புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
53 Posts - 42%
heezulia
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
304 Posts - 50%
heezulia
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
21 Posts - 3%
prajai
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:21 pm

பாகிஸ்தானில் தலீபான்கள் பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடங்கியது. அப்பாவி மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினார்கள்

பாகிஸ்தானில் குர்ரம் பழங்குடிஇன மக்கள் பகுதியில் பதுங்கி இருக்கும் தலீபான்களை ஒடுக்குவதற்காக அந்த பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் நடக்கும் சண்டையை பார்த்து பயந்து அப்பாவி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

ஊரடங்கு உத்தரவு

குர்ரம் பகுதி பழங்குடி இனப்பகுதியில் ஹக்கிமுல்லா மசூத் தலைமையிலான பாகிஸ்தான் தலீபான்கள் பதுங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த 2 வார காலமாக முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

குர்ரம் பகுதியில் உள்ள 80 சதுர கி.மீ. பரப்பை போர்ப்பகுதியாக 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

அந்த பகுதிக்கு ராணுவ வீரர்களை கொண்டு வந்து சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த பகுதியில் உள்ள மனடோ மற்றும் சாய்முகேட் ஆகிய இடங்களில் வீரர்கள் தரை இறக்கப்பட்டனர்.

ராணுவம் முன்னேறியது

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் தலீபான்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் முடுக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டபடி இருந்தன. தலீபான்கள் ராணுவத்தை முழு மூச்சுடன் எதிர்க்கவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் ராணுவத்தை எதிர்த்து துப்பாக்கிகளால் சுட்டனர். இதனால் எதிர்ப்பின்றி ராணுவம் முழு வேகமாக முன்னேறியது.

தலீபான்களின் பதுங்கு குழிகள் மற்றும் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. தலீபான்களின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளான முஷாத், மசோசாய், அலி ஷெர்சாய் ஆகிய பகுதிகளில் ராணுவம் முன்னேறியது.

தப்பி ஓட்டம்

அந்த பகுதிகளில் ராணுவம் சோதனைச்சாவடிகளை அமைத்து தன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடு தொடங்கியதுமே தலீபான்கள் தங்கள் பதுங்குமிடங்களில் இருந்து தப்பிஓடிவிட்டனர்.

இந்த சண்டையை பார்த்து உயிருக்கு பயந்துபோன அப்பாவி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடினார்கள்.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:22 pm

பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவின்பேரில் தான் பத்திரிகை நிருபர் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்துக்குள் ராணுவ வீரர்கள் ஊடுருவி அங்கு நிறுத்தப்பட்டு இருந்த விமானத்தை குண்டு வைத்து தகர்த்தனர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு பாகிஸ்தான் நிருபர் ஷாஜாத் ராணுவத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக செய்தி வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் காணாமல் போனார். அதன்பிறகு அவர் பிணமாக தான் கண்டு எடுக்கப்பட்டார். உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.

அவர் பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவின்பேரில் தான் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாக அதிகாரிகள் 2 பேர் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க பத்திரிகையான நிïயார்க்டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.

ஷாஜாத் கொலை பற்றிய தகவலை பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எப்படி பக்குவமாக தெரிவிப்பது என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள் என்றும் அந்த பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

நிருபர் கொலையுடன் ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் மந்திரி பிர்தவுஸ் ஆஷிக் அவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் தான் நிருபர் ஷாஜாத் கொலை செய்யப்பட்டதாக நிïயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இப்படி குற்றஞ்சாட்டுவது, பாகிஸ்தான் ராணுவத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நடக்கும் சர்வதேச சதி ஆகும்.

இவ்வாறு மந்திரி பிர்தவுஸ் கூறினார்.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:23 pm

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்வெனிசுலா அதிபர் நாடு திரும்பினார்

அமெரிக்கா அருகில் உள்ள வெனிசுலா நாட்டின் அதிபர் ஹிïகோ சாவெஸ். இடுப்பு எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கிïபா நாட்டுக்கு சென்று இருந்தார். சில மாதங்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என்று நம்பப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து திடீரென்று தன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். இதை அறிந்ததும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகை முன்பு திரண்டனர். அவர்கள் முன்பு பால்கனியில் நின்றவாறு அவர் உரையாற்றினார்.

அப்போது உற்சாக மிகுதியில் மக்கள் அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். இதற்கிடையே அரசு டி.வி.சேனலுக்கு அவர் பேட்டி அளித்தார். எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. இதற்காக கிïபா சென்று இருந்தேன் என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:24 pm

ஒபாமா சுட்டுக்கொல்லப்பட்டதாக டுவிட்டர் இணையதளத்தில் வதந்தி. அமெரிக்க உளவுத்துறை விசாரணை

அமெரிக்காவில் நேற்று முன்தினம் தேசியதினம் கொண்டாடப்பட்டது. இதனால் நாடு முழுவதிலும் மக்கள் கோலாகலத்தில் ஆழ்ந்து கிடந்தனர். அப்போது டுவிட்டர் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஜுலை 4-ந்தேதி சோகமயமான நாளாகி விட்டது. ஏனெனில் சற்று நேரத்துக்கு முன்பு ஜனாதிபதி ஒபாமா சுட்டுக்கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டு இருந்தது. இது இ.மெயில் மூலம் பரவியது.

இதைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதி ஜான்பிடேனுக்கு வாழ்த்துக்கள் என்ற செய்தியும் பரவியது. இதனால் அமெரிக்க மக்களிடையே பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த செய்தி குறித்து டுவிட்டர் இணையதளத்திடம் விசாரிக்கப்பட்டது. அப்போதுதான் யாரோ விஷமி ஒருவர் இந்த செய்தியை டுவிட்டரில் திருட்டுத்தனமாக பரப்பி விட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த செய்தி இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

இந்த விஷம செய்தியை பரப்பிய விஷமி யார் என்பதை கண்டறிவதற்காக அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:25 pm

ஈராக்கில் குண்டு வெடித்ததில் 27 பேர் பலி; 50 பேர் காயம்

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு அருகில் உள்ள நகரம் தாஜி. இந்த நகரில் உள்ள அரசாங்க கட்டிடத்துக்கு அருகில் கார்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு கார் குண்டு வெடித்தது. இதையடுத்து தற்கொலை தீவிரவாதி ஒருவர் தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.

இந்த 2 சம்பவங்களிலும் 27 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை ஈராக்கின் சுகாதாரத்துறை துணை மந்திரி காமிக் எல் சாத் தெரிவித்தார்.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:26 pm

மொனாகோ புதிய இளவரசி திருமணத்துக்கு முன்பு 3 முறை தப்பி ஓட முயன்றார்

பிரான்சு நாடு அருகே உள்ளது மொனாகோ. இது ஒரு குட்டி நாடு. இங்கு மன்னராட்சி தான் நடந்து வருகிறது. இளவரசர் ஆல்பர்ட். 53 வயதான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் வீராங்கனை சார்லின் தான் மணமகள். இவர் திருமணத்துக்கு முன்பு 3 முறை தப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.

திருமணத்துக்கு முன்பே மொனாகோ வந்து விட்ட அவர், கடந்த மே மாதம் திருமண உடை வாங்குவதற்காக பாரீஸ் சென்றார். அப்போது அங்குள்ள தென்னாப்பிரிக்க தூதரகத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். பிறகு பார்முலா ஒன் கார் பந்தயம் நடந்தபோதும் அவர் தப்பி ஓட முயற்சி மேற்கொண்டார். 3-வது முறையாக கடந்த வாரம் அவர் தப்ப முயன்றபோது தான் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை திருமண சடங்குகள் நடந்தபோது சார்லின் கண்ணீர் விட்டபடி இருந்தார் என்றும் கூறப்படுகிறது. புதுமண தம்பதிகள் தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு செல்ல இருக்கிறார்கள்.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:27 pm

இலங்கையில், போர் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கையில் தனி தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கால் நூற்றாண்டுக்கும் மேலாக போர் நடந்து வந்தது. போர் நடந்த வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள், நிருபர்கள், புகைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த தடை நீக்கப்படவில்லை.

நேற்று இந்த தடையை நீக்குவதாக இலங்கை அரசு அறிவித்தது. போர் முடிந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதாலும், சுற்றுலா நல்ல வளர்ச்சியடைந்து வருவதாலும் இந்த தடையை நீக்குவதாக ராணுவ அமைச்சகம் அறிவித்து உள்ளது. ராணுவத்தின் முன் அனுமதியைப்பெற்று அந்த பகுதிகளுக்கு செல்லலாம் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது என்றும் ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:27 pm

தலைப்பாகை அணிந்து இருந்ததால் ஆஸ்திரேலிய ஓட்டலில் இருந்து சீக்கியர் வெளியேற்றப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ஓட்டலுக்கு சீக்கிய இந்தியர் ஒருவர் சென்று இருந்தார். அவர் தலைப்பாகை அணிந்து இருந்ததால், ஓட்டல் விதிமுறைப்படி தலைப்பாகையை கழட்டும்படி அங்கு இருந்த ஓட்டல் ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு அவர் மறுத்து விட்டார். தலைப்பாகையுடன் ஓட்டலில் இருப்பது ஓட்டல் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி அவரை வெளியேற்றி விட்டனர்.

இந்த விவகாரம் ஓட்டல் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததும், அவர்கள் அந்த சீக்கியரை தேடிப்பிடித்து அவரிடம் வருத்தம் தெரிவிக்க முயன்றதாகவும், அவர் கிடைக்கவில்லை என்று ஓட்டல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:29 pm

மேயருக்கு பரிசு 10 கிலோ குப்பை

பல நகராட்சி மேயர்கள் குப்பைகளை பெருக்க ஏற்பாடு செய்வது இல்லை. தெருக்கள் எல்லாம் குப்பை கூளங்களாக கிடக்கும். ஆனால் இத்தாலி நாட்டில் உள்ள நேபிள்ஸ் மேயர் இதற்கு எதிரானவர். இவர் குப்பைகளை பெருக்கி நகரை சுத்தமாக வைத்திருக்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

ஆனால் குப்பைகளை எல்லாம் பக்கத்து நகரங்களுக்கு பார்சல் பண்ணி அனுப்பி அந்த நகரங்களை அசுத்தமாக்கி விடுகிறார். இதனால் எரிச்சல் அடைந்த பக்கத்து நகரத்து அரசியல்வாதி ஒருவர் நேபிள்ஸ் மேயருக்கு புத்தி புகட்டுவதற்காக 10 கிலோ குப்பைகளை பார்சல் செய்து தபாலில் அனுப்பி இருக்கிறார்.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:29 pm

குண்டு போலீசாரின் வேலைக்கு ஆபத்து

ரஷியாவில் போலீஸ் வேலையில் இருப்பவர்களில் பலர் உடல் பருமனாக இருக்கிறார்கள். இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்களை கேலியாக பார்க்கிறார்கள். இதை அறிந்து கொண்டு ரஷிய அரசாங்கம் இந்த குண்டு போலீஸ்காரர்களுக்கு உங்கள் தொப்பையை குறையுங்கள். உடல் எடையையும் குறையுங்கள். இல்லாவிட்டால், வேலை போய் விடும் என்று எச்சரித்து உள்ளது.

இதனால் அந்த நாட்டு போலீசார் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். உடம்பை குறைக்காவிட்டால் வேலை போய் விடுமே என்ற பயம் தான் அவர்களை இப்போது ஆட்டுவிக்கிறது.

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக