ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:19 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 12:20 am

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:09 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 am

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 2:20 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 2:06 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 23, 2024 1:08 am

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon Sep 23, 2024 12:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல்

Go down

நீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Empty நீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல்

Post by positivekarthick Mon Jul 04, 2011 8:50 am

கோவை:நீலகிரி மாவட்டத்திலுள்ள வனத்துறை "கெஸ்ட் ஹவுசில்' தங்கிய அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 10 பேர் கும்பல், 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, வன அதிகாரியை குடிபோதையில் சுற்றிவளைத்து கொலை மிரட்டலும் விடுத்திருப்பது, வனத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், மசினக்குடி, அப்பர் பவானியில், வனத்துறைக்குச் சொந்தமான "கார்குடி கெஸ்ட் ஹவுஸ்' உள்ளது. இங்கு கட்டணம் செலுத்தி சுற்றுலாப் பயணிகளும், வி.ஐ.பி.,க்களும் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம், கோவை, சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னச்சாமியின் பரிந்துரையை ஏற்று, விருந்தினர்கள் தங்க அறை முன்பதிவு செய்யப்பட்டது. காலையில் ஆடம்பர கார்களில் வந்திறங்கிய 10 பேர், மட்டன், சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை தயாரிக்க உத்தரவிட்டனர். அதன்படியே உணவு தயாரித்து பரிமாறப்பட்டது; பலரும் குடிபோதையில் மிதந்தனர். அதில் ஒருவர், வனத்துறை அதிகாரி ஒருவருக்கு போன் செய்து, "நாங்கள் வந்து தங்கி பல மணி நேரமாகி விட்டது; யாரும் வந்து சந்திக்க மாட்டீர்களா? என, மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, ரேஞ்சர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் யூனிபார்முடன் இரவில் நேரடியாக கெஸ்ட் ஹவுசுக்கு சென்று, அங்கிருந்தவர்களை சந்தித்தார். போதையில் இருந்த நபர்கள், "என்னய்யா நெனச்சுகிட்டு இருக்கே... இங்கே வந்து தங்கினதுக்காக எங்களுக்கே 16 ஆயிரம் ரூபாய் "பில்' போட்டு கொடுத்திருக்கிறாயா? உன் மேலதிகாரிய இங்கே வரச்சொல்...' என திட்டியுள்ளனர்.வந்திருப்பவர்கள் யார்? அரசியல்வாதிகளா, அதிகாரிகளா? என்ற விவரம் புரியாமல் விழித்த வன அதிகாரி, "நீங்கள், அபீசியலாக வந்து தங்கியிருந்தால் அதற்கான கடிதத்தைக் கொடுங்கள். "பில்' தொகை குறித்து மேலிடத்தில் பேசுகிறேன். தனிப்பட்ட முறையில் வந்திருந்தால் எதுவும் செய்வதற்கில்லை' என கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த கும்பல், வன அதிகாரியை அடிக்கப் பாய்ந்துள்ளது. மேலும், "நீ கோயமுத்தூர்காரனா, கீழே இறங்கு உன்னை என்ன செய்கிறோம் பார்... தீர்த்துக் கட்டிவிடுவோம்; ஜாக்கிரதை' என, கூச்சலிட்டுள்ளனர். தன்னந்தனி ஆளாகச் சென்று வசமாக போதை கும்பலிடம் சிக்கிக் கொண்ட வன அதிகாரி, அங்கிருந்தபடியே தன் மொபைல்போனில் மேலதிகாரியை தொடர்பு கொண்டு, புகார் செய்துள்ளார்.இதைக் கண்ட கும்பலினர், "யாரிடம் வேண்டுமானாலும் சொல். நாளை நடப்பதை பார்' என, வாய்க்குவந்தபடி இழிவான வார்த்தைகளால் வசைபாடி, மீண்டும் அடிக்கப் பாய்ந்துள்ளனர். நிலைமை மோசமாவதை கண்டு பீதியடைந்த வன அதிகாரி, அங்கிருந்து வெளியேறி, மசினக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.

புகார் அளிக்க தயாரான வேளையில், அவரை போனில் தொடர்பு கொண்ட மற்றொரு வன அதிகாரி, "எல்லாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். புகார் எதுவும் வேண்டாம்; அவர்கள், மன்னிப்பு கேட்பதாகக் கூறுகிறார்கள்' எனச் சொல்ல, புகார் அளிக்காமல் திரும்பி விட்டார்.மிரட்டல் விவகாரம் எல்லை மீறிப் போனதையறிந்த கும்பல், அங்கிருந்து அவசரமாக கார்களில் கிளம்பிச் சென்றுவிட்டது. இப்பிரச்னை போலீசில் புகார் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டதால், நீலகிரி மாவட்ட போலீசார் உஷாரடைந்து அரசுக்கு ரகசிய அறிக்கை அளித்துள்ளனர்.மிரட்டியது எம்.எல்.ஏ.,வா ?: போதை ஆசாமிகள் தங்கியிருந்த வனத்துறை "கெஸ்ட் ஹவுசை' முன்பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்தவர் கோவை, சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னச்சாமி. இதனால், அந்த கும்பலில் சின்னச்சாமியும் இருந்ததாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இக்குற்றச்சாட்டை மறுக்கிறார் சின்னச்சாமி. அவர் கூறுகையில், ""நான், கோவையில் தான் இருக்கிறேன்; மசினக்குடிக்கு போனதா யார் சொன்னது? தமிழக அமைச்சர் ஒருவரின் பி.ஏ., வருவதாகவும், அப்பர் பவானியிலுள்ள கார்குடி பாரஸ்ட் கெஸ்ட் ஹவுசில் ரூம் போடுமாறும் எனக்கு, சென்னையில் இருந்து போன் வந்தது. அதன்படியே நானும் ரூம் போட்டுக் கொடுத்தேன்; அவ்வளவு தான். நானொன்றும் அங்கு செல்லவில்லை; அங்கு என்ன நடந்தது என்ற விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது. இப்படித் தான், என் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கிளப்பி விடுவதே சிலருக்கு வேலையாகப் போய்விட்டது; ஆமாம், நான் மசினக்குடிக்குப் போனதா யார் சொன்னது?' என்றார்.

வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, நீலகிரி எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமாரிடம் கேட்ட போது, ""இதுவரை எங்களுக்கு எவ்விதமான புகாரும் வரவில்லை; அப்படி புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
தினமலர்


நீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Pநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Oநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Sநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Iநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Tநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Iநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Vநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Eநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Emptyநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Kநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Aநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Rநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Tநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Hநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Iநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் Cநீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum