ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்

Go down

ஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்  Empty ஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்

Post by ranhasan Fri 8 Jul 2011 - 21:41

காலையில் திரு Real vampire அவர்கள் இட்ட பதிவு இது " ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை?" - http://www.eegarai.net/t63882-topic#571972

இப்பதிவினை படித்ததும் அதற்கான மறுமொழியை இட்டேன், அந்த மறுமொழியை ஒரு பதிவாக ஏன் பதியக் கூடாது எனத் தோன்றியது...

ஆப்கான் பெண்களின் தைரியதிற்காக இந்த பதிவு...

Real vampire இட்ட பதிவு மிகவும் அருமையான விழிப்புணர்வு பகிர்வு, ஆனால் அதற்கான பின்னூட்டங்கள் குறைவாக வந்ததற்குத்தான் மிகவும் வருந்துகிறேன், இதை போன்ற பதிவில் அனைவரும் பங்கேற்க வேண்டியது அவசியம், நம் நாட்டில் பெண்களின் நிலையை ஆப்கான் பெண்களின் நிலையோடு ஒப்பிட்டால் நமது நிலைமை எவ்வளவோ உயர்ந்துள்ளது என்றுதான் தோன்றுகிறது...

எனக்கு இந்த பதிவில் பல இடங்களில் மனக்கசப்பு மேலோங்கி நின்றாலும்(பெண்களின் நிலை குறித்து), ஆப்கான் மாணவிகளின் தைரியமும், தன்னம்பிக்கையும், கல்வி மீது அவர்களுக்குள்ள ஆர்வமும் என்னை வியப்புடன் கூடிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... இஸ்லாமிய பெண்கள் பர்தா அணியும் பழக்கத்தையே நான் வன்மையாக எதிர்க்கிறேன்... ஒரு கருப்பு (வெள்ளை) கூடாரதிற்க்குள் அடைத்து வைக்கப்பட்ட ஐந்தறிவு மிருகமாய் பர்தாவில் பெண்களை காண்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை...

பெண்களுக்கு கல்வி கூடாது என்று தர்க்கம் செய்வோர் கலவிக்கு மட்டும் அவர்கள் துணையை நாடுவதேன்? இதைபோன்று ஒரு இனத்தினை வளர்க்கும் ஜந்துவாய் மட்டுமே பார்க்கப்படும் பெண்கள் நம்நாட்டிலும் உள்ளனர், என்ன ஒரு சின்ன வித்யாசம் அங்கைவிட இங்கு அடக்குமுறைக்குள்ளாகும் பெண்கள் சதவிகிதத்தில் குறைந்த அளவில் உள்ளனர் அவ்வளவுதான்.

என்னுடன் பொறியியல் பயின்ற இருபத்தோறு மாணவிகளில் வெறும் நான்கு மாணவிகள் மட்டுமே வேலைக்குச் செல்கிறார்கள், அதில் இருவர் ஆசிரியையாய் உள்ளனர். மற்றவர்கள் வழக்கம்போல் குடும்பத்தலைவிகளாய் மட்டும்...தங்கள் பெண்களை எதற்காக படிக்கவைக்கிறோம் என்ற காரணம் பெற்றோர்களுக்கு உண்மையிலேயே தெரியுமா என எனக்கு தெரியவில்லை, படித்தவுடன் மணமுடித்து வீட்டில் அமர்த்திவிடுகிறார்கள், இரவு பகலாக போட்டிபோட்டு படித்து முதல் மதிப்பெண் பெற்ற பெண்கள் மணமுடித்தவுடன் குடும்பம், குழந்தை, வீடு, சமையல் இப்படியே தங்கள் ஆயுளை கழித்துவிடுகிறார்கள்.

"பெண்ணை எதற்கு இவ்வளவு படிக்க வைக்கிறாய்? பின் வரன் கிடைக்காமல் போய்விடும்" என்று பெண்ணை பெற்றோர்களுக்கு அறிவுரை வேறு!!! ஊழல், பொருளாதாரம், அரசியல், கல்வி, சட்டம், காவல் போன்று ஒவ்வொரு துறையிலும் உள்ள குறைகள் முழுமையாய் களையப்படுதல் இளைஞர்களால்தான் முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன், மேற்கூறியவற்றில் பெண்களின் பங்கு எந்த அளவிற்கு மேலோங்கி நிற்கிறதோ அந்த அளவிற்கு விரைவான முன்னேற்றத்தை நாடு காணும், அது ஆப்கானாய் இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி.

ஆப்கானில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி வேளைகளில் வகுப்புகளாம், ஆண்களுக்கு காலையிலும் பெண்களுக்கு மதிய வேளையிலும் - இப்படி பிரித்து வைப்பதினால்தான் அதிகப்படியான பிரச்சனையே வருகிறது, இப்படி பிரித்து வைப்பதற்கு பேசாமல் பெண்களை தனியாக ஒரு பிரதேசத்தில் வாழவிட்டுவிட்டு ஆண்கள் மட்டும் தனியே ஆப்கானில் வாழலாம்.

பர்தா அணியாமல் வெளியே வந்த ஒரு பெண்ணிற்கு கசையடி கொடுக்கப்பட்ட வீடியோ கோப்பு காட்சியை நான் கண்டுள்ளேன், பெண்ணை தண்டிக்கும் உரிமை ஆணுக்கு உண்டு என யார் கூறியது? அந்த உரிமை கடவுள் என்று சொல்லப்படுபவனுக்கு(இருப்பானாயின்) கூட கிடையாது, அப்படி இருக்க மடந்தையின் மூக்கை அறுக்கவும், நாக்கை துண்டிக்கவும், கசையடி குடுக்கவும் நீங்கள் யாரடா மலத்தை உண்டு உடல் வளர்த்த மமதைகளே?
இயற்கையில் உங்களைவிட உடல் வலிமையில் குறைவானவள் என்பதை தவிர எந்த விதத்தில் பெண் உங்களுக்கு கீழானவளானாள்?

எகிப்தின் புரட்சியில் முகநூல் மூலம் புரட்சி வேருக்கு வித்திட்டவள் ஒரு பர்தா அணிந்த இஸ்லாமிய பெண், காஷ்மீரில் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகளை அவர்கள் துப்பாக்கியை பிடிங்கி அவர்களையே சுட்டவள் பர்தா அணிந்த இஸ்லாமிய பெண், மணிப்பூர் இராணுவ கொடுங்கோலாட்சியை எதிர்த்து நாடெங்கும் பிரசாரம் செய்து கொண்டிருப்பது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண், இவர்கள் ஒவ்வொருவரின் திறமையும், தைரியமும் பர்தா என்னும் இருட்டுச் சுவர்களை தாண்டி பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது, ஆப்கானில் நுரியாவின் தன்னம்பிக்கையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்...

பெண் சமூகத்தில் பள்ளிமுதல் அலுவல் வரை, அரசியல் முதல் அறிவியல் வரை அனைத்திலும் பங்கு வகிக்க வேண்டும், உங்களுக்கான இடமளிப்பை 33 சதவிகிதம் என முடிவெடுக்க இவர்கள் யார்? 50 சதவிகத இடமளிப்பை கேட்டு பெரும் உரிமை அல்ல அதிகாரத்தோடு எடுத்துக்கொள்ளும் உரிமை பெண்களே உங்களுக்கு எப்போதும் உண்டு... தெளிவான நல்ல கல்வி மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வினை தரும்... உங்களுக்கான கல்வி உங்கள் தரத்தை உயர்த்துமானால் அதை உங்கள் பெற்றோர் எதிர்த்தாலும் கேளாது கற்றிடுங்கள்...

மிகமிக விழிப்புணர்வு பதிவினை அளித்த ரியல் வாம்பையறுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தங்கள் மூக்கினை தூண்டித்தாலும் கல்வி கற்றே தீருவேன் என்று தன்னம்பிக்கையோடு போராடும் மாணவிகளுக்கும், அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கங்கள்...

...தலிபானே என்னுடன் சேர்ந்து நீயும் தலை கவிழ்ந்து நில், உங்கள் பெண்கள் தலைநிமிர்வதை கண்டல்ல அவர்கள் தைரியதிற்கு தலை சாய்த்து...

பெண்ணுரிமை தொடர்பான எனது வலைப்பூ பதிவு http://agangai.blogspot.com/2010/07/pennurimai.html


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்  Boxrun3
with regards ரான்ஹாசன்



ஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்  Hஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்  Aஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்  Sஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்  Aஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum