புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_lcapகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_voting_barகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_lcapகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_voting_barகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_lcapகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_voting_barகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_lcapகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_voting_barகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_lcapகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_voting_barகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 06, 2011 4:47 pm

First topic message reminder :

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Kalasar

முன்கதைக்கான லிங்க் - http://www.eegarai.net/t61492-3

இதன் நான்காம் பகுதியை இங்கு தொடர்கிறேன்.




ன்னல் வழி வந்த சூரியக் கதிர்கள் சுள்ளென முகத்தில் பட்டு கண்களை விழிக்கிறான் ருத்ரன், கடிகாரத்தில் மணி 9.
அத்தையின் குரல் வெளியிலிருந்து : "ருத்ரா தம்பி எழிந்திரிப்பா, கண்ணன் வந்துருக்கான் பாரு"
(கண்ணன் - முழுப்பெயர் வேட்டக்கண்ணன், ருத்ரனுடன் கல்லூரியில் சேர்ந்து பயின்றவன், தற்போது வேலை இல்லா பட்டதாரி, சொந்த ஊர் இதே கிராமம்தான் - வேடுவமழுதூர்)

வெளியில் வந்த ருத்ரன் : "டேய் வேட்ட, What a surprise !!! நீ சென்னைல வேலைதேட்றதா சொன்னாங்க எப்போடா இங்க வந்த?"

வேட்ட: "ஒரு ஆறு மாசம் தேடுனேன், ஒன்னும் கிடைக்கலை, உடம்பு வேற சரி இல்லாமல் போச்சு, அதுதான் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம்னு வந்துட்டேன், நான் வந்து 3 மாசமாகுது, Sorry டா மச்சான் அப்பா தவறிட்டதா கேள்விபட்டேன், நேத்துதான் வீட்ல சொன்னாங்க, எனக்கு தெரியாதுடா, தெரிஞ்சுருந்தா கட்டாயம் கேததுக்கு வந்துருபேன், கருமாதிகூட போன வாரம்தான் முடிசுதாம்ல?"

ருத்ரன்: "சரி விடுடா மாப்ள, அதை பத்தி பேசவேணாம், நானே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வரேன்..."

வேட்ட: "சரி விடு...அப்புறம் மாப்ள எப்டி இருக்க? இப்போதான் எந்திருச்சியா?, நான் பம்பு செட்டுக்கு குளிக்கப்போறேன் வறியா?"

ருத்ரன்: கட்டாயம்டா, எவ்ளோ நாளாச்சு !!!

வேட்ட: எது குளிச்சா?

ருத்ரன்: டாய், பம்பு செட்ல குளிச்சு எவ்ளோ நாளாசுனு சொல்லவந்தேன்... குசும்பண்டா நீ...

...பம்புசெட்டில் இருவரும் டேனியுடன்...

டேனி பம்பு செட்டு தண்ணீரில் விளையாடி விட்டு அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தது...

வேட்ட: நாயை எதுக்குடா
கூட்டிட்டு
வந்த?

ருத்ரன்: ஊர்ல பார்த்துக்க ஆள் இல்லை, அதான் கூட்டிட்டு வந்துட்டேன்..

ருத்ரன் பம்பு செட்டில் குளித்து கொண்டிருந்தான், வேட்ட துணிகளை துவைத்துக் கொண்டிருந்தான்...

ரு: மாப்ள, இந்த கலசர் கோவில்னு சொல்றாங்களே, சாப்டுட்டு அங்க போவோமா?

வே: டாய் நான்தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்னு உனக்கு தெரியும்ல? என்னை போய் கோவிலுக்கு கூபிடுற, அதுவும் கலசர் கோவிலுக்கு...

ரு: ஏண்டா கலசர் கோவிலுக்குன்னு இழுக்குற... ?

வே: அதில்லைடா சாமியே கற்பனைதான் அதிலும் இந்த கலசர் கோவிலைப் பத்தி கேட்டேன்னு வைச்சுக்க ஆளாளுக்கு ஒரு கதைய அவுத்து விடுவாங்க...

ரு: அப்டியா, எனக்கு அதை பத்தி தெரிஞ்சுகனும்போல இருக்குடா ... நீ உனக்கு தெரிஞ்சதை சொல்லு, மத்ததை நான் ஊர்ல விசாரிச்சுக்றேன்.

வே: போடா டேய்... மனுஷனுக்கு வேற வேலை இல்ல ? உனக்கு கதை சொல்லத்தான் எங்க வீட்ல என்னை பெத்து போற்றுகான்களா ?

ரு: சொல்லித்தொலைடா டேய்...

வே: கலசர்ங்றது நடுக்காட்டுல இருக்க ஒரு சின்ன கோவில்.
கோவிலுக்குள்ள சாமி சிலையோ, உருவமோ எதுவும் இருக்காது...

ரு: அப்புறம் எதை கும்பிடுறாங்க?

வே: உள்ள ஒரு கலசம் இருக்கும், எல்லாக் கோவில்லையும் உச்சில கலசங்கள் பாத்துருக்கல்ல அதுமாதிரி ஒரே ஒரு கலசம் மட்டும் கோவிலுக்குள்ள இருக்கும், அதைதான் தெய்வம்னு சொல்லி கும்பிடுறாங்க... கோவில் மொட்டை கோபுரமாதான் இருக்கும்.
அப்புறம் கலசத்தை சுத்தி ஆறு யானை தந்தங்கள் புதைக்கப்பட்ட நிலைல இருக்கும்... அது உண்மையான தந்தங்கள்னு சொல்றாங்க. எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. அதை கோவில்னு கூட சொல்ல முடியாது, ஊருக்கு ஒதுக்கு புறமா குலதெய்வ கோவில் இருக்கும்ல அதுமாதிரிதான் இதுவும் சின்னதா இருக்கும்.. கோவிலை சுத்தி காளை பொம்மைகள் நிறைய இருக்கும்...
ஊருக்குள்ள இருக்க மகமாயி கோவில், முருகன் கோவில், பிள்ளையார் கோவில் இதை விட இந்த கலசர் கோவிலுக்கு அதிக சக்தி இருக்குன்னு இந்த ஜனங்கள் நம்புதுங்க...

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Large_109659

ரு: ஏண்டா, யானை தந்தங்கள் இருக்குனு சொன்னியே, எப்டிடா எந்த பாதுகாப்பும் இல்லாமல் அந்த கட்டுக்குள்ள இருக்க முடியும்? நம்ம ஊர்ல செருப்பை கோவிலுக்கு வெளிய போட்டாலே திருடிட்டு போயிருவாங்க..

வே: டே அந்த கலசத்துக்கு சக்தி இருக்கு, ஊர்ல எந்த தப்பு நடந்தாலும் கலசர் சும்மா விடாது, தண்டனை குடுக்கும் அது இதுன்னு இவனுக கதை கதையா ஊருக்குள்ள சொல்லி வைச்சுருக்கானுகடா . அதுவுமில்லாம இதுக்கு முன்னாடி ஒரு நாலு பேரு நம்ம நாட்டாமை வீட்ல களவாடப் போய் மூணு பேரு செத்து போய்டாணுக... ஒருத்தனுக்கு பித்து பிடிச்சு போச்சு. ரெண்டு மாசம் முன்னாடி ஜவுளி கடைக்காரர் கடைல திருடுன ரெண்டு பேர்ல ஒருத்தன் ஒரு வாரத்துல செத்துட்டான், இன்னொருதன் எங்க தொலைஞ்சானு தெரியலை...இப்டி அங்கங்க ஒவ்வொரு திருட்டு நடக்குற இடத்லையும் ஏதாவது காரணத்துனால திருடுனவங்களுக்கு ஏதாவது ஒண்ணு நடந்திருது. கலசர்தான் அவனுகளை தண்டிக்குதுனு ஊருக்குள்ள ஒரு புரளி...எது எப்படியோ இதனால பெரியளவுல திருட்டு பயம் குறைஞ்சது என்னவோ உண்மைதான்... மக்களுக்கு போலீஸ் பயம் இருக்கோ இல்லையோ கலசர் பயம் ரொம்பவே இருக்கு... நம்ம ஊர்ல இருக்க களவானிங்ககூட பக்கத்து ஊர்ல போய் திருடுரானுகளே தவிர நம்ம ஊர்ல திருட பயப்படுறாங்க... இதுல ஒரு பெரிய comedy என்னனா சாயங்காலம் 6 மணிக்கு மேல யாரும் அந்த கோவிலுக்கு கும்பிட போகமாட்டாங்க... காலைல 6 மணிலேந்து ராத்ரி 6 மணி வரைக்கும் கலசரை "சாந்தகலசர்"னு சொல்லுவாங்க அந்த நேரத்துல மட்டும் அவரு சாந்த சொரூபியாம், ராத்ரி 6 மணிக்கு மேல அவரு பேரு "ருத்ரகலசராம்", அந்த நேரத்துல உக்கிரமா இருப்பாராம்... அதனால யாரும் அந்த பக்கம் போககூடாதுன்னு ஊருக்குள்ள ஒரு கட்டுப்பாடு...

ரு: ருத்ரகலசர்... Interesting !!! ம்.. கேக்க மறந்துட்டேன்... ஊர்ல ஒரு பெரிய காளை மாடு நகையெல்லாம் போட்டுகிட்டு மஞ்சள் பூசி...

வே: சற்று அதிர்ச்சியுடன்.. "நீ பார்த்தியா?"

ரு: சற்று நிதானித்து "இல்லைடா நேத்து பசங்களோட விளையாடிட்டு இருக்கும்போது அவனுக சொன்னங்க.. ஏன்டா திடிர்னு அதிர்ச்சியான மாதிரி கேக்குற?"

வே: அதில்லை ருத்ரா அந்த காளை மாடு...

திடீரென்று தண்ணீருக்குள் எதோ விழுந்ததை போல் சத்தம் கேட்க இருவரும் கிணற்றை நோக்கி வேகமாக ஓடுகின்றனர்.

கிணற்றை எட்டி பார்க்க உள்ளே ரத்த வெள்ளத்தில் டேனி தத்தளித்துக் கொண்டிருந்தது...

"டேனி... டேனி... அய்யய்யோ... யாரவது வாங்களே... யாரவது வாங்களே... " ருத்ரன் பதற்றத்தில் அலறினான்...

அருகிலிருந்த வேட்டகண்ணன் உடனே கிணற்றில் சட்டென குதித்தான்..

பக்கத்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோர் பதறி அடித்து ஓடி வந்தனர்...

கிணற்றில் படிக்கற்கள் இடிந்து இருந்ததால் வேட்டயால் டேனியை தூக்கிகொண்டு மேலே ஏற முடியவில்லை...

அருகிலிருந்தோர் ஓடிச்சென்று ஒரு பெரிய வலுவான கையிற்றை கிணற்றிற்குள் இறக்கினர்.

வேட்டகண்ணன் ஒரு கையால் டேனியை அணைத்தபடி மற்றொரு கையால் கயிற்றினை பற்றிகொண்டிருந்தான்.. கிணற்றுக்கு வெளியே ருத்ரனோடு இருவர் சேர்ந்து கையிற்றை இழுத்தனர்.

மெல்ல டேனியுடன் வேட்டக்கணன் கிணற்றுக்கு வெளியே வந்தான்...

மேலே வந்தவுடன் டேனியை பார்த்த ருத்ரனுக்கு இதயமே நின்று விட்டது..

டேனி கிணற்று சுவர்களில் இருந்த பாறையில் மோதி அதன் மண்டை உடைந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது...கண்கள் மூடிய நிலையில் இருந்தது..

"டேனி, டேனி.." குரலில் வலுவில்லாமல் அழைத்தான் ருத்ரன்...

அருகில் இருந்த முதியவர் ஒருவர்..

"ரத்தம் அதிகமா போச்சுப்பா இனி காப்பாத்த முடியாது..." என்றார்..

ருத்ரன் கோவம் நிரம்பிய பார்வையை அவர்மேல் தொடுத்தான்...

வேட்டக்கண்ணன்: "மாப்ள ஒன்னும் இல்லை... நீ பயப்படாத.. நாயை தூக்கிட்டு நீ உடனே வீட்டுக்கு போ.. First Aid குடு. நான் வண்டியோட 5 நிமிஷத்துல வந்துறேன்.. veterinary hospital இங்கேந்து கொஞ்சம் தூரம்டா, நாம வண்டில தூக்கிட்டு போயிரலாம். ஒன்னும் பயபடாத.. டேனிக்கு ஒன்னும் ஆகாது...

சொல்லிவிட்டு கிடு கிடு என ஓடினான் வேட்டகண்ணன்.

அருகில் இருந்தோர் உடனே ஓடிச் சென்று ஒரு கோணிப் பையை எடுத்து வந்தனர். கோணியின் மேல் டேனியை படுக்க வைத்து. கோணி முனைகளை பிடித்து இரண்டு பேர் தூக்கி கொண்டு ருத்ரன் வீட்டினை நோக்கி ஓடத் துவங்கினர்...

ருத்ரன் அழுத விழிகளோடு அவர்களுடன் வீட்டை நோக்கி ஓடினான்...


தொடரும்...




கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Boxrun3


இத்தொடரை பற்றிய உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 1:08 pm

chozhan wrote:நண்பரே வாரம் இரண்டு பதிப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.... அருமையிருக்கு

அப்பாடா நீங்களாவது பதில் கூறினீர்களே... அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு இரண்டு பதிவுகள் இடுகிறேன் தோழரே...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 08, 2011 1:11 pm

ranhasan wrote:இதன் அடுத்த பாகத்தை அடுத்த வாரம் பதியலாம் என உள்ளேன்... வாரத்திற்கு ஒரு பாகம் என பதிவினை இடவா? இல்லை வாரம் இரண்டு பாகங்களை இடவா? கதை நன்றாக இல்லை அல்லது விறுவிறுப்பு குறைகிறது என்று தோன்றினால் கூறுங்கள் ஒரே வாரத்தில் கதையை முடித்துவிடுகிறேன். ஆனால் இது கொஞ்சம் பெரிய கதை... கதை சுவாரஸ்யமாக உள்ளது எனத் தோன்றினால் வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவினை இடுகிறேன்... முடிவு உங்கள் கையில்... பதில் சொல்லுங்கப்பா ??? சோகம் சோகம் சோகம்

வாரம் மூன்று பதிவுகள் இருந்தாலும் நல்ல இருக்கும் ஏனென்றால் கதை விறுவிறுப்பாக போய்ட்டு இருப்பதால் அடுது என்ன நடக்கும்னு ஒரே டென்சனா இருக்கு



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 1:16 pm

ரேவதி wrote:
வாரம் மூன்று பதிவுகள் இருந்தாலும் நல்ல இருக்கும் ஏனென்றால் கதை விறுவிறுப்பாக போய்ட்டு இருப்பதால் அடுது என்ன நடக்கும்னு ஒரே டென்சனா இருக்கு

வாரம் மூன்று பதிவுகள் இட்டால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் என்னைதான் இங்கு அலுவலகத்திலிருந்து நீக்கிவிடுவார்கள்.. புன்னகை (ஏனெனில் அலுவலகத்தில் இருந்துதான் நான் இந்த பதிவுகளை இடுகிறேன்)



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 08, 2011 1:17 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
வாரம் மூன்று பதிவுகள் இருந்தாலும் நல்ல இருக்கும் ஏனென்றால் கதை விறுவிறுப்பாக போய்ட்டு இருப்பதால் அடுது என்ன நடக்கும்னு ஒரே டென்சனா இருக்கு

வாரம் மூன்று பதிவுகள் இட்டால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் என்னைதான் இங்கு அலுவலகத்திலிருந்து நீக்கிவிடுவார்கள்.. புன்னகை (ஏனெனில் அலுவலகத்தில் இருந்துதான் நான் இந்த பதிவுகளை இடுகிறேன்)

அப்படியே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 1:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Nov 26, 2011 2:29 pm

மீண்டும் கலசர் கதையை துவங்கலாம் என்று உள்ளேன், உங்கள் விமர்சனம் மற்றும் ஆதரவோடு.... பாடகன்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 N
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2011 5:31 pm

விறுவிறுப்பாக இருக்கிறது. வாரம் ஒரு முறை பதிவிடுங்கள்.அப்போதுதான் எதிர்பார்ப்பு இருக்கும். மக்கள் நிச்சயமாக காத்திருப்பார்கள். வாழ்த்துக்கள்.

ரமணியன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Nov 26, 2011 7:22 pm

சூப்பருங்க

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Nov 27, 2011 3:07 pm

ranhasan wrote:மீண்டும் கலசர் கதையை துவங்கலாம் என்று உள்ளேன், உங்கள் விமர்சனம் மற்றும் ஆதரவோடு.... கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 733974


தயவு செய்து ,தாமதம் இல்லாமல் உடனே ஆரம்பியுங்கள் .....



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 3:08 pm

muthu86 wrote:
ranhasan wrote:மீண்டும் கலசர் கதையை துவங்கலாம் என்று உள்ளேன், உங்கள் விமர்சனம் மற்றும் ஆதரவோடு.... கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4 - Page 2 733974
தயவு செய்து ,தாமதம் இல்லாமல் உடனே ஆரம்பியுங்கள் .....
மன்னிக்கவும் இந்த உறுப்பினர் தடை செய்யப்பட்டு விட்டார் , அதனால் இந்த பதிவு தொடராது

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக