ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

+6
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
sshanthi
கே. பாலா
dsudhanandan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by dsudhanandan Sat Jul 09, 2011 1:58 pm

First topic message reminder :

செய்தி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவரது உதவியாளர்களின் அலுவலகங்களில் உளவு பார்க்க முயற்சிகள் நடந்திருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. பிரணாப் முகர்ஜியே இது தொடர்பாக பிரதமரிடம் கடந்த செப்டம்பர் மாதத்தில் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், மைக்குகள் பொருத்தும் வகையில் பசைகள் தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரணாப் முகர்ஜி தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.


-- இந்த செய்தி வெளியான அடுத்த நாள் என் அலுவலகத்தில்.........

==========================================================================================================

ஜி.எம். அறைக்குள் ஹெட்-கிளார்க் பதட்டத்தோடு நுழைந்து அவரது காதில் கிசுகிசுத்தார்.

"ஜி.எம். சார்! நம்ம ஆபீசுலே ஒரு பெரிய விபரீதம் நடக்குது தெரியுமா?"

"என்ன விபரீதம்? எல்லாரும் ஒழுங்கா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா?"

"நீங்க இருக்கும்போது அப்படியெல்லாம் நடக்குமா? இது வேறே மேட்டர்! இங்கே பேசுறது சரியில்லை. வாங்க சார், டாய்லட்டுக்குப் போயி சாவகாசமாப் பேசலாம்."

"என்னய்யா, ஹோட்டலுக்குப் போயி டிபன் சாப்பிடலாம்கிற மாதிரி கூப்பிடறே? எதுவாயிருந்தாலும் இங்கேயே சொல்லித் தொலையேன்! எனக்கு லூஸ் டாக்கிங் பிடிக்காது."

"இப்போதைக்கு நம்ம ஆபீசுலேயே டாய்லட் தான் ரொம்ப பாதுகாப்பான இடம் சார்! எந்திரிச்சு வாங்க!" என்று ஹெட்-கிளார்க் சொல்லவும், ஜி.எம். அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.

"என்ன விசயம் சொல்லித்தொலை!"

"ஜி.எம்.சார், வர வர நம்ம ஆபீசுலே எல்லா இடத்துலேயும் கம் தட்டுப்படுது!"

"இருக்கும்யா, எல்லாரும் எம்புட்டு வேலை பண்ணிக் கிழிக்கிறாங்க, நிறைய கம் தேவைப்படத்தானே செய்யும்?"

"நீங்க நினைக்கிறா மாதிரி இது ஒட்டுற கம் இல்லை சார்; ஒட்டுக் கேக்குற கம்!" என்று சொன்ன ஹெட்-கிளார்க் தன் சட்டைப்பையிலிருந்து எதையோ எடுத்துக் காட்டினார். "சார், இது என்னான்னு தெரியுதா?" என்று ஹெட்-கிளார்க் கேட்கவும், ஜி.எம். (வழக்கம்போல) திருதிருவென்று விழித்தார்.

"தெரியலியே!"

"யாரோ மென்னு தின்ன சூயிங்-கம் சார் இது?"

"அடச்சீ! என்னதான் ரெண்டு மாசமா சம்பளம் கொடுக்கலேன்னாலும், அடுத்தவன் துப்புன சூயிங் கம்மையெல்லாமா பொறுக்குவீங்க?"

"அவசரப்படாதீங்க சார்! நம்ம ஆபீசுலே என்ன நடக்குதுன்னு யாரோ உளவு பார்க்கிறாங்க சார்!"

"நல்ல விசயம்! அது யாருன்னு தெரிஞ்சா நம்ம ஆபீசுலே என்ன நடக்குதுன்னு எனக்கும் ஒரு வாட்டி சொல்லச் சொல்லு! அஞ்சு வருசமா நானும் தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டிருக்கேன்! சரி, அதுக்கும் இந்த சூயிங் கம்முக்கும் என்ன சம்பந்தம்?"

"சார், இந்த சூயிங் கம்மை எல்லா மேஜைக்கு அடியிலேயும் ஒட்டி, அதுலே சின்னதா ஒரு டிரான்ஸ்பாண்டரைப் பொருத்தி, எல்லாரும் என்ன பேசுறோமுன்னு யாரோ எங்கேயிருந்தோ ஒட்டுக்கேட்கிறாங்க சார்!"

"அடப்பாவி!"

"ஆமா சார், அந்தப் பாவி யாராயிருக்கும்னு நினைக்கறீங்க சார்?"

"நான் பாவின்னு சொன்னது உம்மைத்தானய்யா! இதை நேத்திக்கே சொல்லியிருக்கக் கூடாதா? அட் லீஸ்ட், என் ரூமுக்கு ரிசப்பஷனிஸ்ட் வர்றதுக்கு முன்னாடியாவது சொல்லியிருக்கலாமில்லே?"

"கவலைப்படாதீங்க சார்! அதையெல்லாம் எதுக்கு ஒட்டுக்கேட்கணும்? பளார்னு ஒரு சத்தம் அலுவலகம் முழுவதும் எதிரொலித்ததே!?"

"அப்படியா?" என்று அதிர்ந்து போன ஜி.எம். சுதாரித்துக்கொண்டு, "ஆனா, நீர் சொல்லுறதை நம்பறது கஷ்டமாயிருக்கே! ஒரு சூயிங்-கம்மை வச்சு உளவு பார்க்கிறதெல்லாம் நடக்கிற காரியமா?"

"என்ன சார் அப்படிக் கேட்கறீங்க? சமீபத்துலே நம்ம மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியோட ஆபீசுலே பதினாறு இடத்துலே இதே மாதிரி சூயிங்-கம்மைக் கண்டுபிடிச்சிருக்காங்க!"

"இதே சூயிங்-கம்மா?"

"இல்லை, அது டெல்லியிலே வேறே யாரோ தின்ன சூயிங்-கம்!" என்று பதிலளித்த ஹெட்-கிளார்க் தொடர்ந்தார். "அதே மாதிரி நம்ம ஆபீஸ்லேயும் எல்லா இடத்துலேயும் ரகசியமா சூயிங்-கம்மை ஒட்டி வச்சிருக்காங்க! மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்டுலே மட்டும் தான் இல்லை!"

"எப்படி இருக்கும்? அதுதான் நான் வந்ததுலேருந்து பூட்டியே இருக்குதே?"

"யோசிச்சுப் பாருங்க சார்! இதே மாதிரி ஒவ்வொருத்தரும் என்னென்ன பேசிட்டிருக்காங்கன்னு யாரோ ஒருத்தன் கவனிச்சிட்டிருக்கான் சார்!"

"ஐயையோ, இது பபிள்-கம் இல்லைய்யா; ட்ரபிள் கம் போலிருக்குதே?"

"இல்லாமப் பின்னே?"

"அடடா, நம்ம அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டுலே லஞ்சு டயத்துக்கு முன்னாடி குறட்டை சத்தமும் அதுக்கப்புறம் ஏப்பம் விடுற சத்தமும்தான் கேட்கும். இருந்தாலும் இது ரொம்ப சீரியஸ் மேட்டர் தான்! உடனே ஹெட் ஆபீசுக்குப் போன் பண்ணி....."

"இருங்க சார், அவசரப்படாதீங்க! அப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு சொல்லுறா மாதிரி ஆயிடும்!"

"யோவ், உண்மையிலேயே எங்க அப்பா குதிருக்குள்ளே இல்லேய்யா! அவரு செத்துப்போயி பத்து வருசமாச்சு!"

"ஜி.எம்.சார்! ஏற்கனவே ஹெட் ஆபீசுலே உங்களுக்கு நல்ல பேரு இல்லை! உங்களைக் கழிச்சுக் கட்டுறதுக்காகவே ஆப்பிரிக்காவுலே ஒரு காண்டாமிருகப் பண்ணை ஆரம்பிச்சு அதுக்கு உங்களை டிரான்ஸ்பர் பண்ணப்போறதா பேச்சு அடிபடுது! நீங்களே வலியப்போயி இதைச் சொன்னா பிரச்சினையாகிராது?"

"அட ஆமா! போலீசுக்குச் சொல்லுவோமா?"

"வேறே வினையே வேண்டாம்! அதெல்லாம் சரிப்பட்டு வராது சார்! இதுக்குன்னே தனியா பிரைவேட் டிடெக்டிவ்ஸ், அதாவது தனியார் துப்பறியும் நிபுணருங்க இருக்காங்க! துப்புனதை வச்சே துப்பு துலக்கிருவாங்க! அவங்களை காதும் காதும் வச்ச மாதிரி வரவழைச்சிரலாம்."

"சரி!"

"ஏற்கனவே போன் பண்ணிச் சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துலே ஒரு டிடெக்டிவ் மோப்பம் பிடிக்கிற நாயோட வருவாரு! என்ன, அந்த மோப்பநாய்க்கு ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் ஆகுமாம்!"

"ரொம்ப காஸ்ட்லியா இருக்கே? இதை விட சீப்பா ஒண்ணும் இல்லியா?"

"இதை விட சீப்பா மனுசன் தான் கிடைப்பான்!" என்று சொன்ன ஹெட்-கிளார்க், "சார், உண்மையைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் எல்லாரையும் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுவோம். ஏன், எதுக்குன்னு சொல்ல வேண்டாம். எவனாவது ஹெட் ஆபீசுலே போட்டுக் கொடுத்திருவான்! சரியா சார்?"

"யூ ஆர் ரைட்!" என்று ஜி.எம்.-மாய் லட்சணமாய் ஆங்கிலத்தில் பதிலளித்தவர், "கமான்... லெட்ஸ் கோ!" என்று கூறியபடி அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

"எல்லாரும் நான் சொல்றதை கவனமாக் கேளுங்க!" என்று ஜி.எம். அறிவிக்கத் தொடங்கியதும், அலுவலகத்தில் குறட்டைச் சத்தம் முற்றிலுமாக நின்றுபோய் அமைதியானது.

"உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!"

"வெரி சாரி சார்! உங்களை டிஸ்மிஸ் பண்ணுவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவேயில்லை சார்," என்று அக்கவுண்டண்ட் உச்சுக்கொட்டினார்.

"மகிழ்ச்சியான செய்தின்னா என்னை டிஸ்மிஸ் பண்ணுறதுதானா? பொறுமையா கேளுங்க! எனக்கு லூஸ் டாக்கிங் பிடிக்காது. இன்னிக்கு என்னோட திருமண நாள்! இன்னியோட எனக்குக் கல்யாணம் ஆகி இருபத்தி அஞ்சு வருசமாச்சு!"

"அப்போ உங்க மிசஸுக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருசமாச்சு சார்?"

"என்ன கிண்டலா? அவளுக்கும் அதே இருபத்தி அஞ்சு வருசம்தான் ஆச்சு! குறுக்கே பேசாதீங்க; எனக்கு லூஸ் டாக்கிங் பிடிக்காது. ஸோ... என்ன சொன்னேன், ஆங்..! இன்னிக்கு எங்களோட ஆனிவர்சரி! அதுனாலே இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நம்ம ஆபீஸுலே...."

"எல்லாரும் வேலை பார்க்கணுமா?"

"நோ! வழக்கம்போல இன்னிக்கும் யாரும் வேலையே பார்க்க வேண்டாம்! ஒரு கண்டிசன்! இன்னிக்கு யாரும் ஆபீஸ் விசயமாப் பேசவே கூடாது! வேறே எதுனாச்சும் பேசுங்க! வேலை சம்பந்தமா மட்டும் மூச்சு விடவே கூடாது. சரியா?"

"அப்போ ஒரு கஸ்டமர் சர்வீஸ் மீட்டிங் நடத்தறோம் சார்! அங்கேதான் உருப்படியா ஒண்ணு்ம் பேசமாட்டோம்!"

"என்னவோ பண்ணித்தொலையுங்க!"

பேசிமுடித்து விட்டு, ஜி.எம். தனது அறைக்குள் செல்ல, ஹெட்-கிளார்க் பின்தொடர்ந்து போனார்.

"சார், ரொம்ப நாளா எனக்கொரு சந்தேகம்! அடிக்கடி லூஸ் டாக்கிங்னு சொல்றீங்களே? அதுக்கென்ன சார் அர்த்தம்?"

"அதுவா, நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்கன்னு தெரிஞ்சும் தினமும் உங்ககிட்டே லூசு மாதிரி பேசுறேனில்லே, அது தான் லூஸ் டாக்கிங்!" என்று நொந்துபோய் பதிலளித்தார் ஜி.எம்.

"சார், வாசல்லே நாய் குரைக்கிற சத்தம் கேட்குது சார்! வாங்க சார் போலாம்!"

ஜி.எம்மும், ஹெட்-கிளார்க்கும் அறையை விட்டு வெளியே வந்தபோது, முகத்தை விடவும் பெரிய மீசையுடன் ஒருவர் நாயோடு நின்று கொண்டிருக்க, அந்த நாய் குரைக்கத் தொடங்கியது.

"ஜிம்மி! ஸ்டாப் இட்!" என்று அந்த மீசைக்காரர் கடிந்து கொண்டபின்னும் அது தொடர்ந்து குரைத்தது.

"சாரி ஜென்டில்மேன்! எங்க ஜிம்மிக்கு கோட்டுப் போட்டவங்களைப் பார்த்தா பிடிக்காது!" என்றார் மீசைக்காரர்.

"ஓ! இன்னிக்கு என்னோட திருமணநாள்னு கோட்டு போட்டுக்கிட்டு வந்தேன். இருபத்தி அஞ்சு வருசமாயிருச்சே!"

"அதுக்காக இருபத்தி அஞ்சு வருசமா துவைக்காமலே போட்டா, நாய் குரைக்காம என்ன செய்யும்?"

"இதோ கழட்டிடறேன்!" என்று கழட்டினார் ஜி.எம்.

"இன்னும் கூட என்னமோ ஸ்மெல் வருதே? உங்க ஆபீசுலே எலி, பெருச்சாளி இருக்குமோ?"

"அது வேறொண்ணுமில்லே சார்! எங்க அக்கவுண்டண்ட் இன்னிக்கு சாத்துக்குடி சாதம் கொண்டு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்!" என்று இளித்தார் ஹெட்-கிளார்க்.

"மீசைக்கார சார், உங்க பேரென்ன சார்?" ஜி.எம். தயக்கத்துடன் கேட்டார்.

"சீனா தானா 007!"

"என்ன சார், உங்க பேரைக் கேட்டா ஏதோ சினிமா பெயரைச் சொல்றீங்க?"

"டோண்ட் வேஸ்ட் மை டைம்!" என்றார் சீனா தானா 007. "எங்க ஜிம்மி ஆபீஸ் முழுக்க மோப்பம் பிடிச்சு, எங்கெங்கல்லாம் சூயிங்-கம் இருக்குதோ கண்டுபிடிக்கும். அப்புறம், அந்த சூயிங்-கம்மை யாரு தின்னு ஒட்டிவைச்சாங்கன்னும் மோப்பம் பிடிச்சே கண்டுபிடிச்சிடும். ஏதாவது சந்தேகம் கேட்கணுமா?"

"ஒரு சந்தேகம் சார்," என்றார் ஹெட்-கிளார்க். "இம்புட்டுப் பெரிய மீசை வச்சிருக்கீங்களே? முதல்லே பொறந்தது நீங்களா அல்லது உங்க மீசையா?"

"ஷட் அப்!" என்று உறுமிய 007, "ஜிம்மி... கோ!" என்று உத்தரவிட்டதும் ஜிம்மி அலுவலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

"நீங்க எதுக்கும் நாய் பக்கத்துலே போயிராதீங்க! உங்களைப் பார்த்தா லெக்-பீஸுக்கு லெவிஸ் பேண்ட் போட்டுவிட்டது மாதிரியிருக்கு!" என்றார் ஜி.எம். ஹெட்-கிளார்க்கைப் பார்த்து.

ஜிம்மி அலுவலகத்தில் ஒரு இடம் விடாமல் மோப்பம் பிடித்தது. மேஜை, நாற்காலி என்று எல்லா இடங்களிலும் சூயிங்-கம் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தது. இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு சாக்குப்பை நிரம்புமளவுக்கு சூயிங்-கம் கண்டுபிடிக்கப்பட்டது.

"மிஸ்டர் ஜி.எம்.! இதுவரைக்கும் நான் பார்த்த ஆபீசுலேயெல்லாம் வேலைக்கு நடுவுலே சூயிங்-கம் சாப்பிடுவாங்க; தம்மடிப்பாங்க; வெத்திலை போடுவாங்க. ஏன், மூக்குப்பொடி கூட போடுவாங்க! ஆனா, உங்க ஆபீசுலே எல்லாரும் ஃபுல்-டைமும் சூயிங்-கம்மையே மென்னு தின்னுறாங்கன்னு நினைக்கிறேன்! இதோ பாருங்க, ஜிம்மி கூட டயர்டாகி படுத்திருச்சு! இனி இதை கூட்டிக்கிட்டுப்போயி அதோட கேர்ள்-ஃபிரண்டை மீட் பண்ண வச்சாத்தான் டூட்டிக்கே திரும்ப வரும்!"

"அதெல்லாம் இருக்கட்டும்! எங்க ஆபீஸை யாரு உளவு பார்க்கிறாங்கன்னு ஜிம்மி இன்னும் கண்டுபிடிக்கலியே?" என்று பொருமினார் ஜி.எம்.

"ஒருத்தர் ரெண்டு பேருன்னா வள்ளுவள்ளுன்னு குரைச்சுக் காட்டிக்கொடுத்திரும். ஆனா, ஜிம்மி படுத்திருக்கிறதைப் பார்த்தா இந்த ஆபீசுலே எல்லாருமே கருங்காலிகளா இருப்பாங்க போலிருக்குது! அதுனாலே இதை நீங்க தரோவா விசாரிச்சுருங்க! இப்போ ஜிம்மியோட ஃபீஸைப் பைசல் பண்ணிருங்க! பக்கத்துத் தெருவிலே ஒரு ஆபீசுலே யாரோ உளுந்துவடையை ஒட்டி உளவு பார்க்கிறாங்களாம். அடுத்ததா அங்கே போயி துப்பு துலக்கணும்."

007னும், ஜிம்மியும் போனதும், ஜி.எம். இரைந்தார்.

"எல்லாரும் என் ரூமுக்கு வாங்க! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!"

அடுத்த சில நிமிடங்களில் ஜி.எம்.ன் அறைக்குள் எல்லா ஊழியர்களும் வந்து சேர்ந்தனர்.

"அஞ்சு வருசமா இந்த ஆபீசுலே என்ன நடக்குதுன்னு யாரோ உளவு பார்க்கிறாங்க! அதுக்கு உறுதுணையா இங்கே யாரோ சூயிங்-கம்மை மென்னு தின்னு எல்லா மேஜை, நாற்காலிக்குக் கீழேயும் ஒட்டுறாங்க! அதுலே ஒரு டிரான்சிஸ்டரை..."

"சார்... அது டிரான்சிஸ்டர் இல்லை; டிரான்ஸ்பாண்டர்!" என்று திருத்தினார் ஹெட்-கிளார்க்.

"அதான், அதை ஃபிக்ஸ் பண்ணி எவனோ நாம பேசறதையெல்லாம் ஒட்டுக்கேட்க ஒத்தாசை பண்ணிட்டிருக்கீங்க! அது யாருன்னு தெரிஞ்சாகணும். இல்லே, உங்களையெல்லாம் தமிழ் சேனல் கூட வராத ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ணிருவேன்!"

ஒரே அமைதி!

"சொல்லுங்க! இந்த ஆபீசுலே யார் யாரு சூயிங்-கம் சாப்பிடறீங்க? கமான் குயிக்!"

"சார் சார்! நான் சூயிங்-கம் சாப்பிடுவேன் சார்!" என்று பயந்தபடியே முன்னே வந்தார் டெஸ்பாட்ச் கிளார்க். "ஆனா, நீங்க நினைக்கிறா மாதிரி உளவு பார்க்கிற சூயிங்-கம் இல்லை சார். டாக்டர் என்னை தம்மடிக்கக் கூடாதுன்னு சொல்லி, ’நிக்கோரெட்’-னு (Nicorette) ஒரு சூயிங்-கம் சாப்பிடச் சொல்லியிருக்காரு சார்! அதைத் தான் அடிக்கொரு தடவை மெல்லுவேன் சார்! நான் ஒரு தப்பும் செய்யலே சார்!"

"ஓஹோ! நீ ஒருத்தன் இத்தனை சூயிங்-கம் சாப்பிட்டிருந்தா இன்னேரம் உன் உடம்பு பல்லி மாதிரி ஆகியிருக்கும். வேறே யாரு யாரு சாப்பிடறீங்க?" ஜி.எம். இரைந்தார்.

"சார், நானும் சாப்பிடறேன் சார்," என்று ஒப்புக்கொண்டார் அக்கவுண்டண்ட். "எனக்கு சுவிட்சர்லாந்துலே ஒரு ஒண்ணு விட்ட தங்கை இருக்கா சார்!"

"ஒண்ணுவிட்ட தங்கைன்னா, சித்தி பொண்ணா, பெரியம்மா பொண்ணா?"

"ஐயோ, என் கூடப்பொறந்த தங்கைதான் சார்! அவ ப்ளஸ் டுவுலே தொண்ணூத்தி ஒம்பது பர்சன்ட் தான் எடுத்தா. ஒரு பர்சன்ட் கோட்டை விட்டுட்டா, அதுனாலே அவளை நான் ஒண்ணுவிட்ட தங்கைன்னு தான் சொல்லுவேன்! இந்த சூயிங்-கம்மை அவதான் எனக்கு சுவிஸ்லேருந்து அனுப்பறா சார்!"

"இந்த சூயிங்-கம்மை எதுக்குத் தின்னறீங்க?"

"இந்த சூயிங்-கம்மோட பேரு ’விகோ’ (Vigo) சார்! இதை பொண்ணுங்க மென்னு தின்னா இளமைப் பொலிவோட, எப்பவும் அழகாவே இருக்கலாமாம் சார்! அதுனாலே தான் இதை நான் ஒரு வருசமா மென்னுக்கிட்டிருக்கேன் சார்!"

"ஒரு வருசமா நீங்க ஏன் காமாலை வந்த கரப்பான்பூச்சி மாதிரி இருக்கீங்கன்னு இப்பத்தானே புரியுது?"

"இதை மாதிரி மார்க்கெட்டுலே பல விதமா சூயிங்-கம் கிடைக்குது சார்! சிசேரியன் ஆபரேஷன் ஆன பொண்ணுங்க தசை வலுவாக ஒரு சூயிங்-கம் வருது. சர்க்கரை வியாதிக்காரங்களுக்காக மெட்போர்மின் (Metformin) ஒரு சுயிங்-கம் வருது! அதைத் தான் எல்லாரும் மெல்லுறோம் சார்! மத்தபடி உளவு பார்க்கிறதுக்கோ, ஒட்டுக்கேட்குறதுக்கோ இல்லை சார்!"

"அது சரி, சூயிங்-கம்மை மெல்லுறவங்க அதைக் குப்பைத்தொட்டியிலே போடாம, எதுக்குய்யா நாற்காலி, மேஜைக்கடியிலே நினைவுச்சின்னம் மாதிரி ஒட்டி வைக்கறீங்க?"

"என்ன சார் தெரியாதமாதிரி கேட்கறீங்க?" ஹெட்-கிளார்க், ஜி.எம்.-ன் காதைக் கடித்தார். "அஞ்சு வருசமா நம்ம ஆபீஸோட ரெவென்யூ பட்ஜெட்டை ஹெட்-ஆபீஸ்லே சாங்ஷன் பண்ணாம வச்சிருக்காங்க! குப்பைத்தொட்டி வாங்குறதுக்கு ஏது சார் பணம்?"

"அடக்கொடுமையே! எல்லாரும் அவங்கவங்க சீட்டுக்குப் போய்த்தொலைங்கய்யா!" என்று எரிந்து விழுந்தார் ஜி.எம். "ஏன்யா ஹெட்-கிளார்க், இந்தக் குப்பைத்தொட்டி மேட்டரை என்கிட்டே காலையிலேயே சொல்லியிருக்கலாமில்லே? நாயெல்லாம் வரவழைச்சு எவ்வளவு பணம் வேஸ்ட்? எல்லார் பொழைப்பும் பாழாச்சுதா இல்லையா?"

"அப்படி சொல்லாதீங்க சார்," என்று அசடு வழிந்தார் ஹெட்-கிளார்க். "எல்லாம் நன்மைக்கே! இன்னிக்கு நம்ம ஆபீசுக்கு அந்த ஜிம்மி வந்ததுலேயும் ஒரு லாபமிருக்கு சார்!"

"என்னது?"

"போனவாட்டி எம்.டி. நம்ம ஆபீஸுக்கு வந்தபோது என்ன சொன்னாரு உங்களைப் பார்த்து? 'யோவ்... நீ ஜி.எம்மா இருக்கிற வரைக்கும் இந்த ஆபீசுக்கு ஒரு நாய் கூட வராது-ன்னு சொன்னாரா இல்லையா? இன்னிக்கு அவர் சொன்னதைப் பொய்-னு நிரூபிச்சிட்டீங்களே சார்?"

நல்ல வேளை, ஜி.எம்.க்கு நெற்றிக்கண் இல்லை!


Last edited by dsudhanandan on Wed Oct 12, 2011 5:12 pm; edited 3 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by dsudhanandan Sun Jul 10, 2011 10:21 am

மிக்க நன்றி பானு, மஞ்சு, ரமேஷ், பாலாஜி பாராட்டிற்கும் ஊக்கதிற்கும் .... நன்றி அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by சிவா Sun Jul 10, 2011 1:26 pm

///"ஒரு வருசமா நீங்க ஏன் காமாலை வந்த கரப்பான்பூச்சி மாதிரி இருக்கீங்கன்னு இப்பத்தானே புரியுது?"///

அட்டகாசமான நகைச்சுவைக் கட்டுரையைப் படைத்ததற்கு நன்றி சுதா! வாய்விட்டுச் சிரித்தேன்! சிரிப்பு


Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by dsudhanandan Sun Jul 10, 2011 10:20 pm

சிவா wrote:///"ஒரு வருசமா நீங்க ஏன் காமாலை வந்த கரப்பான்பூச்சி மாதிரி இருக்கீங்கன்னு இப்பத்தானே புரியுது?"///

அட்டகாசமான நகைச்சுவைக் கட்டுரையைப் படைத்ததற்கு நன்றி சுதா! வாய்விட்டுச் சிரித்தேன்! சிரிப்பு

மிக்க நன்றி சிவா நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by ரேவதி Thu Jul 21, 2011 12:44 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by ரேவதி Thu Jul 21, 2011 12:45 pm

"உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!"

"வெரி சாரி சார்! உங்களை டிஸ்மிஸ் பண்ணுவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவேயில்லை சார்,"

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by krishnaamma Thu Jul 21, 2011 12:46 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரொம்ப நல்ல காமெடி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by dsudhanandan Thu Jul 21, 2011 12:53 pm

ரொம்ப நன்றி ரேவதி, கிறிஷ்ணாம்மா அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு) - Page 2 Empty Re: Gum.. Bug... பப்புள்கம் (1000-வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum