ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

+7
டார்வின்
தமிழ்ப்ரியன் விஜி
ரஞ்சித்
ரேவதி
கண்ணன்3536
நட்புடன்
கே. பாலா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by கே. பாலா Tue Jul 05, 2011 7:15 pm

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Ma2sp




"மன்னன் என்றால் பேராசை. பாவங்கள்தான் அவனது பிரதம மந்திரி.
பொய்களின் வித்தகன்தான் காசாளன். திட்டங்கள் வகுப்பதற்கு ’பாலியல்
உந்துசக்தியே’ மீண்டும் மீண்டும் கலந்தாலோசிக்கப்படுகிறது. முட்டாள்
பூசாரிகள் ஏமாற்று வித்தைகள் மூலமும் தந்திரமான வாதங்கள் மூலமும் செல்வம்
சேர்க்கிறார்கள். இருளில் தவிக்கும் ஒன்றுமறியாத பொது மக்கள் (விவசாயிகள்,
கலைஞர்கள்) மீண்டும் மீண்டும் சுரண்டப்படுகிறார்கள், லஞ்சம் கொடுக்க
நிர்பந்திக்கப்படுகிறார்கள்."

குருநானக், குரு கிரந்த சாகேப் (சோம்நாத் கோவில் மீண்டும் மீண்டும்
கொள்ளையடிக்கப்பட்ட காலக் கட்டத்தில் இன்றைய வட இந்திய பகுதிகளில் நிலவிய
அரசியல்-சமூக சூழல் குறித்த கருத்து).




திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல காலமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த
நிலவரையிலிருந்து குவியும் பொக்கிஷங்களின் மதிப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழலில்
நாடு அடைந்ததாக கணிக்கப்படும் நஷ்டத்திற்கு இணையான தொகையாக இருக்கும் போல்
தெரிகிறது. இந்த இணைய இதழுக்கான கட்டுரை எழுதப்படும் சமயத்திலேயே அதன்
மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி வளர்ந்துகொண்டிருந்தது. வைரங்கள்,
தங்க நகைகள், தங்க நாணயங்களின் மேலோட்டமான இந்த மதிப்பைவிட அவற்றின் நிஜமான மதிப்பு இரு மடங்கு இருக்கும் என கணிக்கப்படுகிறது.


அந்தக் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் கோவிலின் சொத்து என்பதால்
அதை எதன் பொருட்டும் கைவைக்கக்கூடாது; அவை கடவுள் பத்மநாப சுவாமிக்குச்
சொந்தமானவை என்று பக்திமிகுதியில் சொல்பவர்களின் குரலில் தெரியும்
உறுதியைப் பார்க்கும் போது இது ஒரு பிரச்சனைக்குரிய தலைப்பு என்பதை எளிதாக
புரிந்துகொள்ள முடிகிறது. திருப்பதி ஏழுமலையானைவிட திருவனந்தபுரம்
பத்மநாபசுவாமி பணக்காரராகிவிட்டார் என்று எழுதும் பத்திரிகைகள் இத்தகைய
மேலோட்டமான பார்வைக்கும் கடும் சர்ச்சைகளுக்கும் தூபம் போடுகின்றன.


மன்னராட்சிக் காலத்தில் கோவில்கள், குறிப்பாக தென்னிந்திய கோவில்கள்,
வெறும் ஆன்மீக மையமாக இருந்ததில்லை என்பதை ஏராளமான ஆய்வாளர்கள்
எழுதியிருக்கிறார்கள். அது செல்வத்தின், அதிகாரத்தின் மையமாகவும்
இருந்திருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில் மக்களை கசக்கிப் பிழிந்து
வாங்கப்பட்ட வரிப் பணத்தால் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோவில்கள்
அரசாங்கத்தின் கஜானாவாகவும் இருந்திருக்கின்றன. தற்போதைய குஜராத்தில் உள்ள
சோம்நாத் கோவிலை கஜினி முகமது கொள்ளையடித்தது செல்வத்தை களவாடுவதற்காக
மட்டுமல்ல என்ற பார்வை உள்ளது. அன்றைய இந்திய மன்னர்கள் மீண்டும் வலுப் பெற
விடாமல் நிலைகுலையச் செய்வதும் கஜினி முகமதுவின் நோக்கம் என்று
கூறப்படுகிறது. தங்க நாணயங்களே முக்கியமான பண்ட மாற்றுப் பொருளாக இருந்த
காலக் கட்ட்த்தில் ஒரு கோவிலைக் கொள்ளையடிப்பது என்பது இன்றைய ரிசர்வ்
வங்கியை வழித்துத் துடைத்து அள்ளிச் செல்வதற்குச் சமம்.


உங்கள் யூகம் சரிதான். திருவனந்தபுரத்தின் பத்மநாப சுவாமி கோவிலிலிருந்து
எடுத்த பொக்கிஷங்களில் கணிசமானவை இந்திய ரிசர்வ் வங்கியில் சேர்ப்பிக்க
வேண்டியவையாக இருக்கலாம். திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள்
விவசாயிகளிடமும் கலைஞர்களிடமும் பெற்ற வரியிலிருந்து உருவாக்கப்பட்டவையே
அந்த கணிசமான பொக்கிஷங்கள். அவற்றில் சில கோவிலுக்கு தானமாக
கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கணிசமான வைரங்களும் நகைகளும் மன்னரின்
சொத்துக்களாக அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கக்கூடும்.


இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழக பகுதிகளை ஒரு
காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் கட்டுப்படுத்தியுள்ளது. பத்மநாபசுவாமி
கோவிலிலிருந்து கிடைக்கும் சொத்துக்களில் நமது மூதாதைய தமிழர்களின் வரிப்
பணமும் அடங்கியிருக்கலாம். "ஆண்களின் தாடி, மீசைக்கும், பெண்களின் மார்பக
வளர்ச்சிக்கும்" அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் வரி வசூலித்தது என்று
அகிலத் திரட்டு நூலில் (அய்யா வைகுண்டர்) குறிப்பிடப்படுகிறது. " "அடிப்படை
உரிமைகள், சொந்த நிலங்கள், உணர்வுகள் எல்லாமே பறிக்கப்பட்ட இவர்களுக்கு
(இன்றைய குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்ட தமிழர்கள்) கொடுக்கப்பட்ட மிகக்
குறைந்த கூலியும் ‘வரி’ என்ற பெயரில் அடக்குமுறையை பிரயோகப்படுத்தி
பிடுங்கப்பட்டது" என்று திருவிதாங்கூர் ஆட்சி நிர்வாகம் பற்றி
குறிப்பிடப்படுகிறது.


திருப்பதிக்கு கிடைக்கும் செல்வத்தையும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியின்
வசமிருந்த சொத்துக்களையும் ஒப்பிடும் அபத்தம்தான் இந்தச் சொத்துக்கள்
யாருக்கு என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. திருப்பதிக்கு வருவது
பக்தர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து, சொந்த விருப்பத்தின் பேரில்
கொடுத்தது. திருப்பதியில் குவியும் இவ்வளவு நிதியையும் பொருளையும்கூட
எடுத்து கல்விக்கும் இன்ன பிற பொதுக் காரியங்களுக்கும் செலவிட வேண்டும்
என்று கூறுகிறவர்கள் உண்டு. ஆனால் எவ்வாறு ஒரு தனிநபர் தனது செல்வத்தை
எவ்வாறு செலவிட வேண்டும் என்று சமூகம் நிர்பந்திக்க முடியாதோ, அதே போல தனி
நபர்கள் குவிக்கும் இவ்வளவு பெரிய செல்வத்தையும் சமூகம் தனதாக்கிக்கொள்ள
முடியாது. கிட்டத்தட்ட 10 கோடி பேர் சேரியில் வசிக்கும் ஒரு தேசத்தில்,
33,000 கோடி ரூபாய் ஒரு கோவிலில் உறங்கிக்கொண்டிருப்பது இந்த தேசத்தின்
மனிதாபிமான மதிப்பீடுகளை இழிந்து கூறும் முரண்பாடு என்றாலும்கூட அந்தப்
பணத்தின் மீது சமூகம் நேரடியாக கைவைக்க முடியாது. ஆனால் பத்மநாபசுவாமி
கோவிலில் சொத்துக்கள் மக்கள் கொடுத்தது அல்ல. பொது மக்களின் நிதியைக்
கையாளும் பொறுப்பைக் கொண்டிருந்த ஒரு மன்னனுக்குச் சொந்தமானவை அவை.
திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்திய குடியரசுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் அந்த
பொக்கிஷங்கள் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.


ஒன்றைக் கொடுத்துவிட்டு அதற்கான "பரிசாக மதப் பற்றாளர்கள் பாவ மன்னிப்பை
(கடவுளிடம்) கோருகிறார்கள். தங்களின் தாராள உள்ளத்தை அதிலேயே
வீணடித்துவிடுகிறார்கள்" என்று மத நம்பிக்கையாளர்கள் பற்றி 15ஆம்
நூற்றாண்டில் குருநானக் முன்வைத்த வாதம் 21ஆம் நூறாண்டிலும் மாறாமல்
தொடர்வது இந்த தேசம் சமூக-அரசியல் மறுமலர்ச்சிப் பாதையில் நத்தை
வேகத்திலேயே முன்னேறுகிறது என்பதைக் காட்டுகிறது.


மதம் மனிதர்களை மதம் பிடிக்கச் செய்வது என்பதால் கேரள அரசு சட்டப்படி,
நியாயப்படி தனக்கு உரிய சொத்தின் மீது கைவைக்கத் தயங்குகிறது. ஆனால் அரசின்
கைகளில் இந்த சொத்துக்கள் விரைவாக சென்று சேராவிட்டால் நம்
சமூகத்திற்குள்ளேயே இருக்கும் கஜினி முகமதுகள் காலப் போக்கில் இந்த பொதுச்
சொத்துக்களை தங்களின் தனிச் சொத்துக்களாக்கிவிடுவார்கள்.


உயிரோசை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by நட்புடன் Tue Jul 05, 2011 7:53 pm

கட்டுரை நிறைய கேள்விகளையே - பதில் தெரியாத கேள்விகளையே எழுப்பி உள்ளது.

அரசியல் சார்பற்ற, மத சார்பற்ற சமூக பிரக்ஞையோடு செயல்பட்டாலே தீர்வு ஒன்று காணலாம்.

இல்லையேல் அதிகபச்சமாக சில கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள் நிறுவப் பெற்று மற்ற பொக்கிஷங்கள் மக்கள் காண்பதர்க்காகவும், கோவிலின் கஜானாவிலும் அடைக்கப் படும் - ஒரு பிரயோஜனமும் இல்லாமல்.

வரும் நாட்களில், வருடங்களில் அறிய வருவோம்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by கண்ணன்3536 Tue Jul 05, 2011 8:13 pm

அதில்லப்பா இந்த வெள்ளைக்காரன் எவ்வளவு சொத்துக்களை கொண்டுபோயிருப்பான் ? கடவுளே கடவுளே
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by கே. பாலா Wed Jul 06, 2011 5:17 am

kannan3536 wrote:அதில்லப்பா இந்த வெள்ளைக்காரன் எவ்வளவு சொத்துக்களை கொண்டுபோயிருப்பான் ? கடவுளே கடவுளே
ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? 359383
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by ரேவதி Wed Jul 06, 2011 9:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by ரஞ்சித் Wed Jul 06, 2011 9:57 am

கடவுளால் காப்பாற்றப்பட்ட மக்கள் சொத்து
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jul 06, 2011 9:59 am


"மன்னன் என்றால் பேராசை. பாவங்கள்தான் அவனது பிரதம மந்திரி.
பொய்களின் வித்தகன்தான் காசாளன். திட்டங்கள் வகுப்பதற்கு ’பாலியல்
உந்துசக்தியே’ மீண்டும் மீண்டும் கலந்தாலோசிக்கப்படுகிறது. முட்டாள்
பூசாரிகள் ஏமாற்று வித்தைகள் மூலமும் தந்திரமான வாதங்கள் மூலமும் செல்வம்
சேர்க்கிறார்கள். இருளில் தவிக்கும் ஒன்றுமறியாத பொது மக்கள் (விவசாயிகள்,
கலைஞர்கள்) மீண்டும் மீண்டும் சுரண்டப்படுகிறார்கள், லஞ்சம் கொடுக்க
நிர்பந்திக்கப்படுகிறார்கள்."


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by டார்வின் Fri Sep 06, 2013 10:47 pm

மக்களாட்சிக் காலத்தில் சுவிஸ் வங்கிகளில் சேர்ந்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே போல் மன்னராட்சிக் காலத்தில் கோயில்களில் சேர்க்கப்பட்டுள்ள இது போன்ற "கருப்புச் செல்வங்களை"யும் கைப்பற்றி மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.
கோயில்கள், ஆசிரமங்கள் போன்ற மத நிறுவனங்களின் சொத்துக்கள் வரைமுறைக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது சிக்கியுள்ள செல்வங்களையும் இனி சிக்கப் போகும் சொத்துக்களையும் அரசின் கருவூலத்துக்குப் போய்ச் சேரும் வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கணக்கில் வராத கருப்பு பணம் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நகைகளாகக் குவிவது இன்னும் பெருகும்.
ஒரு பவுன் தங்கம் வாங்க முடியாமல் கல்யாணக் கனவுகளைத் தள்ளிவைத்துக் காத்திருக்கும் ஏராளமான பேரிளம் பெண்களைக் கொண்ட நாட்டில் பத்மநாபசுவாமி சிலைக்கு இத்தனை அலங்காரம் தேவையா? இந்த செல்வங்கள் முழுவதும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. ஒரு கோயிலுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள்? தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.

நன்றி: கீற்று
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by ராஜா Sat Sep 07, 2013 11:18 am

நன்றி அன்பு மலர் அந்த காலத்தில் மன்னர்கள் இது போல இந்து கோவில்களில் பொக்கிஷங்களை பாதுகாத்ததற்கு பஞ்சம் ஏற்படும் காலங்களில் குடிமக்களை காப்பதற்கு தான்.

இப்போ அரசியல் நாய்கள் சுரண்டி சுரண்டி நாட்டில் பற்றாக்குறையையும் பஞ்சத்தையும் உண்டாக்கிவிட்டு கோவிலில் கை வைக்க பார்க்கிறார்கள்.

முதலில் இவர்கள் சுரண்டி சேமித்து வைத்ததை பிடுங்கி நாட்டு நாளப்பணி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், பிறகு கோவிலை பற்றி பேசலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by DERAR BABU Sat Sep 07, 2013 11:23 am

( தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.)


ஆனால் அரசியல்வாதிகளும் , அதிகாரிகளும் ஆட்டய போட்டுருவாங்களே ........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Empty Re: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பூட்டுப் பிரச்சனை: பத்மநாப சுவாமி கோவில் 6- வது பாதாள அறை திறப்பு ஒத்திவைப்பு
» பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!
» பத்மநாப சுவாமி நகைகள் பாதுகாக்கபடுமா ????????
» திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
» கொரோனா தொற்று உலகில் 1 கோடியைத் தாண்டியது: இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum