இப்படிச் சொல்கிறார் வரலாற்றின் தந்தை எனப்படும் கிரேக்க அறிஞர் ஹெரோடோடஸ்.

“இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் அளவு அளப்பரியது. பூமியைத் தோண்டி, ஆறுகளின் மணலிலிருந்து, காடுகளைக் குடைந்து, பாலை வெளியை அகழ்ந்து இவர்கள் பெரும் தொகையான தங்கத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தோண்டுமிடமெல்லாம் தங்கம். மக்கள் பழங்குடிகளைப் போல இருந்தாலும், தங்கத்தை பாதுகாக்கத் தெரிந்திருக்கிறார்கள்!”

-கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வரிகள் இவை. இத்தனைக்கும் ஹெரோடோடஸ் இந்தியாவைப் பார்த்ததே இல்லை!

கிபி 1000 ஆண்டில் தொடங்கி 1026-ம் ஆண்டுவரை தொடர்ந்து இந்திய அரண்மனைகளையும் கோயில்களையும் கொள்ளையடித்த ஆப்கன் சுல்தான் முகமது (கஜினி முகமது) தனது தலைநகரான கஜினியை உலகிலேயே செல்வமிக்க நகராக மாற்றினான் என்பது சரித்திரம்.

இந்த விரிவான அறிமுகத்துக்கான காரணம் நீங்கள் அறிந்ததுதான்… பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் திருவாங்கூர் மன்னர் சேமித்து வைத்திருக்கும் தங்க, வைர வைடூரிய, பணக் குவியல்கள் பற்றி இன்றைக்கு பிரமிக்க வைக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் பண்டைய மற்றும் இடைக்கால இந்தியாவின் வரலாற்றை, மக்கள் வாழ்க்கை முறைகளை, மன்னராட்சியைப் பற்றிப் படித்தவர்களுக்கு நிச்சயம் இது ஒரு அதிசய செய்தியாக இருக்காது.

அன்றைய மன்னர்கள் எதிரி நாட்டிடமிருந்து பறித்து வந்த செல்வங்களை, அண்டை நாடுகளிடமிருந்து பெற்ற பரிசுகளை சேர்த்து வைக்க பாதாள மண்டபங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். பெரும்பாலும் அரண்மனையின் ஒரு பகுதியிலேயே இவை அமைந்திருக்கும். இவற்றுக்கு இணையான பாதாள அறைகள் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவை போர்க்காலங்களில் மன்னர் குடும்பத்துக்கு பாதுகாப்பான மறைவிடங்களாகவும், ராஜாங்க பொக்கிஷங்களை ஒளித்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

அரண்மனைக்கும் இந்த கோயில்களுக்கும் இடையில் ரகசிய சுரங்க வழிகளும் நிறைய உண்டு. பல கோயில்களில் இந்த வழிகளை இப்போதும் காணலாம்.

தங்கத்தின் பயனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்தவர்கள் இந்தியர்கள். எனவே பல வழிகளில் தங்கத்தை கண்டுபிடித்து, டன் கணக்கில் சேமித்து வைத்தனர் மன்னர்கள். உலகமே பண்டமாற்றில் இருந்தபோதும், இந்தியர்கள் குறிப்பாக தமிழ் மன்னர்கள் தங்க நாணயங்களை புழக்கத்தில் விட்டார்கள். ஒரு குறுநில மன்னனே பல ஆயிரம் கிலோ தங்கம் வெள்ளி வைர வைடூரிய சொத்துக்களை வைத்திருந்தான் என்றால் மாமன்னர்களின் பொக்கிஷங்களைப் பற்றி சற்றே கற்பனை செய்ய முடிகிறதா?

ஆப்கானிய சுல்தான்கள் (பாபர், அக்பர், ஷாஜகான் போன்றவர்கள் சுல்தான்கள் அல்ல, இந்தியாவின் மன்னர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்) மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின்போதுதான் இந்திய மன்னர்களின் சொத்துக்கள் முற்றாகக் கொள்ளை போயின.

சுல்தான்கள் படையாக வந்து கோயில்களையும் அரண்மனைகளையும் கொள்ளையடித்து, மூட்டை மூட்டையாக வைர வைடூரியங்களை அள்ளிச்சென்றனர். “குதிரைகளின் முதுகில் சுமக்க முடியாத அளவு தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர் சுல்தான்கள். அப்படி கொண்டு சென்றபோது, அந்த நகை மூட்டைகளிலிருந்து சிந்திய நகைகளை வைத்து ஒரு பெரும் ராஜ்யத்தையே ஸ்தாபித்துவிடலாம். குறிப்பாக கஜினி கடைசி முறையாக கொள்ளையடித்துப் போனபோது வழியெங்கும் ரத்தமும் நகைக் குவியல்களும் சிதறிக் கிடந்தன”, என்கிறார் கிளிங்கிங் ஸ்மித்.

தங்கம், வைர வைடூரியங்கள், நவரத்தினங்களை இந்தியர்களுக்கு நிகராக சேமித்தவர்கள் உலகில் யாருமில்லை. இன்றும் கூட பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளின் அருங்காட்சியகங்களை அலங்கரிப்பவை இந்தியர்களிடமிருந்து களவாடப்பட்ட வைரங்கள் அல்லது விலைமதிக்க முடியாத உயர்தர ஆபரணங்களாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

இந்த பொக்கிஷம் இருப்பது முன்பே தெரியும்….




1940-ம் ஆண்டு பத்மநாபசுவாமி கோயில்... படம்: தி ஹிந்து

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பத்மநாபசுவாமியின் ஆலயத்துக்குள் இத்தனை பெரிய பொக்கிஷம் இருப்பது சர்வநிச்சயமாய் வெளியாருக்கு தெரியாது என பலரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை வேறு.

1931-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி இதே பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்ட தகவல், வியாழக்கிழமை வெளியான இந்து நாளிதழில் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. அன்றைக்கு இந்து பத்திரிகையின் நிருபராக இருந்தவர் (இன்னும் உயிருடன் உள்ளார்), 69 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

1930களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியுள்ளது. பொருளாதார நெருக்கடி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கப்பம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம், அரசு நிலங்களை மக்களுக்கு விற்று பணம் திரட்டவேண்டிய நிலை போன்றவை காரணமாக, கோயிலில் வைக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான பொக்கிஷத்தை எடுத்தாள திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு யோசனை கூறப்பட்டது.

அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக இருந்தவர் ஸ்ரீசித்திரை திருநாள் பலராம வர்மா. அவரிடம்தான் இந்த நிலவரைகளின் சாவிகள் இருந்துள்ளன. 1931 டிசம்பர் 6-ம் தேதி இந்த நிலவரைகளில் ஒன்றை முதலில் திறக்க முடிவு செய்தார் மன்னர்.

பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு அந்த பாதாள அறையின் பெரிய பூட்டை சாவி போட்டு திறக்க முயன்றனர். ஆனால் பூட்டு அசைந்து கொடுக்கவில்லை. உடனே, கதவை உடைக்கச் சொன்னார் மன்னர். சுவற்றுக்கு சேதாரம் இல்லாமல் பாதுகாவலர்கள் மூலம் கதவு உடைத்து திறக்கப்பட்டது. உள்ளேயிருந்து விஷ வாயு அல்லது விஷ ஜந்துக்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் முன்யோசனையாக ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. ராட்சத மின் விசிறிகள் மூலம் காற்று செலுத்தப்பட்டது அறைக்குள். பின்னர் உள்ளே நுழைந்தார்கள்.

வெண்கலத்தால் ஆன நான்கு பெரிய பெட்டிகள் முதலில் இருந்தன. அவற்றில் ஏராளமான தங்க நாணயங்கள் குவிந்திருந்தன. அடுத்து அந்த அறைக்குள்ளேயே ஒரு சிறிய அறைமாதிரி அமைப்பு இருந்தது. அந்த அறை முழுவதும் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருந்தன. இந்த உள்ளறையின் மேல் பகுதியில் பெரிய தங்கக் குடங்கள், தங்க கிரீடங்கள், தங்க தகடுகள் காணப்பட்டன. தங்க குடங்கள் மட்டுமே 300 இருந்தன அன்றைக்கு.

அடுத்து மரத்தாலான ஒரு பெரிய பேழை இருந்தது. இந்தப் பேழையில்தான் கணக்கிடமுடியாத அளவு நவரத்தினங்கள், வைரங்கள், பவளம், மரகதம் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் ஆறு தனித் தனி அறைகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த அறைக்குப் பின்னால் ஆறு பாதாள அறைகள் இருந்தன. அவற்றுக்கு மகாபாரதகோணத்து கல்லர, ஸ்ரீபண்டாரத்து கல்லர, வேதவ்யானகோணத்து கல்லர மற்றும் சரஸ்வதிகோணத்து கல்லர என பெயரிட்டிருந்தனர்.

இவற்றை மேற்கொண்டு திறக்க முற்படாத மகாராஜா சித்திரைத் திருநாள், அங்கிருந்த நகைகள் மற்றும் நாணயங்களை தனது கருவூலத்துக்கு கொண்டு சென்று மதிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றிலிருந்து ஒரு பொன்னைக் கூட எடுக்காமல், மீண்டும் அவற்றை இந்த கோயில் பாதாள அறையிலேயே வைத்து பூட்டியுள்ளனர்.

1932-ல் அரசவையில் இதுபற்றி தெரிவித்த சமஸ்தான திவான் ஆஸ்டின் (இவரும் வெள்ளையர்தான்), பத்மநாபசுவாமி கோயிலில் எடுத்து மதிப்பிடப்பட்ட பொன்னில் ஒன்றைக்கூட மகாராஜா பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பொக்கிஷ ரகசியம் பிரிட்டிஷாருக்கும் தெரிந்திருந்தது என்பதுதான் முக்கியமானது.

எமிலி கில்கிறிஸ்ட் ஹாட்ச் என்ற ஆங்கிலப் பெண்மணி 1933-ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார். அப்போது பத்மநாபசுவாமி நிலவறை மற்றும் பொக்கிஷங்கள், அவற்றை மகாராஜா திறந்து பார்த்து மதிப்பிட்டது போன்றவற்றை கேட்டு அறிந்ததோடு நில்லாமல், அந்த இடத்தையும் போய் பார்த்து தனது பயணக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த பயணக் குறிப்பு “Travancore: A guide book for the visitor” என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வெளியீடாக 1933-ல் வந்துள்ளது. இன்னொன்றையும் எமிலி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1908-ம் ஆண்டே ஒரு முறை இந்த பாதாள அறைகளைத் திறக்க முயன்று, அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக, இந்த பொக்கிஷங்கள் குறித்த பல உண்மைகள் அரச பரம்பரையினருக்கும் தெரிந்தே இருந்தது. பிரிட்டிஷாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இந்து கோயில்கள் விஷயத்தில் பயம் அதிகம்.

ஆற்காடு போரின்போது பெரும் நோயால் பாதிக்கப்பட்ட ராபர்ட் க்ளைவ், நோய் குணமானதால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அளித்த பிரமாண்ட மரகத மாலை, லார்ட் பிளேஸ் அளித்த ஏராளமான தங்க, வைர ஆபரணங்கள் இன்றும் அந்த கோயிலில் பக்தர்களுக்கு காட்டப்படுகின்றன. எனவே பக்தி நம்பிக்கை மிகுந்திருந்த அந்த காலத்தில் சாமி பயம் காரணமாகக் கூட வெள்ளையர்கள் பத்மநாபசுவாமி நிலவறைகளுக்குள் போகத் துணிந்திருக்க மாட்டார்கள்.

ஆகவே, இந்த பொக்கிஷங்கள் குறித்து யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தவறு. வழிவழியாய் பலர் அறிந்து வைத்திருந்தனர். வேண்டுமானால், இவ்வளவு பொக்கிஷம் இருக்கும், அதன் மதிப்பு 5 லட்சம் கோடிகளைத் தாண்டும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம்.

இதில் உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா… இந்த நகைகள், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் இன்னமும் அப்படியே புத்தம் புதிதாக ஜொலிப்பதுதான். இந்தியர்களின் கலைத் திறமைக்கு இதைவிட ஒரு சான்று கிடைக்காது.

மேலும் 1931-ல் சித்திரை திருநாள் மகாராஜா முதல் பாதாள அறையில் கணக்கெடுத்தபோது இருந்த அதே 300 தங்கக் குடங்கள் இந்த முறை கணக்கெடுத்தபோதும் இருந்ததாக நீதிபதிகள் குழு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த பாதாள அறைகளில் பொக்கிஷம் இருப்பது தெரிந்தும், சமஸ்தான முறை உயிரோடு இருந்தபோதே அவற்றை பயன்படுத்திக்கொள்ளாமல், வெறும் காவலர்களாக, அனந்தனுக்கு தாசர்களாக இருந்த மன்னர் மற்றும் அவரது பரம்பரையினரின் நேர்மையை என்னவென்பது!

இந்த சொத்துக்கு உரிமையாளர் யார்… என்ன செய்யலாம்?

இந்தக் கேள்விதான் இன்று இந்தியாவில் உள்ள 120 கோடி பேரின் இதயங்களிலும் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

இப்போதே, இது தமிழ்நாட்டு மன்னர்களுடையது என்று ஒரு சாரார் கிளம்பிவிட்டார்கள். ராஜராஜ சோழன் கொடுத்தது என்று சிலர் ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய சமூகம் எதையும் மிகைப்படுத்திப் பார்க்கிறது. அல்பமாக அனைத்துக்கும் அலைகிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்வதாக இருந்தால், இந்த சொத்துக்கள் சாதாரணமானவை என்பதை உணரமுடியும். காரணம், இவை சேமித்து வைக்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு சமஸ்தானமும் இதைவிட பன்மடங்கு பொக்கிஷங்களைக் கொண்டிருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

1789-ல் திப்பு சுல்தான் திருவிதாங்கூர் மீது படையெடுத்த காலத்தில் இந்த அறைகள் நிரந்தரமாகப் பூட்டப்பட்டதாக சமஸ்தான குறிப்புகள் சொல்கின்றன. இந்த காலகட்டத்தில் மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடந்துவந்தது. அந்த நாயக்கர்களுக்கு கப்பம் கட்டிய ஒரு சிற்றரசுதான் திருவிதாங்கூர் சமஸ்தானம்.

ஒரு சிற்றரசுக்கு சொந்தமான கோயிலின் பாதாள அறையிலேயே இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருந்திருக்கிறதென்றால், மதுரை நாயக்கர்களின் பொக்கிஷத்தை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதற்கும் முன்பு சோழர்கள், பாண்டியர்கள் ஆட்சிக்காலங்களில் தமிழகத்தின் நிதிச் செழுமையை யோசித்துப் பார்க்க முடிகிறதா?

அரண்மனைகளிலிருந்த அனைத்தும் அந்நியரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான கோயில்களின் சொத்துகள் பிரிட்டிஷ் காலத்தில் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. இதற்கு சான்றாக காஞ்சிபுரம், மதுரை, தஞ்சை ஆலயங்களில் அன்றைக்கும் மிளிர்ந்த விலை உயர்ந்த ஆபரணங்கள், மன்னர்களால் நிவந்தமாக தரப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சியிலும் கூட வரியிலி நிலங்களாகத் தொடர்ந்த கணக்கற்ற ஏக்கர் விளை நிலங்களே சான்று. ஆனால் 1947க்குப் பிறகு சுதந்திரம், மக்களாட்சி, மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் நம்மவர்கள் அடித்த கொள்ளை கொஞ்சமல்ல.

அந்நியருக்குப் பயந்து கோயில்களில் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்களை, நம்மவர்களே கொள்ளையடித்தனர் மக்களாட்சியின் பெயரில்.

பெரிய கோயில்களை அமைச்சர் தரத்திலிருந்தவர்கள் கொள்ளையடித்தால், சின்னச் சின்ன கோயில்களின் ஆபரணங்களை, நிலங்களை வார்டு வட்டம் என தறுதலைகள் சுரண்டித் தின்று கொழுத்தார்கள்.

இன்று பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களைக் கண்ட பிறகு, அத்தனை கோயில்களையும் தோண்டிப் பார்த்து மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் கபளீகரம் செய்யத் துடிக்கிறார்கள்.

இதற்காகவாவது இந்த பெரும் பொக்கிஷத்தை வெளியில் காட்டாமலே இருந்திருக்கலாம்.


முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இன்றைய 'மன்னர்' உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா...

என்னதான் செய்யலாம்….

சரி… வெளியில் எடுத்தாகிவிட்டது. நாட்டுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அடுத்து இந்த பொக்கிஷத்தை வைத்து, ரோடு போடலாம், குளம் வெட்டலாம், மின்சாரம் கொடுக்கலாம், மலையைப் பெயர்த்து அந்தப் பக்கம் வைக்கலாம், ஆறுகளை அப்படியே எடுத்து அடுத்த மாநிலத்தில் ஓட வைக்கலாம் என ஆளாளுக்கு யோசனைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அப்போதுதானே மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் மொத்தமாக சுருட்ட முடியும்!

உச்சநீதிமன்றமோ தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கலாமா என யோசிக்கிறது. எத்தனை விலைமதிப்பில்லா பொக்கிஷங்களை கோட்டை விட்டிருக்கிறது இந்த தொல்பொருள் துறை என்பது உச்சநீதிமன்றத்தின் யோசனைக்கு வராமல் போனது வருத்தமானதுதான்.
envazhi



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 9:14 pm

யோசிக்க வேண்டியதே...

கிச்சா சௌக்கியமா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  47
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jul 10, 2011 9:53 pm

கோயில் சொத்துக்களை வைத்து குளம் வெட்டலாம், ரோடு போடலாம் என்று கிளம்பியிருப்பது கோவில் சொத்தை கொள்ளையடீக்க வழி. அதை அருங்காட்சியகத்தில் வைத்து நமது கலை நயத்தை பறை சற்றுவதே சிறந்தது.



கும்மாச்சி
அன்பே சிவம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2011 10:36 pm

விவரமாக நல்ல தகவல் கள் தந்தமைக்கு நன்றி கிச்சா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Jul 10, 2011 10:52 pm

இன்னும் ஐம்பது வருடங்களில் ஒரு தேங்கா மூடியும் இல்லாமல் போகும்.
கேட்ட அப்படி ஒரு பொக்கிசமே இல்ல. "அன்றைக்கு தவறாக கணக்கு சொல்லிட்டாங்க... " அப்புடீனு சொல்லுவாங்க.
திருட்டு பசங்க. பொறுக்கி திங்கருதலயே குறிய இருக்காங்க...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 10, 2011 11:41 pm

மஞ்சுபாஷிணி wrote:யோசிக்க வேண்டியதே...

கிச்சா சௌக்கியமா?

நல்ல சவுக்கியம் அக்கா, நீங்க நலமா,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  Image010ycm
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Jul 11, 2011 3:24 pm

இந்த பாதாள அறைகளில் பொக்கிஷம் இருப்பது தெரிந்தும், சமஸ்தான முறை உயிரோடு இருந்தபோதே அவற்றை பயன்படுத்திக்கொள்ளாமல், வெறும் காவலர்களாக, அனந்தனுக்கு தாசர்களாக இருந்த மன்னர் மற்றும் அவரது பரம்பரையினரின் நேர்மையை என்னவென்பது!


இம்மன்னர் சிறந்த பண்புள்ள மன்னராக இருக்க வேண்டும்.

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Jul 11, 2011 4:20 pm

தமிழ்நாட்டு கோவில்கல எப்போ தொண்டுவாங்காண்ணு ஆசையா இருக்கு அப்பா கூட இந்த மு.க அழகிரி வந்து அது என் கொள்ளு தாத்தா ராசா ராசா சோழன் எனக்காக விட்டுட்டு போன சொத்துணு சொன்னாலும் சொல்வான். திருட்டு பயலுங்க கொஞ்சம் விட்ருந்தா தமிழ்நாட்டாயே வித்துட்டு இருபானுங்க. நல்ல வேலயா தப்பிசது தமிழ்நாடு.
நடனம்



என்றும் பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  599303 அன்புடன்,
சோழவேந்தன் பத்மநாபசுவாமி காத்த பொக்கிஷம் - அறியாத விஷயம்  154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக