ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

3 posters

Go down

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா?? Empty திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

Post by கே. பாலா Sat Jul 09, 2011 9:55 pm

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசிய அறைகளில் ஏராளமான நகைகளும், வைரகற்களும் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது: திருவாரூர் தியாகராஜர் கோயிலை கங்கைகொண்ட முதலாம் ராஜேந்திரசோழன் பரவை நங்கையார் என்பவரின் வேண்டுகோளுக்காக புதுப்பித்து, கோயில் முழுவதையும் செம்பு மற்றும் பொன்னாலான தகடுகளால் போர்த்தி அழகு செய்தான் என கோயிலில் உள்ள கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

மேலும் இந்த பணி 1032ம் ஆண்டு முடிவடைந்து, ராஜேந்திர சோழனும் பரவை நங்கையாரும் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, ஏராளமான தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைபோல் திருவாரூர் தியாகராஜசாமி கோயிலிலும் 2 ரகசிய அறைகள் இருக்கிறது. இந்த அறைகளை திறந்தால் விலை உயர்ந்த பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது.

அர்த்த மண்டபத்துக்கு பின்புறம் கருங்கல்லால் அடைக்கப்பட்டுள்ள ஒரு அறை உள்ளது. இவ்வாறு அறை இருப்பது தெரியாமல் மூடுவதற்கு கல் திரையிடுதல் என பெயர். பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க, கோயில்களில் உள்ள முக்கிய திருமேனிகள் விலை உயர்ந்த பொருட்களையும் கருவறையில் வைத்து மூடச்செய்வது மன்னர்களின் வழக்கம். இந்த வகையில் இந்த அறை கல்லால் திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கலாம். அதைப்போல் மேற்கு பிரகாரத்தில் உள்ள ஆனந்தீஸ்வரர் சன்னதியிலும் ஒரு ரகசிய அறை உள்ளது. இதன் உள்ளேயும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

ரகசிய அறைகளில் இருப்பது என்ன?

கடந்த 1758ம் ஆண்டு திருவாரூர் கோயிலில் பிரெஞ்ச் தளபதி லாளி தலைமையில் சூறையாடல் நடைபெற்றது. அப்போது, கோயிலில் நெல் தவிர பிற பொருட்களை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. கோபமடைந்த லாளி, கோயிலில் பணியாற்றிய குருக்கள்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். எனவே திருவாரூர் கோயிலின் உடைமைகள், பிரெஞ்ச்காரர்களுக்கு பயந்து 2 ரகசிய அறைகளிலும் மறைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தினமலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா?? Empty Re: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

Post by பாலாஜி Sat Jul 09, 2011 10:15 pm

பகிர்வுக்கு நன்றி ,,
நான் திருவாரூர்க்கு மிக அருகில் இருந்தும்‌ ஒரு முறை கூட இந்த கோயிலுக்கு சென்றதுயில்லை இது எனக்கு மிக பெரிய குறை , ஆனால் இந்த முறை நிச்சயம் சென்று வருவேன் செய்வேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா?? Empty Re: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

Post by கே. பாலா Sat Jul 09, 2011 10:24 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ,,
நான் திருவாரூர்க்கு மிக அருகில் இருந்தும்‌ ஒரு முறை கூட இந்த கோயிலுக்கு சென்றதுயில்லை இது எனக்கு மிக பெரிய குறை , ஆனால் இந்த முறை நிச்சயம் சென்று வருவேன் செய்வேன் ..
உங்கள் இந்த முடிவுக்கும் , புதையலுக்கும் சம்மந்தம் இல்லையே ஜாலி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா?? Empty Re: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

Post by கே. பாலா Sat Jul 09, 2011 10:30 pm

பத்மநாபசாமி கோயிலுக்கு நிகரான, அதைவிட பழைமையான திருவட்டார் ஆதிகேசவ சாமிகோயில் தமிழகத்தில் உள்ளது. அதுதான் உண்மையில் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். அந்தக்கோயிலும் மூன்று நிலவறைகள் இருந்தன. சுதந்திரம் பெற்றபின் தமிழக ஆலயநிர்வாகத்திற்குள் வந்ததுமே அவை திறக்கப்பட்டு சூறையாடப்பட்டன. தொடர்ச்சியாக இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்தக்கொள்ளை அதில் சம்பந்தப்பட்ட ஒரு நம்பூதிரி மனசாட்சிக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டபோது 1991ல் வெளிவந்தது. பெரிய பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. அதன் பின் இன்றுவரை வழக்கு நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது, இருபதாண்டுக்காலமாக!.

அன்று அந்த நிதியில் வைரக்கிரீடம் , வைரக்கவசம் , பொன் ஆபரணங்கள் இருந்தன என அந்த நம்பூதிரியே கடிதத்தில் சொல்லியிருந்தார். அவற்றின் மதிப்பு பத்துகோடிக்கு மேல் என்று மக்கள் சொன்னபோது அதை மிகைப்படுத்தல் என ‘சிந்தனையாளர்’கள் மறுத்தார்கள். [நான் அப்போது எழுதிய ஒரு கட்டுரைக்கு அப்படி ஓர் எதிர்வினை வந்ததை நினைவுகூர்கிறேன்.] அந்த செல்வங்களின் மதிப்பு என்னவாக இருந்தது, எங்கே போயிற்று என யாருக்கு தெரியும்? அந்த வழக்கையே நேர்மையாக அமைக்கவில்லை. அதன் குற்றவாளிகள் கிட்டத்தட்ட அனைவருமே வயதாகி இறந்துவிட்டனர். அவர்களின் வாரிசுகள் மாபெரும் கோடீஸ்வரர்களாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். அந்த வழக்குகளை ‘பைசல்’ செய்ய அன்றைய அறநிலை அமைச்சர் பெரும் பங்கு வகித்ததாக ஊரில் சொல்லப்படுகிறது.

திருச்செந்தூரில் இதேபோல பாண்டியர்காலம் முதலே உள்ள செல்வங்கள் நிலவறையில் இருந்தன. அறங்காவலர்களும் கோயிலதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து அவற்றைக் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் முப்பதாண்டுக்காலம் முன்பு எழுந்து அப்படியே கரைந்து சென்றது. 1980ல் சுப்ரமணியபிள்ளை என்ற அதிகாரி கொலைசெய்யப்பட்டார். அதை பால் கமிஷன் என்ற அமைப்பு விசாரித்தது. என்ன நடந்தது மேற்கொண்டு?

சுப்ரமணியபிள்ளையின் உறவினர் ஒருவரைப் பத்து வருடம் முன்பு ஒரு ரயில்பயணத்தில் சந்தித்தேன். அங்கே திருட்டுப்போன நகைகள் உண்டியல்நகைகள் அல்ல, மன்னர்கால நகைகள், அவற்றின் மதிப்பு ‘நினைக்கமுடியாத அளவுக்கு பெரிசு’ என்றார். அங்கிருந்த கோயில்பட்டக்காரர்களும் அதிகாரிகளும் எல்லாருமே அதில் பங்குபெற்றார்கள் என்றார். சுப்ரமணியபிள்ளையின் உறவினர்கள் எல்லாருமே கடுமையாக மிரட்டப்பட்டு அமைதியானார்கள் என்றார்.

சிதம்பரம், அழகர்கோயில், மதுரை , திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இதேபோல ரகசிய அறைகள் உண்டு என்ற பேச்சைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி இந்தக்கோயில்களை முழுக்க நம் அரசியல்வாதிகள் தோண்டி மல்லாத்திவிடுவார்கள். அங்கே என்ன இருந்தது என நாம் அறியப்போவதே இல்லை. அதைத்தடுக்கவும் கண்காணிக்கவும் நம்மிடையே எந்த மக்கள் அமைப்பும் இல்லை.

நன்றி : ஜெயமோகன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா?? Empty Re: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 10:42 pm

புதையல்கள் கிடைத்தாலும் அதில் எவ்வளவு மறைக்கப்படுகிறதோ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா?? Empty Re: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

Post by கே. பாலா Sun Jul 10, 2011 2:53 pm

ரா.ரமேஷ்குமார் wrote:புதையல்கள் கிடைத்தாலும் அதில் எவ்வளவு மறைக்கப்படுகிறதோ...
சியர்ஸ்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா?? Empty Re: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசியஅறைகளில் புதையலா??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum