Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
+11
ரபீக்
மஞ்சுபாஷிணி
SK
vvijayarani
அப்துல்லாஹ்
உமா
பது
ஸ்ரீஜா
realvampire
கலைவேந்தன்
positivekarthick
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
சென்னை : ராணுவ வீரர் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் மீது ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் இறந்தான். துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவனின் உறவினர்களும் பொது மக்களும் மறியல் போராட்டம் நடத்தினர். பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டை அருகில் ராணுவ மையம் மற்றும் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி மரங்கள் அடர்ந்த சோலையாக காட்சியளித்து வருகிறது. இந்த பகுதிகளுக்கு எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது. ஏனென்றால் ஒரு பகுதியில் தலைமை செயலக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் வெளிப்பகுதியில் கூட யாரும் நீண்ட நேரம் நின்று பேச முடியாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதி. இப்பகுதியை சுற்றி குடிசை பகுதிகள் நிறைந்துள்ளது. இதில் ஏராளமான குடிசைவாசிகள் வசித்து வருகின்றனர்.
குடிசை பகுதியில் உள்ள இந்திராகாந்தி நகரை சேர்ந்த குமார் & கலைவாணி தம்பதியரின் மூன்றாவது மகன் தில்சன்(13). இவன் நேற்று மதியம் 1.30 மணிக்கு நண்பர்கள் சஞ்சய், பிரவீன் ஆகியோருடன் ராணுவ குடியிருப்புக்குள் தடுப்புச் சுவர் ஏறி நுழைந்தான். மரத்தில் ஏறி பாதாம் கொட்டைகளை பறிப்பதற்கு சென்றனர். மூன்று சிறுவர்களும் மரத்தில் ஏறி, பாதாம் காய்களை பறிப்பதை பார்த்த ராணுவ வீரர் ஒருவர், நவீன ரக துப்பாக்கியால் சிறுவர்களை நோக்கி குறி பார்த்தார்.
தங்களை மிரட்டுவதாக எண்ணிய சிறுவர்கள் அங்கிருந்து மெதுவாக செல்ல முயன்றனர். ஆனால் அந்த வீரர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சிறுவர்களை நோக்கி சுட்டார். வெளியேறிய குண்டு தில்சன் நெற்றியை துளைத்து சென்று மறுபுறம் வெளியே வந்தது. குண்டு பாய்ந்ததால் தில்சன் அலறி துடித்து மயங்கி விழுந்தான். அந்த ராணுவ வீரர் சிறிதும் கண்டு கொள்ளவில்லை இதை பார்த்த மற்ற சிறுவர்கள் அதிர்ச்சியில் ஓடத் தொடங்கினர்.
வேகமாக தடுப்பு சுவரை தாண்டி அங்கிருந்து வெளியே வந்தனர். உடனடியாக இந்திரா காந்தி நகருக்கு சென்று தில்சனின் பெற்றோரிடம் கூறினர். அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ராணுவ குடியிருப்பை நோக்கி வந்தனர். அதற்குள் ராணுவ வீரர்களும் உஷாராகினர். சிறுவனை சுட்ட ராணுவ வீரரை மறைத்து வைத்து விட்டு, பொதுமக்கள் உள்ளே நுழைய முடியாதபடி தடுப்பை ஏற்படுத்தினர். பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் விரைந்து வந்தனர்.
அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. கோட்டைக்கு செல்லும் கொடி மரச் சாலையிலும் மக்கள் திரண்டனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது ராணுவ அதிகாரிகளின் ஜீப் ஒன்று அந்த வழியாக வந்தது. அதை மக்கள் தடுத்து முற்றுகையிட்டனர். உடனடியாக உஷாரான போலீசார், ராணுவ அதிகாரிகளை மீட்டு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே, குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தில்சன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மாலையில் அவன் இறந்தான். இந்நிலையில், அப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆங்காங்கே சாலை மறியல் நடத்தப்பட்டது. போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் ஆக்ரோஷமாக காணப்பட்ட அப்பகுதி மக்கள் கலையாமல் அங்கேயே நின்றனர். பிரச்னை பெரிதாகிக் கொண்டே போனது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்ததால், போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஆத்திரப்பட்டு போலீசார் மீது கல்வீசத் தொடங்கினார். போலீசார் ஒருவரின் தலையில் பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். சிதறி ஓடிய மக்களை தாக்கினர். ஒருவர் அடி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார். தடியடி சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டது.
மருத்துவமனையில் மறியல், கதறல்
குண்டு பாய்ந்த தில்சனை மடியில் கிடத்திக் கொண்டு ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு தாய் கலைவாணி எடுத்துச் சென்றார். உறவினர்களும் மதியம் 1.30 மணிக்கு வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்கூட்டியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சிறுவனை பார்க்க அனுமதி வழங்க கோரி உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மறுத்ததால் சண்டை ஏற்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
சிறுவன் இறந்து விட்டான் என்ற செய்தி பரவியதும் உறவினர் மத்தியில் பதற்றம் அதிகரித்தது. அந்த நேரத்தில் சிறுவனை முதல் மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். இறந்ததை அறிவித்தால் பெரிய அளவில் பிரச்னை ஏற்படும் என்று நினைத்து இந்த நடவடிக்கை எடுத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் மருத்துவ ஊழியர்கள், சிறுவன் உடலை பச்சை துணியால் மூடி யாருக்கும் தெரியாமல் பின்புற வழியாக சவக்கிடங்கு அறைக்கு எடுத்து சென்றனர். சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து கதறி அழுதனர்.
அமைச்சர்கள் கார் முற்றுகை
அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சிறுவனை பார்த்தனர். பொதுமக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டனர். ‘‘சிறுவன் நலமாக இருக்கிறான். யாரும் பயப்பட வேண்டாம்’’ என்று கூறிச் சென்றனர். தொடர்ந்து அமைச்சர் உதயக்குமார், பாலகங்கா எம்.பி, பழ.கருப்பையா எம்.எல்.ஏ ஆகியோர் வந்து பார்த்தனர். ÔÔசிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுவன் பிழைத்து விடுவான். டாக்டர்கள் நல்லா பார்ப்பார்கள். அம்மா சொல்லிட்டாங்கÕÕ என்று அமைச்சர் உதயக்குமார் கூறினார்.
தண்ணீர் ஊற்றி ரத்த கறை அழிப்பு
துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், துடிதுடித்துக் கொண்டிருந்த தில்சன் உடல் மேல் அங்கு கிடந்த இலை, தளைகளை போட்டு மூடி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கதறியபடி ஆட்டோவில் ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதற்குள் தரையில் படிந்திருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி அழித்து விட்டனர்.
6 மணி நேரம் நீடித்த பரபரப்பு
பொது மக்களின் சாலை மறியலால் பல்லவன் சாலை, முத்துசாமி பாலம் சாலை, கொடி மர சாலை என 3 சாலைகளும் முற்றிலும் ஸ்தம்பித்தது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கயிறு, தடுப்பு வேலிகள் மூலம் போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் அரண் போல் நின்றனர். ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில், மா, மாதுளை, கொய்யா, புளி, சீத்தா உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன.
கூலி வேலை செய்த சிறுவன்
தில்சன் தந்தை குமார். கூலித் தொழிலாளி. தாய் கலைவாணி. பூ வியாபாரம் செய்து வருகிறார். 6ம் வகுப்பு வரை மட்டுமே தில்சன் படித்துள்ளான். தந்தை சர்க்கரை நோயாளி என்பதால் வேலைக்குச் செல்ல முடியாது.
ஸி 50 ஆயிரத்திற்கும் மேல் கடன் வாங்கி மருத்துவச் செலவு செய்துள்ளனர். கடனை அடைப்பதற்காக தில்சன், தீபிகா, திலீபன் ஆகியோர் படிப்பை விட்டு விட்டு கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
தூக்கிலிட வேண்டும்
சிறுவனின் உறவினர்கள் கூறுகையில், “நாட்டை பாதுகாக்க வேண்டியவர்கள் ராணுவ வீரர்கள். மக்களையும் பாதுகாக்க கூடியவர்கள். ஒரு சாதாரண சிறுவனை இப்படி தீவிரவாதி போல சுட்டுத் தள்ளினால் எங்களைப் போன்ற பாமர மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். இந்த படுபாதக செயலை செய்த ராணுவ வீரரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்’’ என்றனர்.
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை
சென்னை : சிறுவன் பலியான சம்பவத்தில், யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
ராணுவ பிரிகேடியர் சசி நாயர் நேற்று அளித்த பேட்டி: ராணுவ வளாகத்தில் யாரும் ஆயுதங்கள் பயன்படுத்துவது கிடையாது. லத்தியோடு மட்டும்தான் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதனால், துப்பாக்கி சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
மரத்தில் இருந்து தவறி கம்பியில் விழுந்து அடிபட்டு சிறுவன் தில்சன் இறந்திருக்கலாம். இருந்தாலும் சிறுவன் இறந்தது துயர சம்பவம்தான். இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணை ஆரம்பித்து உள்ளோம். போலீசாரும் விசாரித்து வருகின்றனர். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சசி நாயர் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து கொடி மரச் சாலையில் உள்ள ராணுவ வளாகத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
தினகரன்

positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
குடித்திருந்தானோ அந்த ராணுவ நாய்..? குழந்தைக்கும் தீவிரவாதிக்கும் வித்தியாசம் தெரியவில்லையோ? நாட்டைக்காக்கும் ராணுவத்திற்கு கேவலம் விளைவிக்கும் செயல்.. குற்றம் செய்தவன் தண்டிக்கப்படவெண்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட தில்ஷன் தலையில் குண்டு பாய்ந்துதான் இறந்தான்:பிரேதப் பரிசோதனை!
ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன் தில்ஷனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதில் தலையில் குண்டு பாய்ந்ததால்தான் தில்ஷன் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது சிறுவன் தில்ஷன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம். தீவுத் திடல் ராணுவக் குடியிருப்புப் பகுதி அருகே உள்ள இந்திரா நகரில் வசித்து வந்த 13 வயது தில்ஷன், தன்னுடைய நண்பர்களுடன் ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள பாதாம் மரத்தின் கீழே விழுந்து கிடந்த பழங்களை எடுப்பதற்காக உள்ளே போனபோது ராணுவ வீரர் ஒருவர் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆனால் தாங்கள் யாரும் சுடவில்லை, சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் எந்தப் பாதுகாவலரும் இல்லை. சாதாரண குச்சியுடன் தான் வாட்ச்மேன் மட்டுமே இருந்தார் என்று ராணுவ பிரிகேடியர் சசி நாயர் என்பவர் கூறியிருந்தார். மேலும், சிறுவர்களை விரட்ட லேசான தடியடி நடத்தியபோது சுற்றுச் சுவர் கம்பியில் மோதி சிறுவன் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்றும் ராணுவத் தரப்பு மறுத்திருந்தது. ஆனால் தற்போது சிறுவன் தில்ஷன் குண்டு பாய்ந்துதான் இறந்தான் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யார் சிறுவனை சுட்டது என்பது பெரும் குழப்பமாகியுள்ளது. இதையடுத்து சம்பவத்தின்போது தில்ஷனுடன் இருந்த 2 சிறுவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ராணுவம் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை தரவிப்பில் ராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடல் அடக்கம் செய்யப்பட்டது
இந்த நிலையில் சிறுவன் தில்ஷனின் உடல் இன்று அடக்கம் செய்யபப்பட்டது. அரசு மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் சிறுவனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தில்ஷனின் உடல் ஊர்வலமாக மூலக்கொத்தளம் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
:farao: இதமட்டும் ஒளுங்க சுடுங்க மட்டத கோட்டை விட்டுடுங்க
Re: பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
கடவுளே என்ன கொடுமை
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
மனம் பதறுகிறது..மானுட உயிர்கள் மதிப்பிழந்து வருவதும், மரணம் இங்கு சர்வ சாதாரண நிகழ்வாகி விட்டதும் கொடுமை ...
ராணுவ குடியிருப்பில் சரக்கு கொஞ்சம் கூடுதலாக புழங்கியிருக்கும். அதனால் தான் பாதம் கொட்டைக்கு பச்சிளம் பாலகன் பலியாகியிருக்கிறான்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
உங்கள் வீரத்தை எதிரியின் முன் காண்பிங்க! அதவிட்டுட்டு ஒரு சிறுவன் முன் உங்கள் வீரம் எதற்கு?
vvijayarani- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
வேதனையான செய்தி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» ராணுவ கட்டடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்; 7 இந்திய வீரர்கள் உயிரிழப்பு
» தாயும், மகளும் கல்லால் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை
» நக்சல் தலைவர் சுட்டுக் கொலை
» அமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை: இரட்டை கொலை செய்தவரை கொன்றனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum