ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிலென்ன வெட்கம்?

Go down

இதிலென்ன வெட்கம்? Empty இதிலென்ன வெட்கம்?

Post by thillalangadi Sun Jul 10, 2011 10:13 pm

இதிலென்ன வெட்கம்?


திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது; திருமண நாளும் நெருங்கிவிட்டது. மணமகளின் அண்ணன் சில உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அஸர் தொழுகைக்காக ஒரு பள்ளியில் நுழைகிறான். அந்நகரின் அந்த மஹல்லாவில்தான் மணமகனின் வீடும் இருக்கிறது. தொழுது முடித்து, துஆ செய்துவிட்டுத் திரும்பும்போது முகத்துக்கெதிரில் மணமகனே நிற்கிறார்.ஸலாம் சொல்கிறார். பரஸ்பரம் கைகொடுத்துக் கொள்கிறார்கள். “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறார் மணமகன்.

அவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால் மறைத்துவிடமுடியவில்லை. பள்ளி வராண்டாவின் ஓர் ஓரத்துக்கு இருவரும் நகர்கின்றனர். மெல்லிய குரலில் மணமகன் மணமகளின் அண்ணனிடம் சில விஷயங்களைச் சொல்கிறார். அவர் முகத்தில் எந்த நேரமும் குதித்து வெளி வந்துவிடுவது போல கண்ணீர்த்துளிகள்! மணமகளின் அண்ணன் முகம் அதைக்கேட்டு இருண்டு விடுகிறது. என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மலைத்துவிடுகிறார்.

“என்ன தம்பி சொல்றீங்க? நிஜமாகவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? வேறு எதையும் மறைப்பதற்காக இப்படிச் சொல்றீங்களா?” “இல்லீங்க … சத்தியமா இதுதான் நிஜம்!

ஏற்கனவே எங்கத்தாகிட்ட சொல்லிட்டேன்… என் கல்யாணம் தள்ளிப் போனதுக்கே இதுதான் காரணம்!…. ஆனாலும், என் மேலுள்ள அக்கரையினாலே.. என் எதிர்ப்பையும் மீறி அவங்க பாட்டுக்கு இந்த ஏற்பாட்டைச் செஞ்சிட்டாங்க… நீயே உன் தலையில மண்ணைவாரிக்கொட்டிக்காதடா… அப்படி இப்படின்னு என்னோட சன்டை போடுறாங்க… ஆனா என் மனச்சாட்சி ஒவ்வொரு விநாடியும் என்னைக் கொல்லாமல் கொல்லுது…. எப்படி இதை உங்க கிட்டச் சொல்றதுன்னு எனக்கும் முதலில் தயக்கமாத்தான் இருந்துச்சு….. சந்தர்ப்பத்தை எதிர்பாத்துக் காத்துக் கிட்டிருந்தேன்…. அல்லாவாப் பாத்து இப்படி எதிர்பாராத ஒரு வாய்ப்பை ஏற்பாடு செஞ்சு தந்துட்டான்… நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்… என்னோட மனப் பாரத்தை எறக்கிட்டேன்… உங்க தங்கச்சி வாழ்கையைக் காப்பாத்திக்கிங்க சார்!” கோபம்- குமுறல்- கலக்கம்- அண்ணனுக்கு! இருக்காதா, பின்னே?

திருமணத்துக்கு இன்னும் சில நாட்கள்தான்!
திருமணம் நின்றுவிட்டால், தங்கள் குடும்ப கௌரவம் என்னாவது?
தங்கையின் எதிர்காலம்…?
மாப்பிள்ளை வீட்டார் தான் கல்யானம் நின்றதற்குக் காரணம் என்றால் யார் நம்பப் போகிறார்கள்?
பையனுக்குள்ள பெரிய குறைபாட்டை மறைத்துவிட்டு வக்கணையாகத் திருமண ஏற்பாட்டைச் செய்திருக்கிற மணமகனின் தந்தை, பெண்மீதே பழியைத் திருப்பிப் போடமாட்டார் என்று எப்படி நம்புவது?
பையன் உறுதியாகச் சொல்கிறான்! “சார்! உங்க தங்கைய உடல் ரீதியா என்னால திருப்திப் படுத்த முடியாது…” வாட்ட சாட்டமான வாலிபன்! அழகும் கம்பீரமும்! பார்த்தால் பத்துப்பேரை ஒருவனாய் நின்று அடித்துபோட்டுவிடும் வல்லமை! நம்ப முடியவில்லைதான்! ஆனால்….. “இது நிஜம்… எந்த டாக்டரிடம் வேண்டுமானாலும் என்னை அழைத்துச் சென்று செக் அப் செய்துகொள்ளுங்கள்” என்கிறான்! உயிரணு உற்பத்தி முழுமையாக இல்லை என்பதோடு பெண்சகவாச உயிர்ப்பு கூட மிகக் குறைந்திருப்பதாகவும் சொல்கிறான்…! பொன்னுக்கு வீங்கியா…. மனநல பாதிப்பா..? டாக்டர்கள் ஏதோதோ சொல்கிறார்கள்” என்கிறான். யாருக்கும் தெரியாமல் சம்பாத்தியத்தில் பாதியை அவன் தன் சிகிச்சைக்கே செலவழித்திருக்கிறான்…ரகசியம் ரகசியமாய்! முதலில் கோபப்பட்ட அண்ணன், அந்த இளைஞனை பிறகு கருணையுடன் பார்க்கிறான்! கண்களில் நீர் மல்க நன்றி சொல்கிறான், தன் தங்கையின் வாழ்க்கையை இந்தமட்டில் காப்பாற்றியதற்கு. இந்த நிகழ்ச்சி நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தபெண் காப்பாற்றப்பட்டு- வேறு திருமணம் மூலம் ஒருவனுக்கு மனைவியாகி இன்று 3 குழந்தைகளுக்குத் தாய்! இந்தப் பையன் இன்றும் தனி மரமாக! மார்ர்கப்பற்றுள்ள அவன், இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள விசயம் என்று பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு, நிறையப் படித்துக் கொன்டிருக்கிறான். சமூக சேவையில் ஈடுபாடுகாட்டி வருகிறான். இந்த இளைஞன் தான்,

எவ்வளவு நல்லவன்?
நாணயமானவன்?
நாகரீகமிக்கவன்?
இறையச்சம் உள்ளவன்?
ஆனால், எல்லோரும் அப்படியா..?
எத்தனை பெண்களின் வாழ்க்கை இப்படி குறையுள்ள தகவல் மறைக்கப் பட்டு பாழடிக்கப் பட்டுள்ளது?
எத்தனை மோசமான நோய்கள் – பாலியல் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையை நிர்மூலப் படுத்தியிருக்கின்றன?
அதனால் எத்தனை கருச்சிதைவுகள்?
கலக்கங்கள்?
மருட்சிகள்?
திருமணச் சிக்கல்கள்?
மணமுறிவுகள்?
திருமணச் சந்தையில் இன்று மாப்பிள்ளைகளுக்கு மார்க்கெட் ஏறுமுகம்தான்!
ஒரு பையனுக்கு விலைபேச ஒன்பது பெண்களின் தந்தையர் தயார் என்பதும் நிஜம்தான்.
என்றாலும் திருமணத்துக்கு முன்பு ஒவ்வொரு இளைஞனும் தானாக முன்வந்து ஒரு முழுமையான மருத்துவச் சோதனை செய்துகொண்டால், என்ன? அதில் என்ன தவறிருக்கிறது? தவறிருக்க முடியும்?
இளமை வக்கிரங்களால் – சகவாச தோஷங்களால் ஏதேனும் நோய்த் தொற்று இருந்தால் – அல்லது உடற்கோளாறுகள், முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமே?
மனச்சிதைவுகள் இருந்தால் ஒரு மனோதத்துவ சிகிச்சையில் மறுமலர்ச்சி – மனமலர்ச்சி பெற்றுக் கொள்ளலாமே?
அந்த மனநிறைவுடன் திருமனம் செய்து கொள்ளலாமே?
எயிட்ஸ் (AIDS) கிருமி ரத்தத்தில் இருந்தால், திருமணத்தையே தவிர்த்துவிடலாமே? அதனால் ஒரு சந்ததியின் வாழ்க்கையையே காப்பாற்றலாமே?
ஸிஃபிலிஸ் (Syphilis) நோய் இருந்தால், 100 ரூபாயில் சிகிச்சை பெற்று உன்னையும் உன் வருங்கால மனைவியையும் முழுமையாகக் காப்பாற்றிக் கொண்டு சிறப்பாக வாழ முடியுமே?
இவற்றையெல்லாம் தெரிந்தே மறைப்பது பெரிய பாவமல்லவா?
திருமணத்துக்குத் தயாராகும் சமுதாயக் கண்மணியே!

உன்னைப் பற்றி…. உன் உடலைப் பற்றி… உன் நிலையைப் பற்றி….
உன் மனநிலையைப் பற்றி ஏதேனும் சிறு சந்தேகம் இருந்தாலும்கூட,
அதை வெட்கம் காரணமாக ஒளிக்காமல்,
விபரம் தெரிந்தவர்களிடம், டாக்டர்களிடம் தெளிவு பெற்றுக்கொள்ள மறக்காதே! அதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாய்!
ஒரு பெண்ணை – அவள் மூலம் நீ பெறப்போகும் சந்ததி முழுவதையும் காப்பற்றிக் கொள்கிறாய்!
பின்னாளில் ஏற்றபடவிருக்கிற விரக்தியை – வேதனையை – விபரீதங்களை முற்றிலுமாக நீக்கிக் கொள்கிறாய்
நன்றி : !http://chittarkottai.com/wp/2009/05/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum